எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 25, 2011

சொல்லுக சொல்லிற்...


சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

இந்த திருக்குறளுக்கு மு. வ. அவர்கள் தந்த பொருளுரை - சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.


நாம் சொல்லும் சொற்களில் மட்டுமல்ல, எழுதும் போதும் அதைப் படிப்பவர்களுக்கு ஏதாவது பயன் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான்.  இது வரை எழுதிய பதிவுகள் அப்படிப்பட்டவையாகவே  இருந்திருக்கும் என நம்புகிறேன். 

கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக இந்த வலைப்பூவில் என்னால் முடிந்த அளவிற்கு நல்ல விஷயங்களையே பகிர்ந்து கொள்ள முயன்றிருக்கிறேன். அதில் வெற்றி பெற்றிருக்கிறேனா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

அலுவலகம், வீடு என்ற இரண்டு பெரிய பொறுப்புகளுக்கு நடுவில் எனது எண்ணங்களுக்கு வடிகாலாக இந்த வலைப்பூவும் அதன் மூலம் கிடைக்கும் நட்பு வட்டமும் இருந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.  கிடைக்கும் நேரத்திலே சில பதிவுகள் எழுதி வந்ததில் இன்று இத்தனை பதிவுகள் எழுதி நிறைய நண்பர்கள், அக்டோபர் 10-16 தேதிகளில் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவர் என்று இந்த பயணம் சுகமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. 

கிடைக்கும் நேரத்தில் என்றவுடன் ஒரு வலைப்பக்கம் எனது மனக்கதவினைத் தட்டி “என்னை நினைவில் இல்லையா?” என்று கேட்கிறது.  அந்த வலைப்பக்கம் வேறு யாருடையதும் அல்ல, என் துணைவியுடையது.  நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து என்னுடைய பதிவுகளைப் படித்து, முதல் விமர்சனம் செய்து வந்த என் துணைவியும் தனக்கென்றே ஒரு வலைப்பூ ஆரம்பித்து எழுதி வருகிறார்.  அவர் எழுத ஆரம்பித்த பிறகு, எனக்கு கணினி கிடைக்கும் நேரம் குறைந்துவிட்டது என்று சொல்ல மாட்டேன்…..:) அது தான் மகளும் மனைவியுமாகச் சேர்ந்து ஏற்கனவே “வலைராஜா” என்று சொல்லிவிட்டார்களே….

”சரி எதுக்கு இந்த பீடிகை எல்லாம்!” என்று கேட்கும் வலைப்பூ உலக நட்பு வட்டத்திற்கு, மேலே சொன்ன திருக்குறள் எத்தனையாவது திருக்குறள் என்பது தெரிந்தால் புரிந்துவிடும். மேலே எழுதிருப்பது 200-வது குறள். இந்த பதிவு எனது 200-வது பதிவு.

இந்த 200-வது பதிவினை பதிவிடும் இந்த நேரத்தில், எனது இப்பயணத்தில் கூடவே பயணம் செய்த அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பயணத்தினைத் தொடங்கக் காரணமாக இருந்த பதிவர் திரு ரேகா ராகவன் அவர்களுக்கும், அவ்வப்போது திருத்தங்கள் சொல்லி என் எழுத்தினை மேம்படுத்திய பதிவர் மற்றும் எழுத்தாளர்  திரு கே.பி.ஜனார்த்தனன் அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 

பதிவுகள் தொடர்ந்து எழுத உற்சாகம் தரும் விதத்தில் பெரும்பாலான பதிவுகளுக்கு தங்களது கருத்தினைத் தொடர்ந்து பதிவு செய்து வரும் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றி.   

தொடர்ந்து சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.


73 comments:

 1. வள்ளுவர் சொன்ன குறள் போலவே தங்கள் பதிவுகள் அருமையும் பயனும் வாய்ந்தது.200 க்கு வாழ்த்துக்கள்.பயணம் இனிதே தொடரட்டும்.கூட வர்ற எங்களுக்கெல்லாம் இப்ப போலவே எப்பவும் நல்ல இடங்களை சுற்றிக் காட்டுங்க.

  பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 2. இருநூறாவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

  துணைவரும் துணைவிக்கும்,
  மனம் மகிழவைக்கும் மழ்லைக்கும் இனிய வாழ்த்துகள்...

  வாழ்க வளமுடன்!!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் வலை ராஜா :)

  ReplyDelete
 4. @ ராஜி: தங்களது உடனடி வருகைக்கும் இனிய கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 5. @ இராஜராஜேஸ்வரி: தங்களது மனமார்ந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 6. @ முத்துலெட்சுமி: //வலைராஜா//

  கிர்ர்.... நீங்களுமா :)

  தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.....

  ReplyDelete
 7. 200 வது பதிவுக்கு பாராட்டுகள் + வாழ்த்துக்கள். குறளுடன் இப்பதிவினை குறிப்பிட்டு சொன்னது வித்தியாசமாக இருக்கிறது.

