செவ்வாய், 13 செப்டம்பர், 2011

அபோய் லோ:




இரண்டு மாதங்களுக்கு முன்பு சிபாய் [CHIBAI] என்ற பதிவில் நான் எடுத்துக் கொண்டிருந்த பயிற்சி பற்றியும் அதற்கு வந்திருந்த சக பயிற்சியாளர்களிடம் மிசோ பாஷை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது பற்றியும் எழுதி இருந்தேன்.

ஒரு வழியாக இரு மாத பயிற்சி கடந்த 9-ஆம் தேதி அன்று முடிவு பெற்றது.  இந்த பயிற்சியின் போது நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் பல.  முதல் ஒரு மாதத்தில் நான்கு நாட்கள் மத்தியப் பிரதேச சுற்றுலா [மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” என்று அந்த பயணம் பற்றித் தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன்] சென்றது தவிர மீதி எல்லா நாட்களும் படிப்பு, படிப்பு, படிப்பு, படிப்பைத் தவிர வேறில்லை.

தினமும் படிப்பு, பின்னர் நடைமுறை பயிற்சிகள், செயல்முறை பயிற்சிகள், தேர்வுகள் என மூளையைப் பிழிந்து எடுத்து விட்டார்கள்.  அதிலும் ஒரு எழுத்துத் தேர்வு மூன்று மணி நேரம்நீண்ட நாட்கள் கழித்து தொடர்ந்து மூன்று மணி நேரம் எழுதியதில் கை வலி என்றால் பாருங்களேன்.  அதிலும் எனக்கொரு பாடம் கிடைத்தது.  கையொப்பம் இடுவது தவிர வேறு எதற்கும் பேனாவினை எடுக்காததன் பயன் புரிந்தது.    இனி தினமும் கொஞ்சமாவது எழுத வேண்டும்.

இரண்டாவது மாதத்தில் முதல் மூன்று வாரங்கள் எங்களை களத்தில் நேரடியாக இறக்கி, முதல் மாதத்தில் கற்றுக் கொண்டதை செயல் படுத்தச் சொன்னார்கள்.  நாங்களும் நல்ல முயற்சி எடுத்து ஒரு அரசு நிறுவனத்தின் செயற்பாடுகளை கண்காணித்து அதன் நிறை குறைகளை பார்வை செய்து, குறைகளைக் களைவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அதை ஒரு அறிக்கையாக தயார் செய்து நான்காவது வாரம் சமர்ப்பித்தோம்.

என்னைத் தவிர 10 பயிற்சியாளர்கள்.  அதன் மூலம் புதிய நட்புகள் கிடைத்தன.  இரண்டு மாதம் ஒன்றாக இருந்ததில் நல்லதோர் நட்பு வட்டம் உருவாகி தொடர்ந்து நட்புடன் இருப்போம் என்ற எண்ணத்துடனும், பிரிவதற்கு மனமில்லாமலும்  கடந்த வெள்ளியன்று எல்லோரும் பிரிந்தோம்.  மிசோ மாநில நண்பர்களிடம் இருந்து நிறைய வார்த்தைகள் கற்றுக் கொண்டோம்.

நான் கற்றுக் கொண்டால் மட்டும் போதுமா?  உங்களுக்கும் சில மிசோ வார்த்தைகள், வாக்கியங்கள் இங்கே தம் ஏம்என்றால் How do you do?; என்ஙே – What?; கொன்ஙே - Where?; என்ஙேதின்ஙே – Why?; கலோமேலுத்துக்  - Thank You Very Much; மு – Sleep/Eagle; மங் டா – Good Night; சோ [cho] – food;  என்ஙாய் துவா – Concentrate.

அப்பாடி இது போதும் என்றாகி விட்டதா?  இது போல இன்னும் சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டோம்எந்த ஒரு விஷயத்திற்காவது முக்கியத்துவம் தரவேண்டுமெனில் அதற்கான வார்த்தையை சற்றே நீட்டிச் சொல்லுகிறார்கள்.  பேசும்போது பல இடங்களில் இப்படி நீட்டி முழக்கி பேசுவது ஏதோ பாடுவது போல உள்ளது.  நாங்கள் எல்லோரும் அப்படியே பேசிப் பார்த்ததில் அவர்களுக்கு ஒரே சந்தோஷம்.

