சனி, 15 அக்டோபர், 2011

டிரைவரூட்டம்மா


[மனச்சுரங்கத்திலிருந்து…]


நெய்வேலியில் நாங்கள் இருந்த வீட்டின் அடுத்த வீட்டில் இருந்த பெண்மணிதான்  டிரைவரூட்டம்மா!

டிரைவரூட்டம்மா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரின் இயற்பெயர் ரோஸ் என்பது எங்களுக்கெல்லாம் நிறைய வருடங்கள் கழித்துத்தான் தெரியும்.  கடலூரில் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு அவரிடம் பலவித கஷ்டங்களை அனுபவித்து பின் அவரை விட்டு விலகிவந்து நெய்வேலியில் ஒரு டிரைவருக்கு இரண்டாம் தாரமாய் [முதலாம் மனைவி உயிருடன் இருக்கும்போதே] வாழ்க்கைப்பட்டவர்

இவர் வந்தவுடன், கணவன்இரண்டு மனைவிகள் இடையே போட்டி, சண்டை, சச்சரவு என நாட்கள் நகர, முதல் தாரம் சொந்த ஊரில் உள்ள நிலபுலன்களைக் கவனித்துக்கொள்ள சென்று விட இவரும் அவரின் கணவர் மட்டுமே.  ஆனாலும் எப்போது முதல் தாரம் வந்தாலும் வீட்டில் சண்டை தான்

பலப்பல புதிய வார்த்தைகள், எங்களுக்குத் தெரியாத வார்த்தைகள், வெளியே வந்து விழும்.  முதல் தாரமும் இரண்டாம் தாரமும் சேர்ந்து ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது தவிர, கணவரையும் திட்டுவார்கள். கண்ணாடி அணிந்து இருந்த அவரைடபரா கண்ணா, நாலு கண்ணாஎன்று திட்டுவார்கள்நாலு கண்ணு என்றாலும் புரிந்தது ஆனால் இன்று வரை புரியாத ஒன்று டபரா கண்!  அது என்ன டபராகாப்பி ஆற்றுவதற்குப் பயன்படுத்துவதோ?

என்னதான் அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டாலும் தனக்குக் குழந்தை இல்லாத காரணத்தினாலோ என்னவோ முதல் தாரத்தின் குழந்தைகளிடம் பாசமாகத்தான் இருப்பார்.  சொந்த ஊரிலேயே இருந்த அக்குழந்தைகள் வரும் போதெல்லாம் வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள் அந்த டிரைவரும், டிரைவரூட்டம்மாவும்

அவ்வப்போது அவர் கணவர் வேலை செய்து கொண்டு இருந்த சுரங்கத்திலிருக்கும் கேண்டீனில் இருந்து போண்டா, பஜ்ஜி என்று ஏதாவது வாங்கிக் கொண்டு வந்தால், “புஜ்ஜி இந்தா பஜ்ஜிஎன்று எல்லாக் குழந்தைகளையும் அழைத்து இந்த டிரைவரூட்டம்மா கொடுப்பார்


பள்ளி விடுமுறை என்றால் எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் கூட்டமாகக் கூடி விடுவோம்.  அவரும் வந்து விடுவார்.  தினமும் ஐந்து காய்கள் கொண்டு விளையாடும் தாயக்கட்டை, பன்னிரண்டு காய்கள் வைத்து விளையாடும்ஏரோப்ளேன்என்று சொல்லப்படும் இன்னொரு தாயக்கட்டை விளையாட்டு, பல்லாங்குழி என்று எல்லோருமாகச் சேர்ந்து விளையாடுவோம்.  சில சமயங்களில் எல்லா சிறுமிகளும் சேர்ந்து விளையாடும்போது அவரும் சேர்ந்து கொண்டுஐந்தாங்கல், ஏழாங்கல்என்று விளையாடுவார்அப்போது அவர் பாடும் நாட்டுப்புறப் பாட்டுகள் எல்லாமே வாவ் சொல்ல வைக்கும் ரகம்.

டிரைவர் வேலையில் இருக்கும் வரை அந்த வீட்டில் இருந்த அவர்கள் குடும்பம், வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் பக்கத்திலேயே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அங்கேயே வாழ்ந்து வந்தார்கள்.  சில காலத்திற்குப் பிறகு டிரைவர் இறந்து விடவே ரொம்பவே கஷ்டப்பட்டு, அவ்வப்போது யாராவது கொடுக்கும் பணத்தினைக் கொண்டு ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தார் இந்தம்மா

அந்த சமயத்தில் என் அக்காவின் திருமணம் நடக்க, தன்னால் ஆன உதவிகள் செய்தார்.  கைமுறுக்கு செய்வதற்கு பத்துபடி அரிசி இடிக்க வேண்டும் என என் அம்மாவின் அத்தை சொல்லவே, இவரும் சேர்ந்து இடித்துக் கொடுத்தார்.  அக்காவின் திருமணத்திற்கு எத்தனையோ பேர் வந்து மொய் எழுதி, பரிசுப் பொருட்கள் கொடுத்தாலும், டிரைவரூட்டம்மா கொடுத்த ஒரு சிறிய டவரா-டம்ளர் செட்டிற்கு மதிப்பு அதிகம் தான்! அக்காவிற்குக் கல்யாணம் ஆகி 21 வருடங்கள் ஆகிவிட்டாலும், இன்று வரை என் அக்கா வீட்டில் அந்த டவரா-டம்ளர் இருக்கிறது.

