எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 10, 2011

சிந்திய பால்…

அறிவில் சிறந்த  பெரியவர் ஒருவர் சொற்பொழிவாற்ற வந்திருந்தார்.  அவர் பேசுவதைக் கேட்க நிறைய பேர் திரண்டிருந்தனர்.    பெரியவர் ஒரு நகைச்சுவையான விஷயத்தினைச் சொன்னார்கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் கரவொலி எழுப்பி சிரித்து மகிழ்ந்தனர்கரவொலி அடங்கியது

ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு அதே நகைச்சுவையைத் திரும்பச் சொன்னார்திரும்பவும் கேட்ட பிறகு சிலர் சிரித்து மகிழ்ந்தனர்.  சிரிப்பொலி அடங்கிய பின்னர் மீண்டும் ஒரு முறை அதே நகைச்சுவையைச் சொன்னார். இப்போது  சிரித்து மகிழ்ந்தவர்கள்/கரவொலி எழுப்பியவர்கள் எண்ணிக்கை குறைந்தது.

திரும்பத் திரும்ப சொன்னார். கடைசியில் யாருமே சிரிக்கவில்லை. கூட்டத்தில் இருந்தவர்களுக்கு என்னமோ போல் இருந்ததுஎதற்காக  இவர் ஒரே நகைச்சுவையை திரும்பத் திரும்ப சொல்கிறார் என்பது புரியவில்லை.

அப்போது அந்தப் பெரியவர் கூட்டத்தினரைப் பார்த்து சிரித்தபடியே பேச ஆரம்பித்தார்.   ”நகைச்சுவையாக இருந்தாலும், ஒரே விஷயத்தினைக்  கேட்டு/நினைத்து நம்மால் சிரிக்க முடியாதபோது கஷ்டம் வந்தால் மட்டும் அதனை நினைத்து நினைத்து அழுவது எதற்காக, அப்படி அழுவதால் என்ன பலன்? அந்த நிகழ்விலிருந்து மீண்டு அடுத்தது என்ன என்ற எண்ணம் வரவேண்டும், முன்னே செல்ல வேண்டும்என்று கூட்டத்தில் சொன்னாராம். எத்தனை உண்மையான வார்த்தைகள்!

நம்மில் எத்தனை பேரால் இப்படி இருக்க முடிகிறதுஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் இருக்கிறது – ”சிந்திய பாலிற்க்காக அழுவதில் பயனில்லை”.  எத்தனை முறை படித்தாலும் நமக்கு அது மனதுக்குள் நிற்பதே இல்லைமீண்டும் மீண்டும் சோகக் கடலில் தத்தளிக்கிறோம்.

சிலர் இப்படி இருப்பதில்லைதனக்கு என்ன பிர்ச்சனை வந்தாலும் அதிலிருந்து மீண்டு வாழ்க்கையில் ஏதோ ஒன்றை சாதிக்கிறார்கள்என்னுடைய வார்த்தைகளால் விளக்க முடியாததை கீழே கொடுத்துள்ள இந்த காணொளி விளக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை


_


காணொளியைப் பார்த்தபின் ஒரு சொட்டு கண்ணீராவது இப்பூமியில் சிந்துவது திண்ணம்தோல்வியைக் கண்டு துவளாது, சோகத்தில் உழலாது, வெற்றிக்கனி பறிக்க அயராது முயற்சிப்போம்

நட்புடன்

வெங்கட்


பின்குறிப்புமுகப்புத்தகத்தில் நண்பர்கள் பகிர்ந்த இரு விஷயங்களைச் சேர்த்து எழுதிய பதிவு இதுஅங்கே பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றிபல சமயங்களில் தேவையில்லாத விஷயங்கள் வந்தாலும் சில நேரங்களில் இது போன்ற நல்ல விஷயங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வப்போது முகப்புத்தகத்தில் இருந்து விலக நினைத்தாலும் இன்னும் தொடர இதுவும் காரணம்… :)


64 comments:

 1. தமிழ்மணம் : 2
  //தோல்வியைக் கண்டு துவளாது, சோகத்தில் உழலாது, வெற்றிக்கனி பறிக்க அயராது முயற்சிப்போம். //

  நல்ல வார்த்தைகள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 3. சிந்திய பால் - அருமையான கருத்து.

  ReplyDelete
 4. @ கலாநேசன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்... நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது தளத்தில் உங்கள் கருத்து.... எல்லாம் நலம்தானே....

