செவ்வாய், 10 ஜனவரி, 2012

எங்கோ மணம் வீசுதே…


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-26]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25) 



காலையிலேயே எழுந்து விட்டதால் எங்கள் தங்குமிடத்தின் மிக அருகிலேயே பேத்வா நதிக்கரையில் அமைந்திருக்கும் புந்தேலா ராஜ குடும்பத்தினருக்கான சத்ரிகளைப் பார்க்க நானும், இன்னும் மூன்று நண்பர்களும் சேர்ந்து கிளம்பினோம். 

வெளியே வந்தால் யார் மேல் என்ன கோபமோ தெரியவில்லை பேத்வா நேற்றை விட இன்னும் அதிக ஆக்ரோஷத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறாள்.   அன்றைய தினம் ராம்ராஜா மந்திரில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் இருக்கிறதாம். அதனால் சுற்றுப்புறக் கிராமத்தில் இருந்தெல்லாம் நிறைய மக்கள் தத்தமது குடும்பத்தினருடன் வந்து ஆங்காங்கே தங்கியிருக்கிறார்கள். 

சரி நதிக்கரைக்குச் செல்லலாம் என மக்கள் கூட்டத்தில் நாங்களும் முட்டி மோதிச் சென்றால், செல்லும் போதே ஒரு வித நாற்றம் நாசியை எட்டியது.  முந்தைய நாள் இரவில் நடனம் பார்த்தபோது தூரத்தே வீசிய நாற்றம் இப்போது அருகினில். பூச்சி தான் நாற்றம் பரப்பும் எனச் சொன்ன தங்குமிட நிர்வாகி சொன்னது பொய் என சிறிது நேரத்தில் புரிந்து கொண்டோம்.

பேத்வா நதிக்கரை ஓரம் முழுவதும் மனித எச்சங்கள்…. பூச்சித் தொல்லைக்கு எதுவுமே செய்யாத நிர்வாகம் இந்த மனிதர்களுக்கும் எந்தவித ஏற்பாடுகளும் செய்யவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாயிற்று.  நதிவரை சென்று கை-கால்களையாவது நனைக்க வேண்டும் என்ற எண்ணமே அகன்றது.  எனவே அங்கிருந்து விரைந்து வெளியே வந்து விட்டோம்.

வெளியே வரவும் கூட மக்கள் வெள்ள அலையைக் கடந்துதான் வர வேண்டியிருந்தது.  தெருவெங்கும் ஆங்காங்கே மக்கள் கிடைத்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.  காலைக் கடன்கள் முடித்து பேத்வா நதியில் குளித்து, உடை மாற்றி, அலங்காரங்கள் செய்து கொண்டு இருந்தனர். 



நாங்கள் நால்வரும் ஒரு வழியாக சத்ரிகள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  பெரிய பெரிய கட்டிடங்களாக இருந்தன இந்த சத்ரிகள்.  மொத்தம் 14 கட்டிடங்கள் இருக்கின்றன இங்கே.  அவற்றில் பெரும்பாலானவை பல்வேறு நிலையில் சேதங்களுடன் கண்டது மனதிற்கு வருத்தமாய் இருந்தது.  ஷிவ்புரியில் நாங்கள் கண்ட ராஜா-ராணி குடைகள் பகுதியில் சொல்லி இருந்த சத்ரிகள் போலில்லாது இங்கே சுத்தமாய் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. 

இந்தியாவிற்கு அதுவும் குறிப்பாய் மத்தியப்பிரதேசத்திற்கு வரும் வெளி நாட்டு பிரயாணிகள் ஏராளம். காரணம் அங்கிருக்கும் கஜுராஹோ. இந்த கஜுராஹோ செல்லும் வழியில் ஓர்ச்சா இருப்பதால் அந்த வெளிநாட்டு பிரயாணிகளில் பெரும்பாலானவர்களும் இந்திய பிரயாணிகளில் சிலரும் அங்கு வரும்போது அவற்றால் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டோ அல்லது வேறு வகையிலோ இந்த கட்டிடங்களை பராமரித்தால் இன்னமும் நிறைய பிரயாணிகளை ஈர்க்க முடியும்.



அதுவும் வெளிநாட்டுப் பிரயாணிகளிடம் இருந்து இவர்கள் டாலர்களில் வசூலிக்கும் தொகைக்கு நிச்சயமாய் ஏதாவது நல்லது செய்ய முடியும்.  சாதாரணமாய் இந்திய சுற்றுலாப் பயணிகளிடம் 10-20ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பவர்கள்  வெளிநாட்டவர்களிடம் 300 ரூபாய் வாங்கும்போது நிச்சயம் இந்த இடங்களை நல்லவிதமாய் பராமரிப்பது சாத்தியம் என நினைக்கிறேன்.  நீங்க என்ன நினைக்கறீங்க!

