திங்கள், 30 ஆகஸ்ட், 2010

மழையே மழையே……


தில்லி மக்கள் ஜூன் மாசமெல்லாம்மழை வராதா மழை வராதான்னு ஏக்கத்தோட பாம்பே மழை பத்தி தொலைகாட்சில பார்த்துட்டு இருந்தாங்க! அப்பப்ப தினசரிகள்ல வானிலை அறிக்கை வேறமழை தோ இன்னிக்கு வந்துடும், நாளைக்கு வந்துடும்னு ஜோசியம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

தில்லில எப்பவுமே மொத்தமாகவே பத்து-பதினைந்து நாட்கள்தான் மழைக்காலம். அதுவும் சும்மா கொசுத்தூத்தல் போட்டுட்டுப் போயிடும். நம்ம ஊர் மாதிரி அடர்ந்த மழை எல்லாம் பெய்யாது. அரை மணி நேரம் மழை பெய்தாலே தில்லி வாசிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி. அதுவும் சனி-ஞாயிறுகளில் மழைபெய்தால் குடும்பத்தோட வீட்டை விட்டு வெளியே வந்து மழையில் நனைவது அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று!

வானிலை அறிக்கை வாசிப்பவராக நடிகர் மதன் பாப் வருகிற ஏதோ ஒரு படத்துல விரலை தொடறதை வைத்தே இன்னிக்கு மழை வரும், வராதுன்னு ஜோதிடம் மாதிரி சொல்வார். அது மாதிரி தான் இங்கேயும் இருந்ததுஎன்னிக்கு அவங்க மழை வரும்னு சொல்வாங்களோ அன்னிக்கு நிச்சயமா மழை வராது.

இப்ப ஒரு பதினைஞ்சு இருபது நாளா தில்லில அப்படி ஒரு மழைஎப்பவும் இல்லாத மாதிரி ஒரு மணி நேரம் கூட தொடர்ந்து மழை பெய்யுது. ஆனா ஒரு மணி நேரம் பெய்யற மழையோட விளைவுபல மணி நேரத்துக்கு தில்லியோட பிரதான சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல்.

இதில் கொடுமை என்னவென்றால்தில்லி போன்ற பெருநகரங்களில் மனித உயிருக்கு மதிப்பில்லாததுதான். ஆங்காங்கே தோண்டிப் போடப்பட்ட இடங்களில் கிடக்கும் பலவித மின்சாரக் கம்பிகளில் மின்சார கசிவு ஏற்பட்டு இந்த மழை நாட்களில் சில உயிர்களும் போன செய்திகளை நாளிதழ்களில் தினமும் படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

போன சனிக்கிழமை அப்படி ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையில் தில்லியின் முக்கிய இடமான குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதம மந்திரி வீடு இருக்கிற சாலை [ரேஸ் கோர்ஸ் சாலை] போன்ற இடங்களிலேயே தண்ணீர் தேங்கி இருந்ததுன்னா பார்த்துக்கோங்க!

அதுவும் 30000 கோடி ரூபாய் செலவு பண்ணிகாமன்வெல்த் போட்டி நடத்தப் போறோம்னு சொல்லி தில்லில பல இடங்கள்ல குழி குழியா தோண்டிப் போட்டு, நீச்சல் போட்டிக்கு பயிற்சி எல்லாம் சுலபமா தில்லி சாலைகளிலேயே எடுத்துக்க வசதி செய்து இருக்காங்க!. அதுனால எந்த போட்டில தங்கம் கிடைக்குதோ இல்லையோநீச்சல்" போட்டியில் தங்கப் பதக்கம் இந்தியாவுக்கு நிச்சயம்-னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுது!

23 கருத்துகள்:

  1. முன்னொரு காலத்துல யமுனைப்பாலமே தண்ணீரில் மூழ்கியதாக சொன்னாங்க..
    ஆனா யமுனா நிறைஞ்சு ஓடரத பாக்கற பாக்கியம் நம்மூருக்கு இப்பதான் கிடைச்சிருகு
    ஆனா சரியான முன்யோசனை இல்லாம கட்டப்பட்ட ரோடுகள் தண்னீரில் மிதக்கிறது
    பாத்தா காமன்வெல்த் கேம் நமக்கு நாமே வெட்டிக்கிட்ட குழி மாதிரி இருக்கு..

    பதிலளிநீக்கு
  2. ப‌திவு ந‌ல்லா இருக்குங்க‌ வெங்க‌ட்.

    காம‌ன் வெல்த் கேம் ஊரால் செல‌வில் வைச்சிகிட்ட‌ சூன்ய‌ம். நிறைய‌ பேர் இத‌னால‌ நிஜ‌மாவே ந‌ல்லா வெல்த் ச‌ம்பாதிச்சிட்டாங்க‌.

