வெள்ளி, 16 ஜூலை, 2010

இம்சை அரசனும் அரசியும்



நாங்கள் தற்போது இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு தம்பதியினர் வாடகைக்குக் குடி வந்தனர். கல்யாணம் ஆகி சில மாதங்களே ஆகியிருந்த ஒரு இளம் ஜோடி அது.

வந்த அன்றே என் வீட்டுக் கதவைத் தட்டி தண்ணீர் வேண்டும், பால் எங்கே கிடைக்கும் என பாதி ஆங்கிலத்திலும் பாதி ஹிந்தியிலும் கேட்டபோதே புரிந்துவிட்டது அவர்கள் தமிழர்கள் என்பது. பிறகு தமிழிலேயே பேசி அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து கொடுத்தேன். புதிதாக வந்து இருக்கிறார்களே என்று தேனீர் கொடுத்து உபசரித்தோம்.

அவர்கள் ஹைதையிலிருந்து வேலை மாற்றமாகி வந்திருந்ததால் வீட்டுப்பொருட்கள் அங்கிருந்து வர சில நாட்கள் தாமதமாகியது. தினமும் காலையில், ”சார் வெளியே எங்கேயும் தேனீர் கிடைக்கல, எங்களுக்கு அது இல்லாமல் முடியாது” என்று சொல்லியே தினமும் தேனீர் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

அடுத்த வாரத்திலிருந்து அவர்களது தொல்லைகள் எங்களுக்கு ஆரம்பமாகின. காலை ஆறு மணிக்கு அழைப்புமணியை அழுத்தி “சார் பால் வந்துடுச்சா?” எனக் கேட்பதில் ஆரம்பிக்கும் தொல்லை, இரவு பத்துமணி வரை எதாவது ஒரு வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கும். நாங்களும் ”என்னடா இது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டோமோ” என நினைக்கும் அளவுக்கு இருக்கும் அவர்களது தொந்தரவு.

அதிலும் அந்த பெண்ணின் தொல்லை சொல்லி மாளாது. எப்போது பார்த்தாலும், நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஐநூறு, ஆயிரம் நோட்டா இருக்கு, பத்து ரூபா கொடுங்க, அப்பறம் தரேன் என்பார் பல நாட்கள். ஒரு முறை கூட அவராக திருப்பிக் கொடுத்தது இல்லை.

ஒரு நாள் கதவை தட்டி, ”என் செருப்பு அறுந்து போச்சு, உங்க செருப்பை கொடுங்க, கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன்” என்று பேருக்கு சொல்லிவிட்டு என் சம்மதத்தை எதிர்பார்க்காமல் அவராகவே செருப்பை மாட்டிக்கொண்டு சென்றுவிட்டார். அவ்வப்போது இருவரில் ஒருவர் "ஒரு வெங்காயம் கொடுங்க, ரெண்டு தீக்குச்சி கொடுங்க, மூணு அப்பளம் கொடுங்க!", என்று எதற்காகவாது கதவைத் தட்டுவார்கள்.

ஒரு நாள் நான் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்தபோது கதவைத் தட்டி, “ரெண்டு தீக்குச்சி கொடுங்க!” என்று கேட்டார். தூக்கம் கலைந்த கோபத்தில் நான் தீக்குச்சியெல்லாம் இல்லை என்று சொல்லி சொல்லி கதவை மூட முயன்றேன். ”தீக்குச்சி இல்லைன்னா கேஸ் லைட்டராவது கொடுங்க!” என்றார் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக. நானும் கேஸ் லைட்டரும் ரிப்பேர் என்று சொல்லி கதவை மூடும்போது “அப்ப நீங்க கேஸ் அடுப்பு பத்த வைக்க என்ன செய்வீங்க?” என்ற கேள்வி வேறு.

கணவன் மனைவி இருவருமே சரியான மறதி பேர்வழிகள். தினமும் அவங்க அலைபேசியை வீட்டுல எங்காவது வைத்துவிட்டு எங்க வீட்டுக் கதவைத்தட்டி, அவங்க அலைபேசிக்கு ஒரு அழைப்பு விடுக்கச் சொல்லுவாங்க.

எங்களுக்கு தினம் தினம் இதுபோன்ற பற்பல தொல்லைகள் . என்னடா இது உதவி செய்யப்போய் ரொம்ப உபத்திரவமா போச்சே என்று நாங்கள் நொந்து போனோம். சில நேரங்களில் நேரடியாகவுமே அவ்வப்போது மறைமுகமாக சொல்லியும் அவர்கள் திருந்துவதாயில்லை.

எப்போதடா இத்தொல்லைகளிலிருந்து நமக்கு விடிவுகாலம் என இருந்தபோது நல்ல வேளையாக அவர்களுக்கு தில்லியில் இருந்து மீண்டும் மாற்றல் வந்து விட்டது.