இந்த நினைவுகளோடு தங்குமிடம் திரும்பினோம்.  மற்றவர்களும் எழுந்து தயாராகி வரவே காலை உணவு முடித்து ஓர்ச்சாவிலிருந்து எங்களின் கடைசி இலக்கான ஜான்சி நோக்கிய பயணத்தினை ஆரம்பித்தோம்.  ஜான்சி நகரத்தில் நாங்கள் பார்த்த இடம் பற்றிய பகிர்வு அடுத்த பகுதியில்.

மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்
வெங்கட்.

டிஸ்கி:  அடுத்த பகுதியில் இத்தொடர் முடியும்….  :) அடுத்த பகுதியில் வேறு ஒரு அறிவிப்பு காத்திருக்கிறது…. :)  காத்திருங்கள்

49 கருத்துகள்:

  1. சாதாரணமாய் இந்திய சுற்றுலாப் பயணிகளிடம் 10-20ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பவர்கள் வெளிநாட்டவர்களிடம் 300 ரூபாய் வாங்கும்போது நிச்சயம் இந்த இடங்களை நல்லவிதமாய் பராமரிப்பது சாத்தியம் என நினைக்கிறேன்.

    சிறப்பாக பராமரிக்காமல் பாழாகவிட்டுவிட்டு பிறகு வருந்தினால் என்ன பயன்!!

    பதிலளிநீக்கு
  2. நிறைய இடங்களில் இப்படித்தான் பராமரிப்பு நல்ல விதமாய் இருப்பதில்லை. வெளி நாட்டில் வசிப்பதால் சுத்தம், நல்ல பராமரிப்பு இவைகளை அடிக்கடி பார்த்து விட்டு, இந்தியாவில் இது போன்ற முக்கிய இடங்களில் பராமரிப்பின்றி சுத்தமின்றி இருப்பதைப்பார்க்கும்போது மனசுக்கு மிகவும் வருத்தமாயிருக்கும்!

    நுங்கும் நுரையுமாய் நீல‌ வ‌ண்ண‌மாய் ஆறும் அத‌ன் பின்ன‌ணியில் க‌ட்ட‌ங்க‌ளும் கோவில்க‌ளும் அழ‌கோ அழ‌கு!! நீங்க‌ள் எடுத்த‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் என்றால் அத‌ற்கு த‌னியாக‌ ஒரு பாராட்டு!!

    பதிலளிநீக்கு
  3. //வெளிநாட்டவர்களிடம் 300 ரூபாய் வாங்கும்போது நிச்சயம் இந்த இடங்களை நல்லவிதமாய் பராமரிப்பது சாத்தியம் என நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கறீங்க!//
    உண்மைதான் வெங்கட்.நன்றாக பராமரிக்கலாம்.

    அழகிய படங்களுடன் மனதை கவரும் பதிவு.

    பதிலளிநீக்கு
  4. இதுபோன்று பல சுற்றுலாப்பயணிகள் வரும் இடங்களை நன்கு சுத்தமாகப்பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமே. அவ்வாறு செய்தால் தான் நம் நாட்டைப் பற்றி வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு ஒரு நல்ல எண்ணமும் நல்ல அபிப்ராயமும் ஏற்படும். வருமானத்திற்கா பஞ்சம். சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்ற நல்ல மனம் மட்டுமே வேண்டும்.
    தமிழ்மணம்: 3

    பதிலளிநீக்கு
  5. படங்கள் யாவும் சூப்பர். பாராட்டுக்கள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
  6. படங்களும் பதிவும் நல்லா இருக்கு. இப்படி டூரிஸ்ட் வர இடங்களிலாவது நல்லா பராம்ரிக்கலாம் நாம முகம் சுளிப்பதுபோல்த்தானே எல்லாரும் சுளிப்பாங்க.

    பதிலளிநீக்கு
  7. நிச்சயமாக நல்லா பராமரித்தால் இந்த மாதிரி இடத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும்..பார்க்க அழகான இடமா இருக்கு..

    பதிலளிநீக்கு
  8. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
    வாழ்த்துக்கள்...

    அழகிய படங்களுடன் மனதை கவரும் பதிவு வெங்கட்...

    பதிலளிநீக்கு
  9. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.....

