திங்கள், 5 டிசம்பர், 2011

ராய் ப்ரவீனின் – பாடலும் நடனமும்


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி - 22]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21) 


புந்தேலா ராஜாக்களில் ஒருவரான ராஜா இந்திரமணி அவர்கள் பதினேழாம் நூற்றாண்டின் பாதிகளில் ஓர்ச்சா நகரத்தினை ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம்.  அவர் இயல் இசை நடனத்தில் மிகுந்த நாட்டம் உடையவராக இருந்தாராம்.  எப்போதும் நிறைய இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அப்படி நடக்கும் நிகழ்ச்சிகளில் பாட்டு பாடி, நடனம் ஆடும் ஒரு அழகிய பெண்மணி தான் ராய் ப்ரவீன்.  அந்த ராஜாங்கத்திலேயே பாட்டு மட்டுமல்லாது நடனத்திலும் தலை சிறந்தவள்.  பாட்டு பாடி நடனம் ஆடும் ராய் ப்ரவீன் அழகிலும் குறைந்தவளல்ல.  அவள் மீது ராஜா இந்திரமணிக்கு ஆசை.  ராய் ப்ரவீனுக்கும் ராஜா மீது தீராத காதல். 

என்ன தான் காதலும் ஆசையும் இருந்தாலும் எல்லா ராஜாக்களைப் போல இவரும் தனது காதலியும் நடனம் ஆடுபவருமான ராய் ப்ரவீனை கல்யாணம் செய்து கொள்ளவில்லை.  ஆசை நாயகியாகத்தான் வைத்திருந்தார்.  நடனம், பாடல், காதல் என்று சென்று கொண்டிருந்த அந்த வாழ்வில் ஒரு திருப்பம். 

ராய் ப்ரவீன் அவர்களின் பாடல்-நடனம் ஆகியவற்றின் சிறப்பினால் வந்த புகழ் அவர்கள் நாட்டில் மட்டுமல்லாது தில்லியை ஆண்ட முகலாய மன்னரின் காதுகளையும் எட்டியது.  ராய் ப்ரவீனின் அழகு, அவளது குரலின் மேன்மை, நாட்டியமாடும் அழகு ஆகியவற்றைக் கேள்விப்பட்ட முகலாய் மன்னர் உடனே அவளை தில்லிக்கு அனுப்பி வைக்குமாறு ஓலை அனுப்பி விட்டார். 

முகலாய மன்னர்களின் ஆதரவு பெற்று ஆட்சி செய்த ராஜா இந்திரமணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.  முகலாய மன்னர் ஒரு பக்கம், ஆசை நாயகி மறுபக்கம் என இரண்டு பக்கங்களிலும் இழுக்கப்பட என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியிருந்தபோது, ராய் ப்ரவீன் ராஜாவிற்கு தைரியம் சொல்லி, ”என்னை அனுப்பி வையுங்கள், நான் சீக்கிரமே திரும்பி வருவேன்” என்று சொல்லி தில்லி கிளம்பி சென்றாள்.

முகலாய மன்னர் அரண்மணையில் ராய் ப்ரவீன் பாடல்-நடனத்திற்கு ஏற்பாடு செய்தார்.  முதல் பாடலிலேயே  மன்னரை மறைமுகமாக ”நாய்” என்று திட்டியபடி அவள் தைரியமாக பாடி நடனம் ஆட, மன்னரைச் சுற்றி இருக்கும் எல்லோருக்கும் அதிர்ச்சி.  மன்னர் நிச்சயம் மரண தண்டனை வழங்குவார் என அவர்கள் எதிர்பார்க்க, ஆனால் அவரோ எதற்காக இப்படி சொல்கிறாள் இந்தப் பெண் என்பதை  விசாரித்து, ராஜா இந்திரமணியின் மேல் கொண்ட காதலைத் தெரிந்து அவளை திரும்பவும் ஓர்ச்சா நகரத்திற்கே மரியாதை செய்து அனுப்பி வைக்கிறார். 

திரும்பவும் ராஜா இந்திரமணியின் சபையில் ராய் ப்ரவீனின் பாடலும் நடனமும் தொடர்கிறது.  கூடவே அவர்களின் காதலும்.  தனது காதல் தலைவிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் “ஆனந்த் மஹால்” இருக்கும் பெரிய புல்வெளியில் ஒரு இரண்டு அடுக்கு மாளிகையைக் கட்டி அதில் அவரை தங்க வைத்திருக்கிறார்.  அப்படிக் கட்டப்பட்ட மாளிகை தான் ராய் ப்ரவீன் மஹால்.

