எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, September 6, 2010

குறையொன்றுமில்லை!

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு மயங்கும் மாலைப்பொழுது. மனதில் ஏதோ ஒரு குழப்பம் – எல்லாவற்றின் மீதும் அப்படி ஒரு வெறுப்பு!” ச்சே! என்ன வாழ்க்கை இது – இயந்திர மயமான வாழ்க்கை – ஓட்டமாக ஓடிக்கொண்டு இருக்கிறோம்” என்ற எண்ணம். எல்லோருக்கும் இது போன்ற சில சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் அவ்வப்போது வரும் என்று நினைக்கிறேன்.

இரவு அந்த எண்ணத்துடனேயே உணவு உண்டு, தூக்கம் வராமல் கணினியைத் திறந்து, மின்னஞ்சல் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்க்க அமர்ந்தேன். எப்பொழுதும் போல நிறைய மின்னஞ்சல்கள் – அதில் அலுவலக நண்பர் ஒருவரிடமிருந்து “The Dance” என்ற தலைப்பில் ஒரு மின்னஞ்சல் வந்திருக்க, சரி பார்க்கலாம் என்று அதைத் திறந்தேன்.

“HAND IN HAND” என்ற தலைப்பில் ஒரு நடனம். ஆடியவர்களின் பெயர்கள்: Ma Li, Zhai Xiowel; நடன இயக்குனர்: Zhao Limin.

ஐந்து நிமிடங்கள் நடனம். அதைப் பார்க்கப் பார்க்க மனதில் இருந்த குழப்பங்கள் மெல்ல மெல்ல காற்றில் கலக்கும் புகை போல விலக ஆரம்பித்தது. நமக்கு வரும் குழப்பங்கள் எல்லாமே சர்வ சாதாரணம் என்ற நினைவு வலுக்க ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் ஒரு பெண் தனியே நடனம் ஆட, சில நிமிடங்களில் அப்பெண்ணுடன் இன்னொரு ஆணும் சேர்ந்து கொள்ள, ஐந்து நிமிடங்கள் கண் சிமிட்டாமல் அந்த ஆட்டத்தில் மூழ்கினேன். மனதில் உள்ள குழப்பங்கள் எல்லாம் விலகியது. எந்த சந்தர்ப்பத்திலும் அழுகை வராத எனக்கு கண்களில் கண்ணீர் திவலைகள் எப்போது வெளிவரலாம் எனக் காத்திருந்தது.

ஆட்டத்தின் போது அந்தப் பெண் மற்றும் ஆணின் முகங்களில் அப்படி ஒரு பேரானந்தம். மக்களின் கரகோஷங்கள் எதுவுமே என் காதில் கேட்கவில்லை. தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை உணர்த்தியது அந்த நடனம். அந்த நடனத்தின் பின்னால் இருந்த உழைப்பு, ”முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பதை எனக்கு உணர்த்தியது.

நீங்களும் பாருங்கள். முடிந்தால் மற்றவர்களுக்கும் இப் பதிவின் சுட்டி அனுப்பிப் பார்க்கச் சொல்லுங்கள்.


The Dance

20 comments:

 1. மிகவும் அருமை. டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் நிகழ்ச்சிகளிலும் இப்படிப்பட்டவர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்படும்.

  ReplyDelete
 2. நண்பரே உங்கள்கு தோன்றிய அதே அனுபவம் தான் எனக்கும் நேர்ந்தது ..கண்கள் நிறைஞ்சு அழுதிட்டேன் ..அருமையான டான்ஸ் ..பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. //தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை உணர்த்தியது அந்த நடனம்.// ஆம்.
  அற்புதம்! நன்றி.

  ReplyDelete
 4. வாவ்... அற்புதம்.. நல்ல பகிர்வு..

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  ReplyDelete
 5. ”நம்பிக்கை என்னும் நந்தா விளக்கு,
  உள்ள வரையில் உலகம் நமக்கு!”
  - கவிஞர் கண்ணதாசன்.