எல்லாம் சரி, பரிட்சை எல்லாம் எழுதினேயே மதிப்பெண்கள் எல்லாம் எப்படின்னு எங்கிருந்தோ ஒரு பட்சி கேட்பது புரியுது.  மொத்த பயிற்சிக்கும்  விதவிதமாக மதிப்பெண்கள்.  எல்லாவற்றிலும் கூட்டிக் கழித்து மதிப்பெண்கள் கொடுத்து கடைசி நாள் அன்று முடிவும் அறிவித்து விட்டார்கள்.  பயிற்சி எடுத்த பதினோறு பேரும் தேறிவிட்டோம்.  அது சரி உன்னோட விஷயத்தைச் சொல்லுன்னு கேட்பவர்களுக்குநான் மூன்றாமிடம் [பதினொன்றில்]. 

பயிற்சி முடிந்து நடந்த ஒரு சிறிய விழாவில் எல்லோருக்கும் சான்றிதழ்கள் கொடுத்து விட்டார்கள்.  சில நாட்கள் கழித்து நடத்தும் ஒரு விழாவில் மூன்றாம் இடம் பெற்றதற்கு வெங்கலப் பதக்கம் கிடைக்குமாம். பின்னால் இருந்து நம்ம வீட்டு அம்மணியின் குரல் – “படிக்கப் போனத விட்டுட்டு, மிசோ கத்துக்கறதுக்கு செலவிட்ட நேரத்துல ஒழுங்கா படிச்சிருந்தா முதலிடமே வாங்கி இருக்கலாம்!”

அது எல்லாம் சரி தலைப்புல ஏதோஅபோய் லோஅப்படின்னு எழுதி இருக்கே அது என்னன்னு தெரிஞ்சுக்கணுமா?   மேலே கேட்ட  அம்மணியின் குரலுக்கு என் பதில்: “அபோய் லோ” – அதற்கு அர்த்தம் '"பரவாயில்லை". ஏனெனில் மூன்றாவது இடமாவது கிடைத்ததே.

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்


வெங்கட்
புதுதில்லி



47 கருத்துகள்:

  1. மூன்றாமிடம் வென்ற உங்களுக்கு இண்ட்லியில் மூன்றாவது வோட் போடும்படி ஆனது. ’அபோய் லோ’

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    பதிலளிநீக்கு
  2. என்ஙே ? மூன்றாவது இடம் தானா? அபோய் லோ.

    பதிலளிநீக்கு
  3. அபோய் லோ,எப்படியோ பதக்க மேடை ஏறி விட்டீர்கள்.

    மிசோவில் ‘’ஙே’’ கொஞ்சம் அதிகம் தான்....

    வாஙேங்ஞ்...( வாழ்த்துக்கள் னு மிசோவில் சொன்னேன்... யாருக்கு தெரியும்)

    பதிலளிநீக்கு
  4. சுடச்சுட பின்னூட்டம் வீட்லயே கிடைக்குதா.. ஜூப்பரு :-)

    பதிலளிநீக்கு
  5. மூற்றாமிடத்துக்கும் சான்றிதழும் உடனடியாக கிடைத்ததற்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. @ வை. கோபாலகிருஷ்ணன்: அட அதுவும் மூன்றாவது ஓட்டா! :) நல்லது....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. # ரேகா ராகவன்: அட நீங்களும் மிசோ மொழி கத்துக்கிட்டீங்களே.... :) நல்ல விஷயம் தான்...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. @ பத்மநாபன்: பதக்க மேடை :) ஙே, ஞே எல்லாம் கொஞ்சம் அதிகம் தான்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்துஜி!.

    பதிலளிநீக்கு
  9. # அமைதிச்சாரல்: ஆமாங்க, முதல் கருத்தே வீட்டுல அம்மணிகிட்டே இருந்துதான்!

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. @ கே.பி. ஜனா: வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சார்.

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. # லக்ஷ்மி: வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிம்மா!

    தங்களது வருகைக்கும் இனியதோர் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. பயிற்சி வகுப்புகள் எப்போதுமே நல்ல அனுபவத்தை தருபவை என நினைக்கிறேன். குறைந்த பட்சம், கொஞ்ச நாள் செக்கு மாட்டு வாழ்க்கையிலிருந்து தப்பிக்கலாமே!

