எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, June 7, 2011

ஜில்-ஜில் ரமாமணி
தில்லானா மோகனாம்பாள்’ என்றவுடன் எனக்கு சிவாஜி கூடவே நினைவுக்கு வருபவர்களில் ஜில்ஜில் ரமாமணி’ மனோரமாவுக்குத் தான் முதலிடம்.  நான் பிறப்பதற்கு முன்பே, 1968-ல் வெளிவந்த இப்படத்தில் நிறைய ஜாம்பவான்கள் இருந்தாலும், எனக்கென்னவோ, ஜில் ஜில் ரமாமணியைத் தான் நிரம்பப் பிடித்தது.

இப்போது ஜில்ஜில் ரமாமணியை தினம் தினம் நினைவு படுத்த அலுவலகத்தில் ஒரு பெண் வந்து சேர்ந்திருக்கிறார்.  அடடா உளறிட்டேனா?  ஹிஹி… இருந்தாலும் சொல்ல வந்தாச்சு, சொல்லிடறேன்… 

ஒரு பஞ்சாபி பெண் புதிதாக டேடா எண்ட்ரி ஆபரேட்டராக தற்காலிக பணியில் சேர்ந்து இருக்கிறார்.  நம்ம ஊர் பெண்கள்  போட்டுக் கொள்வது போல நிறைய சலங்கைகள் வைத்து கொலுசு போட்டுக் கொண்டு ‘ஜல் ஜல்' என்ற சத்தம் எழுப்பியபடி நடந்து செல்கிறார்….

கொலுசின் ஜல்ஜல் மட்டும்  போதாது என்ற எண்ணமோ என்னவோ  தெரியவில்லை, அவர் அணியும் சுடிதார்களின் ஓரங்கள், துப்பாட்டாவின் நுனிகள், தலைமுடியைக் கட்டி வைத்துக் கொள்ளும் க்ளிப் என எல்லாவற்றிலும் சலங்கைகள், சலங்கைகள், மேலும் சலங்கைகள்…

அவர் ஆடி ஆடி செல்லும்போது ஏதோ ஒரு கொலுசுக் கடையே கடந்து செல்வது போலிருக்கிறது.  

பொதுவாகவே பஞ்சாபிகள், உணவு, உடை போன்ற விஷயங்களில் மிகுந்த ரசனை உடையவர்கள். உடைக்காக நிறைய செலவும் செய்பவர்கள்.  இந்தப் பெண் ரசனையாக உடை அணிவதற்கு இதுவும் ஒரு காரணம்.  இன்னுமொரு காரணம் – ஜீன்! 

என் அலுவலகத்திலேயே வேலை செய்யும் இந்தப் பெண்ணின் அப்பாவும் அலாதியானவர். கண்களுக்கு அடர்ந்த மையிட்டு, தலையில் கட்டும் தலைப்பாகையில் [டர்பன்] மணிமகுடம் அமைந்த குண்டூசிகள் குத்தி, சில சமயங்களில் பேட்டரி மூலம் எரியும் விளக்குகள் பொருத்தி என விதவிதமான அலங்காரங்களோடு வருவார்.  அலுவலகத்தில் உள்ள பெண்களால் அவர்  “லைட்டோன் வாலா சர்தார்” என்று பட்டப் பெயர் பெற்றவர்.

நான் நடந்து வரும் காரிடாரின் அடுத்த மூலையில் வெளிச்சமும், சலங்கை ஒலியும் ஒரு சேரக் கேட்கிறதே… அட! ஆமாம் “லைட்டோன் வாலா சர்தாரும், ஜில்ஜில் ரமாமணியும்” ஒரு சேர நடந்து வருகிறார்கள்.

நான் ரசித்துக் கொண்டு இருக்கிறேன். நீங்களும் மானசீகமாய் ரசியுங்களேன்.

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திக்கிறேன்.

வெங்கட்


34 comments:

 1. ஜில் ஜில் ஒகே! சிவாஜி சார் உண்டோ?!

  ReplyDelete
 2. நல்ல பதிவு.

  ReplyDelete
 3. என்ன ஒரு ரசனை? அப்பாவையும் ரசிக்கிறீங்க! பொண்ணையும் ரசிக்கிறீங்க!

  ReplyDelete
 4. ரசனையான பதிவு
  படிக்கும் போதே கண்களிவழியே
  ஊடுருவுகின்றது கொலுசின்
  ஜல் ஜல் சத்தம்
  நல்ல பகிர்வு , என்னை தலை நகருக்கு அழைக்கிறது
  நண்பரே உங்களைப்பார்க்க அல்ல .............