  ReplyDelete
 5. நல்ல ஒரு தத்துவத்தை கதையில் வந்தது அருமை

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. @ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 7. <<<<>>>>தவறு.......நகைசுவையை ...திரும்ப திரும்ப கேட்கும் போது...சிரிக்க முடியாமல் போகலாம்....அதனால்...உடலுக்கு ஒன்றும் கெடுதல் இல்லை...ஆனால்....தாங்க முடியாத கஷ்டம் என வரும் போது...அழுகை ஒன்று தான் தீர்வு......எனவே....அழுது தீர்த்து விட வேண்டும்....அப்போது தான்...மனம் லேசாகும்...உடல் ஆரோகியமாக இருக்கும்....இது எனது தாழ்மையான கருத்து...:((((((((((((

  ReplyDelete
 8. @ ஆமினா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 9. @ அப்பாஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. மாறுபட்ட தங்கள் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 10. அருமையானதொரு காணொளி, பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 11. @ அ. வேல்முருகன்: தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 12. சிந்திய பால்
  சிந்தனையைத் தூண்டிய பால்!


  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. @ புலவர் சா இராமாநுசம்: உங்களது கவிதியான கருத்துரைக்கு மிக்க நன்றி. உடல் நிலை இப்போது பரவாயில்லையா?

  ReplyDelete
 14. //தோல்வியைக் கண்டு துவளாது, சோகத்தில் உழலாது, வெற்றிக்கனி பறிக்க அயராது முயற்சிப்போம். //

  ஆம் வெங்கட்,முடியாதது என்று எதுவும் இல்லை.முயற்சி திருவினையாக்கும்.

  ReplyDelete
 15. @ ராம்வி: உண்மைதான் ராம்வி... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 16. //கஷ்டம் வந்தால் மட்டும் அதனை நினைத்து நினைத்து அழுவது எதற்காக, அப்படி அழுவதால் என்ன பலன்? அந்த நிகழ்விலிருந்து மீண்டு அடுத்தது என்ன என்ற எண்ணம் வரவேண்டும், முன்னே செல்ல வேண்டும்//

  நெத்தியில் அடித்தது போல உதாரணத்துடன் விளக்கப்பட்ட அருமையான போதனை. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
 17. @ சுந்தர்ஜி: உங்களது வருகை என்னை மகிழ்வித்தது...

  உங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுந்தர்ஜி!

  ReplyDelete
 18. ”நகைச்சுவையாக இருந்தாலும், ஒரே விஷயத்தினைக் கேட்டு/நினைத்து நம்மால் சிரிக்க முடியாதபோது கஷ்டம் வந்தால் மட்டும் அதனை நினைத்து நினைத்து அழுவது எதற்காக, அப்படி அழுவதால் என்ன பலன்? அந்த நிகழ்விலிருந்து மீண்டு அடுத்தது என்ன என்ற எண்ணம் வரவேண்டும், முன்னே செல்ல வேண்டும்” என்று கூட்டத்தில் சொன்னாராம். எத்தனை உண்மையான வார்த்தைகள்!/

  மிக ஆழ்ந்த பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 19. @ இராஜராஜேஸ்வரி: தங்களது தொடர் வருகைக்கும் பதிவினை ரசித்து பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 20. ஜூப்பர் இடுகை.. சிந்தினப்புறம் அழுவதால் பால் மறுபடியும் பாத்திரத்துக்கு வரவா போகுது?

  ReplyDelete
 21. @ அமைதிச்சாரல்: //சிந்தினப்புறம் அழுவதால் பால் மறுபடியும் பாத்திரத்துக்கு வரவா போகுது?// அதானே....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 22. சிற‌ப்பான காணொலியையும் தந்து அருமையான பதிவும் எழுதியிருக்கிறீர்கள்!
  ' வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை' என்ற பழைய பாடலின் வ‌ரிகள் தான் நினைவுக்கு வந்தது தங்கள் பதிவினைப்படித்தபோது!

  ReplyDelete
 23. @ மனோ சாமிநாதன்: // வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை' //

  ”மயக்கமா கலக்கமா” - சுமைதாங்கி படத்தில் P.B. ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் அருமையான பாடலல்லவா அது. எனக்கும் பிடித்த பாடல்..

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் இனிய பாடலை நினைவு படுத்தியதற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 24. நிஜமாகவே ஒரு உத்வேகத்தை கொடுக்கும் பதிவு..

  ReplyDelete
 25. @ வேடந்தாங்கல் - கருன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 26. கண்ணீர் மட்டுமல்ல உற்சாகமும் பெருகியது
  அருமையான காணொளி
  தங்கள் விளக்க உரையோடு சேர்ந்து படிக்க
  ஒரு புதிய பரிமாணமாக பரிமளித்தது
  நன்றி தொடர் வாழ்த்துக்கள்
  த.ம 9

  ReplyDelete
 27. @ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  தமிழ்மணம் வாக்கிற்கு நன்றி.

  ReplyDelete
 28. ////காணொளியைப் பார்த்தபின் ஒரு சொட்டு கண்ணீராவது இப்பூமியில் சிந்துவது திண்ணம். தோல்வியைக் கண்டு துவளாது, சோகத்தில் உழலாது, வெற்றிக்கனி பறிக்க அயராது முயற்சிப்போம்.////

  தன்நம்பிக்கை உள்ள மனிதன் எப்பவும் சோர்ந்து போவதில்லை

  ReplyDelete
 29. தன்னம்பிக்கைதான் வாழ்க்கை, அழுது புலம்பினால் ஒரு பயனும் இல்லைன்னு அருமையா விளக்கி இருக்கீங்க நண்பா...!!!

