திங்கள், 11 ஏப்ரல், 2011

டயல் எம் ஃபார் மர்டர்





“Dial M for Murder” என்ற ஆங்கிலத் திரைப்படம் 1954 ஆம் வருடம் வந்தது. Alfred Hitchcock அவர்களால் இயக்கப்பட்ட இந்த திரைப்படத்தினை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். தில்லியில் இப்போது நடக்கும் கொலைகளைப் பற்றிப் படிக்கும் போது, 1989-ம் ஆண்டு கல்லூரியில் படிக்கும்போது பார்த்த இந்தத் திரைப்படம் பற்றிய நினைவுகள் தான் எனக்கு வருகிறது.

கடந்த ஃபிப்ரவரி மாதத்தில் புது தில்லி ரெயில் நிலையத்தின் வெளியே வந்து நின்ற ஆட்டோவிலிருந்து ஒரு Bag-ஐ இறக்கி வைத்துவிட்டு சென்று விட்டார்கள். அந்த பையினுள் இருந்தது நீது சோலங்கி என்கிற இளம்பெண்ணின் உடல். வைத்துவிட்டு சென்றது அவருடன் தங்கி இருந்த/கல்யாணம் செய்து கொண்டதாய் சொல்லப்படும் நபர். இரண்டு மாதங்கள் ஆனபிறகும் அந்த நபரை இன்று வரை தில்லி காவல்துறையினால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஏப்ரல் 10-ஆம் தேதி தினசரியில் மேலும் ஒரு செய்தி: ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று வட தில்லி பகுதியில் இருக்கும் ஒரு கார்கோ பார்சல் நிறுவனத்தில் ”M” என்ற பெயர் கொண்ட நபர் அழகாய் கட்டப்பட்டிருந்த ஒரு பெட்டியை “செல்ஃப்” பெயர் போட்டு ராஜஸ்தானிலிருக்கும் அஜ்மேர் நகரத்திற்கு பார்சல் செய்திருக்கிறார். செய்யும் போது தான் ராஜஸ்தானின் கிஷன்கர் [D] நகரத்தினைச் சேர்ந்தவர் என்று சொல்லி இருக்கிறார். அனுப்புனர் மற்றும் பெறுநர் முகவரி இரண்டுமே டுபாக்கூர்! பார்சலை அஜ்மேரில் வந்து வாங்கிக் கொள்ளவில்லை என கிஷன்கருக்கு அனுப்பி இருக்கிறார்கள் பார்சல் நிறுவனத்தினர். அங்கேயும் வந்து வாங்கவில்லை! எப்படி வாங்குவார் உள்ளே இருந்தது என்ன என்பது அவருக்குத் தான் தெரியுமே.

ஏப்ரல் எட்டாம் தேதி அன்று நாற்றம் தாங்கமுடியாத நிறுவனத்தினர் பிரித்துப் பார்த்தால் அதனுள் அழுகிப்போன 22 முதல் 25-வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் நிர்வாணமான உடல். உடம்பு முழுவதும் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட அடையாளங்கள்.

என்ன நடக்கிறது தில்லியில்? புரியவில்லை. இந்தியாவின் தலைநகர் கொலை, கொள்ளை போன்றவற்றிலும் தலைநகராகவே இருக்கிறது. வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்களுக்கு அதுவும் முக்கியமாய் BPO மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் பலருக்கு ஷிஃப்ட் முறை இருப்பதால் இரவு நேரங்களில் கூட வீடு திரும்ப வேண்டியிருக்கும் நிலையில் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு இல்லை.

தில்லியில் உள்ள பெண்களுக்கு சுதந்திரம் என்பது நிறைய இருந்தாலும், பாதுகாப்பு இல்லை என்பதைப் பார்க்கும்போது மிகவும் கவலைக்கிடமாய் இருக்கிறது. எங்கே என்ன நடக்கிறது என்பது காவல்துறைக்கும் புரியவில்லை, தில்லியில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லை. தில்லியின் முதலமைச்சர் கூட சில மாதங்களுக்கு முன் இது போன்ற ஒரு கொலை நடந்தபோது பெண்கள் இரவில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்.

காவல்துறையோ அரசியல்வாதிகள்/ஆட்சியாளர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளிலேயே மூழ்கிவிடுவதால் அவர்களால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. எங்கே சென்று கொண்டு இருக்கிறது தில்லி – புரியவில்லை. அதுவரை நேரடியாகவே ““Dial M for Murder” பார்க்க வைப்பார்கள் போல!

மீண்டும் சந்திப்போம்!


வெங்கட்

29 கருத்துகள்:

  1. ஹ்ம்ம் இதை பத்தி படிச்சேன் . கஷ்டமா இருக்கு போலிஸ் என்னதான் பண்றாங்க ?

    பதிலளிநீக்கு
  2. மக்களோட குணம் மாறிட்டே வருது.கொலை செய்வது ஒளிப்பது எல்லாம் ரொம்ப சர்வசாதாரனமா செய்யராங்க.. போலீஸும் என்ன செய்யும் எவ்ளோ முடியும் ?