  ReplyDelete
 5. கொஞ்சும் சலங்கை?

  ReplyDelete
 6. @ தென்றல் சரவணன்: வருகைக்கு நன்றி சகோ. சிவாஜி சார்? அது பிறகு எழுதுகிறேன்...

  @ ரத்னவேல்: நன்றி ஐயா.

  @ ராஜன்: தங்களது முதல் வருகைக்கு நன்றி ராஜன். ரசனை வைத்திருப்பதில் பாகுபாடு பார்ப்பதில்லை....

  @ A.R. ராஜகோபாலன்: வருகைக்கு நன்றி நண்பரே... தில்லி உங்களை வரவேற்கிறது... தில்லியில் இருப்பதால் நானும்.... :)

  @ சுந்தர்ஜி: சலங்கை ஒலி.... :)

  ReplyDelete
 7. ஜில்ஜில் ரமாமணியுடன் சேர்ந்து பணியாற்றக் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்.

  நானும் உங்கள் அலுவலகத்தில் பணியாற்றுவது போல கற்பனை செய்து பார்க்கிறேன்.

  அடடா, அருமையான சலங்கை ஒலி சத்தத்தில் ஒரு வேலையும் ஓடாதே.

  நான் வேலை பார்த்த மிகப்பெரிய அலுவலகத்தில், நிறைய பெண்மணிகள் ஆங்க்காங்கே பல செக்‌ஷன்களில் உண்டு.

  ஆனால் எங்கள் செக்‌ஷனில் மட்டும் மருந்துக்குக்கூட கிடையாது.

  இருப்பினும் அவ்வப்போது வந்து போவார்கள். மிகவும் கலகலப்பாக இருக்கும். யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதுபோல அவர்களில் ஒரு சிலர் வருவதற்கு முன்பும், வந்துபோன பின்பும் கும்மென்று மல்லிகைப்பூ, முல்லைப்பூ வாசனைகளும், பல்வேறு செண்ட் வாசனைகளுமாக ஒரே கமகமவென்று வீசும். நல்ல ம்னதிற்கினிய ரம்யமான சூழலை ஏற்படுத்தும்.

  நல்ல ஆத்மார்த்த நட்புடன் பழகுவார்கள், பேசுவார்கள். நமது Routine வேலைகள் தான் சற்றே பாதிக்கப்படும்.

  இருப்பினும் ஒரு பேரெழுச்சியும் புத்துணர்ச்சியும் ஏற்படுமென்பதை மறுப்பதற்கில்லை.

  பழைய நினைவுகளை மீட்டுத்தந்த நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. அற்புதமான நினைவுகளின் பதிவு..

  ReplyDelete
 9. @ வை. கோபாலகிருஷ்ணன்: உங்களது வருகைக்கும் நீண்ட கருத்திற்கும் நன்றி.

  எனது பகிர்வு உங்களை நினைவலைகளை மீட்டெடுக்க உதவியது என்பதில் எனக்கும் மகிழ்ச்சி...

  முடிந்தால் நாங்களும் ரசிக்க ஏதுவாய் சில நினைவுகளை பகிருங்களேன்... ...

  ReplyDelete
 10. @ வேடந்தாங்கல் கருண்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே....

  ReplyDelete
 11. ரசித்தேன்.

  இரவு ஜில் ஜில் வரப்போகிறது.... சந்திரமுகி :)

  ReplyDelete
 12. @ மாதேவி: ரசித்தமைக்கு நன்றி சகோ. சந்திரமுகி வருவாங்களா.... அட எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கேன்....:)))))

  ReplyDelete
 13. "பாத கொலுசு பாட்டு பாடிவரும் பாடிவரும்
  பாவை சொகுசுப் பாக்க கோடிபெரும் கோடிபெரும்!”

  ReplyDelete
 14. ஆபிஸ் கலகலவென்று இருக்கு போல...

  ReplyDelete
 15. ஹா ஹா ஹா...சூப்பர் ரசனை தான்... இதை ரசிக்கவும் ஒரு ரசனை வேணுமே...:)

  ReplyDelete
 16. ஜில் ஜில் ரமாமணிடை விடவும் அவரது தந்தையையும் அவரது அலங்காரங்களையும் நினைக்கையில் ஆச்சரியமாக உள்ள‌து, இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா என்று!!