கீழே நாட்டியம் – பாடல் ஆகியவை நடத்த ஒரு பெரிய கூடமும், மேலே அழகிய கூடங்களும், பூமிக்குக் கீழே குளிர்ந்த தங்குமிடமும் அமைந்த கட்டிடமாகக் கட்டி தனது காதல் நாயகிக்காக கொடுத்து விட்டார் ராஜா இந்திரமணி. 

ஆனால் தற்போது இந்த மஹால் இருக்கும் நிலை பார்த்தால் மனதுக்குக் கஷ்டம் தான் மிச்சம்.  மாடுகள் அங்கே வளர்ந்திருக்கும் புற்களை மேய்ந்து கொண்டிருக்கிறது.  எங்கும் வௌவால் எச்சங்களின் நாற்றம்.  படிக்கட்டுகள் மூலம் தட்டுத் தடுமாறி ஏறி மேலே சென்று பார்த்தால் ஆங்காங்கே சிதிலமடைந்து கிடக்கிறது கட்டிடம். 

இந்த இடமா நடனமும் பாடலுமாக சந்தோஷமாக இருந்தது என்று எண்ணும்படி இருக்கிறது.  ஓர்ச்சா நகரம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டிடங்களின் நிலையும் இதுதான்.  ஒரு சில கட்டிடங்களை பராமரித்து வருகிறார்கள்.  


எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை இப்படி அழிவினை நோக்கிச் செல்ல விட்டுவிட்டார்களே!  நாங்கள் சென்றபோது இந்த இடத்திலும் சில விளம்பரப் படங்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.  அப்படத்தில் நடிக்க வந்தவர்களின் பின்னே தான் பெரும் கும்பல் ஓடியது  – வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்க அல்ல என்பதை நினைக்கும் போது வருத்தம்தான் மேலோங்கியது. 

அடுத்ததாக உங்களுக்குச் சொல்லப் போவது ராம் ராஜா மந்திர் பற்றி.  ஆனால் இந்தப் பகுதியில் அல்ல – அடுத்த பகுதியில்.  அதுவரை காத்திருங்கள்.

மீண்டும் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்.


43 கருத்துகள்:

  1. எத்தனை வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை இப்படி அழிவினை நோக்கிச் செல்ல விட்டுவிட்டார்களே!

    இதை படிக்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாய் உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. எத்தனை வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை இப்படி அழிவினை நோக்கிச் செல்ல விட்டுவிட்டார்களே!

    பதிலளிநீக்கு
  3. வரலாற்றுச் சிறப்பு பெற்ற நிறைய இடங்கள் எல்லாமே இப்படித்தான் கழிவிடங்களாக, ஆடு மாடு மேய்க்கும் இடங்களாக, தீய செயல்கள் நடைபெறும் இடங்களாக உருமாறியிருக்கின்றன. இந்த ப்ர‌வீண் மகாலும் அவைகளில் ஒன்று போலும்!!
    ஆனால் அதைப்பற்றிய கதையையும் அந்த புகைப்படத்தையும் தாங்கிய‌ உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக இருக்கின்றது!!

    பதிலளிநீக்கு
  4. வரலாற்றுச் சிறப்பு மிக்க எத்தனையோ இடங்கள்

    இப்படித் தான் பல அழிந்து வருகின்றன!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  5. அழகான ஒரு வரலாற்று சிறப்பு பற்றி இங்கே பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    இது போல் பெருமைகள் பல அழிந்துகொண்டு வருகின்றன, இதனை பாதுக்காக்க வேண்டும் என்ற அக்கறை ஏனோ யாருக்கும் வரவில்லை...

    இத்தகைய இடத்தை பற்றிய உங்களின் ஆதங்கம் புரிகிறது.

    நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ராஜா இந்திர மணி,ராய் ப்ரவீன் பற்றிய அருமையான வரலற்றுத்தகவல் தெரிந்து கொண்டேன்.

    வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பது வருந்தத்தக்கது.

    பதிலளிநீக்கு
  7. வரலாற்றுச் சிறப்பு மிக்க எத்தனையோ இடங்கள்

    இப்படித் தான் பல அழிந்து வருகின்றன!

    பதிலளிநீக்கு
  8. அருமையான வரலாற்று தகவல்கள் பாஸ் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. அந்தப் பெண்மணியின் தீரம் சிலிர்க்க வைக்கிறது! நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  10. வரலாற்று பதிவுகள், வரலாற்று பயணங்கள், எங்களையும் குஷி படுத்திட்டே இருக்கு உங்கள் பிரயாணங்கள்...!!!

    பதிலளிநீக்கு
  11. இது மாதிரியான வரலாற்று புராதன சின்னங்களை சின்னாபின்னப் படுத்தும் எண்ணங்கள் எப்போது மாறும்.

