வெள்ளி, 14 அக்டோபர், 2011

குரங்கு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?




குரங்கு உங்களை கடித்து விட்டால் வேறு வழியில்லை மருத்துவம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும். வேறு யாரையாவது கடித்திருந்தால் அவரிடமிருந்து பத்து பதினைந்து அடியாவது தள்ளி இருப்பது உசிதம்.

முதலில் கடிவாயை [கடி பட்ட இடத்தை] தண்ணீர் மற்றும் சோப் போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கடிபட்ட இடத்தில் மஞ்சள் பொடி ஆயின்மென்ட் போன்ற எதையும் போடக்கூடாது. அப்படி போடுவதினால் கிருமிகள் கடிவாயிலேயே சிறை செய்யப்பட்டு உங்களுக்கு தொல்லை தரக்கூடும். ரத்தம் நிறைய வராமல் இருக்கும் பட்சத்தில் கட்டு போடாமல் இருப்பது நலம். இந்த முதலுதவியை செய்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் சென்று மருத்துவரை நாடுவது மிகவும் முக்கியம்.

இந்த பதிவு எழுத காரணம் எனது அலுவலக நண்பர் திரு விஜயராகவன். அவர் சரியான நேரத்துக்கு அலுவலகம் வந்து போவார். ஒரு நாள் காலை எட்டே முக்கால் மணிக்கு பேருந்தில் இருந்து இறங்கி ஒரு சிகரெட் பிடித்தபடியே நடந்து வந்திருக்கிறார். அருகே உள்ள மரத்தில் ஒரு குரங்கு தன் சுற்றம் சூழ அளவளாவிக்கொண்டு இருந்திருக்கிறது. நண்பரும் சிகரெட்டை அனுபவித்துக்கொண்டே அந்த மரத்தின் பக்கத்தில் நடக்க, நெருப்பைக்கண்ட அந்த தாய்க் குரங்கு தாவி வந்து நண்பரின் தொடைப்பகுதியிலிருந்து அரை கிலோ சதையை எடுத்த மாதிரி கடித்துவிட்டு ஓட, வலியில் நண்பரும் அலறியபடிசாலையில் ஓட ஒரே களேபரம். விஷயம் தெரிந்து நானும் சக நண்பரும் விஜயராகவனுக்கு முதலுதவி அளித்து டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருக்கு ஒரு ஊசி போட்டு சில மருந்துகளும் கொடுத்தார்கள். மாதத்திற்கு ஒரு ஊசிவீதம் ஆறு மாதத்திற்கு போட வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, நண்பரை பார்க்கும்போதெல்லாம் அவரை கலாய்ப்பதே எங்களுக்கு வேலை. அவருக்குக் "குரங்காட்டி" என்ற நாமகரணமும் செய்து, குரங்கை பற்றியே ஏதாவது கேள்வி கேட்டு அவரை மடக்கிக் கொண்டிருப்போம். அவரும் எங்கே குரங்கினை பார்த்தாலும் " ஆஞ்சநேயா! நீ கடிக்கற அளவுக்கு நான் உன்னை என்ன பண்ணிட்டேன்? " என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இந்த பதிவினை எழுத காரணமாக இருந்த நண்பர் விஜயராகவனுக்கும் அவரைக் கடித்த திருவாளர் குரங்கிற்கும் எனது நன்றி.

நட்புடன்

வெங்கட்

பின் குறிப்பு:  இது ஒரு மீள்பதிவு…

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரம் பகிர்வுகள்


52 கருத்துகள்:

  1. தமிழ்மணத்தில் இணைத்து முதல் ஓட்டும் போட்டுவிட்டேன்.

    எனது பதிவுகளைத்தான் தமிழ்மணத்தில் இணைக்கமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. இந்த பதிவினை எழுத காரணமாக இருந்த நண்பர் விஜயராகவனுக்கும் அவரைக் கடித்த திருவாளர் குரங்கிற்கும் எனது நன்றி.

    ஒரு நடிகையைக்கூட குரங்கு கடித்ததாக கேள்வி.

    பதிலளிநீக்கு
  3. //குரங்கு உங்களை கடித்து விட்டால் வேறு வழியில்லை மருத்துவம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும்//

    அதுக்காவது மருந்திருக்கு! மனிசன் கடிச்சா மருந்தே கிடையாதாமே? :-)

    பதிலளிநீக்கு
  4. தமிழ்மணம் 3 to 4
    இண்ட்லி 1 to 2

    போதாதகாலம் எந்த ரூபத்திலெல்லாம் வருகிறது பாருங்கள். பாவம் அந்த உங்கள் நண்பர் விஜயராகவன்.
    vgk

    பதிலளிநீக்கு
  5. குரங்குக்கு யார் வைத்தியம் பார்த்தாங்க? நகைச்சுவை மிளிரும் பதிவு

