புதன், 14 மார்ச், 2012

அழகிகளின் அணிவகுப்பு...



சென்ற புதனன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள அர்ஜூன் அரங்கில் ஒரு நிகழ்ச்சி – வரிசையாக அழகிகள் வந்து செல்லும் அணிவகுப்பு நடைபெற்றது.  மிகவும் விமரிசையாக நடந்த இந்த விழாவில், ஹரியானா மாநில முதல்வர் திரு பூபேந்தர் சிங் ஹூடா மற்றும் இந்திய அரசின் விவசாயத் துறை அமைச்சர் திரு ஷரத் பவார் ஆகியோர் பங்கேற்று விழாவிற்கு தலைமை தாங்கினர்.

விழாவில் நடந்த ஒவ்வொரு அழகியும் கறுப்பாக இருந்தாலும், கண்ணைப் பறிக்கும் அழகு…  ”கறுப்பே அழகு காந்தலே ருசி” என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன? 

விழாவினைப் பற்றிப் பேசிய திரு ஹூடா,  அணிவகுப்பில் கலந்து கொண்ட அழகிகளை அவர்களின் மேனி அழகில் மயங்கி “கறுப்புத் தங்கம்” என வர்ணித்தார். 

ஒரு அழகி நடந்தாலே மனதைப் பறிகொடுக்கும் ஆண்கள், எழுபது அழகிகள் தொடர்ந்து நடை பழகினால் சும்மாவா இருப்பார்கள்…  ஒரே விசில் சத்தம் தான் போங்க.  அம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்த  அழகிகள் கலந்து கொண்டனர்.  பரிசுத் தொகையாக மொத்தம் ரூபாய் எட்டு கோடியே இருபத்தி இரண்டு லட்சம் வழங்கப்பட்டது.

என்ன ஒரே அழகி, அழகி எனச் சொல்லிட்டே இருக்கீங்க, ஆனா ஒரு புகைப்படம் கண்ல காட்டமாட்டேன்னு அடம் பிடிக்கிறேன்னு கேட்கும் நண்பர்களுக்காக  கீழே ஒரு புகைப்படம்…

..

..

..

..

..

.. 

..



என்ன அவசரம்…
..

..

..

..


..

...


[பட உதவி: கூகிள்]

என்ன பார்த்தீங்களா? எவ்வளவு அழகு இல்லையா?

அட அடிக்க வராதீங்க நண்பர்களே... ஹரியானாவில் முரா இன எருமைமாடுகளின் அணிவகுப்பு நடந்தது. அதில் தான் இத்தனை அமர்க்களமும்.  ஒரு நாளைக்கு இருபது முதல் இருபத்தி ஏழு லிட்டர் வரை பால் கொடுக்கும் இந்த வகை எருமை மாடுகளை பிரபலப் படுத்தும் நோக்கத்துடன் இந்த அழகிகள் அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

இப்பல்லாம் எல்லாத்துக்கும் இப்படி ஃபேஷன் ஷோ நடத்த ஆரம்பிச்சுட்டாங்கன்னு எல்லோரும் தெரிஞ்சுக்கத் தான் இந்தப் பதிவு.   

ஜே.கே குழுமமும், ஹரியானா மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையும் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருந்ததாம் ஜிண்ட் மாநகரத்தில். அணிவகுத்த மாடுகளுடன் அவற்றின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனராம்…

இது எப்படி இருக்கு?

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

51 கருத்துகள்:

  1. போஸ்ட் பேரை பார்த்தவுடன் நினைச்சேன் . இப்படிதான் ஏதாவது இருக்கும்னு ..

    பதிலளிநீக்கு
  2. @ எல்.கே.: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.....

    பதிலளிநீக்கு
  3. ”கறுப்பே அழகு காந்தலே ருசி”

    அட்டகாசமான அழகிகளின் அணிவகுப்பை அமர்க்களமாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. பரிசு பெற்ற கருப்புத் தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. எருமை அழகி! ஆகா!
    அருமை அழகி!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. //ஒரு நாளைக்கு இருபது முதல் இருபத்தி ஏழு லிட்டர் வரை பால் கொடுக்கும் //

    20(litre)*32(cost/l) = Rs.640 ---
    my god.. 19200 / month income..

    How much it costs..? (side business!!)

    பதிலளிநீக்கு
  7. ”கறுப்பே அழகு காந்தலே ருசி”

    அட்டகாசமான அழகிகளின் அணிவகுப்பை அமர்க்களமாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. ஐயையோ இது வேறயா..அவ்வ்வ்வ்வ்வ்.....

