வெள்ளி, 21 மே, 2010

யோகக்காரண்டா நீ!




''என்னய்யா ஒரு ஏ.சி. கூட இல்லாம எப்படி தூங்கறே நீ?'' அப்படீன்னு நம்மைப் பார்த்து ஒரு எருமை கேட்டா எப்படி இருக்கும்? ஏன் கேட்காது? அது ஏ.சி. யில இல்லே தூங்குது? ,

ஆமாம். ஹரியானா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் உள்ள பல கிராமங்களில் பலர் தாங்கள் வைத்திருக்கும் எருமைகளுக்கென பெரிய வீடு கட்டி அதில் ஏ.சி. பொருத்தி அவற்றை அதில் தங்க வைத்துவிட்டு கயிற்றுக்கட்டிலில் வெட்ட வெளியில் படுத்து நட்சத்திரத்தை எண்ணுகிற பலரை நீங்கள் காணலாம்.

இங்கு நாள் ஒன்றுக்கு 35 லிட்டர் பால் கொடுக்கும் எருமைகள் கூட இருக்கின்றன. ஆகவே இவற்றுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். ராம நாராயணன் குரங்கு, யானை போன்ற விலங்குகளுக்குத்தான் உடை அணிவித்தார். இங்கோ எருமைகளுக்குக் கூட உடை அணிவிக்கின்றனர். எருமைகளுக்குக் குளிர் ஒத்துக்கொள்ளாததால், அவற்றின் மேல் சாக்கினால் ஆன உடையைத் தைத்து போர்த்தி விடுகிறார்கள்.

நம் ஊரில் காளை மாடுகளைத் தான் மாட்டு வண்டியில் பூட்டி வாகனங்கள் ஓடுவதைக் காண முடியும். இங்கே மாட்டு வண்டியில் எருமையைக் கட்டித் தான் ஓட்டுகின்றனர். வயல்வெளிகளில் ஏரோட்டுவதற்கு தற்போது நிறைய கருவிகள் வந்துவிட்டாலும், இங்கே முதலில் எருமைகளைத்தான் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தில்லி பெருநகரின் மத்தியில் உள்ள Greater Kailash போன்ற பணக்கார பகுதியின் அருகில் இருக்கும் ஜம்ருத்பூர் போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான எருமைகளை வைத்து வளர்க்கின்றனர். ”எருமை மாட்டு மேல மழை பெய்த மாதிரி” என்று சொல்வதை உண்மையாக்க இங்குள்ள எருமைகள் பிரதான சாலைகளில் நட்ட நடுவில் படுத்துக்கொண்டு ”நீ போகணும்னா என்னைச் சுத்திகிட்டுப் போ” என்று சுகமாக படுத்துக்கொண்டு சொல்வது போல அசையாமல் இருக்கின்றன.

சிறு வயதில் அம்மா என்னை நான்கு-ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தும் போகாதவன் கோபத்தில் அவர் “டேய் டெல்லி எருமை” என்று கூப்பிட்டதும் உடனே காதில் தேன் வந்து பாய்ந்ததை போல “என்னம்மா?” என்று கேட்டுக்கொண்டு உள்ளே செல்வேன். அவர் ஒரு தீர்க்கதரிசி – இந்த ”எருமை” டெல்லியில் தான் இருக்கப் போகிறது என்று அன்றே அவருக்கு தெரிந்திருக்கு பாருங்க!

8 கருத்துகள்:

  1. உலகெங்கும் ’பிரேக் இன்ஸ்பெக்டர்’ என்று பெருமையாக அழைக்கப்படும் எருமையைக் கலாய்த்து எழுதி விட்டீர்களோ என்று பார்த்தேன். நல்ல வேளை, மிகவும் பெருமைப் படுத்தியே எழுதியிருக்கிறீர்கள். எருது பற்றிய உங்கள் இடுகைக்கு ஒரு விருது விரைவில் வருது என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. ந‌ல்ல‌ ப‌கிர்வு வெங்க‌ட் நாக‌ராஜ். டெல்லி எருமை எல்லா இட‌த்திலும் பேம‌ஸ் :)

    பதிலளிநீக்கு
  3. எருமையாக எழுதியுள்ளீர்கள். Sorry! அருமையாக எழுதியுள்ளீர்கள்!. உங்களுக்கு ஒன்று தெரியுமா. நம்ம ராமராஜன் அண்ணாச்சி இந்தப் பக்கம் வேலைக்கு apply செய்திருந்தார். ஆனால், கண்டிப்பாக uniform Pant , Shirt - தான் போடணும், trouser -லாம் போடக்கூடாதுன்னு சொல்லிபுட்டாங்க. அதுக்கு அப்புறம் சென்னைக்கு போய் சினிமாவில் சேர்ந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  4. ஹஹ்ஹா
    எங்கவீட்டுலயும் இந்த வார்த்தை ஃபேமஸ் தான்.. அதும் எஙக்யாச்சும் மாடு உக்காந்திருந்தா .. உன் ப்ரண்ட் பாரேன்னு சொல்றதும் உண்டு.. :))

    பதிலளிநீக்கு
  5. நம்மள நாமே கலாய்ச்சுக்க ஒரு துணிச்சல் வேணும்.. கடைசில அதையும் ட்ரை பண்ணிட்டீங்க.. எல்லா ஊர்லயும் எந்த எருமையும் அது நவுராது.. நாமதான் சுத்திகிட்டு போவணும்..

    பதிலளிநீக்கு
  6. எருமையை எள்ளி நகையாடியது விலங்குகளைப் பாதுகாக்கும் ஆர்வலர்களின் காதுகளில் விழப்போகிறது, வெங்கட் அண்ணாச்சி! இளமையில் அதன் பாலில் காபி குடிப்பதற்காக ஏங்கிய காலங்கள் உண்டு என்றால் மிகையாகாது. அதனிடம் பொறுமையை கற்றுக்கொள்,என பெரிசுகள் கூறக்கேட்டிருக்கிறேன்.வயது ஏற, ஏற இதன் வரவை நினைத்து பயப்படதவர்களே இருக்க முடியாது. இத்தகைய பல சிறப்புகளை தன்வசத்தே கொண்ட ஒரு ஜீவனை நினைகூர்ந்த நிமது மாண்பு பாராட்டிற்கு உரியது.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  7. எருமையின் அருமை புரிந்தவர்கள்!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....