  தங்கள் துணைவியாருக்கும் என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. நல்ல பொருத்தமான குறளைத் தேற்ந்தெடுத்து இருக்கிறீர்கள்
  நீங்கள் சொல்லிச் செல்லுவதெல்லாம் பயனுள்ள பதிவுகளே
  பயனுள்ள பதிவுகளாக 200 என்பது சாதாரண விஷயமில்லை
  தங்களுக்கும் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்
  தெரிவித்துக் கொள்கிறேன் தொடர்ந்து சந்திப்போம்
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 9. 200 வது பதிவை புதுமையாக சொல்லி இருக்குறீர்கள்.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. அட 200 வது பதிவிற்கு 200 வது குறளா? பொருத்தமாக உள்ளது.மேலும் பல நூறு பதிவுகள் தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. இரட்டைச் சதம் அடித்ததற்கு வாழ்த்துகள்.இன்னும் நின்று ஆடுங்கள்!

  ReplyDelete
 12. 200- வது பதிவுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல நூறுகள் தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் வெங்கட்,200 க்கு.

  அதை அழகான திருக்குறளோட சொல்லியிருப்பது சிறப்பு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. வாழ்த்துகள் .. 2000 பதிவு வர வாழ்த்துகள்
  வணக்கத்துடன் :
  ராஜா

  விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

  ReplyDelete
 15. தமிழ்மணம்: 5

  200 க்கு வாழ்த்துக்கள். மிகவும் பொருத்தமான குறள்.
  தங்களுக்கும், தங்கள் துணைவியாருக்கும், தங்கள் அன்பு மகளுக்கும் என் மனமார்ந்த ஆசிகள்.

  தொடர்ந்து எழுதுங்கள். அன்புடன் vgk

  ReplyDelete
 16. 200 க்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. 200 இன்னும் பல்கிப்பெருக வாழ்த்துகள் வலைராஜாவே :-))

  ReplyDelete
 18. 200 power 200 ஆக வளர வாழ்த்துகள் வெங்கட். :-)))

  சொல்லுக சொல்லிற்.... என்னை நினைச்சா பயமா இருக்கு. :-)

  ReplyDelete
 19. 200க்கு வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 20. 200வது பதிவிற்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். பல சுவாரசியமான பதிவுகளைத் தந்து எங்கள் மனசில் இடம் பிடித்து விட்டீர்கள். தொடரட்டும் தங்கள் வலைப் பயணம்

  ReplyDelete
 21. இருநூறு பல நூறாகி ஆயிரத்தைத் தொட வாழ்த்துகள்!

  ReplyDelete
 22. ''பதிவிடுக பதிவில் பயனுடைய'' என்றே இரு நூறு பதிவிட்ட தாங்கள் விரைவில் இருநூறு சதம் பதிவெழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. மோகன் குமார்November 25, 2011 at 7:29 PM

  Congrats for the 200th post Valai Raja !

  ReplyDelete
 24. @ கௌசல்யா: தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 25. @ ரமணி: தங்கள் போன்றவர்களின் தொடர்ந்த ஆதரவும் பாராட்டுதல்களுமே இந்த 200-க்குக் காரணம்...

  தங்களது ஆதரவிற்கும் கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 26. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க் நன்றி மாதவன்....

  ReplyDelete
 27. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது தொடர்ந்த வருகைக்கும், ஆதரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 28. @ சென்னை பித்தன்: ”நின்று ஆடுங்கள்!” அதான் எண்ணம்.... பார்க்கலாம்.....

  தங்களது தொடர் வருகைக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 29. @ லக்ஷ்மி: தங்களது தொடர்ந்த ஆதரவிற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 30. @ ராம்வி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 31. @ ”என் ராஜபாட்டை” ராஜா: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 32. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்கள் போன்றவர்களின் ஆதரவும் வாழ்த்துகளும் தான் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது...

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 33. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: மிக்க நன்றி சீனு....

  ReplyDelete
 34. @ காஞ்சனா ராதாகிருஷ்ணன்: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 35. @ அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 36. @ RVS: //சொல்லுக சொல்லிற்.... என்னை நினைச்சா பயமா இருக்கு. :-)//

  உங்கள் அளவு என்னால் எழுத முடியாது மைனரே... அதுதான் உண்மை.. நீங்கள் பலதிறமைகளை உள்ளடக்கியவர்...

  தங்களது தொடர் ஆதரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மைனரே...

  ReplyDelete
 37. ஆஹா ரெட்டை சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 38. @ புதுகைத் தென்றல்: தங்களது தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ...

  ReplyDelete
 39. @ ரிஷபன்: தங்களது தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சார். உங்கள் போன்றவர்களின் எழுத்துகள் தான் எனக்கு உதாரணம்....

  வாழ்த்திய உங்களது நல்லெண்ணத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 40. தங்களின் 200-வது பதிவுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 41. @ ரேகா ராகவன்: தாங்கள் தொடங்கி வைத்தது இன்று 200-ஆக வளர்ந்திருக்கிறது... எல்லா நன்றியும் உங்களுக்கே...

  ReplyDelete
 42. @ கே.பி. ஜனா: //''பதிவிடுக பதிவில் பயனுடைய''// இதுதான் உங்கள் டச்!