    பதிலளிநீக்கு
  9. வற்றாத மடியுடன், அனைவருக்கு நிறைய பால் கொடுத்து உதவும் இந்த அழகிகளின் அணிவகுப்பை நான் மிகவும் ரஸித்தேன். அழகிய பகிர்வுக்கு நன்றி.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. அழகான அழகிப் போட்டி
    தேர்ந்தெடுக்கப்பட்ட கிளியோபாட்ராவிற்கு
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  11. இப்பல்லாம் எல்லாத்துக்கும் இப்படி ஃபேஷன் ஷோ நடத்த ஆரம்பிச்சுட்டாங்கன்னு எல்லோரும் தெரிஞ்சுக்கத் தான் இந்தப் பதிவு.


    Thaankala...

    பதிலளிநீக்கு
  12. என்ன ஒரே அழகி, அழகி எனச் சொல்லிட்டே இருக்கீங்க, ஆனா ஒரு புகைப்படம் கண்ல காட்டமாட்டேன்னு அடம் பிடிக்கிறேன்னு கேட்கும் நண்பர்களுக்காக கீழே ஒரு புகைப்படம்//சந்தேகத்துடன் ஸ்க்ரால் பண்ணினால்..ஹி... ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  13. சொன்ன அழகு சொக்கவைத்தது
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  14. :) பொறுமையும் அழகும் சேர்ந்து இருக்குது ..

    பதிலளிநீக்கு
  15. ஹா ஹா !

    மாதவன் கணக்கிலே புலி. உடனே மன கணக்கு போட ஆரம்பிச்சிட்டார் ! தம்பி மாதவா ! வைசாகில் மாடு வளர்க்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  16. அழகி போட்டியில கலந்துகிட்ட அழகி போட்டோலாம் போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். ம்ம்ம் நாங்க குடுத்து வச்சது அவ்வளவுதான் போல

    பதிலளிநீக்கு
  17. எருமையின் பெருமைபற்றி அருமையாக சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். இது தெரியாம நம்ம ஊருல டெல்லி எருமை! டெல்லி எருமை! ன்னு திட்டிக்கிட்டு இருக்காங்க. என்னத்த சொல்லி, என்னத்த செய்ய.

    பதிலளிநீக்கு
  18. அவர்கள் அழகர்கள் அல்லவா வெங்கட் ....?

    பதிலளிநீக்கு
  19. நானும் ஆர்வமா தான் இருந்தேன் சார் .. கடைசில இப்படி ஆகிபோச்சே ..
    சரிங்க சார் அடுத்த அழகி போட்டிக்கு முன்கூட்டியே சொல்லிடுங்க

    பதிலளிநீக்கு
  20. இங்கு பூனை நடை இல்லை!எருமை நடைதான்!

    பதிலளிநீக்கு
  21. எருமையான... ச்சே, அருமையான பதிவு! என்னமோன்னு நினைச்சா... என்னமோ சொல்லி அசத்திட்டிங்க போங்க!

    பதிலளிநீக்கு
  22. ஆண்டாள் கூட எருமைச்சிறுவீடு என்று பாட்டுல சொல்லி இருப்பாங்க.. பசுவை சொல்லாம ஏன் எருமையை சொன்னாங்களாம்?:) ஏன்னா கருப்புதான் அவளுக்குப்பிடிச்ச கலரு அது மாலவன் கலரு! பதிவு அருமை!

    பதிலளிநீக்கு
  23. நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டார்களே.. தலைமை ஏற்ற சரத் பவாருக்கு 'மகாராஷ்டிரா அழகி' என்ற பட்டத்தை கொடுத்திருக்கலாம். எப்படியும் செய்ய வேண்டிய எந்த வேலையும் செய்வதில்லை. எருமை மாட்டு மேல் மழை பெய்தது போல், விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் எனக்கென்ன என்று கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் கவனம் வைத்திருக்கும் அவருக்கு இது ஒரு நல்ல பாடமாக இருந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
  24. @ ராமலக்ஷ்மி: பதிவினை ரசித்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  25. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  27. @ புலவர் சா இராமாநுசம்:


    //எருமை அழகி! ஆகா!
    அருமை அழகி!// :))))

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  28. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: முரா இனத்தினைச் சேர்ந்த மாடுகள் ஒன்றரை லட்சம் வரை விற்கின்றன. கூடுதல் தகவல் - இங்கே கண்ணெதிரே கறந்து தரும், கலப்படமில்லாத பால் 40 ரூபாய்....

