திங்கள், 17 ஜனவரி, 2011

வலை ராஜா – மழலை மொழி


ஒரு நாட்டோட முக்கியமான ஆளுன்னா அவரை ராஜான்னு சொல்வாங்க.  எந்த ஒரு துறையா இருந்தாலும் அதில் சிறந்த ஆளை அந்தத் துறைக்கே ராஜான்னு சொல்வாங்கஅது மாதிரி என் மகள் என்னைச் செல்லமாய் கூப்பிடுவதுவலை ராஜா”!  அதுக்குன்னு என்னை ஏதோ வலை வீசி மீன் பிடிப்பதிலோ, மீன் பிடிக்கும் வலை பின்னுவதிலோ பெரிய ஆள்னு நினைச்சுடாதீங்க.

பெரும்பாலான நாட்களில் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே மடிக்கணினி முன் உட்கார்ந்து வலையுலகில் புகுந்தால் வெளியே என்ன நடக்குதுன்னு கூட தெரியாமல் அந்த உலகத்திலேயே  இருந்து விடுவேன்.  விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம்பெரும்பாலான நாட்கள் கணினி முன் என்றாகிவிடுகிறது இப்போதெல்லாம்.  இது எல்லாம் சேர்ந்து எனக்கு இந்தவலை ராஜாஎன்ற பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது [எங்க வீட்டு அம்மணிதான் சொல்லிக் கொடுத்திருப்பாங்க!].   நீங்க எப்படி? “வலை ராஜாவா, ராணியா?”

புத்தாண்டில் வாங்கிய பல்பு:


புத்தாண்டு அன்று என் பெண்ணிடம்  என் மனைவி  “அப்பாவை நமஸ்காரம் பண்ணும்மா, காசு தருவாங்க!” என்று சொல்ல என் பெண்ணும் குளித்து விட்டு வந்து என்னை நமஸ்கரிக்க, நானும் அவளுக்குக் காசு கொடுத்தேன்.  அடுத்து அவள் அம்மாவைப்  பார்த்து, ”அம்மா நீயும் அப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணு, உனக்கும் அப்பா காசு கொடுப்பாங்க!” என்று சொல்லி, என் சட்டைப் பையின் கனத்தினைக் குறைக்க வழி செய்தாள்.  அப்பவாவது நான் சும்மா இருந்து இருக்கலாம், சும்மா இல்லாம, “உங்களுக்கு எல்லாம், புது வருடத்தில், முதல் நாளிலேயே காசு கிடைக்குது, எனக்கு யாரு கொடுப்பாங்க!” என்று கேட்க, அதற்கு என் பெண் அளித்த பதில் – “நீங்க எனக்கு நமஸ்காரம் பண்ணுங்க, நான் உங்களுக்குக் காசு கொடுக்கிறேன்!”- இது எப்படி இருக்கு?

உங்கள் மடிக்கணினி ஜாக்கிரதை


உங்கள் வீட்டில் இருப்பது மடிக்கணினியா? உங்கள் வீட்டில் இரண்டு குட்டி வாண்டுகள் இருக்கிறதா?  அப்படி என்றால் இந்த விஷயம் உங்களுக்காகத்தான்.  என் நண்பர் சொன்ன விஷயம் இது.  என் நண்பரின் நண்பருக்கு இரண்டு சிறு குழந்தைகள்.  பெரிய வாண்டு மடிக்கணினி வீட்டுக்கு வந்ததிலிருந்து அதிலேயே உட்கார்ந்து விளையாடுவதிலேயே நிறைய நேரம் செலவழித்ததால் முன்பு போல தன் தம்பியுடன் விளையாடுவது குறைந்து விட்டது.  தம்பி அண்ணனை விளையாடக் கூப்பிட்டுப்  பார்த்து அவன் வருவது குறைந்து கொண்டே இருந்திருக்கிறது.  ஒரு நாள் தம்பி பார்க்கும்போது கணினி முன் யாரும் இல்லாமல் இருக்கவே, நேராக சமையலறையில் இருந்து ஒரு கரண்டி கொண்டு வந்து மடிக்கணினியில் இருக்கும் அத்தனை பட்டன்களையும் பிடுங்கி, மொத்தமாய் அண்ணனிடம் கொடுத்து, “இந்தா வைச்சுக்கோ, இது இருக்கறதுனால தான என் கூட விளையாட மாட்டேங்கற! இப்ப அதுல எப்படி விளையாடுவ, நான் பார்க்கிறேன்என்று சொல்லி இருக்கிறான் .  அதனால, நீங்க மடிக்கணினி வைத்திருந்தால் ஜாக்கிரதை!

