எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, February 2, 2011

தலைவலி சிகிச்சை
இந்த பகிர்வில் ஒரு சிகிச்சை பற்றிச் சொல்லப் போகிறேன்.  சற்றே (?) உங்கள் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்.

என்னுடன் பணிபுரியும் ஒரு ராஜஸ்தானிய பியூனுடைய மனைவிக்கு ஓரிரு வருடங்களாகவே தலைவலி இருக்கிறது.  அதற்காக அவரை  பல மருத்துவர்களிடம் காட்டி  சிகிச்சை எடுத்து வந்தார்.  தில்லியின் பிரபல அரசு மருத்துவமனைகளான சஃப்தர்ஜங் மற்றும் All India Institute of Medical Sciences ஆகியவற்றில் கிடைக்கும் எல்லா சோதனைகளும் செய்து பார்த்து மருந்துகள் பெற்று அவற்றை எடுத்துக் கொண்டாராம் அவரது மனைவி.  ஆனாலும் பெரிய அளவில் தலைவலி குறையாத காரணத்தினால் மிகுந்த கவலையில் இருந்தார். 

அப்போது ராஜஸ்தானில் இருக்கும் உறவினர்கள் இதற்கு சிகிச்சை அவர்களது ஊரிலேயே செய்யலாம் எனச் சொல்லி அங்கே வரச் சொன்னார்கள்.  சரி என்று அவரும் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு, அஜ்மேர் மாவட்டத்தில் இருக்கும் அந்த கிராமத்திற்கு மனைவியை அழைத்துச் சென்றார். 

என்ன பிரச்சனை என்று கேட்ட அந்த கிராமத்து வைத்தியரிடம், தனது மனைவிக்கு தீராத தலைவலி என்று சொல்லவே, அவரும் அந்தப் பெண்ணை சோதித்துப்  பார்த்துவிட்டு அவருக்குக் கொடுத்த சிகிச்சை பற்றி அந்த பியூன்  சொன்னது: .

“ஒரு படுக்கையில் என் மனைவியைப் படுக்க வைத்து, மூக்கில் ஒரு பக்கத்தை மூடிக்கொண்டு மற்ற துவாரத்தில் ஒரு திரவத்தினை நான்கு-ஐந்து சொட்டுகள் விட்டு, பிறகு அந்த துவாரத்தை மூடி மற்ற துவாரத்திலும் நான்கு-ஐந்து சொட்டுகள் விட்டார். காரமாய் உள்ளே இறங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு காதின் அருகில் ஒரு அலுமினிய குழல் எடுத்து தன்னுடைய வாயில் வைத்து மெதுவாக காற்றை உள்ளே இழுத்தார். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு காதிலிருந்து அலுமினிய குழலை எடுத்து, தன் வாயில் வைத்து மெதுவாக ஊத, அந்த குழலில் இருந்து வெளியே வந்து விழுந்தது என்ன தெரியுமா? ஒரு சிறிய புழு  இது போல இன்னும் ஒரு புழு மண்டைக்குள் இருக்கிறது. ஒரு வாரம் கழித்து வாருங்கள், இரண்டாவது புழுவையும் எடுக்கலாம்"
இந்த சிகிச்சைக்குக் கட்டணமாய் புழு ஒன்றிற்கு ரூபாய் 1500/- வாங்குகிறாராம்.  ஒரு வாரம் சென்ற பிறகு இரண்டாம் புழுவையும் எடுத்து விட்டு வந்த பிறகு அவரது மனைவிக்கு தலைவலி அறவே இல்லை எனவும், மேல் மருந்தாக, பாதாம், பிஸ்தா, பிசின் போன்ற பல பொருட்கள் போட்டு லட்டு செய்து சாப்பிடக் கொடுத்ததாகவும் சொன்னார். 

எடுத்த புழுவினை ஒரு சிறிய குப்பியில் போட்டு எடுத்துக்கொண்டு வந்து காண்பித்தார். இந்த சிகிச்சை பற்றி அலுவலகத்தில் வந்து எங்களிடம் பகிர்ந்த போது என்ன சொல்வது என்று யாருக்கும் புரியவில்லை. இதை எழுதிக்கொண்டு இருக்கும் போது பின்னாலிருந்து படித்த என் மனைவி அருவருப்புடன் சென்று விட்டார்.