பணக் கஷ்டத்துடன் இருந்த வேளைகளில் கூட எங்களில் யாராவது ஊரிலிருந்து வந்தால், “ஏதாவது வாங்கிக்கோடா!” என்று தனது சேலை முந்தியில் முடிந்து வைத்திருந்த ஒரு கிழிந்த ஐந்து ரூபாயைத் தருவார்.  சில காலங்கள் கணவரின் முதல் தாரத்து மகளுடன் இருந்து கடைசி காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு, நோய்வாய்ப்பட்டு இறந்தார்

அச் சிறுவயதில்அவர் நல்லவர், கெட்டவர்என்று ஆராய்ந்து பார்க்கக் கூடிய பக்குவம் எங்களுக்கில்லைஎல்லோரிடமும் பழகுவது போலத்தான் பழகினோம்.  ஊரில் பலர் அவரைப் பற்றித் தப்பாக பேசினாலும் என்னால் என்னவோ அவரைத் தப்பானவராகப் பார்க்க முடியவில்லை.  அவர் சூழ்நிலைக் கைதியாகத் தான் இருந்திருப்பதாகத் தோன்றுகிறது இப்போதும்.

அவரைப் பற்றிய சின்னச் சின்ன விஷயங்கள் அவ்வப்போது நினைவில் வந்து போகும்போதும் என்னுள்அவர் நல்லவரா, கெட்டவராஎன்ற இந்த விவாதம் வந்தாலும் கடைசியில் ஜெயிப்பதுஅவர் நல்லவர்என்ற எண்ணமே!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

நன்றி:  ஏரோப்ளேன் தாயக்கட்டம் புகைப்படம் http://kavithavinpaarvaiyil.blogspot.com/2010/07/blog-post_28.html என்ற வலைப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.  அந்த வலைப்பூ உரிமையாளருக்கு நன்றி...

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரப் பகிர்வுகள்


38 கருத்துகள்:

  1. சூழ்நிலைக் கைதியாகத் தான் நிறையபேர் வாழ்க்கை. பகிர்வுக்குப்பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. @ இராஜராஜேஸ்வரி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  3. அவரைப் பற்றிய சின்னச் சின்ன விஷயங்கள் அவ்வப்போது நினைவில் வந்து போகும்போதும் என்னுள் ”அவர் நல்லவரா, கெட்டவரா” என்ற இந்த விவாதம் வந்தாலும் கடைசியில் ஜெயிப்பது ”அவர் நல்லவர்” என்ற எண்ணமே!//

    எல்லோரும் நல்லவரே.

    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான். எத்தனையோ பேரை விதி ஆட்டிவச்சு எங்கெங்கயோ கொண்டு போய் விட்டுருக்கு. இந்தம்மாவும் விதியின் கைப்பாவை:( வேற என்ன சொல்ல..........

    பதிலளிநீக்கு
  5. @ கோமதி அரசு: //எல்லோரும் நல்லவரே// நல்ல வாக்கு சொன்னீங்கம்மா...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  6. @ துளசி கோபால்: //இந்தம்மாவும் விதியின் கைப்பாவை... // ஆமாம் டீச்சர்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்....

    பதிலளிநீக்கு
  7. //அது என்ன டபரா – காப்பி ஆற்றுவதற்குப் பயன்படுத்துவதோ?//

    டம்ளரை விடவும் டபராவின் விட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். ஒரு டபராவுக்குள் டம்ளர் இருப்பதை மேலிருந்து நோக்கினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் டபரா கண்ணின் பொருள் விளங்கும்

    ஆதாரம்: ஹிஹிபீடியா

    பதிலளிநீக்கு
  8. நல்லவரா, கெட்டவரா என்பதை விட 'கிடைத்த வாழ்க்கையை ஏற்று கொண்டு வாழ தெரிந்த மனிதர்..."....<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>இன்னமும் இந்த சம்பவங்களை மறக்காமல் நினவு வைத்திருந்து பதிவு போட்டுள்ளீர்களே...நீங்கள் மாமனிதர்...

    பதிலளிநீக்கு
  9. @ சேட்டைக்காரன்: //ஆதாரம் ஹிஹிபீடியா!// இந்த பீடியா நல்லா இருக்கே சேட்டை....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை....