    பதிலளிநீக்கு
  13. பெருந்தன்மையாய் முதலிரண்டு இடங்களை நண்பர்களுக்கு விட்டுக் கொடுத்த உங்களுக்கு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. பதிவு அபோய் லோ இல்லை பகுத் அச்சா

    பதிலளிநீக்கு
  15. கிடைதத் வாய்ப்பை நல்லவிதமாக பயன்படுத்திக்
    கொண்டதோடு அல்லாமல் அனைவருக்கும்
    பயன்படும்படியாகச் செய்ததில் பட்டியலிட்டால்
    நிட்சயமாக நீங்கள்தான் முதலாவதாக இருப்பீர்கள்
    பதிவர்கள் சார்பாக நன்றி.வாழ்த்துக்கள்.த.ம 4

    பதிலளிநீக்கு
  16. Bronze medal...கழுத்தை நீட்டி வாங்கிக்கங்க...

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள் வெங்கட்,பயிற்சியில் மூன்றாம் இடத்திற்கு.

    பகிர்வுக்கு கலோமேலுத்துக்

    பதிலளிநீக்கு
  18. உங்க வீட்டு அம்மணி ரொம்ப நல்லவங்க போல.
    பின்னே, ஸ்ஸுகூலுக்குப் போயிட்டு வந்த வீட்டுக்காரரு கொன்ஙே, என்ஙேதின்ஙே, மங் டான்னுட்டு இருந்தா பயந்து போயிட மாட்டாங்க.

    பதிலளிநீக்கு
  19. பதிவுகள் படித்தேன். பின்னூட்டம் தான் இட முடியவில்லை. மூன்றாம் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. மேடை மேல் ஏறியாச்சில்ல!ஒன்று,மூன்று எல்லாம் வித்தியாசம் இல்லை!

    பதிலளிநீக்கு
  21. ”Easwaran said...
    உங்க வீட்டு அம்மணி ரொம்ப நல்லவங்க போல.
    பின்னே, ஸ்ஸுகூலுக்குப் போயிட்டு வந்த வீட்டுக்காரரு கொன்ஙே, என்ஙேதின்ஙே, மங் டான்னுட்டு இருந்தா பயந்து போயிட மாட்டாங்க.”

    வேப்பிலை தான் போய் அடிக்கணும்.

    பதிலளிநீக்கு
  22. மூன்றாம் இடம் பெற்றதற்கு வெங்கலப் பதக்கம் கிடைக்குமாம். /

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  23. ஆஹா....... ஆஹா...... மூணுன்னால் மூணு! இனிய பாராட்டுகள்!

    மிசோ மொழி சொல்லிக் கொடுத்ததுக்கு கலோமேலுத்துக்

    பதிலளிநீக்கு
  24. @ பந்து: பயிற்சி வகுப்புகள் பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் உண்மை நண்பரே...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. # கலாநேசன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  26. @ ரிஷபன்: என்னே எனது பெருந்தன்மை.... :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  27. @ ரமணி: தங்களது உற்சாகமூட்டும் வார்த்தைகள் என்னை மகிழ்வித்தன.....

    தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. # ரெவெரி: கழுத்தை நீட்டிட்டு தானே இருக்கேன்.. :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  29. @ புதுகைத் தென்றல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.....

    பதிலளிநீக்கு
  30. # ராம்வி: வாழ்த்தியமைக்கும், தங்களது தொடர் வருகைக்கும், இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. @ ஈஸ்வரன்: அட அவங்க தைரியமா இருந்தாலும், நீங்க சொல்லி போட்டுக் கொடுத்துடுவீங்க போல அண்ணாச்சி... பாருங்க பதில் வேற போட்டுட்டாங்க!

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி...

    பதிலளிநீக்கு
  32. # வேங்கட ஸ்ரீனிவாசன்: நன்றிடா.... உன்னுடைய கருத்து தான் இப்போது வந்து விட்டதே....

    உன்னுடைய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  33. @ சென்னை பித்தன்: அதானே - ஒன்றால் இருந்தால் என்ன, மூன்றால் இருந்தால் என்ன?

    தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  34. # கோவை2தில்லி: :) வீட்டுக்குப் பின்னாடி பால்கனியிலிருந்தே வேப்பிலை பறிச்சிக்கலாம்.... :)

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

    பதிலளிநீக்கு
  35. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: வாழ்த்தியமைக்கு நன்றி.

    தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. # இராஜராஜேஸ்வரி: தங்களது வாழ்த்துகளுக்கும், தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  37. @ துளசி கோபால்: மூணுன்னா மூணு... அதானே...

    தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  38. # முனைவர். இரா. குணசீலன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவரே...

    பதிலளிநீக்கு
  39. @ மாதேவி: வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....