  ReplyDelete
 30. @ K.s.s.Rajh: உண்மை நண்பரே... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 31. @ MANO நாஞ்சில் மனோ: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

  ReplyDelete
 32. எது வெற்றி எது தோல்வி என்று அறியவே ஒரு விவாதம் வேண்டி இருக்கிறது

  ReplyDelete
 33. @ சூர்யஜீவா: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 34. வாசிக்கும்போது உறைக்கிற விஷயங்கள் தேவையின் போது மறந்து போகின்றன..
  மறக்காமல் முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டிய பதிவு.

  ReplyDelete
 35. நல்ல பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 36. வார்த்தைகள் ஒவ்வொன்றும்
  நெஞ்சுக்கு உரமும் மனதுக்கு ஊக்கமும்
  கொடுக்கவல்லதாய் உள்ளது...
  முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்..
  முயன்று செயல்புரிவோம்..
  வெற்றி மாலை சூடுவோம்..

  ReplyDelete
 37. சிந்திய பால் ... அருமையான கருத்து...பகிர்வுக்கு நன்றி வெங்கட்...

  ReplyDelete
 38. தோல்வியைக் கண்டு துவளாது, சோகத்தில் உழலாது, வெற்றிக்கனி பறிக்க அயராது முயற்சிப்போம்.

  எது வெற்றி எது தோல்வி என்று அறியவே ஒரு விவாதம் வேண்டி இருக்கிறது

  நல்ல பதிவு

  ReplyDelete
 39. @ ரிஷபன்: //மறக்காமல் முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டிய பதிவு.// :)))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 40. @ சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
 41. @ மகேந்திரன்: ஒவ்வொரு பதிவிற்கும் கவிதையாக கருத்து எழுதி ஊக்கமளிக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 42. @ ரெவெரி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 43. @ லக்ஷ்மி: //எது வெற்றி எது தோல்வி என்று அறியவே ஒரு விவாதம் வேண்டி இருக்கிறது // உண்மை தான்...

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  ReplyDelete
 44. ஒரு சொட்டு அல்ல . வழிந்தோடியது கண்ணீர்.
  அவர் ஆட்டத்தைவிட அவரின் சிரிப்பு , தன்னம்பிக்கை , உற்சாகம்
  அப்படியே என்னையும் தொற்றிக் கொண்டது . அபாரம்.
  நன்றி வெங்கட் பகிர்வுக்கு .

  ReplyDelete
 45. @ சிவகுமாரன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 46. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 47. @ மாய உலகம்: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 48. வெங்கட், சாதாரணமாகப் பகிர்ந்து கொள்ளப்படும் கவலைகள் கரைந்து போய்விடும் என்று கூறுவார்கள். ஆனால், கவலைகளை பகிர்ந்து கொள்கிறோமோ இல்லையோ துவண்டு போய்விடக் கூடாது என்ற உன் (இடுகையின்) கருத்து ஏற்கக் கூடியதே.

  நல்ல பதிவு.

  ReplyDelete
 49. எல்லோருமே சிரிச்சா அழகுதான். அதிலும் பல் இல்லாதவங்க சிரிச்சா ரொம்பவே அழகு.

  ReplyDelete
 50. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: //கவலைகளை பகிர்ந்து கொள்கிறோமோ இல்லையோ துவண்டு போய்விடக் கூடாது // உண்மை சீனு.

  உனது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 51. @ ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி... பல் இல்லாதவங்க சிரிச்சா ரொம்பவே அழகு... :)

  உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

  ReplyDelete
 52. நல்ல பகிர்வு வெங்கட்.

  ReplyDelete
 53. @ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி....

  ReplyDelete
 54. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 55. நல்ல தன்னம்பிக்கைப் பதிவு.

  ReplyDelete
 56. உற்சாக டானிக்காக ஒரு காணொளி.

  பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 57. பால் என்றவுடன் எதாவது அமலா பால் பற்றிய விஷயமாகும் என்று ஆவலுடன் ஓடி வந்தால், இப்படி ஏமாற்றிட்டீங்களே! போங்க சார்!

  ReplyDelete
 58. @ DrPKandaswamyPhD: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 59. @ புதுகைத் தென்றல்: வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ...

  ReplyDelete
 60. @ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: அமலா பால்! அது யாருங்க! :) எனக்குத் தெரிந்ததெல்லாம் ஆவின் பால் தான்!! :))))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 61. சிந்தனையைத் தூண்டும் கதை.கண்ணீரை வரவழைத்த வீடியோ கிளிப்பிங்.

  ReplyDelete
 62. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்தினைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....