    பதிலளிநீக்கு
  10. @ மனோ சாமிநாதன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. @ ராம்வி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி....

    பதிலளிநீக்கு
  12. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  13. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.....

    பதிலளிநீக்கு
  14. @ முத்துலெட்சுமி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி....

    பதிலளிநீக்கு
  15. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களது வருகை.... எல்லாம் நலம்தானே....

    பதிலளிநீக்கு
  16. Very true..

    For the amount they collect, they must maitain good atmosphere & everything must be good.

    பதிலளிநீக்கு
  17. அருமையான தலைப்பு என்றாலும் படிக்கும் போது நம்மவர்களின் பொறுப்பற்ற தன்மையையும், சகிப்பு தன்மையையும் நினைத்து வேதனைப் படாமல் இருக்க முடியவில்லை,

    பதிலளிநீக்கு
  18. ஏன் இந்திய மக்கள் தங்கள் காலைக்கடன்களை இவ்வாறு கழிக்கிறாரகள்? இதற்கு மாற்றே கிடையாதா?

    பதிலளிநீக்கு
  19. படத்தில் அந்த் நதியையும் கட்டிடத்தையும் பார்க்க
    பரவசமாக இருந்தது
    அதையே நீங்க்கள் சொல்வது போல மனதுக்கும் பிடித்த இடமாக
    தூய்மையான இடமாகப் பராமரிக்க முயலலாம்
    அடுத்த சிறப்புத் தொடர் குறித்த அறிவிப்பையும்
    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
    மனம் கவர்ந்த பதிவு
    இனிய பொங்கள் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
    த.ம 6

    பதிலளிநீக்கு
  20. 10-20ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பவர்கள் வெளிநாட்டவர்களிடம் 300 ரூபாய் வாங்கும்போது நிச்சயம் இந்த இடங்களை நல்லவிதமாய் பராமரிப்பது சாத்தியம் என நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கறீங்க!//

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன் வெங்கட் சுற்றுலா துறைக்கு தனியாக கேபினட் அமைச்சர் இருந்தால் தான் பழமையான இடங்களை நன்கு பாராமரிக்க முடியும். சுற்றுலா துறை மேலும் சீர் அடைய வேண்டும். அரசு கவனித்தால் நல்லது.
    மக்கள் பொது இடங்களில் அசுத்தம் செய்யாமல் இருக்கும் நாகரீகத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
    அதற்கும் அரசு வசதி செய்து தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  21. சுவாரஸ்யம் தொடருங்கள் பாஸ்

    பதிலளிநீக்கு
  22. மக்களின் மனவளம் மாறினால் மட்டுமே நாடு
    சுத்தமாகும்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  23. வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளைப் பராமரிப்பதில், சுற்றுலாத் துறையைச் சீரமைப்பதில், நாம் இன்னும் பல நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாப் பகுதியாக இருப்பது ஆக்ராவும், தாஜ்மஹாலும் தான். ஆனால், அதைச் சுற்றியுள்ள பகுதியின் பராமரிப்பிலேயே கவனக் குறைவுகள் பல.

    பதிலளிநீக்கு
  24. INCREDIBLE INDIA அப்படின்னு இப்பத்தான் ஆரம்பிச்சிருகாங்க. நம்ம சுற்றாலத்துறையும் நல்ல பராமரிப்பு செய்யணும் இல்லைன்னு சொல்லலை. அதைவிட மக்கள் மனதில் சுத்தமா வெச்சுக்கணும்னு ஒரு எண்ணம் வரணும். வெளிநாட்டுக்கு போனா குப்பை போட தயங்கற நம்ம மக்கள் நம்ம நாட்டில் கண்ட இடத்தில் குப்பை போட தயங்குவதில்லை. நான் ஒரு ஆள் போடறதுல்ல ஒண்ணும் ஆவதில்லைன்னு தான் நினைக்கறாங்களேத் தவிர நான் போடுவதை தவிர்த்தா நல்லதுன்னு நினைக்கணும். இப்படி ஒவ்வருவரும் நினைக்க ஆரம்பிச்சா அப்புறம் சுத்தமா இருக்கும். மத்த பராமரிப்புக்களை சுற்றுலாத்துறை செய்யலாம், செய்ய வேண்டும்.

    இது என்னோட கருத்து

    பதிலளிநீக்கு
  25. நதியின் புகைப்படங்களை காணும்போது இயற்கையின் அழகை வியக்கத் தோன்றுகிறது. அந்த இயற்கை அழகு, மனிதனின் இயற்கை உபாதையால் எப்படி சீரழிந்து கிடக்கிறது என்று வருத்தப்பட வேண்டியிருக்கிறது.

