வெள்ளி, 16 மார்ச், 2012

பெண்கள் குறித்து எஸ். ரா சொன்ன ஜப்பானிய கதை:


[பட உதவி: கூகிள்]

கதைவழி நடந்தேன் மற்றும் உடைந்த சாவி பகிர்வுகளில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் தில்லி நிகழ்ச்சி பற்றி எழுதினேன்.  அந்த நிகழ்ச்சியின் போது எஸ். ரா. சொன்ன கதைகளில் ஒன்று தான் இந்தப் பகிர்வு..

நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் யாசுநாரி கவாபாட்டா [1899] அவர்களின் ஒரு சிறுகதையை இந்த நிகழ்ச்சியில் சொன்னார்.  அது:

ஒரு ஜப்பானியர் தன் மனைவி – குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றாராம்.  சில நாட்கள் கழித்து அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்ததாம் மனைவிக்கு.  கடிதத்தில் எழுதி இருந்தது இது தான் – “நான் வீட்டை விட்டு வெளியூர் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன.  எனினும் நமது சமையலறையிலிருந்து சுவையான உணவு பதார்த்தங்கள் சமைக்கும் வாசனை வருகிறதே. நான் இல்லையென்றாலும் எல்லாம் நன்கு சமைத்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள் போல…”.  படித்துப் பார்த்த மனைவிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.  அன்றிலிருந்து சமையல் செய்வதை விட்டாள்.  தானும் குழந்தைகளும் இருக்கும் ஏதாவது பழைய உணவினை, பழங்களை சாப்பிட்டு பசியாறினார்களாம்.
 
இன்னும் சில நாட்கள் கழித்து ஒரு கடிதம்.
  “நான் அங்கில்லாவிட்டாலும், நீயும் குழந்தைகளும், சூப் குடிப்பதற்கு விலை உயர்ந்த வெள்ளிக் கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் பயன்படுத்துகிறீர்களாமே?” என்று எழுதி இருந்ததாம். அன்றிலிருந்து வெள்ளிக் கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் உள்ளே வைத்து விட்டு மரக்கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் பயன்படுத்த ஆரம்பித்தாளாம் அப் பெண்.
 
ஐந்தாறு நாட்கள் சென்றது.
  அடுத்த கடிதத்தில் என்ன இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு நம்மிடமும். 
 
மூன்றாவது கடிதமும் வந்தது.
  “என்ன இது, நான் உங்களுடன் இல்லையே என்ற கவலையே உங்களுக்கு இல்லையோ?  இரவுகளில் விளக்குகள் எரிகின்றனவே நம் வீட்டில்?”  அடடா என்ன இது சோதனை. விளக்குகளையும் அணைத்து விட்டு இருட்டிலே பொழுதினைக் கழிக்க ஆரம்பித்தனர் அந்தப் பெண்ணும் அவர் குழந்தைகளும்.  இன்னும் என்ன சோதனை வரப் போகிறதோ அந்தப் பெண்ணுக்கு. 

அடுத்து வந்த கடிதம் தான், சவப்பெட்டியில் அறையப்பட்ட கடைசி ஆணி போல, கடைசிக் கடிதம்.  ”நான் உங்களுடன் இல்லையே என்ற கவலையே இல்லாது நீங்கள் நன்கு உறங்குகிறீர்களே.  ஆழ்ந்த உறக்கத்தில் நீங்கள் விடும் மூச்சுச் சத்தம் இங்கு வரை கேட்கிறது.  நான் இல்லாத போது கூட இந்த மூச்சு வருகிறதே உங்களுக்கு?” 
 
இந்தக் கடிதம் கண்ட உடனேயே அந்தப்பெண், தன் குழந்தைகளையும் மாய்த்து, தன்னையும் மாய்த்துக் கொண்டதுடன் முடிகிறது கதை.

என்ன ஒரு சோகம் கதையில்.  பாவம் அந்தப் பெண். கதை நடந்த வருடங்களில் ஜப்பானிலும் பெண்களுக்கு மதிப்பில்லாது தான் இருந்திருக்கிறது போல. 

மேலும் கதைகள் தொடரும்...

மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட் 
புது தில்லி. 

24 கருத்துகள்:

  1. /ஜப்பானிலும் பெண்களுக்கு மதிப்பில்லாது தான்/

    உலகின் பல பாகங்களிலும்..

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. இந்த ஜப்பானிய கதையை இப்பொழுது தான் கேள்விப்படுறேன்.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. // ஜப்பானிலும் பெண்களுக்கு மதிப்பில்லாது தான் இருந்திருக்கிறது போல. //

    :(((

    Pl. continue the stories shared by him.

    பதிலளிநீக்கு
  4. //ஜப்பானிலும்....////

    இ(த்)து !!!!!!! அந்த 'உம்' சொல்லிருதே எல்லாத்தையும்!!!!!