பிரபல மருத்துவ மனைகளாலேயே தீர்க்க முடியாததை இது போன்ற கிராம வைத்தியார்களால் தீர்க்க முடியும் என்று நம்பிச் செல்லும் இவர்களுக்கு  என்ன சொல்லி புரிய வைப்பது? நிச்சயம் இது ஏமாற்று வேலைதான்.  இன்னமும் இது போன்ற விஷயங்கள் நமது கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆனாலும்  ஒரு விஷயம் – இந்த சிகிச்சையால் பலன் இருக்கிறது என்று அந்த நபர் நம்புகிறார் பாருங்கள்! அதுதான் அந்த கிராமத்து வைத்தியரைப்  போன்ற ஏமாற்றுபவர்களுக்கு மூலதனம் என நினைக்கிறேன்.  இந்த நிகழ்ச்சி பற்றி எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனாலும் இந்த மாதிரி மூட நம்பிக்கைகளைப்  பற்றி நீங்களும் தெரிந்துகொள்ளவே எழுதி இருக்கிறேன். 

இந்த சிகிச்சை முடிந்து திரும்பவும் தில்லி வந்த அவருக்கு மறுபடியும் தலைவலி வந்துவிட்டது!
மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்…


40 comments:

 1. ஒருவேளை நெசமான வைத்தியமாக் கூட இருக்கலாமோ!!!

  நம்பியும் நம்பாமலும் இருக்கேன்

  ReplyDelete
 2. காதில் வைத்து உறிஞ்சி எடுத்த அந்த அலுமினியக் குழலில் ஏற்கனவே புழுவைப் போட்டு வைத்திருப்பாரோ என்னவோ? வைத்தியம் தொடங்கும் முன்பு அல்லது இரண்டாம் முறை போனபோதாவது அந்தக் குழலை வாங்கி சோதனை செய்திருந்தால் உண்மை விளங்கியிருக்கும். மண்டையில் புழுக்கள் 2 இருந்தன. இரண்டும் வெளியேறி விட்டன என்ற நம்பிக்கை மனதில் வந்து விட்டது. அந்த நம்பிக்கையிலேயே தலைவலி சரியாகி விட்டது என்ற நம்பிக்கையும் தோன்றிவிட்டது என நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. இப்படி நம்மூரிலேயும் ஆளுங்க இருக்காங்க ஐயா. கழுத்து சுளுக்கினா, ரெட்டை குழந்தை பெத்தவங்க வந்து பிடிச்சு வுட்டா சரியாகிடுமுன்னு இன்னும் எங்க கிராமத்துலே நம்புறாங்க. என்னாத்தை சொல்ல..?

  ReplyDelete
 4. தலைவலியினை எப்படி தலைவலி தைலங்கள் நீக்குவது இல்லையோ அது போல் தான் இந்த சிகிச்சையும்.நம்பிக்கை தான்.தலைவலி தைலங்கள் தரும் எரிச்சலில் தலைவலி சரியானதாய் நினைக்கிறோம்.

  ReplyDelete
 5. சரி அவர் செய்த சிகிச்சையால் தலை வலி போச்சுன்றீங்க அது எப்படி.,
  நீண்ட நாளாக நானும் தலை வலியால் அவஸ்தை பட்டு இருக்கேன்.

  இப்ப என் தங்கைக்கும்.

  இது 1. டென்ஷனால் வரும். அல்லது இன்னும் ஒன்று ஒத்த தலைவலி அதன் வேதனையும் மிக அதிகமாக இருக்கும்.
  ஏதும் தீர்வு இருக்கோன்னு பார்க்க வந்தேன்.


  ம்ம்ம்

  ReplyDelete
 6. சில நம்பிக்கைகளை மாற்றமுடியாது வெங்கட்.

  ஜலீலா விற்கு: எனக்கும் ஒத்த தலைவலி இருந்தது. அதற்கு நாடி சுத்தி ,காபாலபதி என்கிற மூச்சு பயிற்சி செய்தவுடன் போய் விட்டது.

  சேட்டைகாரன் அவர்கள் சொல்வது போல் என் சின்ன மாமியாரிடம் கால் கை சுளுக்கிக் கொண்டால் வந்து எண்ணெய் தடவி செல்வார்கள். சின்ன மாமியார் இரட்டை குழந்தை பெற்றவர்கள்.

  பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
 7. தெற்கே கிராமங்களில் தொக்கம் எடுக்கறதுன்னு ஒரு வைத்தியமுறை இருக்கு.

  வயித்துவலியால் கஷ்டப்படற குழந்தைகளின் வாயில் ஒரு குழலை வைத்து இதேமாதிரி உறிஞ்சுவார்கள். ஏதேனும் ஒரு சின்ன பொருளை எடுக்கறமாதிரி காமிப்பாங்க. அதப்போலத்தான் இது இருக்கு.

  ReplyDelete
 8. நம்பிக்கையே வாழ்க்கை என்கிறோம்... சிலருக்கு, மூட நம்பிக்கையே வாழ்க்கை போல.

  ReplyDelete
 9. நமக்கு என்ன சிகிச்சை கொடுக்கிறார் என்றோ நம்மிடமே நம் வியாதி பற்றியோ நம் உடலின் கோளாறுகள் பற்றியோ பேசாமல் பக்கம் பக்கமாக மாத்திரைகளையும் கசாப்பு வியாபாரி போல நினைத்த இடத்தில் அறுத்து உடலையே கூறு போடும் மருத்துவர்களை நாம் சந்தேகிப்பதேயில்லை.அது ஏன்?

  சந்தேகம் ஏன் கிராம வைத்தியனிடம் மட்டும்?இந்த வைத்தியத்தின் நம்பகத்தன்மையை விட்டுவிடுவோம்.

  எல்லா இடங்களிலும் நாம் சந்தேகிப்பதில்லை.அதற்குக் கூட பின்னணி பார்க்கிறோம் எனச் சொல்லவே இது.

  பகிர சந்தர்ப்பமளித்தமைக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. good answer.நான் நினைத்த பதில்

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜ மோகன்.

   Delete
 10. புழுவை காமிச்சதால நம்பறாங்களோ,
  நம்பறதுல சரியா போச்சோ?

  ReplyDelete
 11. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களை குற்றம் சொல்லி பிரயோஜனமில்லை.

  ReplyDelete
 12. திடீர் திடீரென அதிகமாகும் ப்ளட் பிரஷரினால் கூட தலை வலிக்கும்.. டென்ஷன் இல்லாமல் இருக்க வேண்டும்ம்.. பிரஷரை செக் செய்ய சொல்லுங்க.. தலையில் நீர் கோர்ப்பதாவும் இருக்கலாம்

  ReplyDelete
 13. நல்ல விழிப்புணர்வு தகவல்.. கிராமத்திலும் நோய் நாடி நோய் முதல் நாடி என நாடிபிடித்தே வைத்தியம் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்...

  ஆனால் புழுவைத்தியர் சரியான ஏமாற்றுக்காரர் தான்..உங்கள் அலுவலக உதவியாளரை நல்ல மருத்துவரை பார்க்கச்சொல்லவும்...

  ReplyDelete
 14. சிந்திக்க வைக்கும் பதிவு! மக்களின் அறியாமையே ஏமாற்றுபெர்வழிகளுக்கு மூலதனம். ஊடகங்கள் மூலம் இந்த மோசடிகளை வெளிப் படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  ReplyDelete
 15. எதைத் தின்றால் பித்தம் தெளியும்
  என அலைபவர்களை
  இதுபோன்ற ஏமாற்றுக்காரர்கள்
  பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
  நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. மருத்துவத்திற்கு மருந்தினும் பெரிதும் உதவுவது நம்பிக்கையே. அது கூட ஒரு காரணமாக இருக்கலாம். எப்படியோ தலைவலி போனதல்லவா அதை பாருங்கள்.

  ReplyDelete
 17. @@ துளசி கோபால்: வருகைக்கு நன்றி. நிஜமான வைத்தியமாய் தெரியவில்லை. திரும்பவும் தலைவலி ஆரம்பித்து விட்டது.

  @@ வை. கோபாலகிருஷ்ணன்: அந்த நம்பிக்கையிலேயே ஒரு வாரம் தலைவலி இல்லாமல் இருந்திருக்கிறது போல! மேலே சொன்னது போல திரும்பவும் தலைவலி ஆரம்பித்துவிட்டது :(

  @@ சேட்டைக்காரன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

  @@ அமுதா கிருஷ்ணா: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

  @@ ஜலீலா கமல்: இந்த சிகிச்சை மூலம் சரியாகவில்லை என்பதே உண்மை!

