எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 25, 2011

ரகசியம்... பரம ரகசியம்
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எனக்குப் பிடிக்காத ஒரு பாடம் என்றால் அது வரலாறு தான். அதன் கூடவே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை போல சேர்ந்தே  இருக்கும் புவியியலைக் கண்டாலோ அதை விட அலர்ஜி.  பொதுவாகவே இந்தப் பாடத்தில் நான் அதிக மதிப்பெண்கள் எடுத்ததில்லை.  [”அப்படி என்ன மத்த பாடங்களிலெல்லாம் நூற்றுக்கு நூறா எடுத்து விட்டாய்”, என்ற என்னுடைய உள் மனதின் குரல் உங்களுக்குக் கேட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல].

ஆனாலும் அப்படி ஒரு விருப்பமில்லாத வரலாறு-புவியியல் பாடத்திலேயே ஒரு முறை [ஏழாவது முழு ஆண்டுதேர்வு என நியாபகம்] 87 மதிப்பெண் பெற்றேன்.  மற்ற எல்லாப்  பாட மார்க்குகளையும் விட இது தான் அதிகம் என்பதில் என் வீட்டில் உள்ள எல்லாருக்குமே "ஆஹா... பரவாயில்லையே நம்ம பையன் வரலாறில் மிகுந்த ஈடுபாடு வைத்திருக்கிறானே" என்று ஒரு பெரிய திருப்திபத்தாவது வரை வரலாறு-புவியியல் பாடத்தில் நான் எடுத்த அதிகமான மதிப்பெண் அது

அப்படி அன்று அதிகமாக மதிப்பெண் எடுத்ததன் ரகசியம் இன்று வரை யாருக்குமே தெரியாது.  இப்போது தான் சொல்லப் போகிறேன். அன்று பிட் அடித்துத் தான் அத்தனை மதிப்பெண் எடுத்தேன்.  அதுவும் சின்னச் சின்ன பிட் எல்லாம் கிடையாது, மொத்தமாய்வெற்றிஉரை அப்படியே பலகையின் கீழே வைத்து மெகா சைஸ் பிட்! தேர்வின் போது அந்த அறையில் இருந்த ஆசிரியரின் பட்டப் பெயர் மூக்கன் [இயற்பெயர் இப்போது நியாபகமில்லை, அவருக்கு மிக நீண்ட மூக்கு இருந்ததால், மூக்கன்] அவ்வளவு அழகாய் எங்களைக் கண்காணித்தனால் தான் நான் மாட்டிக்கொள்ளவில்லை.

கேள்விகளுக்கான விடைகளை விரைவாக எழுதிக் கொடுத்து விட்டு, நியாபகமாய் வெற்றி உரை நூலையும் எடுத்துக்கொண்டு விடுவிடுவென வீட்டை நோக்கி நடந்தேன்ஆனால் மனதுள் நான் செய்தது தப்பென்ற எண்ணம் மட்டும் என்னை அரித்துக் கொண்டே இருந்தது.  விடுமுறை முழுவதுமே என்னால் இயல்பாய் இருக்க முடியவில்லை.  யாருக்காவது தெரிந்து விடுமோ, என்ற பயம் நெஞ்சு முழுவதும்.

தேர்வு முடிந்து, விடுமுறையெல்லாம் கழிந்து அடுத்த வகுப்பில் சென்று வகுப்பாசிரியர் [எஸ்தர் டீச்சர்] ஒவ்வொரு மாணவரையும் பற்றிச் சொல்லிக்கொண்டு வரும்போது என்னைப் பார்த்து, “பாருங்க, நம்ம வெங்கட் தான் வகுப்பிலேயே வரலாறு பாடத்தில் முதல் மதிப்பெண்என்று சிரித்தபடி சொல்லி உற்சாகப்படுத்திய போது எனக்குள் அப்படி ஒரு உறுத்தல். வெளிப்படையாய் நான் பிட் அடித்ததை அப்போது சொல்லவும் பயம்