    பதிலளிநீக்கு
  6. பாவங்க உங்க நண்பர்.படத்தில் உள்ள குரங்கு வாய மூடியிருந்தால் கூட ஏதோ சுமாரா இருந்திருக்கும்.இப்ப அந்த கொரங்கு கொரங்காட்டமே இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. @ இராஜராஜேஸ்வரி: தமிழ்மணத்தில் இணைத்தமைக்கு மிக்க நன்றி. சில நேரங்களில் இணைக்க முடிவதில்லை... :(

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. புதுசா யோசித்து ...சிக்சர் அடிக்கறீங்க...<<<<<>>>>>>>>
    (டாக்டர்...பக்கத்திலிருந்து தானே வைத்தியம் பார்த்தார்..:(((((((((((

    பதிலளிநீக்கு
  9. @ சேட்டைக்காரன்: //மனிசன் கடிச்சா மருந்தே கிடையாதாமே? :-)// அப்பா என்னா யோசனை உங்களுக்கு....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை.

    பதிலளிநீக்கு
  10. @ வை. கோபாலகிருஷ்ணன்: போதாத காலம்.. :) உண்மை...

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. @ ரிஷபன்: //குரங்குக்கு யார் வைத்தியம் பார்த்தாங்க?// :))) குரங்கு கிட்ட கேட்க சொல்லிடறேன் கடிபட்ட நண்பரிடம்... :))))

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: //இப்ப அந்த கொரங்கு கொரங்காட்டமே இருக்கு.// :))))

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. @ அப்பாஜி: //புதுசா யோசித்து ...சிக்சர் அடிக்கறீங்க...<<<<<>>>>>>>>
    (டாக்டர்...பக்கத்திலிருந்து தானே வைத்தியம் பார்த்தார்..:(((((((((((//

    :)))

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. குரங்கும் 'கடிக்குமா ?' என்று நினைத்தேன்

    :)

    பதிலளிநீக்கு
  15. @ சென்னை பித்தன்:

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. # கோவி. கண்ணன்: தங்களது முதல் வருகை! மிக்க மகிழ்ச்சி....

    தங்களது வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. நண்பருக்கு அந்த சமயத்தில் வெகு சோதனையாக இருந்திருக்கும்.... அதை தாண்டி இப்பொழுது அந்த சம்பவத்தை வைத்து சலிக்க சிரிக்கவைக்கிறார்... முதலுதவி பகிர்வுக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  18. @ பத்மநாபன்: அந்த சமயத்தில் மிகவும் கஷ்டப்பட்டு விட்டார்...

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. குரங்குகள் தூரத்லேந்து உறுமிக்கொண்டுதான் இருக்க்ம்னு நினைச்சேன் கடிக்கவௌம் செய்யுதா?

    பதிலளிநீக்கு
  20. ஒருமுறை குற்றாலம் சென்ற பொது ஒரு குரங்கு கூட்டம் துரத்தியது
    இப்போது நினைத்தாலும் கொஞ்சம் மிரட்டுகிறது.
    நட்சத்திரப் பதிவுகள் களைகட்டுது நண்பரே.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. உங்கள் நண்பர் சிகரெட் குடிச்சது ரொம்பத் தப்புங்க. அதைத்தான் அந்தக் குரங்கு சொல்லியிருக்குது.

    பதிலளிநீக்கு
  22. பயனுள்ள பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. @ லக்ஷ்மி: வாங்கம்மா... சில சமயம் கடிக்கவும் கடித்துவிடும்...

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  24. @ மகேந்திரன்: ஓ.. குரங்குத் துரத்தியதா? நிச்சயம் பயம் வரத்தான் செய்யும்....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  25. @ DrPKandasamyPhD: ஆமாங்! சிகரெட் பிடிச்சது தப்புன்னு நாங்க சொன்னா கேட்கலை... குரங்கு கடிச்சப்புறம் தான் புரிஞ்சிது அவனுக்கு....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  26. @ ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  27. @ மாய உலகம்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  28. குரங்குகளால் பெரியளவில் நாம் தொந்தரவை அனுபவிக்கிறோம். மகாபலிபுரத்தில் குழந்தைகள் கையில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை திடிரென்று பிடிங்கிவிடுவதை அடிக்கடி பார்க்கலாம்.
    நேற்று காரைக்காலில் குரங்கு துரத்தியதால் கல்லூரி மாணவி முதல் மாடியிலிருந்து விழுந்து இறந்துவிட்டதாக நீயூஸ் பார்த்தேன்.

    நாம் ஏன் மற்றவர்களுக்கு இடையூறுக் கொடுக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அதன் காரணம் இப்பொழுது புரிகிறது...
    முன்னோர் எவ்வழியோ அப்படித்தானே நாமும்.

    தமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. @ அமைதி அப்பா: குரங்குகளுக்கு நம்மைக் கண்டால் பயம். அவற்றை ஏதாவது செய்து விடுவோமோ என பயம் காட்டுகிறது. நம்மில் சிலர் அவற்றைத் துன்புறுத்தவும் செய்கிறார்கள்...