    பதிலளிநீக்கு
  3. I am planning to come to Delhi in Sep last week. Your article raises some alarm.

    பதிலளிநீக்கு
  4. இவ்வளவு மழை பெய்து என்ன பயன். இன்னும் புழுக்கம் அதிகமாயிட்டே தான் போகுது. எல்லாம் பருவ நிலை மாற்றம் தான் காரணம்.

    பதிலளிநீக்கு
  5. @ முத்துலெட்சுமி: இன்னொரு நல்ல விஷயமும் நடந்து இருக்கு இந்த மழையால, யமுனா கொஞ்சம் சுத்தமாயிருக்கு :) ஆனா, மழையெல்லாம் விட்ட பிறகு, திரும்பவும் சாக்கடையெல்லாம் யமுனாவில் திறந்து விட்டு, அதையும் சாக்கடையாக்கிடுவாங்க, அதான் பரிதாபம். வரவுக்கும், கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. @ உயிரோடை: காமன்வெல்த் - இல்லாம சில பேரின் சொந்த ”வெல்த்” அதிகம் ஆகிவிட்டது தான் சோகம். இன்னும் கேம் முடியறதுக்கு முன்னாடி எத்தனை பணம் அடிப்பாங்களோ :( வரவுக்கும் கருத்துக்கும் நன்றி லாவண்யா.

    பதிலளிநீக்கு
  7. @ மோகன்குமார்: கவலையே படாதீங்க மோகன், செப்டம்பர் கடைசிக்குள்ள மழையெல்லாம் விட்டுடும். நீங்க தாராளமா வரலாம். :)

    பதிலளிநீக்கு
  8. அதுனால எந்த போட்டில தங்கம் கிடைக்குதோ இல்லையோ “நீச்சல்" போட்டியில் தங்கப் பதக்கம் இந்தியாவுக்கு நிச்சயம்-னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுது!
    சரியான நக்கல்!
    யமுனையில் வெள்ளம் இன்று தினசரியில் செய்தி..

    பதிலளிநீக்கு
  9. மழையால் யமுனை சுத்தம் ஆச்சு என்றால் நல்லது தானே வெங்கட்!

    பதிலளிநீக்கு
  10. தில்லியில் மழை.... யாருக்கு லாபமோ இல்லை உங்களுக்கு ஒரு இடுகை தேறிடுச்சு.. அந்த வகையில் லாபம்தான்..

    வெரி குட் கீப் இட் அப்..

    பதிலளிநீக்கு
  11. கடந்த 110 வருசத்துல தலைநகரில் இந்த மாதிரி ஆகஸ்டில் அலை பெய்வது இது ஏழாவது முறையாம். இந்த பதிவை நீங்கள் வெளியிட்ட நேற்று கூட ஒரு பேருந்து கவிழ்ந்துள்ளது. நீச்சல் பயிற்சி = நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
  12. யமுனா நதியில் வெள்ளம் இந்த செய்தி நானும் பார்த்தேன் ..

    "அதுவும் 30000 கோடி ரூபாய் செலவு பண்ணி “காமன்வெல்த் போட்டி” நடத்தப் போறோம்னு சொல்லி தில்லில பல இடங்கள்ல குழி குழியா தோண்டிப் போட்டு, நீச்சல் போட்டிக்கு பயிற்சி எல்லாம் சுலபமா தில்லி சாலைகளிலேயே எடுத்துக்க வசதி செய்து இருக்காங்க!.

    30000 கோடியா அதிலிருந்து 300 கோடி தான் காமன் வெல்த் போட்டி க்கு எடுத்திருப்பா மீதி எல்லாம் ..????.

    "அதுனால எந்த போட்டில தங்கம் கிடைக்குதோ இல்லையோ “நீச்சல்" போட்டியில் தங்கப் பதக்கம் இந்தியாவுக்கு நிச்சயம்-னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுது!""