மீண்டும் இன்னுமொரு பதிவில் சந்திப்போம்

33 கருத்துகள்:

  1. நல்ல பெயர்..
    எங்க வீட்டில் ஒரு வலை ராணி
    ஒரு வலை இளவரசி
    அப்பறம் ஒரு குட்டி வலை இளவரசன் இருக்கோம்..

    வலை ராஜா இருக்கார் ஆனா ஆபிஸ் வலை..

    பதிலளிநீக்கு
  2. வலை ராஜாவே சூப்பர்.. அப்புறம் அந்த பட்டன் .. ஹஹஅஹா வாய் விட்டு சிரித்தேன் . கவனமா இருங்க. உங்க வீட்டு இளவரசி உங்க லேப்டாப்ல விளையாடப் போறாங்க

    பதிலளிநீக்கு
  3. அனுபவம்தான் சிறந்த இலக்கிம் என்பார்கள். உங்கள் அனுபவம் ரசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. @@ முத்துலெட்சுமி: வலைக்குடும்பத்திலிருந்து கருத்து தெரிவித்த வலைராணியாகிய உங்களுக்கு மிக்க நன்றி :)))))

    @@ எல்.கே.: மிக்க நன்றி. இதுவரை எங்க இளவரசி ஒரு சில பட்டன்களை மட்டுமே தொட அனுமதித்து இருக்கிறேன். இன்னும் பெரியவள் ஆனால் என்ன செய்வாள் தெரியாது :)

    @@ ஹரணி: உங்களது முதல் வருகைக்கு நன்றி. மகிழ்ச்சி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. வலையரசுவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. வலை ராஜா.. நல்லாத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. வலையில் நீங்க ஜெயிக்கிற வேகத்தைப் பார்த்தால் சந்தேகமில்லாமல் நீங்க வலை ராஜா தான்!

    பதிலளிநீக்கு
  8. ”பதிவுகள் சிலநூறு! படைத்தாய் நீ வரலாறு!
    படித்திடவே தினந்தோறு(ம்) நற்செய்தி நீர் கூறு(ம்).”

    (சும்மா! வலைராஜான்னதும் நானும் வலைப் புலவனாகிப் பார்த்தேன். அவ்வளவுதான். வரிக்கு ஆயிரம் ரூபாய்க்கு பில் அனுப்பியுள்ளேன்.)

    பதிலளிநீக்கு
  9. வலை ராஜாவுக்கு வலைப்புலவர் பாட்டெழுதி ...ஆஹா:)

    பதிலளிநீக்கு
  10. ராஜா பற்றிய ஆரம்பத்தைப் பார்த்ததும், ஸ்பெக்ட்ரம் ராஜா பற்றியோ என்று நினைத்தேன். வலை ராஜாவை தன் மழலைப் பேச்சால் பின்னி விட்டாள் உங்கள் மகள். மடிக் கணினி வைத்திருப்பவர்கள், மடியாக பூஜை நைவேத்யம் செய்வது போல, யார் கண்ணிலும் படாமல் கட்டிக் காக்க வேண்டும் என்பதைப் புரிய வைத்தது, படத்தில் இருந்த குரங்கு.

    பதிலளிநீக்கு
  11. வலை ராஜாவுக்கு வணக்கம்..