    //நாம் ஏன் மற்றவர்களுக்கு இடையூறுக் கொடுக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அதன் காரணம் இப்பொழுது புரிகிறது...
    முன்னோர் எவ்வழியோ அப்படித்தானே நாமும்.//

    ரசித்தேன்....

    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  30. சோளிங்கர் சோளிங்கர் நு ஒரு ஊர் இருக்கு, குரங்கு சேட்டை பாக்கனும்னா, அந்த ஆயிரம் படிக்கட்டை அமைதியா கடந்து பாருங்க...

    பதிலளிநீக்கு
  31. @ சூர்யஜீவா: சோளிங்கர்-ல் குரங்கு தொல்லைகள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்.. இன்னும் நேரில் போனதில்லை....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திரு சூர்யஜீவா....

    பதிலளிநீக்கு
  32. நல்ல அருமையான தகவல் நண்பா

    பதிலளிநீக்கு
  33. இப்போது வீதியில் செல்லும் போது சிகரெட் குடிக்காமல் போகிறாரா?

    குரங்குகள் கூட சிகரெட் கெடுதல் என்று பாடம் கற்று கொடுக்கிறது போலும்.

    பதிலளிநீக்கு
  34. @ வைரை சதிஷ்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சதிஷ்...

    பதிலளிநீக்கு
  35. @ கோமதி அரசு: தற்போது அந்த நண்பர் தில்லியில் இல்லைம்மா.....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  36. குரங்கு கடி வாங்கிய, நண்பருக்கும் குரங்குக்கும் வாழ்த்துக்கள் ஹா ஹா ஹா ஹா....!!!

    பதிலளிநீக்கு
  37. குரங்கு கடி கேள்விபட்டதாக நினைவில்லை. நல்ல தகவல். குரங்கை பார்த்தால் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  38. @ MANO நாஞ்சில் மனோ: அட வாழ்த்துகள் குரங்குக்குமா? :))

    தங்களது வருகைக்கும் கருத்து சொன்னமைக்கும் மிக்க நன்றி மனோ....

    பதிலளிநீக்கு
  39. @ ராம்வி: ஜாக்கிரதையாக இருங்கள்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.....

    பதிலளிநீக்கு
  40. "அரை கிலோ சதையை எடுத்த மாதிரி கடித்துவிட்டு" :((

    படத்திலிருக்கும் குரங்கார் பற்பசை விளம்பரத்துக்கு போஸ்ட் கொடுக்கிறார் போல :)

    பதிலளிநீக்கு
  41. @ மாதேவி: //படத்திலிருக்கும் குரங்கார் பற்பசை விளம்பரத்துக்கு போஸ்ட் கொடுக்கிறார் போல :)//

    அப்படியா சொல்றீங்க!!! :)))

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
  42. குரங்க திருப்பி கடிங்க. சரியாகிடும்

    பதிலளிநீக்கு
  43. குரங்குன்னா...
    ஆப்பிசைக்கும்..
    வாழப்பழம் தின்னும்..

    கடிக்கவும் கடிக்குமா ?

    பதிலளிநீக்கு
  44. நீங்க நன்றி சொன்ன குரங்கு இப்ப நல்லாருக்கா சார்?

    பதிலளிநீக்கு
  45. @ ஜெய்சங்கர் ஜெகந்நாதன்: தங்களது முதல் வருகை என்னை மகிழ்வித்தது...

    திரும்பி கடிச்சா குரங்கு செத்துடும்... :))))

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  46. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: //கடிக்கவும் கடிக்குமா ?// அடுத்த தடவை குரங்கைப் பார்த்தா சந்தேகம் கேட்டுடுவோம்! கடிக்கும் சார்...

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  47. @ ராஜி: குரங்கு சுற்றமும் நட்புமும் சூழ அமர்க்களமாக இருக்கிறது... நண்பரும் நன்றாக இருக்கிறார்... :)))

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
  48. சமீபத்தில்தான் குரங்கு கடியாலும் ரேபிஸ் வர வாய்ப்பிருக்குன்னு படித்தேன். கவனம்.

    பதிலளிநீக்கு
  49. @ ஹுசைனம்மா: ஆமாம் நாய்க்கடியை விட குரங்குக்கடியால் ரேபீஸ் வர அதிக வாய்ப்பிருக்கு...

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  50. எனக்கு பேய் பயம் கூட இல்லை (ஹூஹூம் wife-ஆன்னுலாம் கேக்கக் கூடாது; அது தப்பு). ஆனால், நாயைப் பார்த்தால் எப்பவுமே பயம். சில நாய் வளர்க்கும் நண்பர்கள் வீட்டுக்குச் சென்றால், நாயிடம் என்னைக் காட்டி இது ஒன்றும் செய்யாது என்றும், என்னிடம் அவன் சமத்து என்றும் கூறும் பொழுது வயிற்றில் புளி கரைத்து அது சாம்பாராகவே ஆகிவிடும்.
    விஜயராகவனைப் பற்றி ராம்குமார் அடிக்கும் “கமெண்ட்ஸ்” வரலாற்றில் பொரிக்கப்பட்டவை ஆயிற்றே.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....