சனி, 16 ஜூலை, 2011

ட்ரிங்.... ட்ரிங்.....


சில வருடங்கள் முன் வரை நாம் யாரையாவது தொலைபேசியில் அழைக்கும் போது,  கேட்கும் ஒரே ஒலிதான் இந்த ட்ரிங்... ட்ரிங்...  யாரை அழைக்கிறோமோ அவர்களுக்குக் கேட்பதும் அதே ட்ரிங்... ட்ரிங்... 

எத்தனை மாற்றம் இதில் தற்போது.  விதம் விதமா தொலைபேசிகள் வந்தபோது யாரை அழைக்கிறோமோ அவர்கள் வீட்டில் வேறு வித அழைப்பொலியில் ஆரம்பித்த மாற்றம் இப்போது எங்கு வரை வளர்ந்து விட்டது.  இந்த உலகிலே மாறாத ஒன்று மாற்றம்தானே...  

எந்த ஊரில் நாம் அழைப்பவர் இருக்கிறாரோ அந்த ஊர் பாஷையிலேயே நம்மையும் அந்த வசதியைப் பயன்படுத்த அழைக்கும் குரல்...  விஜயவாடாவில் இருக்கும் ஒரு நண்பர் தனது அலைபேசியில் வைத்திருக்கும் காலர் ட்யூன் வருவதற்கு முன்னரே ட்யூன் காப்பி செய்யாலக்கு ஸ்டார் இங்க தொமிதி பிரஸ் செய்யண்டிஎன்று அவர்களது விளம்பரம் வந்த பின் "மௌனம்கானே...” என்று ஒரு பாடல் வரும்... இந்த பாடல் கேட்டவுடனேயே எனக்குத் தோன்றியது அட இது தமிழ் பாடலாயிற்றே... ஆட்டோகிராஃப் படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே...தான் அது.

இப்படித்தான் அந்தந்த மாநிலத்தின் மொழியிலே ஏதாவது ஒரு பாடல் கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது.  

இந்த மாதிரி காலர் ட்யூன் வைத்திருப்பவர்கள் சில சமயம் விவகாரமாக ஏதாவது வசனங்கள் வைக்கும்போது தான் நமக்குப் பிரச்சனையே...சிலர் வடிவேலு, சந்தானம் போன்ற காமெடி நடிகர்களின் வசனங்களை வைத்துக் கொள்கின்றனர்.  வேறு சிலர் இதற்காகவே தேடிப் பிடித்து வைக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை  அழைக்கும் நமக்குக் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானது.  

நேற்று ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஒரு நண்பரின் அலைபேசிக்கு அழைத்தேன்.  இரண்டு மூன்று ட்ரிங்... ட்ரிங்... கேட்ட பிறகு ஒரு மழலையின் குரல் கேட்டது. அந்த மழலை சொன்ன மொழி இது...


அப்பா தூங்கறாரு... 
நீங்க எங்கூட பேசுங்களேன்...
நீங்க எங்கூட பேசுங்களேன்....
நீங்க எங்கூட பேசுங்களேன்....

நானும் அதை நம்பி நண்பரின் பெண் தான் பேசுகிறாளோ என்றுசரிடா செல்லம், நான் அப்புறமா கூப்பிடறேன்என்று சொல்ல அந்த பக்கத்தில் இருந்து நீங்க எங்கூட பேசுங்களேன்.... நீங்க எங்கூட பேசுங்களேன்....” தொடர்ந்தது. சரின்னு நானும் வைத்து விட்டேன் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில்.

மாலையில் நண்பரை மீண்டும் அழைத்தபோது, மதியம் அழைத்த விவரத்தினையும் அவர் மகள் அலைபேசியில் பேசியதையும் சொன்னேன்.  அதற்கு அவர் சொன்ன பதில் தெரிந்த போது தான் நான் நொந்தேன்...

அவரது பதில் என்ன தெரியுமா? “இல்ல அண்ணா, நான் மறந்து போய் மொபைல வீட்டுல வைச்சுட்டு வந்துட்டேன். நீங்க பேசியதாக நினைத்தது என் மகளுடன் அல்ல... அது என் காலர் ட்யூன்என்று நான் முட்டாள் ஆனதை நினைத்து சிரித்தார்.

ஆயிரம் வாட்ஸ் பல்பு வாங்கியது போல ஆனேன் நான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?...

மீண்டும் வேறு பகிர்வில் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.


20 கருத்துகள்:

  1. நல்ல நகைச்சுவையான விஷயம் தான். ரசிக்க முடிந்தது. இங்கு பலர் குழந்தை கடகடவென்று சிரிப்பது போலவும், குழந்தை ஓயாமல் அழுவது போலவும் பலவிதமான ரிங்டோன் வைத்துள்ளனர்.