    பட்டனைப் பிடுங்கி பல்லாங்குழி ஆடிடுவாங்க போலருக்கே.. ;-)

    பதிலளிநீக்கு
  12. ஆஹா! மகள் கொடுத்த பட்டம் நல்லா இருக்கே.

    வாழ்த்துக்கள் வலை ராஜா.

    பதிலளிநீக்கு
  13. நமஸ்காரம் பண்ணினீங்களா ? காசு கிடைச்சதா ?

    பதிலளிநீக்கு
  14. @@ கலாநேசன்: மிக்க நன்றி நண்பரே.

    @@ விக்னேஷ்வரி: மிக்க நன்றி விக்கி.

    @@ ரிஷபன்: ஓ நல்லா இருக்கா? மிக்க நன்றி சார்.

    @@ கே.பி.ஜனா: உங்கள் வாயால் பாராட்டு. மிக்க நன்றி சார்.

    @@ ஈஸ்வரன்: வாருங்கள் வலைப் புலவரே! பொற்கிழி மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறேன். வந்தவுடன் சொல்லிடுங்க!

    @@ முத்துலெட்சுமி: புலவர் பாடிய பாடலை ரசித்த உங்களுக்கும் ஒரு பொற்கிழி! :))))))

    @@ வை. கோபாலகிருஷ்ணன்: மிக்க நன்றி சார். உங்கள் கருத்து என்னை மகிழ்வித்தது.

    @@ ஆர்.வி.எஸ்.: பட்டனைப் பிடுங்கி பல்லாங்குழி! வாவ் இது நல்லா இருக்கே….

    @@ கோமதி அரசு: நல்ல பட்டம்தான்! மிக்க நன்றிம்மா.

    @@ சிவகுமாரன்: வரவு இல்லை! செலவு மட்டுமே!! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அந்த பட்டன் சமாச்சாரத்தை உங்க பொண்ணுக்கு படிச்சு காட்டிடாதீங்க :-)))))

    பதிலளிநீக்கு
  16. எங்க வீட்டு குட்டி இப்படி பட்டன்களை அந்த இடத்திலிருந்து பிடுங்குவதும், நான் அதை திருப்பி வைப்பதும் சாதாரணமா போயிட்டே இருக்கு....என்னிக்கு வேற ஐடியா அவங்களுக்கு தோணும்னு தெரியலை :)

    பதிலளிநீக்கு
  17. அந்த பட்டன் செய்திபடிததும் சிரித்தேன் .
    நல்லதொரு பதிவு..

    பதிலளிநீக்கு
  18. @@ அமைதிச்சாரல்: இல்ல, அவங்களுக்கு வெறும் குரங்கு படத்தைத் தான் காட்டினேன் - விஷயத்தைச் சொல்லல. மிக்க நன்றி.

    @@ அன்னு: ஆஹா உங்க வீட்டு குட்டியும் இப்படியா, இப்ப வர மடிக்கணினில பட்டனை எடுத்தா திருப்பி வைக்க முடியாத மாதிரி வருது! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    @@ அன்புடன் மலிக்கா: உங்கள் வருகைக்கும் கருத்திற்கும், ரசித்தமைக்கும் நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  19. வலை ராஜா வெங்கட் அவர்களே!!

    தேர்தல் வர்றதுக்கும் அதுக்கும் இப்படி கேட்டா நல்லா இருக்கே...

    //நீங்க எனக்கு நமஸ்காரம் பண்ணுங்க.. நான் உங்களுக்கு காசு கொடுக்கிறேன்//

    ஹா...ஹா...ஹா... படு சூப்பர் கமெண்ட் பாஸ்... இந்த காலத்து பசங்க எல்லாம், ஒண்ணும் சொல்ல முடியாது. அவ்ளோ சுட்டி...

    மடிக்கணினி விஷயமும் நன்று...

    பதிலளிநீக்கு
  20. ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜபராக்ரம ராஜகுலதிலக வலைராஜா பராக்...பராக்..பராக்...!

