எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 19, 2010

தலை நகரிலிருந்து – பகுதி 6

இது ஆரவாரமான ஆறாவது வாரம்ம்ம்ம்ம்…. தில்லியில் மரங்கள், செடிகள் எல்லாம் பூத்துக்குலுங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற இடம் பற்றித்தான் இப்போ பார்க்கப் போகிறோம்.பார்க்க வேண்டிய ஒரு இடம்: முகல் கார்டன்ஸ்: குடியரசுத்தலைவர் மாளிகையினுள் உள்ள ஒரு அழகான தோட்டம்தான் அது. வருடத்தில் சுமார் ஒரு மாதம் தான் அதைக்காண அனுமதிக்கப்படுகிறார்கள் பொது மக்கள். இந்த வருடம் பிப்ரவரி 13 முதல் மார்ச் 11 வரை பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டிருந்த இந்த தோட்டத்தில் பலவிதமான மலர்களைப் பார்த்து ரசிக்கலாம். கூடுதல் ஏற்பாடாக மார்ச் 12 அன்று உடல் ஊனமுற்றவர்களுக்காகவும், 13 அன்று இராணுவ வீரர்களுக்கும், 14-ஆம் தேதி உழவர்களுக்காகவும் திறந்து இருந்தது. 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தோட்டம் முதலில் செவ்வக வடிவில் ஒரு தோட்டம், அப்பால் வட்ட வடிவில் ஒரு தோட்டம், பிறகு நீளமான [பர்தா] தோட்டம் என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. ரோஜா, அல்லி, டேலியா, போன்ற பலவிதமான பூக்களை பலப்பல வண்ணங்களில் கண்டு, கவலை மறக்கலாம். பூக்களைத் தவிர மான்கள், முயல்கள் போன்ற விலங்குகளுடைய தரிசனமும் கிடைக்கும். இந்த வருட சிறப்பம்சம் “கேக்டஸ் மற்றும் போன்சாய் மரங்கள். ஆக, கண்களுக்குக் குளிர்ச்சியூட்டும் மனதுக்கு மலர்ச்சியூட்டும் இந்தப்பூங்காவை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும்.சாப்பிட வாங்க:சிங்காடா” [Singhada] அப்படின்னு ஒண்ணு இங்க கிடைக்குதுங்க. பச்சைக்கலர்ல இருக்குற மேல்புற தோலை உரிச்சுப் பார்த்தீங்கன்னா உள்ளே வெள்ளையாக பருப்பு போன்ற ஒன்று இருக்கும். அதை பச்சையாகவே சாப்பிடலாம். இல்லை என்றால் வேக வைத்தோ, ஊறுகாய் போட்டோ சாப்பிடுகிறார்கள். குளம் குட்டைகளில் தண்ணீருக்கு அடியில் உள்ள மண்ணில் வளர்கிற இதை கிலோ-கிலோவா வாங்கி சாப்பிடறாங்க இந்த ஊர்ல! பிழைச்சீங்கடா! என்று தப்பித்து வந்தோம்...

இந்த வார ஹிந்தி சொல்: பேரிக்காயை இந்த ஊர்ல “நாஸ்பதி”ன்னு சொல்றாங்க. கல்யாணம் ஆன புதுசுல ஹிந்தி தெரியாத என்னோட மனைவியை மார்கெட் அழைத்துச்சென்ற போது ஒரு கடைக்காரர் “நாஸ்பதி நாஸ்பதி – கிலோ தஸ் ருப்யா” என்று கத்திக்கொண்டு இருந்தார். அதைக்கேட்ட என் மனைவி ”என்னங்க இது, ராஷ்டிரபதியை கூவிக் கூவி வித்துட்டு இருக்கான் இவன்?” என்று கேட்டார் – அவர் காதுல “நாஸ்பதி” – ராஷ்டிரபதியா கேட்டு இருக்கு!

இன்னும் வரும்…

5 comments:

 1. என்ன!(வா) ரம் - மில இழுப்பு பயங்க(ரம்)மா இருக்கு. தில்லி(பிராந்தி)யத்தப் பத்தி எழுதுவதாலா?

  ReplyDelete
 2. பிழைச்சீங்கடா! என்று தப்பித்து வந்தோம்

  நகைச்சுவையை ரசித்தேன்..
  சிலேட்டு அழிக்கும் காயை மும்பையில் உறவினர் வீட்டில் வதக்கிப் போட்டபோது ‘முழித்தது’ நினைவு வந்தது..

  ReplyDelete
 3. அந்த சிங்காடா வை இதுவரை இன்னதுன்னு நான் தெரிஞ்சுக்கலை.. நல்லவேளை வாங்கலைன்னு தோணுது இப்ப. குளம் குட்டையா.. ஓடற ஆறே கேவலமா இருக்குது குளம் குட்டைன்னா பயம்மா இருக்கே இந்த காலத்துல..

  ReplyDelete
 4. அந்த‌ பூங்காவை நானும் 1995யில் பார்த்திருக்கேன்,அருமையாக‌ இருந்த‌து.

  ReplyDelete
 5. நல்ல பதிவு .

  ரேகா ராகவன்.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....