வியாழன், 29 செப்டம்பர், 2011

ஓடு…




நம்மள திடீர்னுஓடு…”ன்னு சொன்னா எப்படி ஓடுவோம்?  எந்தப் பக்கம் ஓடணுமோ அந்தப் பக்கத்தை நோக்கியே ஓடுவோம்.  அதுவே எங்க ஓடணுமோ அந்த இடத்துக்கு எதிர்ப்பக்கம் பார்த்து அதாவது பின்பக்கமாகவே உங்கள ஓடச் சொன்னா உங்களால முடியுமா?

இந்தியாவில் இந்த மாதிரி பின்பக்கமாகவே ஓட ஒருத்தரால தான் முடியும்.  தில்லியில் வசிக்கும் திரு பூரன் சந்த் [Shri Puran Chand] இந்தியாவின் முதல் ரெட்ரோ ரன்னர். அதாவது பின்பக்கமாகவே ஓடுபவர்.

நேற்று இவர் பின்பக்கமாக ஓடிக்கொண்டு இருந்தபோது அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  எதற்காக இப்படி செய்கிறார், எங்கு பணி புரிகிறார் என்றெல்லாம் கேட்க நினைத்து ஆரம்பித்த எனக்கு அவர் அந்த வேலையே கொடுக்கவில்லை.  தானாகவே முன்வந்து அவர் சொன்ன சில விஷயங்கள் தான் நீங்கள் படிக்கப் போவது

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் தற்போது பணி புரியும் இவர் ஒரு முன்னாள் என்.சி.சி கேடட், மற்றும் ராணுவ வீரர்.  2005-இல் பின்பக்கமாகவே நடக்கவும் ஓடவும் ஆரம்பித்த இவரை ஆரம்பத்தில் பார்த்து ஏளனம் செய்தவர்கள் தான் அதிகம் என்கிறார்

 ஆறு வருட கடும் பயிற்சி… தினமும் பளீரென அடிக்கும் வெய்யிலோ, அல்லது மழையோ, குளிரோ எதையும் பொருட்படுத்தாது ஓடுவார். வேலை நாட்களில் உணவு இடைவேளையில் பின்பக்கமாய் நடக்கும் இவரை தில்லியின் ராஜபாட்டையில் கண்ணுக்கு கூலிங் கிளாஸ், காதில் மொபைல் மூலம் கேட்கும் பாட்டு என நீங்கள் இவரைப் பார்க்க முடியும்.  சனி-ஞாயிறுகளில் நேரு பூங்காவில் இவரை நீங்கள் காண முடியும்


இந்த ஆறு வருடங்களில் இவர் தில்லியில் மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களில் இது போன்று ரெட்ரோ ரன்னிங் செய்து வருவதாகக் கூறினார்.   

வருடா வருடம் தில்லியில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் பின்பக்கமாக ஓடியே இவர் மொத்த தூரத்தையும் கடந்திருக்கிறார்.  கின்னஸ் புத்தகங்களிலும் இவர் பெயர் இடம் பெற்றிருப்பதாகச் சொல்கிறார். இந்தியாவின் சுற்றுப்புறச் சூழல், மாசுக்கட்டுப்பாடு ஆகியவற்றை சரிப்படுத்த முயல்வதாகவும் சொல்லும் இவரின் ஆசை என்ன தெரியுமா?

அடுத்த ஒலிம்பிக்ஸில்  ரெட்ரோ ரன்னிங் ரேஸ் இருந்தால், அதில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்டு இந்தியாவிற்கு ஒரு தங்கப் பதக்கம் வாங்கித்தருவது தான்.  அது  நிறைவேறட்டும் என வாழ்த்துவோம்.


மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி


28 கருத்துகள்:

  1. அட ..சூப்பர் வெங்கட்..

    அடிக்கடி இவரைப்பார்ப்போம்.. இவங்கப்பா சொல்வாங்க போய் விசாரின்னு .. நீங்க பேட்டி எடுத்திட்டீங்க..தேங்க்ஸ்.. அவரைப்பத்தி தெரிஞ்சுகிட்டொம்..

    பூரன் சந்த் க்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. @ முத்துலெட்சுமி: ரொம்ப நாளாவே கேட்கணும்னு நினைத்தாலும் இரண்டு நாள் முன் தான் கேட்டேன்... பத்து நிமிடம் பேசினோம்... :)

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  3. அட! பூரண் சந்த் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். இவரைப்பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி.

    நானும் பின்னோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன் (மனசில்) இதுக்கு ஏதும் போட்டி உண்டா?:-)))))

    பதிலளிநீக்கு
  4. # துளசி கோபால்: //நானும் பின்னோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன் (மனசில்) இதுக்கு ஏதும் போட்டி உண்டா?:-)))))//

    இந்த போட்டி இருந்தால் அதுக்கு பலத்த போட்டி இருக்கும்! மொத்த மக்கள் தொகையில் முக்கால் வாசி பேர் இப்படி மனதில் பின்னோக்கி ஓடிக்கொண்டு தான் இருப்பாங்க... :)

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பின்னோக்கி ஓடும்போது பின்னாடி பள்ளம், மேடு, வாகனம், மனிதர்கள், நாய்-பூனை வந்துச்சுன்னா எப்படி தெரியும் அவருக்கு?

    மேலும், நாம் பின்னோக்கி ஓட முயற்சி செய்யும்போது, ஒரு நேர்க்கோட்டில் ஓடாமல் கோணலாக ஓடுவோம். இவர் எப்படி நேர்க்கோட்டில்தான் ஓடுகிறாரா? (அப்படித்தானிருக்குமாயிருக்கும், வருடக்கணக்கில் அல்லவா ஓடுகிறார்).

