எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, March 28, 2012

சாப்பிடலாம் வாங்க!


வாழைப்பழ ஐஸ்க்ரீம் - புதுசா இருக்கும் போல இருக்கே.....யார் அங்கே!  இன்னும் கொஞ்சம் சாக்லேட் சிரப் மேல ஊத்துங்க....ருசிச்சு சாப்பிடலாம்னா மீசையெல்லாம் சாக்லேட் ஒட்டிக்கும் போல இருக்கே.


”தேன் சிந்துதே வானம்” மாதிரி தேன் சிந்துதே இங்கே......


அடடா.... எத்தனை எத்தனை லேயர்.....  சாக்லேட்டுக்கு நடுவில் வெண்ணிலா..


அந்த ஸ்ட்ராபெர்ரி மட்டும் முழுசா சாப்பிடலாம்..... :)


சாக்லேட் சிரப்பில் தோய்த்த கருப்பு திராட்சை....  திருப்பதிக்கே லட்டு...


நான் அப்படியே சாப்பிடுவேன்.....  நீங்க......?

..

..

..

..

..

..

..


என்ன நண்பர்களே, பார்த்த உடனே சாப்பிடணும் போல தோணுது இல்ல!  ஆனால் நம்மால சாப்பிடத்தான் முடியாது.  இது எல்லாமே நிஜமான உணவு வகைகள் அல்ல.  என்ன அதிர்ச்சியா இருக்கா?  அவ்வளவு தத்ரூபமா இருக்கிறது இந்த ஓவியங்கள் [Oil Painting].   

இந்த ஓவியங்களை வரைந்தவர் மேரி எல்லன் ஜான்சன் எனும் 44 வயது யுவதி.     பல ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.  

சாப்பிட்டா தானே கலோரி ஏறிடும். ஆனா இவற்றையெல்லாம் பார்த்தாலே கலோரிகள் ஜிவ்வுன்னு ஏறிடும் போல இருக்கு!  

என்ன சொல்றீங்க!  உங்களுக்கு எவ்வளவு கலோரி ஏறியதுன்னு பின்னூட்டத்திலே சொல்லுங்களேன்!  :)))))))


மீண்டும் சந்திப்போம்....

நட்புடன் 

வெங்கட்
புது தில்லி. 


50 comments:

 1. உண்மையில் ஓவியங்கள் என நம்பவே முடியவில்லை
  பார்த்துக் கொண்டே வரும்போதே சப்புக் கொட்டியது நிஜம்
  அருமையான அசத்தலான பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. வரைந்த ஓவியங்களா? ஆச்சரியமாக உள்ளது .மேரி எல்லன் ஜான்சனின் மற்ற ஓவியங்களும் இருந்தால் பார்வைக்கு பதிவிடுங்களேன்:)

  ReplyDelete
 3. @ ரமணி: நேற்று எனக்கும் இப்படித்தான் இருந்தது இந்த ஓவியங்கள் முதன் முதலில் பார்த்தபோது.... அதனால் தான் இன்று பகிர்ந்து கொண்டேன்.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 4. @ ரமணி: எனது பதிவினை ரசித்து, தமிழ்மணத்தில் வாக்களித்ததற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. @ ஸாதிகா: ஆச்சரியம் தான். பிறிதொரு நாள் பகிர்கிறேன்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ரசித்தமைக்கும் நன்றி.

  ReplyDelete
 6. ஓவியம்னு நம்பவே முடியலையே அவ்வளவு தத்ரூபமா இருக்கே!

  எனக்கு கலோரி பத்தி எல்லாம் கவலை கிடையாது.இதையெல்லாம் பதிவா போட்டு ஆசையை கிளப்பி விட்டதுக்கு தண்டனையா அந்த கடைசி ஃபோட்டோல இருக்கறதை ஆதியை பண்ணித் தரச் சொல்லி எங்களுக்கு எல்லாம் கொடுத்துதான் ஆகணும் சொல்லிட்டேன் :-))

  ReplyDelete
 7. @ ராஜி: ஆஹா.... கலோரி பத்தி கவலை இல்லையா உங்களுக்கு.... நானும் அந்த வகை தான்.