அன்று அப்படி பார்த்து எழுதாமல் இருந்திருந்தால் என்ன ஒரு பத்துஇருபது மதிப்பெண் குறைந்திருக்கலாமே தவிர தேர்வில் தோல்வியை தழுவியிருக்கமாட்டேன்.   முதல் மதிப்பெண் பெற்று விட்டாலும், என்னுள்  இருந்த குற்ற உணர்ச்சி, என்னை வாட்டியதுடன் நில்லாமல்  அதன் பிறகு மீண்டும் அது போன்ற தவறை செய்யாமல் இருக்க காரணமாய் இருந்ததும் அதுவே.  நான் முதலும் கடைசியுமாய் பிட் அடித்தது அந்த ஒரு முறை மட்டுமே

அவ்வப்போது வலைப்பூ உலகில்காப்பிஎன்பது அடிக்கடி பேசப்படும் விஷயம்.  இந்த காப்பி அதைப் பற்றியது அல்ல. பள்ளிக் காலத்தில் தேர்வில் அடித்த காப்பி (பிட் அடித்த)அனுபவம் பற்றியதுஇதைப் படிக்கும் உங்களுக்குள்ளும் ஏதேனும் ஒன்று  ரகசியமாய் இருக்குமானால், அதைப் பற்றி நீங்களும் (விரும்பினால்) பகிரலாமே

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்.


41 comments:

 1. பாரம் இறங்கி விட்டதா?

  ReplyDelete
 2. மலரும் பிட் நினைவுகளா வெங்கட்? நல்ல வேளை அத்துடன் விட்டீர்கள்

  ReplyDelete
 3. உண்மையில் நாம் இதுபோன்ற தவறுகள் செய்யும் போதும் அதை மறைக்கும்போதும், குற்ற உணர்ச்சி நம்மை வாட்டி எடுத்து விடும், என்பதே உண்மை.

  எனக்கும் இதுபோல, ஆனால் இதற்கு நேர்மாறான ஒரு சம்பவம் என் பள்ளி நாட்களில் நடைபெற்றது. அந்தத் துரதிஷ்டவசமான துயரமான சம்பவத்தை நினைத்தால் இப்போதும், என் கண்கள் குளமாகிவிடுவதுண்டு. ஒரு கிழட்டு வாத்யாரின் குருட்டு சூப்பர்வைஸனால் தேவையில்லாமல் ஒரு பெரிய ஆபத்தில் அப்பாவியான நான் மாட்டிக்கொண்டேன். என் வீட்டருகே (இன்றும் உள்ள)ஸ்ரீ ஆனந்தவல்லித் தாயாரிடம் ஒரு வாரம் தொடர்ந்து அழுது புலம்பினேன். அவளே பிரத்யக்ஷமாக வந்து நிரபராதியான என்னை சிக்கலிலிருந்து மீட்டு உதவினாள். அதைப்பற்றி தனிப்பதிவாக இடுகிறேன்.

  நேர்மையான இந்தத்தங்களின் மனம் திறந்த பதிவுக்கு என் நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  Voted 2 to 3 in Indli

  ReplyDelete
 4. பதிவு படிச்சிட்டேன்

  ReplyDelete
 5. பதிவுகள் சுமைதாங்கிக் கற்கள் போலவும்
  பயன்படுகிறதே !
  சென்னை பித்தன் அவர்கள் சொன்னதுபோல
  உங்கள் மன பாரம் கொஞ்சம்
  நிச்சயம் குறைந்தருக்கும்
  மனம் கவர்ந்த பதிவு

  ReplyDelete
 6. மணம் வீசும் மலரும் நினைவுகள்.! பாராட்டுக்கள்.
  எனக்கு காப்பி அடிக்க வேண்டிய அவசியமே வந்ததில்லை.
  என் பிள்ளகளுக்காக ஆசிரியர்களிடம் மன்னிப்புக்கேட்டதுண்டு.

  தந்தை நிர்வாகப் பொறுப்பில் கல்வி நிறுவனத்தில் இருந்ததால் இந்தமாதிரி விஷயங்களில் பொறுப்பெடுக்க மாட்டார்.