  ReplyDelete
 17. @ சென்னை பித்தன்: கவிதையான வருகை மகிழ்வித்தது. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @ அமுதா கிருஷ்ணன்: கலகலப்பாக இருந்தால் தானே வேலை ஓடும் :) தங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  @ அப்பாவி தங்கமணி: நமக்கு எப்பவுமே கொஞ்சம் ரசனை ஜாஸ்தி தானுங்க அம்மணி! தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @ மனோ சாமிநாதன்: நீங்கள் சொல்வது உண்மை தான். இன்றளவும் ஜில்ஜில் ரமாமணியின் தந்தை இப்படி அலங்காரப் பிரியராகத் தான் இருக்கிறார். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 18. நவரச நாயகர் திரு வெங்கட் அவர்களே,

  ஜில், ஜில் ரமாமணியின் வருகையின் மூலம் ரசிகர்களின் மன ஆழத்தில் ஒளிந்து கொண்டிருந்த ரசிகத்தன்ன்மையை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். மேலும், அவர்கள் மனதில் எங்கோ ஒளிந்துகொண்டுள்ள நிறைவேறாத சில ஆசைகளை , ஏக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர தங்கள் இடுகை ஒரு வடிகாலாக பயன்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. தொடரட்டும் உங்கள் சீரிய தொண்டு. பாராட்டுக்கள்.

  மந்தவெளி நடராஜன்.
  07-06-2011.

  ReplyDelete
 19. ஜில் ஜில் வந்த பிறகு அலுவலகமே சுறுசுறுப்பாகி பணிகள் ஜல் ஜல் என வேகமாக நடக்குமே....

  ReplyDelete
 20. தகவல்கள் வித்தியாசமாக இருந்தன
  அவர்கள் அனுமதியுடன் அவர்கள்
  புகைப்படத்தை பதிவிடமுடியுமானால்
  மனக்கண்ணால் ரசிப்பதை
  நேரடியாகவும் ரசித்து மகிழ்வோம்
  நல்ல பதிவு அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

  ReplyDelete
 21. என் சந்தேகம்,. இப்ப நீங்க பதிவு போடறது குறைஞ்சு போச்சு . அதுக்கும் இதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா

  ஆதி மேடம் கவனிங்க

  ReplyDelete
 22. ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - ஜானகி, பாசம் படத்தில் பாடிய பாட்டு நினைவு வந்தது.
  சகாதேவன்

  ReplyDelete
 23. அந்த பஞ்சாபி ஆணின் அலங்காரம், வடநாட்டு மற்றும் பாக் ஆண்களின் இயல்பு என்று நினைக்கிறேன். ஏனெனில், இங்கே பெரும்பாலும் பஞ்சாபியர்/பாக்கிஸ்தானியர்கள்தான் டாக்ஸி மற்றும் லாரி டிரைவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் காரையும், லாரியையும் இதேபோல அலங்காரப் பொருட்கள், கலர்கலரான கார்ப்பெட்கள், இருக்கை உறைகள் கொண்டு அலங்காரம் செய்திருப்பார்கள். பார்க்க அழகாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும்.

  கொலுசு ஒலி, மெலிதாக ஒலிப்பது ரசிக்க வைக்கும். ஆனால், “ஜல் ஜல்” என்று அதிர நடப்பது எப்போதும் ரசிக்க முடியாது. இது பரவால்லை, இங்கேயெல்லாம் ஹை ஹீல்ஸோடு “டங்க் டங்க்” என்று தரை அதிர நடப்பர்கள்.(ஆண்களும்கூட!!) தரையோடு சேர்ந்து, நம் தலையும் அதிரும்!! ;-))))))))

  ReplyDelete
 24. தில்லானா மோகனாம்பாள் ரிலீசுக்கு அப்புறம் தான் பிறந்தேன்ன்னு சொல்லாட்டாலும் நீங்க யூத்துன்னு நாங்க நம்பறோம் தல. ;-)))
  என்னது ரசிக்கிறீங்களா?
  மேடம் எங்க போனாங்க? உங்களுக்கு ரொம்ப தில்லாயிடுச்சு... ;-)))

  ReplyDelete
 25. 'ஏஏஏஏன்..’ என்று ஜில்ஜில் கேட்கும்போது மத்த ஜாம்பவான்கள் சற்றே ரேசில் ஒரு நூலிழை பின் தங்கிப் போன மாதிரி இருக்கும்.
  உங்க ஆபீஸ்ல சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது போல..

  ReplyDelete
 26. @ V.K. நடராஜன்: தங்கள் வருகைக்கும் உண்மையான கருத்திற்கும் மிக்க நன்றி.