இந்த அனுபவம் எங்களுக்கு ஒரு படிப்பினையாக இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் உதவி செய்வதென்றால் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டியிருக்கிறது.

21 கருத்துகள்:

  1. சிலபேர் இப்படித்தான் இருக்கிறாங்க..

    பதிலளிநீக்கு
  2. ஹாஹாஹா... பாவம் வெங்கட் நீங்க.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நொந்து போய்டீங்க போல

    பதிலளிநீக்கு
  4. அண்ணாத்தே! இம்சை அரசிக்கும் அரசனுக்கும், இம்சை இளவரசன்/இளவரசி இல்லையா? இருந்திருந்தா இன்னும் ஜாலியாக இருந்திருக்கும்.

    (இம்சை அரசி, அம்சமா இருந்தா பாதி பேரு இம்சையை எல்லாம் கண்டுக்கிறதே இல்லை. ஹி! ஹி!)

    பதிலளிநீக்கு
  5. Muthal murai ungal thalam vanthen...


    பல பேரே இப்படிதான்..!


    vitunga..!

    http://www.vayalaan.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. ஹாஹாஹா...

    பாவம் ரொம்ப நொந்து போய்டீங்க போல...

    பதிலளிநீக்கு
  7. வாங்க அமைதிச்சாரல், ரொம்ப பேர் இப்படிதான் இருக்காங்கன்னு பட்டபிறகே தெரிந்தது. :)

    வாங்க RK குரு, உண்மைதான். :)

    வாங்க விக்னேஷ்வரி, சிரிங்க சிரிங்க... பாவம் நாந்தானே.. :)

    வாங்க LK, நொந்து நூடுல்சாயிட்டேன். அதன் விளைவுதான் இந்த பகிர்வு. :)

    வாங்க சொந்தர், அதே நத்தம்தான். :)

    வாங்க லாவண்யா [உயிரோடை], வரவுக்கு நன்றி. :)

    வாங்க ஜெய், ஹிஹிஹி.... :)

    வாங்க கலாநேசன், கொடுமைதான்.. :)

    வாங்க அப்பாவி தங்கமணி, கஷ்டமோ கஷ்டம் ஆறு மாசத்துக்கு இருந்தது. :)

    வாங்க பத்மநாபன் [ஈஸ்வரன்], இம்சையரசி அம்சமா இருந்திருந்தா, இந்த பதிவு வராதா என்ன? ரொம்ப இம்சையப்பா நீங்களும். :)

    வாங்க சே. குமார், உங்களது முதல் வருகை என்னை மகிழ்வித்தது நண்பரே.

    வாங்க கமலேஷ், நொந்துதான் போயிட்டேன். வரவுக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  8. தமிலிஷ் [இண்ட்லி] தளத்தில் வாக்களித்து எனது இவ்விடுகையை முன்னணியாக்கியதற்கு எல்லா வாக்காளர்களுக்கும் எனது மேலான நன்றி. :)

    பதிலளிநீக்கு
  9. அட கடவுளே .. பாவம் வெங்கட் நீங்க.. இப்பவாது நிம்மதியா இருகீங்களா..

    பதிலளிநீக்கு
  10. வாங்க தேனம்மை லக்ஷ்மணன், இப்போது நிம்மதியாக இருக்கிறேன் - அவர்களது தொல்லையிலிருந்து தப்பித்தபின். உங்களது முதல் வரவுக்கு நன்றி. :)

    பதிலளிநீக்கு
  11. பாவம் சார் நீங்க ..ஹெல்ப் பண்ண போயி வம்பில் மாட்டிங்க இப்போ சந்தோஷமா பீல் பண்ணறிங்க இல்லையா...நீங்க எழுதின விதம் ரொம்ப நல்லா இருந்தது சிரிப்பா வந்ததது ...

    பதிலளிநீக்கு
  12. வாருங்கள் சந்த்யா, உங்களது முதல் வருகைக்கும் என்னுடைய 47 Follower ஆக ஆனதற்கும் நன்றி.

    வாருங்கள் சி. கருணாகரசு. உங்களது முதல் வருகைக்கு நன்றி. வித்தியாசமான அனுபவம்தான்.

    பதிலளிநீக்கு
  13. இம்சை தம்பதிகளால் எந்த ஊரில், யார் யார் இன்னும் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்ளப்போறாங்களோ தெரியலியே! ஆனாலும் ரொம்பத் தான் அனுபவிச்சிட்டீங்க! :-))))

    பதிலளிநீக்கு
  14. வாங்க சேட்டைக்காரன், தெரியவில்லை வேறு யார் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டு இருக்கிறார்களோ. வரவுக்கும் உங்களது கருத்துக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....