  @@ கோமதி அரசு: உண்மைதான் அம்மா. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. உங்களது குறிப்பிற்கும் நன்றி.

  @@ அமைதிச்சாரல்: “தொக்கம் எடுக்கறது” - புதிய செய்தி. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @@ சித்ரா: மிக்க நன்றி.

  @@ சுந்தர்ஜி: தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி சுந்தர்ஜி. நான் பொதுவாகச் சொல்லவில்லை. இந்த ஒரு ஆள் பற்றியே சொல்ல வந்தேன்.

  அலோபதி மருத்துவர்களிலும் இப்போதெல்லாம் பணம் பண்ணுவது ஒன்றே குறிக்கோளாய் இருக்கும் கருப்பு ஆடுகள் தான் அதிகம். ஐந்தாறு நாட்கள் ஐ.சி.யு-வில் வைத்து வேண்டிய பணம் கறந்துவிட்டு ஒன்றும் செய்யமுடியாது என கையை விரிக்கும் மருத்துவமனைகள் தான் இப்போது அதிகமாகிக் கொண்டு வருகின்றன.

  @@ ராஜி: வருகைக்கு மிக்க நன்றி. சரியாகவில்லை :(

  @@ கனாக்காதலன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  @@ தேனம்மை லெக்ஷ்மணன்: சிறு வயதுதான் அவருக்கு. கடந்த இரு வருடங்களாகவே இந்த பிரச்சனை இருக்கிறது. தில்லியில் பிரபல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை... உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @@ பத்மநாபன்: மிக்க நன்றி. கிராமத்து வைத்தியர்களில் கூட திறமைசாலிகள் இருக்கின்றனர். இவர் அப்படி இல்லை.

  @@ மோகன்ஜி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை. மிக்க நன்றி.

  @@ ரமணி: மிக்க நன்றி சார்.

  @@ கலாநேசன்: பாவம்தான். மிக்க நன்றி சரவணன்.

  @@ உயிரோடை: நம்பிக்கைதானே எல்லாம்! ஒருவாரத்திற்கு மட்டுமே அந்த நிம்மதி. இப்போது மீண்டும் தலைவலியில் திண்டாட்டம் என்பது தான் பரிதாபம்.

  @@ மோகன்குமார்: புழு? ஒன்றல்ல-இரண்டு! வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 18. எ(த்)தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று குழம்பியிருக்கும் அப்பாவிகளின் குட்டையில் மீன் பிடிக்கும் உத்திதான்.

  (அந்த வைத்தியரின் வீட்டில் சிபிஐ ரெய்டு விட்டால் நிறைய புழு-பூச்சி சிக்குமோ?)

  ReplyDelete
 19. namakkum thalaivali thontharavu athigam... namakkum marunthu sollunga....

  ReplyDelete
 20. @@ ஈஸ்வரன்: அண்ணாச்சி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @@ சே. குமார்: மருந்தெல்லாம் நம்ம கிட்ட கிடையாது நண்பரே.

  ## இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 21. கிருபானந்த வாரியார் ஒரு கதை சொல்லுவார்- தான் பல்லியை விழுங்கி
  விட்டதாக நம்பிய ஒரு பணக்காரருக்கு
  பேதி மாத்திரை கொடுத்து, ஒரு ப்ல்லியை மலத்திலிருந்து (முன்பே
  மறைத்துவைத்தது தான்) எடுத்துக்காட்டி
  அவரைக் குணப்ப்டுதிக் காட்டியதாக!

  ReplyDelete
 22. @@ ராஜேஸ்வரி: வாரியார் குட்டிக் கதை நன்று. நல்ல மனிதர்... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 23. வெங்கட் சார்,

  என் டாஷ் போர்ட்ல "நடையா இது நடையா" என்ற தலைப்பில்
  உங்களின் ஒரு பதிவு டிஸ்ப்ளே ஆகிறது,ஆனால் ஓப்பன் ஆகவில்லை.
  ஏனென்று புரியவில்லை

  ReplyDelete
 24. இது போல் நிறைய நடக்குது. என் மனைவிக்கு தலைவலி பிரச்சினை வந்த போது, மருத்துவர் தெளிவாக என் மனைவியிடம் 'இதுதான் பிரச்சினை , சிகிச்சையும் இது தான் , பிறகு மந்திரிக்கப் போகிறேன், மண்டையில புழு இருக்குன்னு எங்கேயாவது கிராமத்துப் பக்கம் போனீங்க, உங்க வீட்டுக்காரரு உங்களை கொலை பண்ணப் பாக்கிராருன்னு அர்த்தம்'னு சொன்னாரு.

