திங்கள், 2 ஆகஸ்ட், 2010

என்ன ஆகும்?




என்னுடைய நண்பர் ஒருவரின் தலை நல்ல வழுக்கை. அவர் வாழும் அடுக்கு மாடி குடியிருப்பில் அவர் வீட்டுக்குக் கீழ் வீட்டில் பெரிய நாய் ஒன்று இருக்கிறது.

அவர் ஒரு நாள் கீழிருந்து மேலே வரும் போது கீழ் விட்டுப் பெண் நாயை சங்கிலியால் கட்டி கீழே அழைத்துச் சென்று கொண்டிருந்தார். படிக்கட்டில் நடந்திருக்கிறது இச்சந்திப்பு.

நண்பர் இரண்டு படி கீழே இருக்கும் போது அந்த நாய் மேலே இருந்து பாய்ந்து இவரின் தோளின் மேல் தன் முன்னிரு கால்களையும் வைத்து நாக்கைத் தொங்க போட்டபடி மோப்பம் பிடித்திருக்கிறது. நண்பருக்கோ மனசில் கிலி. அதை ஒரு பெண்ணுக்கு முன் காண்பிக்கவும் மனசில்லை.

அந்த பெண், நண்பரிடம் ”எங்க நாய் கடிக்காது, புதியவர்கள் எனில் சும்மா நக்கிப் பார்க்கும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பெரிய நாய் நண்பரின் வழுக்கைத் தலையில் நக்கி விட்டதாம். பின்னர் நாயை அழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணும் சென்று விட்டார்.

இப்போது நண்பருக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு சந்தேகம் தான். “ஊர்ல பெருசுங்க சொல்வாங்க, வழுக்கைத் தலையில எருமை நக்கிட்டா முடி முளைக்கும்னு, ஆனா யாருமே நாய் நக்கினா என்ன ஆகும்னு சொல்லலையே?”

பார்க்கறவங்க கிட்டெல்லாம் "நாய் நக்கினா என்ன ஆகும்?" - ன்னு கேட்டுட்டே இருக்கார். ஆனா நான் அவர்கிட்ட என்ன ஆகுதுன்னு பார்த்துட்டு அதை முதல்ல என்கிட்டதான் சொல்லணும்னு சத்தியம் வாங்கியிருக்கேன், அப்பதானே நான் அந்த மகத்தான மருத்துவத்துக்கு காப்புரிமை எல்லாம் வாங்கமுடியும்?.

ஆமா நாய் நக்கினா என்ன ஆகும்னு உங்களில் யாருக்காவது தெரியுமா?

16 கருத்துகள்:

  1. நன்றியுள்ள நாய்நக்க நானூறு
    முடிமுளைக்கும்
    பன்றியொன்று நக்கிட்டால்
    பதினாறும்கொட்டிடுமே!-கன்றீன்ற
    எருமையது நக்கிடவே ஏழுனூறு
    முளைத் தாலும்,கேளீர்!
    அருமையான வழுக்கைஎன்றும்
    ஆண்மைகழகு!

    பதிலளிநீக்கு
  2. ஹாஹாஹா.. நீங்க பதிவெழுதன்னே இந்த மாதிரி விஷயங்களெல்லாம் நடக்குதா...

    பதிலளிநீக்கு
  3. என்ன ஆகும்னு எனக்குத் தெரியும். ஆனா சொல்ல மாட்டேன். லாபத்தில் நாற்பது பெர்சென்ட் உனக்கு அறுபது எனக்குன்னு அக்ரீமெண்ட் போட ரெடின்ன சொல்றேன்.


    ரேகா ராகவன்.

    பதிலளிநீக்கு
  4. அய்யா வெங்கட் அவர்களே,

    ஒருத்தர் பாட்டை பாடறார். ஒருத்தர் என்னடான்னா லாபத்திலே என்ன பங்கு என்று கேட்கிறார். நீங்கள் வேறு எரியிற கொள்ளியிலே எண்ணெய் விடுவது போலே "வழுக்கையிலே நாய் நாக்கினால் என்ன நடக்கும்" என்று பட்டிமன்றத்திற்கு, சாலமன் பாப்பையா அவர்களை நடுவராக இருக்க அழைப்புஅனுப்புகிறீர்கள். ! சீக்கிரமா ஒரு ஆங்கில மருத்துவரை அழைத்து வழுக்கை தலையருக்கு தொப்புளை சுற்றி ஒரு பத்தோ, பதினாறோ ஊசியை போடசொல்லுங்கப்பா, புண்ணியமாய்போகும்.!!

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  5. //ஆமா நாய் நக்கினா என்ன ஆகும்னு உங்களில் யாருக்காவது தெரியுமா?//

    ஈரமாகும்

    பதிலளிநீக்கு
  6. பாவம் இந்த நாய் நாக்கை வெளிய நீட்டி நீட்டி நாக்கு நீண்டுவிட்டது போங்க . உங்களின் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது தெரிந்தால் நீங்களே சொல்லிடுங்க

    பதிலளிநீக்கு
  7. //சீக்கிரமா ஒரு ஆங்கில மருத்துவரை அழைத்து வழுக்கை தலையருக்கு தொப்புளை சுற்றி ஒரு பத்தோ, பதினாறோ ஊசியை போடசொல்லுங்கப்பா, புண்ணியமாய்போகும்.!!//

    ஸார்! இதுக்கெல்லாம் போய் இங்கிலாந்தில் இருந்து ஆங்கில மருத்துவரை அழைப்பானேன்! ஒரு தமிழ் மருத்துவரை அழைக்கலாமே! வாழ்க தமிழ்.

    (Mosquito Season தொடங்கிடுச்சு.)

    பதிலளிநீக்கு
  8. ஹா ஹா ஹா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. நீங்க பதிவெழுத ஒரு விஷயம் கிடைக்கும். :)

    பதிலளிநீக்கு
  10. @ LK: தெரிஞ்சிக்கிட்டா சொல்லாம இருக்கேன் :)

    @ முத்துலெட்சுமி: :))

    @ ஈஸ்வரன்: என்ன கவிதையெல்லாம் பலமா இருக்கு, நாய் நக்கியதன் பலனோ :))

    @ விக்னேஷ்வரி: ஓ அப்படி ஒரு கோணம் இருக்கா, அது தெரியாம போச்சே :))

    பதிலளிநீக்கு
  11. @ ரேகா ராகவன்: விஷயம் தெரிந்த நீங்களே தயார், அதனால நானும் தயார். :)

    @ ரிஷபன்: இது ”வேற” நக்கல்! :))

    @ VKN: இப்ப எல்லாம் நாய் கடிச்சாக் கூட பதினாறு ஊசி போடறது இல்லை, மூணு ஊசிதான். அவர் ஊசி போட்டுக்கிட்டார். :))

    @ கலாநேசன்: ஐ, சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே! உங்களுக்கும் பரிசு உண்டு. :)

    பதிலளிநீக்கு
  12. @ பனித்துளி சங்கர்: உங்களை மாதிரி எனக்கு நாயை நேசிக்கத் தெரியலே... அந்த நாய் பாவம்! :))

    @ ஈஸ்வரன்: முதல்ல நாய், இப்போ கொசுவா? ஜாக்கிரதையா இருங்க அண்ணாச்சி! :)

    @ சசிகுமார்: நன்றி நண்பரே. உங்கள் வாழ்த்துக்கள் உண்மையாகட்டும் :))


    @ வரதராஜலு.பூ: சரியாச் சொன்னீங்க. உங்களது முதல் வருகைக்கு நன்றி.

    @ K.B. ஜனார்த்தனன்: நன்றி. :)

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....