    பதிலளிநீக்கு
  21. உங்கள் அனுபவம் ரசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. உங்கள் மகளிடம் வாங்கிய பல்பு அருமை...

    இந்த காலத்து குழந்தைகளிடம் நிறைய பெற்றோர் பல்பு வாங்குகிறார்கள்.. நான் காத்துக்கொண்டு இருக்கேன் என் மகனிடம் பல்பு வாங்க...

    பதிலளிநீக்கு
  23. @@ R. Gopi: உங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றி கோபி! பசங்க கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு!

    @@ சேட்டைக்காரன்: மிக்க நன்றி சேட்டை! நல்லாவே கட்டியம் சொல்றீங்க!

    @@ சே. குமார்: மிக்க நன்றி குமார்.

    @@ சங்கவி: மிக்க நன்றி. உங்கள் மகனிடம் பல்பு வாங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை! :)

    பதிலளிநீக்கு
  24. பல்பு சூப்பரா வாங்கி இருக்கீங்க போல....

    கீபோர்டை பிடுங்கி போட்ட அந்த டெரர் குழநதையை கேட்டேன்னு சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  25. @@ கவிதை காதலன்: சூப்பர் பல்புங்க அது! டெரர் குழந்தை கிட்ட நீங்க விசாரிச்சதா சொல்லிடறேன். உங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னா என்ன பதில் சொல்ல? :))))

    பதிலளிநீக்கு
  26. வலை ராஜா!!!!!!!!!

    பொருத்தமான பெயர்:-)))))))

    நம்ம வீட்டில் எல்லோருக்கும் தனித்தனி மடிக்கணினி.

    எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கொளுகைதான்!

    பதிலளிநீக்கு
  27. @@ அமைதி அப்பா: மிக்க நன்றி.

    @@ ஆசியா உமர்: மிக்க நன்றி சகோ.

    @@ துளசி கோபால்: மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  28. உங்க மழலையின்' மொழி எப்போதும் சுவைதான் வெங்... இல்லையில்லை ... வலை ராஜா! மூன்றாவது செய்தி நல்ல எச்சரிக்கை.

    எம்பொண்ணு சின்ன வயசிலே நமஸ்கரிச்சு திருநீறிட்டா, அதுவும் தன் பங்குக்கு எடுத்து நமக்கு பூசிவிடும்.

    பதிலளிநீக்கு
  29. மலை அரசன், வலை ராஜன் , ப்ளாக் சக்கரவர்த்தி என்று பல பட்டங்களுக்கு நீங்கள் உரிமை கொண்டாடலாம், பட்டங்கள் பல வென்றிட்ட வெற்றிக் களிப்பில் தாங்கள் மூழ்கியிருக்கும் வேளையில் ஒன்றை நாம் நினைவில் கொள்வது நலமளிக்கும். கணினி முன்னால்பல மணி நேரம் , பல நாட்கள் முழ்கி இருப்பதால் நாம் தொலைத்தது காலத்தை மட்டுமன்று, ஆற்ற வேண்டிய கடமைகளை, நெருங்கிய உறவுகளை, சொந்த பந்தங்களை, இவற்றால் கடைசியில், நம் நிம்மதியையும் தொலைத்துவிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை , கணினியின் பட்டன்களை கோபத்தோடு சிதைத்திட்ட வாண்டுவின் செயல் நமக்கு கூறாமல் கூறும் செய்தியாகும்.நிலைமை கை மீறி போனபின் வருந்துவதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என்பதை சிந்தித்து வருமுன் காத்தல் நலம்.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  30. @@ நிலா மகள்: இந்த வலைராஜாவின் நன்றி!

    @@ மந்தவெளி நடராஜன்: மிக்க நன்றி. பெயர்தான் வலை ராஜாவே தவிர, அப்படி ஒன்றும் கணினி முன்னே நிறைய நேரம் அமர்ந்திருப்பது இல்லை. தங்கள் கருத்திற்கும், நல்லதோர் அறிவுரைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....