    பதிலளிநீக்கு
  5. இந்த மாதிரிக் கொடுமையான ஆண்கள் ஜப்பானில் உண்டா.கதைதான் என்றாலும் வருத்தமாக இருக்கிறது.
    எஸ்ரா வின் படிப்பாழம் அதிசயிக்க வைக்கிறது.நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  6. இதில் பெண்களின் நிலை என்பதையும் தாண்டி அவர்கள் கணவனைத் தாண்டி எதையும் சிந்திக்க விடாத நிலைக்குச் ச்முதாயத்தால் தள்ளப் பட்டுள்ளார்கள் என்பதுதான் பெரிதாகத் தெரிகிறது. நம் ஊரில் தான் ஏற்கனவே இதைப் பழமொழியாகக் கூறிவிட்டார்களே “கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்” என்று.

    பதிலளிநீக்கு
  7. இப்படி ஒரு கணவனை மதித்த அந்த ஜப்பானியப் பெண்ணை என்ன சொல்ல..? கேள்விப்பட்டிராத கதை. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. எல்லா ஊருலயும் ஒரே கதை தான்..கேட்டுக்கிட்டே இருந்தா குட்டிக்கிட்டே இருப்பாங்க..

    பதிலளிநீக்கு
  9. என்ன ஒரு சோகம் கதையில்.
    பாவம் அந்தப் பெண்.

    பதிலளிநீக்கு
  10. எதுக்காக இந்தக் கதையை எஸ்ரா சொன்னார்? ரொம்பவும் வெத்தா இருக்கே! கதையாக இருந்தாலும் தான் இல்லாவிட்டாலும் தம்மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணமல்லவா இருக்கவேண்டும். திராபையான கதை! எனக்கு பிடிக்கலை. :-(

    பதிலளிநீக்கு
  11. இந்தியாவானாலும், ஜப்பானானாலும் எங்குமே இந்தப்பெண்கள் பாடு அவஸ்தைதான் போலிருக்கு.

    சந்தேகமுள்ள, பெண்களுக்கு சந்தோஷமோ சுதந்தரமோ தராத ஒருசில ஆண்கள், சந்தேகமில்லாமல் உலகின் எல்லா இடத்திலுமே இருப்பார்கள் என்பதை இந்தக் கதை தெர்விக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. பாவம் அந்தப் பெண். கதை நடந்த வருடங்களில் ஜப்பானிலும் பெண்களுக்கு மதிப்பில்லாது தான் இருந்திருக்கிறது போல.

    கதை நடந்த வருடங்களில் ...

    that is the only consolation!

    பதிலளிநீக்கு
  13. இப்படியும் ஒரு மனைவியா?
    அதுவும் ஜப்பானிலா...?
    கதைதான் எனினும் வியப்பே!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  14. I fully agree with RVS views. I also felt the similarly on reading this story

    :-(

    பதிலளிநீக்கு
  15. @ ராமலக்ஷ்மி
    @ ஆசியா உமர்
    @ மோகன் குமார்
    @ சே குமார்
    @ துளசி கோபால்
    @ வல்லி சிம்ஹன்
    @ வேங்கட ஸ்ரீனிவாசன்
    @ கணேஷ்
    @ முத்துலெட்சுமி
    @ இராஜராஜேஸ்வரி
    @ RVS
    @ வை. கோபாலகிருஷ்ணன்
    @ ரிஷபன்
    @ புலவர் சா இராமாநுசம்
    @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்
    @ பழனி கந்தசாமி
    @ எல்.கே.

    எனது வலைப்பூவிற்கு வந்து பதிவினைப் படித்து கருத்துரையிட்ட மேற்கண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

    தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்10 மற்றும் யுடான்ஸ் திரட்டிகளில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. @ சேஷாத்ரி.ஈ.எஸ்.: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. உலகமொழிக்கதையொன்றை அறிவதில் மகிழ்கிறேன். இதைப் படிக்கும்போது எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் இருந்தபோது, என் கணவர் வேலைநிமித்தம் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். எப்போதும் போல் பிள்ளைகளுக்கு சாப்பாடு செய்து கொடுத்து அனுப்பிக்கொண்டிருந்தேன். அப்போது பக்கத்துவீட்டுப் பெண்மணி ஒருவர் 'என்ன நீங்க, உங்க வீட்டுக்காரர் ஊரில் இல்லைங்கிற மாதிரியே நடந்துக்கமாட்டேங்கறீங்க? எப்போதும்போல சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களே.. நானெல்லாம் எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போனால் அந்த சோகத்தில் சமைக்கவே மாட்டேன்' என்றார். எனக்கு கோபமும் சிரிப்பும் வந்தது. 'பிள்ளைகள் சாப்பிட வேண்டாமா? உங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போனால் உங்களையே நினைத்துக்கொண்டு சாப்பிடாமல் இருப்பாரா?' என்றேன். ஆனாலும் அவர் திருப்தி அடையவில்லை. இந்தக் காலத்திலும் இப்படியும் பெண்கள் இருக்கிறார்களே என்று நொந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  18. @ கீதமஞ்சரி: “தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு தானே....” உங்கள் கேள்வி “அவர் ஊரில் சாப்பிடாம இருப்பாரா?” - நியாயமானது. தனது வயிற்றுக்கு வேண்டியதைச் சாப்பிடத்தான் வேண்டும்...

    தங்களது வருகைக்கும் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. என்ன ஒரு சோகமான கதை! இப்படிக்கூட ஆண்கள் இருப்பார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....