    அருமையான பதிவு அன்பரே

    பதிலளிநீக்கு
  12. மேல மேலப் புதிதாகக் கட்டிடங்கள் கட்டச் செலவழிக்கும் காசில் கொஞ்சமாவது புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பதில் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. @ கோமதி அரசு: ஆமாம்மா... மனதுக்குக் கஷ்டம் தான்...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. @ மனோ சாமிநாதன்: //வரலாற்றுச் சிறப்பு பெற்ற நிறைய இடங்கள் எல்லாமே இப்படித்தான் கழிவிடங்களாக, ஆடு மாடு மேய்க்கும் இடங்களாக, தீய செயல்கள் நடைபெறும் இடங்களாக உருமாறியிருக்கின்றன. // உண்மைதான்..

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  16. @ புலவர் சா. இராமாநுசம்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. @ கௌசல்யா: தங்களது வருகைக்கும் நல்ல கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. @ ராம்வி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
  19. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் பதிவினைப் படித்து கருத்துரை எழுதியமைக்கும் மிக்க நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  20. @ K.s.s.Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  21. @ ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  22. @ கே.பி. ஜனா: ஆமாம்... அந்தப் பெண் மிகவும் தைரியசாலிதான்....

    பதிலளிநீக்கு
  23. @ MANO நாஞ்சில் மனோ: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  24. @ A.R. ராஜகோபாலன்: உண்மை நண்பரே... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. @ திண்டுக்கல் தனபாலன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  26. @ வல்லிசிம்ஹன்: //மேல மேலப் புதிதாகக் கட்டிடங்கள் கட்டச் செலவழிக்கும் காசில் கொஞ்சமாவது புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பதில் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.// சரியாச் சொன்னீங்க!

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. ராஜா இந்திரமணியின் மேல் கொண்ட காதலைத் தெரிந்து அவளை திரும்பவும் ஓர்ச்சா நகரத்திற்கே மரியாதை செய்து அனுப்பி வைக்கிறார்.

    ஹப்பா.. என்ன துணிச்சல் அந்தப் பெண்ணுக்கு. அதை விடவும் மரியாதை ராஜா மேல். அவளை மரியாதையுடன் திருப்பி அனுப்பினாரே..

    பதிலளிநீக்கு
  28. @ ரிஷபன்: அதான்.. இரண்டு பேருமே பாராட்டுக்குரியவர்கள்....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வரலாற்றுச் சிறப்புமிக்க எத்தனையோ இடங்கள்
    இப்படித் தான் பல அழிந்து வருகின்றன...அருமையான பதிவு வெங்கட்...

    பதிலளிநீக்கு
  30. @ ரெவெரி: உண்மை நண்பரே... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. @ துரைடேனியல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  32. @ ரிஷவன்: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே... உங்கள் பக்கத்திற்கும் வருகிறேன்....

    பதிலளிநீக்கு
  33. //எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை இப்படி அழிவினை நோக்கிச் செல்ல விட்டுவிட்டார்களே! //
    உண்மையிலேயே மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்.மக்கள் மட்டுமல்ல; அரசுகளும் தேவையான கவனம் செலுத்துவதில்லை!
    (என் தவறைப் புரிந்து கொண்டீர்கள்!நன்றி.)

    பதிலளிநீக்கு
  34. @ சென்னை பித்தன்: //உண்மையிலேயே மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்.மக்கள் மட்டுமல்ல; அரசுகளும் தேவையான கவனம் செலுத்துவதில்லை!// உண்மை. எப்போது சரியாகும் என்பது பெரிய கேள்விக்குறி....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.


    //(என் தவறைப் புரிந்து கொண்டீர்கள்!நன்றி.)// :))))

    பதிலளிநீக்கு
  35. மஹாலுக்கு பின் ஒரு காதலியின் கதை .. துணிச்சலான பெண்..

    பதிலளிநீக்கு
  36. @ முத்துலெட்சுமி: உண்மை... பல நூறு வருடங்களுக்கு முன் இவ்வளவு துணிச்சல் இருந்தது கண்டு மகிழ்ந்தேன்..

    உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  37. நல்ல பகிர்வு.

    ஆமா..உங்க மகளுக்கென்று தனி வலைப்பூவை சுப்சாப்பா வச்சிருக்கீங்க போல.இப்பதான் பார்த்தேன்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  38. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    மகள் பிளாக் - மகள் வரைந்த படங்களைச் சேர்த்து வைப்பதற்கு என சில மாதங்கள் முன் ஆரம்பித்தது. :)

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....