    பதிலளிநீக்கு
  10. @ அப்பாஜி: //நீங்கள் மாமனிதர்// அட கவுத்துட்டீங்களே... :)))))

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. // ”அவர் நல்லவரா, கெட்டவரா” என்ற இந்த விவாதம் வந்தாலும் கடைசியில் ஜெயிப்பது ”அவர் நல்லவர்” என்ற எண்ணமே!//

    அருமை.

    நல்ல நினைவலைகள்.

    பதிலளிநீக்கு
  12. @ ராம்வி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  13. ஏரோப்லான் தாயம் நெய்வேலியிலும் விளையாடுவீங்களா...சிறுவயது நினைவுகளைக் கிளறிய பதிவு.

    பதிலளிநீக்கு
  14. நினைவலைகளில் ட்ரைவரடரூட்டம்மா.....

    பதிலளிநீக்கு
  15. நல்ல நினைவலைகள்..
    சூழ்நிலைக்கைதி என்பதே.. சரி..

    பதிலளிநீக்கு
  16. தமிழ்மணம் 7

    டிரைவரூட்டம்மா கதைகளில் வரும் நல்லதொரு கதாபாத்திரம் போலத்தான். சூழ்நிலைக்கைதியே தான்.

    நல்லதொரு இனிய நினைவலைப் பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  17. @ கலாநேசன்: ஏரோப்ளேன் தாயம்... நெய்வெலியில் விளையாடுவோம்... விடுமுறை என்றால் அதுபாட்டு நேரம் காலம் தெரியாமல் விளையாடுவாங்க....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....

    பதிலளிநீக்கு
  18. @ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.....

    பதிலளிநீக்கு
  19. @ முத்துலெட்சுமி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. @ வை. கோபாலகிருஷ்ணன்: உண்மைதான் அவர்கள் ஒரு சூழ்நிலைக்கைதி....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சார்.....

    பதிலளிநீக்கு
  21. கேரக்டர் விவரித்த விதம் அருமை.
    தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  22. மனதில் அனுதாபத்தை ஏற்படுத்திய பதிவு!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  23. @ ரிஷபன்: பாராட்டுகள்... அதுவும் சிறுகதை எழுதுவதில் வித்தகரான உங்களிடம் இருந்து.. மிக்க மகிழ்ச்சி.

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. @ புலவர் சா. இராமாநுசம்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே....

    பதிலளிநீக்கு
  25. @ சென்னை பித்தன்: தங்களது வருகையும் கருத்தும் என்னை மகிழ்வித்தது ஐயா.....

    பதிலளிநீக்கு
  26. நதி மூலம் ரிஷி மூலம் பாக்கக் கூடாதுங்கறது இதைத்தானோ?

    பதிலளிநீக்கு
  27. @ ராஜி: //நதி மூலம் ரிஷி மூலம் பாக்கக் கூடாதுங்கறது இதைத்தானோ?// இதே... இதே...


    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. டிரைவருட்டம்மா நல்லவங்க தான் ... எல்லோரும் எல்லார்க்கும் நல்லவராகவும் முடியாது கெட்டவராகவும் முடியாது . உண்மை கதை சொன்னவிதம் நன்றாக இருந்தது ..

    பதிலளிநீக்கு
  29. @ பத்மநாபன்: டிரைவரூட்டம்மா நல்லவங்க தான்... ஆமாம்.

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. @ அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. நல்லவர் கெட்டவர் என்பது சொல்பவருக்கும் அந்த நபருக்கும் உள்ள உறவைப் பொருத்ததே. இதில் நாம் ஒருவரைப் பற்றித் தீர்மானிக்க நீதிபத்யா என்ன?
    ஒருவர் ந்ம்மிடம் நடந்து கொள்வதை வைத்தே அவர் நமக்கு நல்லவரா இல்லையா என்பதைத் தீர்மாணிக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  32. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: //ஒருவரைப் பற்றித் தீர்மானிக்க நீத்பதியா என்ன?// அதானே... என்னைப் பொறுத்தவரை அவர் நல்லவரே என்று சொன்னது என்னிடம் அவர் நடந்து கொண்டதை வைத்தே....

    உனது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிடா சீனு...

    பதிலளிநீக்கு
  33. எத்தனை பெண்களுக்கு இந்த மாதிரி வாழ்க்கை அமைகிறது.:(
    அதிலயும் அந்த அம்மா சந்தோஷமா இருக்கப் ப்ஆடுபட்டு இருக்கிறார்.

    யாருக்குமே யாரையும் ஜட்ஜ் செய்ய உரிமை இல்லை என்றுதான் தோன்றுகிறது.நல்லதொரு பகிர்வு.

    பதிலளிநீக்கு
  34. @ வல்லிசிம்ஹன்: நீங்கள் சொல்வது போல யாருக்குமே யாரையும் மதிப்பிட உரிமை இல்லை தான்...

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  35. @ DrPKandaswamyPhD: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....