செவ்வாய், 3 நவம்பர், 2009

கொய்யா மரம்



நெடு நாட்களாக கல்லூரி நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு வரும்படி அழைத்துக் கொண்டிருந்தார். ஏனோ சந்தர்ப்பம் சரியாக அமைய வில்லை. திடீரென ஒரு நாள் அவரைக் காண அவரது இல்லத்திற்கு சென்றேன்.

அழகான ஒரு வீதி. வீதியின் இரு புறங்களிலும் வரிசையாக தனித்தனி வீடுகள். அவரது இல்லத்தினை கண்டுபிடித்து செல்வது ஒன்றும் கஷ்டமாக இல்லை. அமைதியான சூழலில் மரம், செடி கொடிகள் நிறைந்த ரம்மியமான ஒரு தோட்டம். தோட்டத்தின் நடுவினில் இருந்தது அவரது வீடு.

வீட்டின் வெளியே இருந்த கதவினை திறந்து உள்ளே சென்று அழைப்புமணியை ஒலித்தேன். அவரது குரல் மட்டும் வந்தது. திண்ணையில் காத்திருந்தேன். வாசலில் ஒரு பெரிய கொய்யா மரம் தன்னுடைய கிளைகளை படர விட்டு நிறைய பழங்களை தாங்கியபடி நின்று இருந்தது. நானும் மரங்களில் இருக்கும் பறவைகளின் "கீ கீ" குரல்களில் லயித்து இருந்தேன்.

திரும்ப அவரது குரல் மட்டும் கேட்டது. வீட்டில் இருந்து குரல் வராமல் எங்கோ ஆகாயத்தில் இருந்து வருவது போலத் தோன்றவே, மேலே பார்த்தால், பை நிறைய கொய்யா பழங்களுடன் மரத்தில் இருந்து இறங்கி வந்து கொண்டு இருந்தார் அந்த கல்லூரித் தோழி. அதிர்ச்சியுடன் பார்த்த என்னை அவர் மரத்தில் இருந்து இறங்கியதும் கேட்ட கேள்வி "ஏன் பொண்ணுங்க மரம் ஏறக்கூடாதோ?".

அந்த பெண் இன்று கல்யாணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாய். எனக்குத் தெரிந்து மரம் ஏறத் தெரிந்த ஒரே பெண் அவர் தான் என நினைக்கிறேன்.

6 கருத்துகள்:

  1. நாகரிக வாழ்வில் ஒரு பெண் மரம் ஏறி நானும் பார்த்ததில்லை ஆனால் என் கிராமத்தில் சர சரவென தென்னை மரம் ஏறி இறங்கிய பெண்மணியைப் பார்த்து கிர் அடித்து நின்றபோது இளநீர் ஓசி கிடைத்தது

    பதிலளிநீக்கு
  2. Now it is the turn of men to seek for reservation from the political bigwigs as,modern women have not left any field untouched for men to try and excel in them. Poet Bharathi would be happy if at all he lived during present times.

    Madaveli Natarajan.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே சார்! -- கே. பி. ஜனா

    பதிலளிநீக்கு
  4. come on anna.. whats this??? ponnunga vanathuliye parakranga.. ithellam yemmathirum.. kathaiya konjam modern akkunga ;-)

    பதிலளிநீக்கு
  5. எனது வலைப்பூவினை வாசித்து கருத்துக்களை சொன்ன எல்லா நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி.

    எனது பதிவிற்கு தமிலிஷ்-ல் வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    என்றென்றும் அன்புடன்
    வெங்கட், புது தில்லி

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....