  ReplyDelete
 25. சைனஸ் பிரச்சினையாக இருக்கலாம்ண்ணா. அக்குபன்க்சர் செய்ய சொல்லுங்க. நல்ல மாதிரியான அக்குபங்சர் டாக்டர்கிட்ட காட்ட சொல்லுங்க. அவங்க செஞ்ச மருத்துவம் உண்மையா இருந்தா மறுபடியும் வலி எப்படி வரும்? இன்னொன்னு, பெண்களுக்கு தலைல நீர் கோக்கறது ஜாஸ்தி. அதன் விளைவும் இப்படி வரும். அவங்களுக்கு தலை வலிக்கறப்ப எல்லாம் தேங்காய் எண்ணைல ஓமத்தை போட்டு பொருக்கும் சூட்டுல உச்சி மண்டைல தடவ சொல்லுங்க. வலி கம்மியாச்சுன்ன நீர்தான்னு அர்த்தம். இல்லைன்னா, நல்ல டாக்டரை பார்த்து ஸ்கேன் செய்யனும். புது மாதிரி சிகிச்சைன்னு பணம் போனாலும் போகட்டும், உடல் பத்திரம்னு சொல்லுங்க !!

  ReplyDelete
 26. அடக்கடவுளே... இப்படி கூட ஏமாத்துவாங்களா?

  ReplyDelete
 27. மனச்சுரங்கத்திலிருந்து "Excuse me time please"
  என்ற பதிவும் அதற்கு முன்பு "நடையா இது நடையா"
  என்ற தங்களின் பதிவும் எனது டாஷ் போர்டில் டிஸ்ப்ளே ஆகிறது
  ஆனால் ஓப்பன் ஆகவில்லை ஏன் என்று புரியவில்லை
  எனக்கு மட்டும்தான் ஓப்பன் ஆகவில்லையா என அறியவே இது

  ReplyDelete
 28. ஏமாறுகிரவங்க இருக்கும்வரை ஏமாற்றுக்காரங்களும் இருக்கத்தான் செய்வாங்க.

  ReplyDelete
 29. @@ ராஜி: Blogger-ல் ஏதோ பிரச்சனை போல சகோ. என்னைத் தொடரும் எல்லோருக்கும் இது போன்று அப்டேட்ஸ் போகிறது. இது எல்லாம் என்னுடைய முந்தைய பதிவுகள். என்ன பிரச்சனை, எப்படித் தீர்ப்பது என்று புரியவில்லை. நன்றி சகோ.

  ReplyDelete
 30. சிந்திக்க வைத்த பதிவு...

  ReplyDelete
 31. இப்பத்தான் படிச்சேன்! புழு பூச்சி எப்படி தலையில உண்டாகும்? ரொம்ப பயமா இருக்கு. எப்படியெல்லாம் மக்களை ஏமாத்தறாங்க? பரிவுக்கு நன்றி தல. ;-)

  ReplyDelete
 32. @@ சிவகுமாரன்: உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @@ அன்னு: உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. அவரும் எல்லா முயற்சியும் எடுத்து வருகிறார். பார்க்கலாம்.

  @@ அப்பாவி தங்கமணி: உங்கள் வருகைக்கு நன்றி அ. த… : )

  @@ லக்ஷ்மி: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்மா.

  @@ லக்ஷ்மிநாராயணன்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி எல்லென்.

  @@ ஆர்.வி.எஸ்.: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 33. என் உறவினர் ஒருவருக்கு பித்தப்பையில் கற்கள் எடுத்ததைப் பதிவாகப் போட்டிருக்கிறேன்
  நம்பமுடியவில்லை என்று.
  கருத்தைத் தெரிவியுங்கள். நன்றி.

  ReplyDelete
 34. @@ இராஜராஜேஸ்வரி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் பதிவினையும் படிக்கிறேன்.

  ReplyDelete
 35. Dear kittu,

  Anda ammavin thalaivali ponadarku avaradhu manam dhan karanam . Yemarubhavargal irukkumvarai yematrubhavargalum

  Irukkthan seivargal.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....