    பதிலளிநீக்கு
  3. இந்த குரூர குணாதிசயங்களுக்குப் வளர்ப்புமுறையையும், கல்வியையும்,நம் வாழ்க்கை முறையையும்தான் குறைசொல்ல முடியும் வெங்கட்.

    பதிலளிநீக்கு
  4. படிக்கவே, கேட்கவே மிகவும் பயங்கரமாக இருக்கிறது. நமக்கே மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இன்னும் எப்படி இருக்குமோ!, பாவம்.

    பதிலளிநீக்கு
  5. நேரடியாகவே ““Dial M for Murder” பார்க்க வைப்பார்கள் போல!//
    படிக்கவே பயங்கரமாக இருக்கிறது...,

    பதிலளிநீக்கு
  6. தலைநகர் திகில் நகராகி விட்டது வருத்தம்தான்!

    பதிலளிநீக்கு
  7. கொடுமைங்க... நிறைய கொலைகாரர்கள் உருவாகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  8. என்ன வெங்கட் பயமுறுத்துறீங்க..

    பதிலளிநீக்கு
  9. திகிலாகத்தான் இருக்கு படிக்க!

    பதிலளிநீக்கு
  10. எத்தனை நாளைக்குத்தான் பாதுகாப்பில்லாம பயத்தோட இருப்பாங்க :-(

    பதிலளிநீக்கு
  11. பெண்களை கொல்வது அவ்வளவு ஈசியா????

    பதிலளிநீக்கு
  12. தில்லியில் உள்ள பெண்களுக்கு சுதந்திரம் என்பது நிறைய இருந்தாலும், பாதுகாப்பு இல்லை என்பதைப் பார்க்கும்போது மிகவும் கவலைக்கிடமாய் இருக்கிறது. எங்கே என்ன நடக்கிறது என்பது காவல்துறைக்கும் புரியவில்லை, தில்லியில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லை. தில்லியின் முதலமைச்சர் கூட சில மாதங்களுக்கு முன் இது போன்ற ஒரு கொலை நடந்தபோது பெண்கள் இரவில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்.



    .....நாட்டின் தலைநகரிலேயே இந்த நிலைமையா?

    பதிலளிநீக்கு
  13. இந்தமாதிரி பதிவெல்லாம் போட்டு பயங்காட்டாதீங்க.

    பதிலளிநீக்கு
  14. படிப்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. நாம் எங்கே போய்க கொண்டிருக்கிறோம்? இந்த மாதிரிக் குற்றங்களை புரிவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப் பட வேண்டும். பெண்களுக்கெதிராய் நடத்தப் படும் இந்த வன்முறைகளை இன்னமும் எத்தனைக் காலம் அனுமதிக்கப் போகிறோம்..

    பதிலளிநீக்கு
  16. ரொம்ப பயங்கரமாக இருக்கு...

    பதிலளிநீக்கு
  17. சமீபத்தில் அம்ருதாவின் ஸ்டேட்மெண்ட் இது. “ எனக்கென்னவோ தில்லி போயிட்டு வந்தது ப்ரவுடாவே இல்லம்மா!!!!! ஹைதையில் இருப்பதை ரொம்பவே ப்ரவுடா நினைக்கிறேன்!!!””

    சுற்றி பார்க்க வந்தாலும் மனதில் ஒட்டாமலே ஒரு ஊர் இருந்தது என்றால் அது தில்லிதான். ஏன் என்பது புரியலை. உங்கள் பதிவு எங்கள் நினைப்புச் சரிதான் என்று சொல்கிறது. கம்ஃபோர்ட் ஜோனில் தலைநகரம் இல்லை என்பது சோகமான உண்மை.

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப கொடூரமா இருக்கு

    பதிலளிநீக்கு
  19. கடவுளே... ஏதோ த்ரில்ளீர் பாத்த மாதிரி இருக்கு ரியல் நியூஸ் எல்லாம் கேட்டா... அவ்வ்வ்வவ்வ்வ்....:(((

    பதிலளிநீக்கு
  20. முக்கியமான பதிவு வெங்கட்.!
    நடக்கும் கொலைகளில் பாதி தெரிந்தவர்கள் உறவினர்கள் போன்றோரே குற்றவாளிகளாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். இன்னொன்று எவ்வளவு எச்சரிக்கை விடுத்தாலும் தகுந்த பாதுகாப்பின்றி பெண்கள் இரவு நேரங்களிலும் தனியாக வருவது, மிக சுலபமாக மற்றவர்களை நம்பி விடுவது போன்ற விஷயங்கள் ஆபத்தானவை என்பதை உணர மறுக்கிறார்கள். பெண் சுதந்திரம் என்பது வேறு..பாதுகாப்பு என்பது முற்றிலும் வேறு..இன்னொன்று இளம் குற்றவாளிகள் டெல்லியில் அதிகரித்திருக்கிறார்கள் என்ற செய்தி. பெற்றோர்களின் அலட்சிய போக்கும் இவர்களை இந்நிலைக்கு தள்ளுகிறது என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
  21. தலைப்பே மஹா கலவரமாக இருக்கிறதே என்றுதான் படிக்க ஆரம்பித்தேன்...தலைநகரம் கொலைநகரமாக மாறி வருவது கவலைக்குரியதுதான்...பதிவு நன்றாக இருந்தது...கொன்னுட்டீங்க சார்!!