  தங்களது தொடர்ந்த ஆதரவும், வாழ்த்துகளும் என்னை மேலும் எழுதத் தூண்டும்....

  ReplyDelete
 43. @ மோகன் குமார்: மின்னஞ்சலில் தாங்கள் அனுப்பிய வாழ்த்துகளுக்கும் தங்களது தொடர்ந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி மோகன்....

  ReplyDelete
 44. @ துரை டேனியல்: தங்களது முதல் வருகை. மிக்க மகிழ்ச்சி நண்பரே...

  தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 45. @ MANO நாஞ்சில் மனோ: தங்களது தொடர் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 46. @ புலவர் சா இராமாநுசம்: தங்களது மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி புலவரே....

  ReplyDelete
 47. 1331க்கு இப்போவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.தாமதத்துக்கு ஒரு ஸாரி வெங்கட்.

  ReplyDelete
 48. நிலாமகள்November 26, 2011 at 5:22 PM

  அன்பின் சகோ...

  நலம்தானா? துணைவியார், ரோஷிணி மற்றும் பெற்றோர் உட்பட!

  தங்கள் இரு நூறாவது பதிவு வியப்பும் மகிழ்வும் தந்தது. வாழ்த்துகள்.

  இரு நூறுமே பயனுள்ள பதிவுகளே. மனச்சுரங்கத்திலிருந்து... கடந்து வந்ததை திரும்பிப் பார்க்கிறதென்றால், பயணக் கட்டுரைகள் எங்களையும் உங்கள் கண் மற்றும் கருத்து வழி அனுபவிக்க வைத்தது. எத்தனை மொழிகளின் வார்த்தைகளையாவது அறியத் தந்தீர்கள் எங்களுக்கும்!

  தினம் உங்களை சந்திக்கும் நெருங்கிய நட்பு போலவும், உடன் வாழுமொரு உறவு போலவும் அல்லவா உணர்கிறோம்! நிச்சயம் தங்கள் எல்லாச் சொல்லும் (பதிவும்) பயனுடையதாகவே இருந்தது. தழைக்கட்டும்!

  ஆதி கூறிய மழலை உலகின் மகத்துவம் பதிவும் கச்சிதமான அழகோடு இருந்தது.

  ReplyDelete
 49. @ சுந்தர்ஜி: தங்களது அன்பிற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சுந்தர்ஜி!

  ReplyDelete
 50. @ நிலாமகள்: தங்களது தொடர் ஆதரவிற்கும் மகிழ்ச்சியூட்டும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.....

  உங்கள் கதை சொல்லும் பாங்கு மிக அழகு.... அந்த அழகு இக்கருத்துரையிலும் தெரிகிறது....

  ReplyDelete
 51. வாழ்த்துக்கள் ....<<<<<>>>>>>>ஆம்...சொல்லி உள்ளீர்கள்!!...அத்தனை பூக்களுக்கும் ...மணம் இருப்பதில்லை. .....தங்களது வலைப்பூவில்....வாசம் உள்ளது..(நல்ல கருத்துக்கள் ).தொடருங்கள்...!!!

  ReplyDelete
 52. @ Ponne: தங்களது முதல் வருகையோ? தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 53. Dear Venkat
  I have started reading your blog. Nice keep it up.
  Vazhthukkal. All the best

  ReplyDelete
 54. 200வது பதிவிற்கு மனப்பூர்வமான வாழ்த்துகள் நண்பரே.

  ReplyDelete
 55. நம்பவே முடியவில்லை.. 200 பெரிய மைல்கல். உங்கள் ஆர்வத்துக்கும் வேகத்துக்கும் ஒரு அங்கீகாரம். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 56. @ விஜய்: தங்களது வருகைக்கும் தொடர்ந்து படிப்பதற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 57. @ மகேந்திரன்: தங்களது தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 58. @ அப்பாதுரை: என்னால் கூட நம்பமுடியவில்லை... :) தங்களது தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 59. கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக இந்த வலைப்பூவில் என்னால் முடிந்த அளவிற்கு நல்ல விஷயங்களையே பகிர்ந்து கொள்ள முயன்றிருக்கிறேன். அதில் வெற்றி பெற்றிருக்கிறேனா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்//

  இதில் என்னசந்தேகம் வெங்கட்?
  நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்.
  மேலும் மேலும் பயனுள்ள பதிவுகளை தர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 60. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 61. @ கோமதி அரசு: தங்கள் போன்றவர்களின் ஆதரவும் தொடர்ந்த ஊக்கமும் தான் இதற்குக் காரணம் அம்மா...

  தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 62. இருநூறுக்கு இனிய வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 63. 200 பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 64. @ புதியதென்றல்: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 65. @ ராமலக்ஷ்மி: வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 66. @ ராஜி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 67. இருநூறு பல்லாயிரமாக வளரட்டும்.

  நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 68. @ மாதேவி: தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 69. மனப்பூர்வமான வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்...

  ReplyDelete
 70. @ BalHanuman: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே.....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....