  ReplyDelete
 7. அருமையான
  உண்மையான
  பதிவு அன்பரே
  வரலாறு, காவிரிபோல
  வராத ஆறு போல ..........

  ReplyDelete
 8. அருமையான பதிவு..வெங்கட்..

  ReplyDelete
 9. ஆகா.. முதல் மதிப்பெண் இப்படி கூட வேலை செய்யுமா..? எப்படியோ தைரியம் தான்..
  அன்று காப்பியும்..
  இன்று வாக்குமூலமும்.. இரண்டிருக்குமே தைரியம் வேண்டும்.

  ReplyDelete
 10. அட! உங்கள் வெற்றிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு இருக்கா!

  என்னதான் பெரிய மூக்கனாக இருந்தாலும் நீங்கள் அடித்த காப்பியை வாசனை பிடிக்க முடியவில்லையே. ஒருவேளை வீட்டிலேயே வறுத்து அரைத்து எடுத்துப் போயிருந்தால் வாசனை பிடித்து இருப்பாரோ?

  என்னதான் காப்பி அடிப்பது தப்புத்தான் என்றாலும் அதில் கிடைக்கும் த்ரில் இருக்கே. அடடடா! என்ன மாட்டிக்கிட்டா கொஞ்ஞ்ச்ச்சமா மானம் போகும் அவ்வளவுதானே. அதெல்லாம் அக்கவுண்டில் கழிச்சுக்கலாம்.

  ReplyDelete
 11. நம்ம ரகசியம்லாம் கொலை கொள்ளை அந்த ரூட்டுல தாங்க.. :)

  ReplyDelete
 12. @ சென்னை பித்தன்: “பாரம் இறங்கிவிட்டதா?” ஆமாம். பல வருட பாரம் இது. இப்போது இறக்கி வைத்தாகி விட்டது. கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் இனி. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 13. # ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 14. @ மோகன் குமார்: ஆமாம் மலரும் நினைவுகள்... ஆனால் கொஞ்சம் பாரம் மிகுந்த ஒன்று. அதனால் தானே தொடரவில்லை... :) தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

  ReplyDelete
 15. # வை. கோபாலகிருஷ்ணன்: ஓ... இந்தப் பகிர்வு உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டதோ.... நீங்களும் உங்கள் அனுபவத்தினை எழுதுங்கள்... காத்திருக்கிறேன். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 16. @ புதுகைத் தென்றல்: ஓ படிச்சிட்டீங்களா. நல்லது சகோ. :)))))

  ReplyDelete
 17. # ரமணி: “பதிவுகள் சுமைதாங்கிக் கற்கள்” - இப்படி யோசிக்க எனக்குத் தெரியவில்லையே சார். தங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 18. # இராஜராஜேஸ்வரி: தங்களது பாராட்டுகளுக்கு நன்றி. அந்த ஒரு முறை செய்த தவறே அறிவு தந்துவிட்டது. தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 19. @ A.R. ராஜகோபாலன்: “வரலாறு - காவிரி போல வராத ஆறு” உங்கள் கற்பனை வளம் என்னை மகிழ்த்தியது. தங்களது தொடர் வருகைக்கும் உற்சாகமான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 20. # Reverie: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 21. @ முத்துலெட்சுமி: //அன்று காப்பியும்..
  இன்று வாக்குமூலமும்.. இரண்டிருக்குமே தைரியம் வேண்டும்.//

  உண்மைதான். இதை எழுதி வைத்து நீண்ட நெடு நாட்கள் ஆகிவிட்டன. இதை வெளியிட இப்பொழுதே தைரியம் வந்தது.... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 22. # ஈஸ்வரன்: அட அண்ணாச்சி, நீங்க இப்படி சொன்னா எப்படி.... ஒரு வேளை காப்பி அடிச்சு மாட்டிக்கிட்டீங்களோ :)))))

  தங்களது வருகைக்கும் 100 மதிப்பெண் கொடுத்தமைக்கும் நன்றி அண்ணாச்சி...