    நீங்கள் கணக்கில் புலி என்று மோகனும் சொல்லிட்டார்... அதனால நீங்க கணக்கு போட்டுச் சொல்லுங்க [ஏன்னா நான் கணக்கில் எலி!]

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. @ லக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், பதிவினை ரசித்து பாராட்டியமைக்கும் மிக்க நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  30. @ MANO நாஞ்சில் மனோ: //ஐயையோ இது வேறயா..அவ்வ்வ்வ்வ்வ்....//

    அட ஆமாங்க... வவ்வ்வ்வ்வ்வ்..... :)))))

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் பதிவினை ரசித்து, கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  32. @ மகேந்திரன்: //தேர்ந்தெடுக்கப்பட்ட கிளியோபாட்ரா// ஆஹா... :)

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  33. @ ரிஷபன்: //தாங்கல!// ஆமாம்.... என்ன பண்றதுன்னு தெரியாம பகிர்ந்துகிட்டேன்... :)))

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  34. @ ஸாதிகா: //சந்தேகத்துடன் ஸ்க்ரால் பண்ணினால்..ஹி... ஹி..ஹி// அட சந்தேகம் வந்ததா! :)) அது தப்பு....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  35. @ சேஷாத்ரி.ஈ.எஸ்.: அடடா... நீங்களும் சொக்கிட்டீங்களா! :))))

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. @ முத்துலெட்சுமி: பொறுமையும் அழகும் சேர்ந்த கருமை.... :)))

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  37. @ மோகன்குமார்: //வைசாகில் மாடு வளர்க்க முடியுமா?// இந்தியாவில் இது வளர்க்காத இடம் ஏது...

    //மாதவன் கணக்கில் புலி// அதான் அப்பப்ப புதிர் போடராறா?

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....

    பதிலளிநீக்கு
  38. @ ராஜி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  39. @ ஈஸ்வரன்: //இது தெரியாம நம்ம ஊருல டெல்லி எருமை! டெல்லி எருமை! ன்னு திட்டிக்கிட்டு இருக்காங்க. என்னத்த சொல்லி, என்னத்த செய்ய.//

    அட ஆமாம் அண்ணாச்சி... எனக்கும் இதே அங்கலாய்ப்பு உண்டு..... ஏன்னா நமக்கும் அதே டைட்டில் கிடைச்சு இருக்கே!

    தங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி...

    பதிலளிநீக்கு
  40. @ ரெவெரி: அழகி!....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  41. @ அரசன் சே: //நானும் ஆர்வமா தான் இருந்தேன் சார் .. கடைசில இப்படி ஆகிபோச்சே ..//

    அடாடா... அப்படி ஆயிடுச்சா!

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  42. @ சென்னை பித்தன்: எருமை நடை.... :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  43. @ கணேஷ்: //எருமையான... அருமையான பகிர்வு// அட அட... என்னமா சொல்றீங்க!

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  44. @ ஷைலஜா: //ஆண்டாள் கூட எருமைச்சிறுவீடு என்று பாட்டுல சொல்லி இருப்பாங்க.. பசுவை சொல்லாம ஏன் எருமையை சொன்னாங்களாம்?:) ஏன்னா கருப்புதான் அவளுக்குப்பிடிச்ச கலரு அது மாலவன் கலரு! //

    ஆமாம்.... ஆண்டாள் இந்நாளில் இருந்திருந்தால் ஒரு வேளை “கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு.. டொய்யுன் டொய்யுன்....” என்று கூட பாடியிருக்கலாம்!!!!

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷைலஜா.....

    பதிலளிநீக்கு
  45. @ பந்து: //சரத் பவாருக்கு 'மகாராஷ்டிரா அழகி' என்ற பட்டத்தை கொடுத்திருக்கலாம்//

    அடுத்த முறை நடந்தால் கொடுத்திடுவோம்!!!!

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  46. படிக்கும்போதே புரிந்துவிட்டது. நீயும் அதே இனம் எனச் சொல்லாதீர்கள்.:))

    பதிலளிநீக்கு
  47. @ மாதேவி: // நீயும் அதே இனம் எனச் சொல்லாதீர்கள்.:))//

    அடாடா.... அப்படி எல்லாம் சொல்லிட முடியாது என்னால :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  48. அன்பு நண்பரே

    அழகிகளின் அணி வகுப்பு மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி.
    Expecting more beauty queens in the future.
    விஜய்

    பதிலளிநீக்கு
  49. @ விஜயராகவன்: அட இன்னும் அழகிகள் பார்க்கணுமா? :)))

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....