    (பூச்சிகளே!அநியாயமாக உங்களை நான் சந்தேகப் பட்டுவிட்டேனே என்று வருந்தியிருப்பீர்களே!)

    பதிலளிநீக்கு
  26. யார் எக்கேடு கெட்டாலென்ன‌... ந‌ம் வேலை முடிந்தால் ச‌ரியென்ற‌ சுய‌ந‌ல‌ அல‌ட்சிய‌ பாவ‌னை ப‌ல‌ரிட‌ம். அரசும் க‌வ‌ன‌மெடுக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் இது. க‌ல்லா ரொம்பினால் போதுமென்றிருந்தால் என்ன‌ செய்வ‌து? ப‌ய‌ண‌ அனுப‌வ‌ங்க‌ளில் இப்ப‌டியான‌ ச‌ங்க‌ட‌ங்க‌ளையும் ச‌ந்திக்க‌ நேர்ந்துவிடுகின்ற‌ன‌.

    பதிலளிநீக்கு
  27. //நீங்க என்ன நினைக்கறீங்க!//
    வேறென்ன நினைக்க முடியும்?இதேதான்!

    பதிலளிநீக்கு
  28. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: உண்மை நண்பரே.... பராமரிப்பு நன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்தான்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்...

    பதிலளிநீக்கு
  29. @ ஏ.ஆர். ராஜகோபாலன்: //அருமையான தலைப்பு என்றாலும் படிக்கும் போது நம்மவர்களின் பொறுப்பற்ற தன்மையையும், சகிப்பு தன்மையையும் நினைத்து வேதனைப் படாமல் இருக்க முடியவில்லை,// உண்மை... வேதனை தான் நண்பரே....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுகும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. @ பழனி. கந்தசாமி: மாற்று ஏற்பாடுகள் போதிய அளவில் செய்வதில்லை... இத்தனை மக்கள் வருவார்கள் என்று தெரியும்போது அதற்குத்தகுந்த தற்காலிக ஏற்பாடுகள் செய்யத் தவறிவிடுகிறார்கள்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  31. @ ரமணி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், பொங்கல் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  32. @ ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  33. @ கோமதி அரசு: //சுற்றுலா துறை மேலும் சீர் அடைய வேண்டும். அரசு கவனித்தால் நல்லது.
    மக்கள் பொது இடங்களில் அசுத்தம் செய்யாமல் இருக்கும் நாகரீகத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
    அதற்கும் அரசு வசதி செய்து தர வேண்டும்.// நல்ல யோசனைகள் அம்மா.... செய்யத்தான் மனது வேண்டும்....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  34. @ K.s.s. Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  35. @ புலவர் சா. இராமாநுசம்: //மக்களின் மனவளம் மாறினால் மட்டுமே நாடு சுத்தமாகும்!// மிக மிக உண்மை புலவரே....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: ஆக்ராவும் தாஜ்மகாலும் பல சமயங்களில் அழ வைத்து விடுகிறது சுற்றியிருக்கும் அசுத்தத்தினால்.... உண்மை சீனு.

    உன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா...

    பதிலளிநீக்கு
  37. @ புதுகைத் தென்றல்: //அதைவிட மக்கள் மனதில் சுத்தமா வெச்சுக்கணும்னு ஒரு எண்ணம் வரணும். // மக்கள், அரசு என இரு தரப்பினரும் சேர்ந்து சுத்தம் வளர்த்தால் ரொம்ப நல்லது சகோ....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  38. @ ஈஸ்வரன்: இயற்கையின் அழகும் இயற்கையின் உபாதையும்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

    பதிலளிநீக்கு
  39. @ நிலாமகள்: //யார் எக்கேடு கெட்டாலென்ன‌... ந‌ம் வேலை முடிந்தால் ச‌ரியென்ற‌ சுய‌ந‌ல‌ அல‌ட்சிய‌ பாவ‌னை ப‌ல‌ரிட‌ம். அரசும் க‌வ‌ன‌மெடுக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் இது.// சரியாகச் சொன்னீர்கள் சகோ....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  40. @ துரை டேனியல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  41. @ சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  42. @ சித்ரா: தங்களது வருகைக்கும் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா....

    பதிலளிநீக்கு
  43. @ கே. பி. ஜனா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.....

    பதிலளிநீக்கு
  44. நதிக்கரையும் கட்டிடங்களும் ரொம்ப அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  45. @ மாதேவி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....