  ReplyDelete
 23. # அப்பாதுரை: //நம்ம ரகசியம்லாம் கொலை கொள்ளை அந்த ரூட்டுல தாங்க.. :)//

  அட இது இன்னும் டெரரா இல்ல இருக்கு... :)

  தங்களது தொடர் வருகைக்கும், இனிய கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 24. அது ரகசியமாகவே இருந்துட்டு போகட்டும் வெங்கட்...
  நல்ல பதிவு நண்பரே...

  ReplyDelete
 25. @ Reverie: இந்த இடுகையில் தங்களது இரண்டாவது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 26. எனக்கும் காப்பி அடிக்க பிடிக்கும்..பயத்தினால் காலம் முச்சூடும் அதை பண்ண முடியாமலே போய் விட்டது ஹூம்....

  ReplyDelete
 27. தவறு செய்யும்போது ஜாலியா இருந்தாலும், அதுக்கப்புறம் வர்ற மன உளைச்சலே நமக்கு பெரிய தண்டனையா இருக்கறதுண்டு... அதுவே ஒரு படிப்பினையையும் கொடுக்கும். உண்மையை ஒத்துக்கவும் தைரியமான மனசு வேணும். . உங்களை மாதிரி :-)

  ReplyDelete
 28. நல்ல பதிவு.


  -S.kumar

  ReplyDelete
 29. அன்புச் சகோதரர் வெங்கட் நாகராஜ்!

  உங்களை 'நட்பென்னும்' தொடர்பதிவில் பங்கேற்க என் வலைத்தளத்தில் அழைத்துள்ளேன்.

  ReplyDelete
 30. காப்பி அடிக்க ஆசைதான்.. ஆனால் ஆன்சர் எந்த பக்கத்துல இருக்குன்னு தெரிஞ்சா இல்ல அதைப் பண்ண முடியும்?!

  ReplyDelete
 31. மலரும் பிட் நினைவுகளா

  ReplyDelete
 32. @ ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி: ஆசை இருந்தும் அப்படிச் செய்யாமல் இருந்ததே நல்லது தானே. தவறு செய்துவிட்டு பின்னர் வருந்துவதில் லாபம் ஏதுமில்லை. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 33. # அமைதிச்சாரல்: சரியாகச் சொன்னீங்க சகோ. தவறு என்று தெரிந்தே தவறைச் செய்வது போன்ற மட்டமான செயல் இருக்க முடியாது.

  //உண்மையை ஒத்துக்கவும் தைரியமான மனசு வேணும். . உங்களை மாதிரி :-)//

  அந்த தைரியம் இப்போதாவது வந்ததே எனக்கு :))))

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 34. @ 90bc5e8c-b1c5-11e0-8e97-000bcdca4d7a: அப்பாடா.... இது என்ன சார் ப்ரொஃபைல்.... எனிவே... திரு எஸ். குமார், தங்களது வருகைக்கும் முத்தான கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 35. # மனோ சாமிநாதன்: தங்களது அழைப்பிற்கு மிக்க நன்றி. நான் சில நாட்கள் முன்னரே இந்தத் தொடர் பதிவினை எழுதி இருக்கிறேன். இங்கே இருக்கிறது பதிவின் சுட்டி...

  http://venkatnagaraj.blogspot.com/2011/07/blog-post.html

  படியுங்களேன்...

  ReplyDelete
 36. @ ரிஷபன்: அதுதானே.... பதில் எந்தப் பக்கத்தில் இருக்குன்னு தெரியலைன்னா கஷ்டம் தான். எந்த பிட் எங்க இருக்குன்னு தனியா ஒரு பிட் எழுதி வைத்திருப்பார் என் பள்ளி மாணவர் ஒருவர் :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 37. This makes me nostalgic. I must confess I have also had a few 'bit'ter experiences. One of my accomplices also live here in Doha. We keep reminiscing about those salad days every now & then.

  ReplyDelete
 38. @ Sunnyside: Hi Surya, almost every one of us will have these 'bit'ter experiences. :) Thanks for the interest shown by you in my blog articles...

  ReplyDelete
 39. மனம் திறந்த பதிவு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....