எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, November 3, 2010

என்னைப் போல் ஒருவன்!

உலகத்திலே ஒருத்தரை மாதிரியே ஏழு பேரு இருப்பாங்கன்னு சொல்லுவாங்க! ”நம்மளை தவிர மீதி ஆறு பேர் எங்கன்னு தெரியல்லியே”ன்னு சில சமயம் நம்ம எல்லோருக்குமே தோணுமில்லையா?

நானும் அதுபத்தி எப்போதாவது யோசிப்பதுண்டு. சில நாட்களுக்கு முன் எனக்குக் கிடைத்த அனுபவம் ”என்னைப்போல ஒருவனை”ப் பற்றிய சிந்தனையை மீண்டும் தூண்டியது.

அன்று மெட்ரோ ரயிலில் பயணித்த போது வழக்கமாகப் பார்க்கும் ஒரு பெண் தென்பட்டாள். நான் இறங்க வேண்டிய நிலையம் வரும்போதுதான் அவளும் என்னைப் பார்த்துவிட்டு புன்முறுவலை உதிர்த்தாள். நான் இறங்கும் அதே இடத்தில் தான் அவளும் இறங்கினாள். பிறகு பேசியபடியே நிலையத்திலிருந்து வெளியே வந்தோம்.

அப்பெண்ணை, அவள் பிளஸ் 2 படித்த காலத்திலிருந்தே பார்த்திருக்கிறேன் என்பதால், இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்பதைப் பற்றி அவளிடம் விசாரித்த போது தான் பத்திரிக்கைத் துறையில் இருப்பதாக தெரிவித்து தனது பத்திரிக்கையில் வந்துள்ள அவளது சமீபத்திய கட்டுரையைப் படிக்கும்படி சந்தோஷமாக சொல்லிக் கொண்டே என்னுடன் வந்தாள்.

பேசிக்கொண்டே என் வீட்டின் அருகாமையில் வந்திருந்தோம். எனக்கு அப்பெண்ணை அவளின் கூடப்படித்த குடும்ப நண்பரின் பெண் மூலமே தெரியுமாதலால் என் நண்பரின் பெண்ணைப்பற்றி நான் அவளிடம் பேசப் போக ”அப்பெண்ணை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என அவள் திருப்பிக் கேட்டபோதுதான் எனக்கே சந்தேகம் வந்தது, "ஒரு வேளை நான் யாரோ தெரியாதவங்ககிட்ட வழிஞ்சிட்டேனோ?" என்று.

இத்தனைக்கும் நான், நண்பரின் மகள், அவளின் தோழி மற்றும் சிலர் சேர்ந்து சில நாட்கள் யோகா பயிற்சி வேறு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

என்னிடமிருந்து பதில் எதுவும் வராததால் அப்பெண் சந்தேகத்துடன் [!] என்னைப்பார்த்து, ”நீங்க எங்க அப்பாவோட வேலை பார்க்கிற பார்கவ்ஜி என்று நினைத்தல்லவா இத்தனை நேரம் பேசினேன்?" என்றாள். மேலும் இதற்கு முன்னால் என்னை பார்த்த போதெல்லாம் கூட தன் அப்பாவிடம், ”பார்கவ்ஜியை இந்த இடத்தில் பார்த்தேன், அந்த இடத்தில் பார்த்தேன்” என்று சொல்லிக் கொண்டிருந்ததாகச் சொன்னாள்.

"நல்ல வேளை, இன்றாவது உண்மை தெரிந்ததே!". எதற்கும் அந்த “என்னைப்போல் ஒருவன்[ர்]” ஆன பார்கவ்ஜியிடம் என்னை அறிமுகம் செய்து வையுங்க!"ன்னு சொல்லிவிட்டு, மீதி ஐந்து பேர் எங்கே இருக்கிறார்களோ என்ற நினைவுடன் அவளிடமிருந்து விடை பெற்றேன்.

15 comments:

 1. அட , வித்தியாசாமான அனுபவம்..

  ReplyDelete
 2. நல்ல கோர்வையான பதிவு... தீபாவளி நல்வாழ்த்துக்கள். ;;-) ;-);-)

  ReplyDelete
 3. :) சில சமயம் இப்படி ஒரு சிலரோட குழப்பிக்குவேன் ..ஆனா அவங்க உருவத்துல ஒற்றுமையா கூட இருக்கமாட்டாங்க..

  ReplyDelete
 4. ///////என்னிடமிருந்து பதில் எதுவும் வராததால் அப்பெண் சந்தேகத்துடன் [!] என்னைப்பார்த்து, ”நீங்க எங்க அப்பாவோட வேலை பார்க்கிற பார்கவ்ஜி என்று நினைத்தல்லவா இத்தனை நேரம் பேசினேன்?" /////////

  ஆஹா இது நல்ல காதையாவுல போச்சு ! இப்படி மாத்தி மாத்தி நினைச்சு ஒருவழியா எங்களையும் குழப்பிட்டிங்க !
  ஆமா நண்பரே யார் அந்த பார்கவ்ஜி ? பார்த்து அவரு வந்து நாளைக்கு உங்களைப் போலவே இருக்கப் போறாரு !

  ReplyDelete
 5. எனக்கும் இந்த குழப்பம் நேர்ந்திருக்கிறது. அதனாலேயே புரிந்து ரசிக்க முடிந்தது..

  ReplyDelete
 6. இதைப் போல எனக்கும் நேர்ந்திருக்கிறது.

  அன்புடன்,

  ஆர்.ஆர்.ஆர்.
  http://keerthananjali.blogspot.com/

  ReplyDelete
 7. உங்களைப்போல ஒருவரை நேரில் சந்திச்சா அந்த அனுபவத்தையும் எழுதுங்க :-))

  ReplyDelete
 8. நானும் இது போன்று சிலரிடம் பேசியது உண்டு.. பகிர்வுக்கு நன்றீ.

  ReplyDelete
 9. எல்லோர் வாழ்விலும் ஏதேனும் ஒருசமயம் இப்படி நடக்கிறது. எனக்கும் இதுபோன்ற அனுபவம் உண்டு.

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. என்ன ஒருத்தரை மாதிரி ஏழு பேரா? நம்ம ஒருத்தரையே தாங்க முடியாத இந்த உலகம் நம்மை மாதிரி ஏழு பேரை எப்படித்தான் தாங்குமோ?

  ReplyDelete
 11. என்னிடமும் இப்படி பேசியவர்கள் உண்டு.

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அந்த பார்கவ்ஜியையும் ஒரு நாள் சந்தித்து மூவரும் நட்பாகி விடுங்கள் வெங்கட். உலகின் அத்தனை மனிதர்களுக்குமானது தானே நம் பரந்த மனசில் பொங்கிப் பெருகும் பேரன்பு...!

  ReplyDelete
 13. மிச்சம் இருக்கும் அந்த ஐந்து பேரையும் விரைவில் சந்திக்க வாழ்த்துக்கள்....

  எழுவரும் சந்திக்கும் அந்த நிகழ்வு ஏதேனும் ஒரு 7 ஸ்டார் ஹோட்டலில் தானே நடக்கும்... சொல்லி அனுப்புங்க... வர்றேன்....

  ReplyDelete
 14. கருத்துரைத்த அனைத்து நட்புக்களுக்கும் நன்றி. இண்ட்லியில் வாக்கு அள்ளித்தந்த அனைவருக்கும் நன்றி, நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....