  @ பத்மநாபன்: ஜில் ஜில் சத்தம் கேட்கும்போதே சுறுசுறுப்பாகி வேலையெல்லாம் ஜரூரா நடக்குது… உண்மைதான்… தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @ ரமணி: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. கேட்டுப் பார்க்கிறேன் அவர்களிடம். ஒத்துக் கொண்டால் புகைப்படம் போட்டுவிடுவோம்… :)

  @ எல்.கே.: வாங்க கார்த்திக். எப்பவும் போலதான் பதிவுகள் வந்துட்டு இருக்கு. ஏற்கனவே நல்லாதான் கவனிச்சுக்கறாங்க… நீங்க வேற சொல்லணுமா? :) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கார்த்திக்.

  @ சகாதேவன்: தங்களது முதல் வருகைக்கு நன்றி. நீங்கள் நினைவூட்டிய பாடல் நல்ல பாடல். மிக்க நன்றி.

  @ ஹுசைனம்மா: உண்மைதான். அவர்கள் ரசனை மிகுந்தவர்கள். அலங்காரப் பிரியர்கள். மெலிதான சத்தத்தில் சலங்கை ஒலி நன்றாக இருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @ RVS: நம்ப என்னிக்குமே யூத் தான் மைனரே.. சந்தேகமேயில்லை. மேடம் எங்கேயும் போகல… இங்கதான் இருக்காங்க… தில் எப்பவுமே கொஞ்சம் ஜாஸ்திதான்… :) [அட நீங்க வேற போட்டுக் கொடுக்காதீங்க… ஏற்கனவே கார்த்திக் வேற என்னமோ சொல்லிட்டு போயிருக்காரு…]

  @ புதுகைத் தென்றல்: எஞ்சாயிட்டுதான் இருக்கோம் சகோ. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @ ரிஷபன்: ”ஏஏஏஏன்ன்” ஒரு தடவை சொல்லிப் பார்த்தேன்… என்ன இருந்தாலும் மனோரமா மாதிரி சொல்ல வரலை.. :) நிஜமாகவே கலக்கலப்பாகத் தான் போகுது….

  ReplyDelete
 27. அந்தகால ஜில் ஜில் ரமாமணி எனக்கும் பிடிக்கும்.. உங்க பதிவு கூட.

  பகிர்வுக்கு மிக்க நன்றி,வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 28. மனோரமா மனோரமா தான்!

  ReplyDelete
 29. பாத்து வெங்கட் தூக்கத்தில் ஜில் ஜில் ன்னு சொல்லிட்டு வீட்டில் வாங்கி கட்டிக்க போறீங்க

  ReplyDelete
 30. @ தங்கம்பழனி: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி. ரசித்தமைக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றி நண்பரே..

  @ கே.பி.ஜனா: மனோரமா… மனோரமாதான்… 100% உண்மை. நன்றி சார்.

  @ மோகன்குமார்: ஜில்ஜில்ல்ல்ல்ல்ல்… முன்னாடியே சொல்லிட்டதாலே மாட்டிக்க மாட்டேன்னு ஒரு நம்பிக்கைதான் மோகன்… வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 31. ஜில்லுன்னா ஜில்லுதான்.நேற்றுகூட தில்லானா பார்த்தேன்..நாயனக்காரவுகளேன்னு இழுக்கும் இழுப்பு இருக்கே....யாராலும் அப்படி இழுக்க முடியாது.
  நல்ல நடிகை பாவம் வீட்டில் அமர்ந்து விட்டார்
  படௌலகத்தையும் பாருங்களேன்...வீல் சேரில் அமர்ந்து வரும் ஒரு ரோலாவது தரலாம் இல்லையா...
  இதுதான் உலகம்

  ReplyDelete
 32. @ கோமா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. மனோரமா ஒரு நல்ல நடிகை. எத்தனை வேடங்களில் காண்போரை ரசிக்க வைத்து இருக்கிறார்.... ம்... எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்கத் தூண்டும் விதமாய் நடித்திருப்பார் பல படங்களில்...

  ReplyDelete
 33. //goma said...
  வீல் சேரில் அமர்ந்து வரும் ஒரு ரோலாவது தரலாம் இல்லையா...//


  ஏன் வீல் சேர் ரோல்? உடல் நலமில்லியா? போன மாசம்கூட துபாயில் ஒரு நிகழ்ச்சியில் ஜம்மென்று கலந்துகொண்டாரே!! படங்கள் இந்த லிங்கில்:
  http://www.dinamalar.com/nri/More_picture.asp?News_id=5642&lang=ta&news_head=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81&detectflash=false

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....