    பதிலளிநீக்கு
  6. அடுத்த ஒலிம்பிக்ஸில் ரெட்ரோ ரன்னிங் ரேஸ் இருந்தால், அதில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்டு இந்தியாவிற்கு ஒரு தங்கப் பதக்கம் வாங்கித்தருவது தான். அது நிறைவேறட்டும் என வாழ்த்துவோம்.

    பூரன் சந்த் க்கு பூரண வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. 3 to 4 in Indli & 3 to 4 in Tamilmanam also. vgk

    அந்த சாதனையாளரின் கனவு நனவாகட்டும்.
    ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லட்டும்.
    நல்லதொரு பதிவுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. பூரண் சந்த்! நல்ல அறிமுகம். இவர்கள் ஏதோ ஒரு வகையில் நம்மை ஊக்குவிக்கிறார்கள். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். இவர் போன்றோர் நல்ல தூண்டுகோல்கள். நல்ல தகவலுக்கு நன்றி.

    (நானும் ஏதாவது உல்டாவா செய்து “venkatnagaraj.blogspot“-ல் வருகிறேனா இல்லையா என்று பாருங்கள்.)

    (நீ நேராக ஏதாவது செய்தாலே கடைசியில் உல்டாவாகத்தானேய்யா முடியுது - ன்னு அசரீரி கேட்குது.)

    பதிலளிநீக்கு
  9. @ ஹுசைனம்மா: எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. முதலில் கஷ்டமாக இருந்தாலும் இப்போது ஒன்றும் பிரச்சனை இல்லை என்கிறார். முன் பக்கமாக நடப்பது/ஓடுவது போலவே தான் பின் பக்கமும் என்கிறார்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. # இராஜராஜேஸ்வரி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நிச்சயம் அவரது முயற்சி வெற்றி பெறட்டும்!!

    பதிலளிநீக்கு
  12. # ஈஸ்வரன்: //நானும் ஏதாவது உல்டாவா செய்து “venkatnagaraj.blogspot“-ல் வருகிறேனா இல்லையா என்று பாருங்கள்.)//

    உங்களைத் தான் சில பதிவுகளில் இழுத்து விட்டேனே... நேரடியாக வரவேண்டுமா? :)))

    தங்களது தொடர் வருகைக்கும், மகிழ்ச்சி தரும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

    பதிலளிநீக்கு
  13. @ கே.பி.ஜனா: நிச்சயம் பிரமிப்பான விஷயம் தான் சார்....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்....

    பதிலளிநீக்கு
  14. பின்னோக்கி சென்று சமூக பிரச்சனைகளை முன்னோக்கி எடுத்தது செல்லும்
    பூரன் சந்த் அவர்களை வாழ்த்துவோம் ...

    நல்ல பகிர்வு ...

    பதிலளிநீக்கு
  15. # பத்மநாபன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  16. முன்னால ஓடறதுக்கே பலபேருக்கு முடியலை.. இவர் பின்னாலையே ஓடறாரே!! சூப்பர்... :-))

    பதிலளிநீக்கு
  17. @ RVS: //முன்னால ஓடறதுக்கே பலபேருக்கு முடியலை.. // அதானே...

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மைனரே....

    பதிலளிநீக்கு
  18. பூரன் சந்த்க்கு வாழ்த்துக்கள். நான் இப்போதான் முன்னாடியா நடக்க ஆரம்பிச்சிருக்கேன் தலைவரே! நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  19. # மோகன்ஜி: //நான் இப்போதான் முன்னாடியா நடக்க ஆரம்பிச்சிருக்கேன் தலைவரே!//

    :) இப்போது உடல்நிலை பரவாயில்லையா?

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன்ஜி!

    பதிலளிநீக்கு
  20. பின்னோக்கி நடந்தால், காலம் முன்னாடி செல்கிறதா அல்லது பின்னோக்கி செல்கிறதா என்பதை விசாரிக்கவில்லையா? வயது ஏறிக்கொண்டே செல்கிறதே அதுதான்.

    பதிலளிநீக்கு
  21. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: அடுத்த முறை பார்க்கும்போது கேட்டு உனக்குச் சொல்றேன் சீனு... :)

    உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா.

    பதிலளிநீக்கு
  22. நேரா ஓடவே கஷ்டம்.. இதுல இப்படியுமா.. அவருக்கு ஒரு சபாஷ் போட்டுட்டு ஓடிடறேன்..

    பதிலளிநீக்கு
  23. # ரிஷபன்: //நேரா ஓடவே கஷ்டம்.. இதுல இப்படியுமா..// ஆமாம்... நேரா ஓடறதே நமக்குக் கஷ்டம்...

    //அவருக்கு ஒரு சபாஷ் போட்டுட்டு ஓடிடறேன்..//

    நானும் இப்படி யோசித்துதான் ரொம்ப நாள் நகர்ந்து விட்டேன். எப்படியும் கேட்டுடறதுன்னு அன்னிக்குக் கேட்டேன்....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. முன்னோக்கிப் பின்னோடும் தனித்திறமையுள்ளவரை எங்கள் முன் கொணர்ந்ததற்கு நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  25. @ சென்னை பித்தன்: நிச்சயம் இதுவொரு தனித்திறமைதான் சார்....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய இந்த பகிர்வினை வலைச்சரத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சசிகலா. மூன்று வாரங்கள் பயணத்தில் இருந்ததால் உங்களுக்கு உடனே பதிலளிக்க முடியவில்லை. வருந்துகிறேன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....