    பதிலளிநீக்கு
  2. @ வை. கோபாலகிருஷ்ணன்: ஆமாம். பலர் குழந்தை சிரிப்பது, அழுவது என்ற ரிங்டோன் வைத்து இருக்கின்றனர். பெரும்பாலான சமயங்களில் இது கேட்டு ஏமாற்றம் அடைந்திருக்கும் பலரில் நானும் உண்டு.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இப்படி வாய்ஸ் வைத்திருப்பவர்கள் ஒருபுறம் .... கூப்பிட்டால் தானாக வரும் அறிவிப்புகளுக்கு, ஒருகாலத்தில் சண்டை போட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ( என்னம்மா சொன்னதையே திருப்பி திருப்பி சொல்றிங்க இருக்காரா...இல்லையா )... இப்ப மாமோய் .... மச்சா......ன் அதிக மாயிருச்சு ... நம்ம ம..மை அவர்களின் ரிங் டோன் ... பேசக்கூடாது சிலுக்கு பாட்டு ... ( இப்ப மாத்திட்டாருன்னு தெரியல )

    பதிலளிநீக்கு
  4. @ எல்.கே: ஆமா கார்த்திக். பல்பு அப்படி ஒரு பிரகாசம்... :) வருகைக்கு நன்றி.

    # பத்மநாபன்: //என்னம்மா சொன்னதையே திருப்பி திருப்பி சொல்றீங்க// அட இது கூட நல்லா இருக்கு:) சிலுக்கு பாட்டா? ம்... அவர் தான் மைனர் ஆச்சே :)))) தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

    @ மோகன்குமார்: சரிதான்.... முதல் முறை கேட்கும்போது கொஞ்சம் புரிவதில்லை இது காலர் ட்யூன் என்பது.... :) தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன்.

    பதிலளிநீக்கு
  5. எனக்கும் இது போல அனுபவங்கள் நிறைய உண்டு, அதையெல்லாம் நினைக்கும் போது சிரிப்புதான்
    நல்ல பிரகாசமான பதிவு நண்பரே

    பதிலளிநீக்கு
  6. சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது எங்க வீட்டு அம்மா முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடமே தொலைபேசியில் பேசி வாக்கு போட்டுவிடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தாங்க. தேர்தல் பிரசாரம் முடியும் வரை அவர் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் வாக்கு கேட்ட போதுதான், அது பதிவு செய்யப்பட்ட செய்தி என்பது உறைத்தது.

    இதனால்தான் கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய் என்று சொன்னார்களோ?

    பதிலளிநீக்கு
  7. நான் மட்டும் தான் இப்படின்னு நினைச்சேன்..வெங்கட்..

    பதிலளிநீக்கு
  8. //"நீங்க எங்கூட பேசுங்களேன்.... நீங்க எங்கூட பேசுங்களேன்....//

    ஹா...ஹா...ஹா... பெஜவாடா பீமா ரெட்டிகாரு பிஸிகா உன்னாரு... “நீங்க எங்கூட பேசுங்களேன்.... நீங்க எங்கூட பேசுங்களேன்....

    சூப்பர் பல்ப்............

    பதிலளிநீக்கு
  9. இந்த உலகிலே மாறாத ஒன்று மாற்றம்தானே...

    பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  10. ஹி ஹி நானும் ஏமாந்திருக்கிறேன் இப்படி. நாமெல்லாம் ரொம்ப வெள்ளந்தியான ஆளுங்க.(ஏமாளிக்கு இப்படி ஒரு பேரு)

    பதிலளிநீக்கு
  11. அவரவர்கள் விரும்பியதை வைத்துக்கொள்வதாக
    நினைத்து வைத்துக்கொள்கிறார்கள்
    பொதுவானவைகளாக இருந்தால் பரவாயில்லை
    குறிப்பிட்ட வயதினர் ரசிக்கும்படியாக
    வைத்திருப்பது அடுத்த வயதினருக்கு கொஞ்சம்
    அவர்கள் மேல் வைத்துள்ள அபிபிராயத்தை
    தேவையில்லாமல் குலைப்பதாக உள்ளது
    சிந்திக்கவைத்த பதிவு

    பதிலளிநீக்கு
  12. @ A.R. ராஜகோபாலன்: இப்போது நினைத்தால் சிரிப்பாகத் தான் இருக்கிறது.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    # ஈஸ்வரன்: அட அண்ணி வாஜ்பேய்-கிட்டயே பேசுனாங்களா? இது நல்லா இருக்கே.... அடுத்த தடவை பார்க்கும்போது கேட்டுடுவோம்.... தங்களது வருகைக்கும் சுவையான பதிலுக்கும் மிக்க நன்றி நண்பரே....

    @ மாதேவி:
    # அப்பாதுரை:

    :))) தங்களது வருகைக்கும் ஸ்மைலிக்கும் மிக்க நன்றி.

    @ Reverie: ஐ... நீங்களும் நம்ம மாதிரிதானா.... :) தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  13. @ R. கோபி: பெஜவாடா பீமா ரெட்டிகாரு பிஸிகா உன்னாரா? அவுனண்டி....:) தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  14. # இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. @ சிவகுமாரன்: நிச்சயமா நம்ம வெள்ளந்தியான ஆளுங்கதான்... தங்களது வருகைக்கும் நல்லதோர் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  16. # ரமணி: சில சமயங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது. என்ன செய்வது? தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....