எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, January 28, 2012

BEATING THE RETREAT - A MUSICAL TREAT
ஜனவரி-26  அன்று நமது குடியரசுதினம் என்பது எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் இதற்கான கொண்டாட்டங்கள் முடிவடைவது எந்த நிகழ்ச்சியுடன் என்பது நம்மில் பலபேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பலர் அந்த நிகழ்ச்சியினை பார்த்திருப்பீர்களா என்பதும் சந்தேகமே. 

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்திலிருந்து மூன்றாம் நாளான 29-ஆம் தேதி நடக்கும் “BEATING THE RETREAT” என்ற நிகழ்ச்சியோடு தான் குடியரசு தினக் கொண்டாட்டங்கள் முடிவடையும்.  நிகழ்ச்சி நடைபெறும் இடம் ”விஜய் சௌக்” [Vijay Chowk].  இந்த இடம் குடியரசுத்தலைவர் மாளிகையிலிருந்து தொடங்கும் ராஜபாட்டையில் நார்த் ப்ளாக், சௌத் ப்ளாக் தாண்டியவுடன் வரும் இடம்.  நிகழ்ச்சி குடியரசு தலைவர் தலைமையில் சுமார் இரண்டு மணி நேரம் நடக்கும்.  

கொடியேற்றத்துடன் துவங்கி, பின்னர் முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவரின் அனுமதியோடு, இந்தியாவின் மூன்று படைகளிலும் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட 16-20 பேண்ட் வாத்தியக் குழுக்கள் பல்வேறு பாடல்களை இசைக்க அற்புதமான மாலைப் பொழுதாக இருக்கும்.  முடிவில் தேசிய கீதம் பாடி, குடியரசுத் தலைவரின் அனுமதியுடன் கொடி இறக்கப்படும்.  அதன் தொடர்ச்சியாக சுற்றிலும் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகை, பாராளுமன்ற கட்டிடம், நம் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றக்கூடிய விஷயங்களை முடிவு செய்யும் சௌத் ப்ளாக், நார்த் ப்ளாக் கட்டிடங்கள் ஆகிய அனைத்திலும் ஒரே சமயத்தில் அலங்கார விளக்குகள் ஒளிரும்.  மாலை இருளில் இந்தக் காட்சி அற்புதமாய் இருக்கும். 
வருடா வருடம் தூர்தர்ஷன் இந்த நிகழ்ச்சியினை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  இந்த வருடமும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும்.  அப்படிப் பார்க்க முடியாதவர்கள்/பார்க்காதவர்கள் சென்ற வருடங்களில் நடந்த நிகழ்ச்சியைக் காண விரும்பினால் YOUTUBE-ல் இருக்கிறது.  2011-ல் நடந்ததன் காணொளிக்கா சுட்டி இங்கே.  சற்றே நீளமான 1 மணி 22 நிமிடத்திற்கு மேல்] இந்த காணொளியை நேரம் இருக்கும் போது பாருங்கள்.  இசையைக் கேட்டும், அந்த நிகழ்ச்சியைக் கண்டும் இன்புறுங்கள். மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்…

வெங்கட்.

புது தில்லி


படங்கள்:  கூகிளாண்டவருக்கு நன்றி!

28 comments:

 1. சௌத் ப்ளாக், நார்த் ப்ளாக் கட்டிடங்கள் ஆகிய அனைத்திலும் ஒரே சமயத்தில் அலங்கார விளக்குகள் ஒளிரும். மாலை இருளில் இந்தக் காட்சி அற்புதமாய் இருக்கும்.

  அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. @ இராஜராஜேஸ்வரி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 3. //பாராளுமன்ற கட்டிடம், நம் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றக்கூடிய விஷயங்களை முடிவு செய்யும் சௌத் ப்ளாக், நார்த் ப்ளாக் கட்டிடங்கள் ஆகிய அனைத்திலும் ஒரே சமயத்தில் அலங்கார விளக்குகள் ஒளிரும். மாலை இருளில் இந்தக் காட்சி அற்புதமாய் இருக்கும்.//

  தாங்கள் காட்டியுள்ள படத்திலேயே அவை அற்புதமாக உள்ளன. இவற்றை அலங்கார விளக்குகள் ஏதும் இல்லாமல் நேரில் பார்த்து வியப்படைந்துள்ளேன்.