    பதிலளிநீக்கு
  22. நம்ம சைடும் வந்து படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க>>> அன்புடன் காத்திருக்கிறோம்!!

    http://sagamanithan.blogspot.com/

    பதிலளிநீக்கு
  23. தலை நகரில் நாலு நாள் தங்கிட்டு பத்திரமா திரும்பியாச்சு..

    பதிலளிநீக்கு
  24. பெண்கள் மிக எளிதாக இரையாக்கப் படுகிறார்கள் என்பதுதான் வேதனை. பெண்கள் பாதுகாப்புடன் இருந்தால்தான் இது தவிர்க்க முடியும். ஜனத்தொகை நிறைந்த / தினம் தினம் புதிது புதிதாய் ஜனங்கள் அதிகம் ஊடுருவும் நகரில் போலீஸ் எனன்வென்று தேடும். யாரையும் ஒன்னும் சொல்வதற்கில்லை. கலாசார சீரழிவின் உச்சகட்டம்...!!!

    பதிலளிநீக்கு
  25. கருத்தளித்து தமிழ்மணம் மற்றும் இண்ட்லியில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    @@ எல்.கே.: ”வரும் முன் காப்போம்” என்பது இங்கே இல்லவே இல்லை கார்த்திக். இது போல ஒவ்வொரு நிகழ்வின் பின்னும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொல்வது இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது!

    ## முத்துலெட்சுமி: உண்மை. தில்லி போலீஸ் செய்ய முடிவதைக் கூட செய்வதில்லை :(

    @@ சுந்தர்ஜி: குரூரம் நிறைய பேரின் மனதை ஆட்டிப் படைக்கிறது தற்போது என்பது வேதனையான ஒன்று சுந்தர்ஜி!

    ## வை. கோபாலகிருஷ்ணன்: படிக்கிற நமக்கே கஷ்டமாய் இருக்கும்போது சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் நிலைமை இன்னும் மோசம் தான் சார்.

    @@ இராஜராஜேஸ்வரி: பயங்கரம் தான் சகோ.

    ## சென்னை பித்தன்: திகில் நகரம் :(

    @@ ஆர்.வி.எஸ்.: கொடுமையே :(

    ## மோகன்குமார்: பயமுறுத்தவில்லை மோகன்.

    @@ கே.பி. ஜனா: உண்மைதான் சார்.

    ## அமைதிச்சாரல்: புரியவில்லை!

    @@ அமுதா கிருஷ்ணா: எனக்குத் தெரியாது சகோ!

    ## சித்ரா: இந்த பரிதாபமான நிலைதான்.

    @@ லக்ஷ்மி: பயமுறுத்துவதற்காய் இதைப் பகிரவில்லைம்மா!

    ## ரத்னவேல்: கொடுமைதான் அய்யா!

    @@ மோகன்ஜி: எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை. நமது நாட்டின் நீதித்துறையிலும் தண்டனைகளிலும் மாற்றங்கள் வர வேண்டும். அதுதான் தீர்வு.

    ## கீதா ஆச்சல்: பயங்கரமே!

    @@ புதுகைத்தென்றல்: நிறைய பேருக்கு தில்லி பிடிப்பதில்லை! பல்வேறு காரணங்களால். அம்ருதா விதிவிலக்கல்ல….

    ## ராஜி: கொடூரம் தான் சகோ.

    @@ அப்பாவி தங்கமணி: படத்தில் என்றால் பரவாயில்லை! ஆனால் நிஜத்தில் த்ரில்லர் – சோகம்….

    ## கலாநேசன்: உண்மைதான் நண்பரே…

    @@ சந்திரமோகன்: நல்ல அலசல் மோகன். இதுபோன்ற நபர்கள் உருவாக அவர்களின் பெற்றோர்களும் முக்கிய காரணம்.

    ## லக்ஷ்மிநாராயணன்: கொலைநகரம் :(

    @@ சகமனிதன்: வருகிறேன் நண்பரே…

    ## ரிஷபன்: சொல்லாமலே வந்து இருக்கீங்க! தொலைபேசியில் பேசியதால் ஒன்றும் சொல்லவில்லை நான். அடுத்த முறை வரும்போது கண்டிப்பாய் தெரிவியுங்கள். நேரில் வந்து சந்திக்கிறேன்…

    @@ அன்னு: கலாச்சார சீர்கேடு :(

    ## மாதேவி: கொடூரம்தான் சகோ. :(

    பதிலளிநீக்கு
  26. New Delhi is still the rape capital

    இது ரெண்டுமூணு நாள் முன்னாடி இங்க வந்த நியூஸ்!!

    பதிலளிநீக்கு
  27. @@ ஹுசைனம்மா: நல்ல விஷயங்களில் முதலிடம் என்றால் சந்தோஷம். ஆனால் இது போன்ற விஷயங்களில் :( வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....