    இது தமாஷு

    பதிலளிநீக்கு
  13. வெங்கட் அவர்களே,
    "பூமியின் வெப்பம் அதிகரித்தலை தடுக்க நம்மால் முடிந்த செயல்களை செய்திட இன்றே தொடங்கிடல் வேண்டும் என்று 'மழை ' இடுகை மூலம் ஒரு செய்தியை மக்களுக்கு குறிப்பால் உணர்த்தியமைக்கு நன்றி அய்யா!
    "முன் யோசனையின்றி," கட்டப்பட்ட விளையாட்டு அரங்கங்கள் , போடப்பட்ட தார் சாலைகள், மரணக்குழிகள் மற்றும் மின்சாரக் கசிவுகளால் வரும் உயிரிழப்புகள் இவற்றைப்பற்றி மேலோர் வருத்தம் தெரிவித்திருந்தார்கள். உண்மை யாதெனில், கனடாவிற்கு செல்லவேண்டிய வாய்ப்பை , பல கோடிகளை தன் பல தலைமுறைக்கும் சேர்த்து வைக்கும் முன்யோசனையோடு, கொடுக்கவேண்டியதைக் கொடுத்து, நம்மவர்கள் தட்டிப் பறித்ததாக கேள்வி! மனித நேயம் மறந்த இத்தகைய கொடியோரிடம் ,"ஒத்தது அறிவான்** உயிர் வாழ்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் " என்ற வள்ளுவத்தை எதிர் பார்ப்பது ,அரவோருக்கு அழகன்று என்று நயம் பட உரைத்த நீவிர் , வாழ்க, வளர்க.

    **"சமுதாயத்தில் தானும் ஒருவன் என்றுணர்ந்து, பிறர்க்கு உதவி செய்து"

    மந்தவெளி நடராஜன்.
    ,

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள வெங்கட்டுவிற்கு

    தங்களுடைய "மழையே..." என்ற இடுகைக்கு நான் அளித்த பின்னூட்டத்தின் முடிவில் உள்ள 'அரவோர்' என்பதை 'அறவோர்' என்று திருத்தி வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தவற்றிற்கு வருந்தும்,

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  15. மழையில் நனைந்ததுடன் எங்களையும் நன்றாக நனைத்து விட்டீர்கள். நன்றி.
    நீங்கள் குறிப்பிட்டதைப் போல் நீச்சலில் முதல்ப் பரிசு இம்முறை நமக்குத்தான். தில்லி ரிங் ரோட்டிலேயே குழந்தைகள் நீச்சல் அடித்ததைப் பார்த்தோமே!
    என்ன மழை பெய்து என்ன பிரயோஜனம். அதை சேமித்து வைக்க எந்த வழி வகையும் செய்யவில்லையே!

    (சரி. அதை விடுங்கள். என்ன புலம்பி என்ன பிரயோஜனம்? Atleast நீங்களாவது நம்ம ”மழை ஸ்ரேயா” படத்தைப் போட்டிருக்கலாம்.கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும்.)

    பதிலளிநீக்கு
  16. @ ரிஷபன்: வருகைக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி!

    @ கோமதி அரசு: வாங்கம்மா! யமுனா கொஞ்சமா சுத்தம் ஆகியிருக்கு என சந்தோஷம் :) தண்ணீர் குறைந்த உடன், தடுத்து நிறுத்தியிருக்கும் எல்லா சாக்கடைகளையும் திரும்பவும் யமுனையில் திறந்து விட்டுவிடுவார்கள் என நினைக்கும்போது சோகம் :(

    @ இராகவன் நைஜீரியா: அச்ச்சசோ விஷயம் இப்படி போகுதா! நிர்வாக ரகசியமே வெளிய வந்துடுச்சோ!! :)
    நன்றி சார்!

    @ KBJ: நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  17. @ கலாநேசன்: நன்றி நண்பரே!

    @ sandhya: நன்றி சகோதரி!

    @ சசிகுமார்: நன்றி நண்பரே!

    @ VKN: இரண்டு முறை நன்றி! :)

    @ Dr.P. Kandaswamy: நன்றி சார்.

    @ ஈஸ்வரன்: தண்ணீரைச் சேர்த்து வைக்க வழி செய்யவில்லை என்பது சோகம் தான். அதுக்காக இப்படியா! யாரோ [!] மழை ஸ்ரேயா படம் போட சொல்றீக! யாருப்பா அங்கே - அண்ணிக்கு ஒரு எஸ்.டி.டி கால் போடு!

    பதிலளிநீக்கு
  18. என்ன மழை வந்தாலும் போலிஸ்காரங்களுக்கு மட்டும் தான் மாமுல் வாழ்க்கை பாதிக்கலைன்னு நம்ப தகுந்த வட்டாரங்களில இருந்து செய்தி வருது!

    செய்தி உண்மை தானே வெங்கட்?

    பதிலளிநீக்கு
  19. @ என்னது நானு யாரா?: ஹி...ஹி... மழையினால கிடைச்ச சில “நோட்”டெல்லாம் நனைஞ்சுடுச்சு! அவ்வளவுதான் எனக்குத் தெரியும் :)

    பதிலளிநீக்கு
  20. ரோடு குழி ஜலத்துல நீச்சல் போட்டி வச்சா எங்க சென்னை தான் ஃபர்ஸ்டாக்கும்..

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....