வெள்ளி, 6 நவம்பர், 2009

அந்த இரண்டு ருபாய்

"என்னது அரை கிலோ வெள்ளரிக்காய் பன்னிரண்டு ரூபாயா? பத்து ரூபாய்க்கு கொடுப்பா! " என்று வேலு காய்கறிக் கடைக்காரனிடம் பேரம் பேச, அவன் அதெல்லாம் கட்டுப்படியாகாதுன்னு சொல்ல, பரவாயில்லை அம்மாவிடம் சொல்லி கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்று அதிகமான ரெண்டு ரூபாயை தன் கைக் காசை போட்டு வாங்கி வந்தான்.

பெரிய பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி வனஜாவிடம் கார் டிரைவராக இருப்பவன் வேலு. அவனின் குறைந்த சம்பளத்தில் ஐந்து வயிறுகள் சாப்பிட வேண்டிய கஷ்ட ஜீவனம். ஆனாலும் நேர்மையுடன் வேலை செய்து வந்தான்.

வனஜாவின் கணவரும் அரசு அதிகாரிதான். இருவரது மாத சம்பளமும் சேர்த்தால் மாதத்திற்கு ஒரு லட்சம் வரும். அலுவலகம் சென்று வர அரசு செலவில் இரண்டு வாகனங்கள் . செலவு என்று பார்த்தால் ரொம்ப கம்மி. ஆடம்பரமானவைகளுக்கு மட்டுமே.

வனஜா வேலுவை அனுப்பித்தான் தனக்குத் தேவையான எல்லா பொருள்களையும் வாங்கி வரச் சொல்வாள். அவனிடம் எல்லா வேலைகளையும் வாங்கி வேலைக்காரன் வைத்துக் கொள்ளாமல் பணத்தை மிச்சப்படுதுவாள்.

வீடு திரும்பிய வேலு "மேடம் வெள்ளரி அரை கிலோ பன்னிரண்டு ரூபாய்க்குத்தான் கிடைச்சுது " என்று சொல்ல வனஜாவோ "அதெல்லாம் எனக்கு தெரியாது அரை கிலோ பத்து ரூபாய் தான், அதனால கடைக்காரனிடமே திருப்பி கொடுத்துடு! " என்றதுமில்லாமல் கொடுத்தனுப்பிய பத்து ரூபாயையும் திரும்ப கேட்டாள்.

" பரவாயில்லைங்க மேடம் அதை நானே வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போறேன்" என்று சொன்ன வேலுவிடம் ---

"சரி அதிலிருந்து ரெண்டு வெள்ளரி கொடு "ஸாலாட்" செய்ய தேவை" என்று வனஜா கேட்டு வாங்கிக்கொள்ள--

" பணக்கார்கள் எப்படி மேலும் மேலும் பணம் சேர்த்துக்கொண்டே போகிறார்கள் என்று இப்போதுதான் புரிஞ்சது!" -- தனக்குள் சொல்லிக்கொண்டான் வேலு.


-- வெங்கட் நாகராஜ்

[சர்வேசன்500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை]

http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html

9 கருத்துகள்:

  1. அப்படியான பணக்காரர்களைக் கற்பனையில் அல்ல, நான் நேரிலேயே சந்தித்திருக்கிறேன். எளிமையான நடையில் யதார்த்தமான கதை!

    பதிலளிநீக்கு
  2. ரெண்டு ரூபாய் நஷ்டத்துக்கு பதில் லாபம், அட! --கே.பி.ஜனா

    பதிலளிநீக்கு
  3. நல்ல கதை. அருமையான நடை.

    ரேகா ராகவன்.

    பதிலளிநீக்கு
  4. உண்மைய நல்லா நச் ன்னு சொல்லியிருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  5. What Mr.Velu said is cent percent correct.Such "Blood-suckers" live every where and we have to identify and carefully avoid their company. They will be always on the prowl to cheat others by adopting dubious means.Yours narration will defintely be an eye-opener for the cautious & weak-minded".Keep it up Venkat!! Mandaveli Natarajan.

    பதிலளிநீக்கு
  6. @@ திரு ரவிபிரகாஷ்
    @@ திரு கே.பி. ஜனார்தனன்
    @@ சகோதரி விதூஷ் மற்றும்
    @@ சகோதரி ஸ்வர்ணரேக்கா

    அவர்களுக்கு, எனது வலைப்பூவினை வாசித்து கருத்துக்களை சொன்னதற்கு நன்றி.

    @@ ரேகா ராகவன்
    @@ வி.கே. நடராஜன்

    நன்றி சித்தப்பா.

    எனது பதிவிற்கு தமிலிஷ்-ல் வாக்களித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    என்றென்றும் அன்புடன்
    வெங்கட், புது தில்லி

    பதிலளிநீக்கு
  7. மிக mean ஆக இருக்கும் பல பணக்காரர்கள் சந்தித்துள்ளேன். அவர்களில் சிலரை இந்த கதை எனக்கு நினைவு படுத்தியது.

    நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    மோகன் குமார்
    http://veeduthirumbal.blogspot.com/

    பதிலளிநீக்கு
  8. நன்றி @@ திரு மோகன் குமார்

    என்றென்றும் அன்புடன்
    வெங்கட், புது தில்லி

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....