  ReplyDelete
 4. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 5. நினைவு படுத்தியதற்கு நன்றி. உங்கள் பதிவுகள் மிகவும் சுவாரசியமாக உள்ளன. நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது.

  நன்றி.

  ReplyDelete
 6. நான் முடிந்தவரை இந்நிகழச்சியை பார்க்க தவறியதே இல்லை.குடியரசு தின அணி வகுப்பைவிட இந்நிகழ்ச்சியை நான் விரும்பிப் பார்ப்பேன்.

  நல்ல தகவல் பதிவு வெங்கட்,நன்றி பக்ரிவுக்கு.

  ReplyDelete
 7. @ வெற்றிமகள்: உங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. பதிவுகள் உங்களுக்கு பயன் தரும் வகையில் இருப்பது குறித்து மகிழ்ச்சி...

  தொடர்ந்து வாருங்கள்...

  ReplyDelete
 8. @ ராம்வி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. எனக்கும் குடியரசு தின நிகழ்ச்சிகளை விட இந்த நிகழ்ச்சிகள் பிடிக்கும்....

  ReplyDelete
 9. நான் இதுவரை நேரில் கண்டதில்லை நண்பரே..
  என்னையும் காண வைத்தமைக்கு
  நன்றிகள் பல...

  ReplyDelete
 10. @ மகேந்திரன்: இந்த முறை தூர்தர்ஷனில் முடிந்தால் பாருங்கள் நண்பரே....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 11. நினைவு படுத்தியதுக்கு நன்றி..

  ReplyDelete
 12. @ அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்....

  ReplyDelete
 13. நேரில் நிகழ்ச்சி பார்த்தால் நல்லாயிருக்கும்.

  ஒரு மணிக்கும் மேல் ஓடும் காணொளி பார்த்தால் பர்ஸ் பழுத்துடும் :))

  ReplyDelete
 14. @ மோகன் குமார்: உண்மை நேரில் பார்த்தால் நன்றாகத் தான் இருக்கும். நாளை நடக்கும் நேரடி ஒளிபரப்பு தூர்தர்ஷனில் காண்பிப்பார்கள். டிவியில் பார்க்க முடிந்தால் பாருங்கள்...

  ReplyDelete
 15. நானும் இதுவரை இந்நிகழ்ச்சியை முழுவதும் பார்த்ததில்லை.டீவியில் பார்க்க முயற்சிக்கிறேன்

  ReplyDelete
 16. நல்ல பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 17. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி. இன்று முடிந்தால் தொலைக்காட்சியில் பாருங்கள்...

  ReplyDelete
 18. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்.

  ReplyDelete
 19. @ ரத்னவேல் நடராஜன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 20. சௌத் ப்ளாக், நார்த் ப்ளாக் கட்டிடங்கள் ஆகிய அனைத்திலும் ஒரே சமயத்தில் அலங்கார விளக்குகள் ஒளிரும். மாலை இருளில் இந்தக் காட்சி அற்புதமாய் இருக்கும்.

  உங்கள் பதிவால் நாங்களும் கண்டு களித்தோம்.

  ReplyDelete
 21. புது தகவல்- நன்றி
  காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 22. நேரில் காண அற்புதமான உணர்வைத் தரும் நிகழ்வு. சில வருடங்கள் முன்பு சென்றிருந்த போது தெரியாமல் கொண்டு சென்ற பந்துமுனைப் பேனாவைப் பிடுங்கிவிட்டார்கள், பாதுகாப்பு காரணம் காட்டி.

  ReplyDelete
 23. @ ரிஷபன்: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 24. @ சேஷாத்ரி.ஈ.எஸ்.: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

  ReplyDelete
 25. @ ஈஸ்வரன்: நீங்கள் பந்து முனைப் பேனாவினைச் சொல்கிறீர்கள் - சாதாரண பிளாஸ்டிக் சீப் வைத்திருந்தேன் ஒரு பத்து - பதினைந்து வருடம் முன்பு - அதைக் கூட பிடுங்கிப் போட்டு விட்டார்கள்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.

  ReplyDelete
 26. நேரில் பார்த்தால் நல்லாயிருக்கும்...அருமையான பகிர்வு... பாராட்டுக்கள் வெங்கட்...

  ReplyDelete
 27. @ ரெவெரி: நேரில் பார்த்தால் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும் ரெவெரி...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....