  ”You Tube” – ல் நம்பிக்கை வெளிச்சம் காட்டியமைக்கு நன்றி!

  ReplyDelete
 6. ஊனம் ஒரு தடையில்லை பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. வீடியோ ஓடவில்லை. ஏதோ பிரச்சனை போல இருக்கு. அப்புறமாகத்தான் பார்க்க முடியும் என்று நினைக்கின்றேன்.

  நம்ப கடைக்கு வாங்க நண்பரே! புதுசா பலகாரம் எல்லாம் செய்து வைத்திருக்கேன். சூடு ஆறிட போகுறதுகுள்ள வந்து ருசி பாருங்க!

  ReplyDelete
 8. ஒரு குறையும் இன்றி தன்னம்பிக்கையை இழந்து நடைபிணமாய் வாழுபவர்கள் இதை பார்த்தால் மனம் மாறுவார்கள்....

  பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  இந்த தளத்தை பார்க்க சொன்ன தம்பி சௌந்தர்க்கும் நன்றி.

  ReplyDelete
 9. தன்னம்பிக்கையூட்டுகிற காணொளி! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 10. எதுவுமே ஒரு தடையல்ல.. சாதிக்கத் துடிக்கும் மனசுக்கு..
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 11. அன்புள்ள வெங்கட் அவர்களே,
  தங்களை "சதிராட்டம்" என்ற உண்மை ஒளிப்படத்தினை பகிர்ந்துகொள்ளச் சொன்ன உங்கள நண்பருக்கும் உங்களுக்கும் நன்றி. கல்மனம் படைத்தோரையும் ரத்தக்கண்ணீர் வடிக்கச் செய்திடும் ஒரு நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வு !! "இருப்பது போதாது என்று அடுத்தவனைப்பார்த்து கடன் வாங்கியேனும் நிம்மதியை தொலைத்தவர்களும், தன்னைத்தவிர உலகில் வாழும் எல்லாரும் சந்தோஷமாக இருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை தனக்குத்தானே ஏற்படித்திக்கொண்டு தூக்கத்தை தொலைத்தவர்களும ", இந்த நிகழ்வை பார்த்த பிறகு," நம்மிலும் அதிக துன்பப்படுவோர் பலகோடி இருக்கிறார்கள், நம்மை இவ்வளவு நல்ல நிலைமையில் வைத்திருப்பதற்காக ஆண்டவனுக்கு நன்றியை" கூறி மனம் திருந்தினால், சுய பச்சாதாபத்தையும் அதன்மூலம் உண்டான மன இறுக்கத்தையும் விட்டு ஒழிப்பார்களேயானால், அதுவே, "எங்கள் உடலில் ஊனமிருந்தபோதிலும் எங்கள் மனம் உறுதி படைத்தது" என்று உலகோருக்கு உணர்த்திட்ட இந்த சதிராட்டக்காரர்களுக்கு நாம் செய்யும் ஒரு கைம்மாறாகும். வாழ்க,வளர்க,

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 12. இப்போது தான் ப‌திவு பார்த்தேன் ந‌ல்ல‌ ப‌கிர்வு,

  ReplyDelete
 13. எனக்கு வீடியோ தெரியலைப்பா.. சுட்டி இருந்தா கொடுங்களேன்.

  ReplyDelete
 14. அவ்வப்போது தலை காட்டும் நம் சுயபச்சாதாபத்தை துடைத்தெறிய இது போன்ற அறிதல்கள் உதவியாய் இருக்கும். உபயோகமான பதிவுக்கு நன்றி சகோதரா... அப்பெண்ணின் மற்றொரு கையாக அப்பெண்ணும், அப்பையனின் மாற்று காலாக அவளும்... என்ன ஒரு அற்புத இணை...! சக மனிதர் மேல் புகார்களற்ற வாழ்வு பாக்கியம்!!

  ReplyDelete
 15. நம்பிக் கை யே
  இவர்களுக்கு
  ஊன்று கோலாய்.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....