  ஆதி கிட்ட சொல்றேன். உங்கள் சாக்கிட்டு எனக்கும் கிடைக்குமே! :)))

  தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி ராஜி.

  ReplyDelete
 8. எச்சில் ஊறதுகுள்ள இப்படி த்டீர்னு ஓவியம்னு சொல்லிபுட்டீங்களே

  ReplyDelete
 9. @ கோவை நேரம்: வாங்க.... அடடா... எடுத்துச் சாப்பிடத்தான் முடியல... ரசிக்கவாது செய்யலாமே என்ற எண்ணம் தான்....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 10. படங்கள் அருமை. நல்ல வேளை காலையில் சாப்பிட்ட பிறகு இந்த பதிவு வாசித்தேன்

  ReplyDelete
 11. ஓவியமா? நம்பவே முடியல்லே. என்னன்ன திறமைகள் எங்கெங்கே ஒளிஞ்சுகிட்டு இருக்கு அப்படியே தத்ரூபமா இருக்கு

  ReplyDelete
 12. அட ஆச்சர்யமான படமா இருக்கே, எனக்கு சுகர் எறிடிச்சு..!!!

  ReplyDelete
 13. Banana Icecream is easily available..---- ofcourse for eating..

  ReplyDelete
 14. அற்புதமான ஓவியங்கள். நானும் முதலில் நல்லா இருக்கே, சர்க்கரை வியாதி கெடந்தா கெடக்கட்டும், ஒரு பிடி பிடிக்கலாம்னு பார்த்தா இப்படி ஏமாத்திட்டீங்களே!

  ReplyDelete
 15. படங்களைப்பார்த்து நான் நாக்கில் நீர் ஊற அமர்ந்திருந்தால், கடைசியில் ஓவியமா?!சூப்பர்.

  ReplyDelete
 16. //சாப்பிட்டா தானே கலோரி ஏறிடும். ஆனா இவற்றையெல்லாம் பார்த்தாலே கலோரிகள் ஜிவ்வுன்னு ஏறிடும் போல இருக்கு! //

  ;))))))

  அருமையான தத்ரூபமான ஓவியங்கள்.

  திருமதி மேரி எல்லன் ஜான்சன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 17. ஐயகோ! பசி நேரத்திலயா இந்தப் பதிவை பார்க்கணும்.

  ஓவியம்னு சொல்கிறீர்கள். அதனால் நம்புகிறோம். ஆனால் இதுலயும் Oil சேர்த்துட்டாங்களே!

  ReplyDelete
 18. @ மோகன் குமார்: //நல்ல வேளை காலையில் சாப்பிட்ட பிறகு இந்த பதிவு வாசித்தேன்//

  அடடா.... நல்ல வேளை...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

  ReplyDelete
 19. @ லக்ஷ்மி: //என்னன்ன திறமைகள் எங்கெங்கே ஒளிஞ்சுகிட்டு இருக்கு// உண்மைம்மா...

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 20. @ MANO நாஞ்சில் மனோ: பார்த்ததற்கே சுகர் ஏறினா சாப்பிட்டால் என்னாவது.... :))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ.

  ReplyDelete
 21. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்.

  ReplyDelete
 22. @ பழனி. கந்தசாமி: //நானும் முதலில் நல்லா இருக்கே, சர்க்கரை வியாதி கெடந்தா கெடக்கட்டும், ஒரு பிடி பிடிக்கலாம்னு பார்த்தா இப்படி ஏமாத்திட்டீங்களே!//

  ஒரு பிடி பிடுச்சுடுவோம்.... :)))))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 23. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 24. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் தொடர்ந்து படித்து, பதிவுகளை ரசித்து, கருத்துரை இடும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி....

  ReplyDelete
 25. @ ஈஸ்வரன்: //ஐயகோ! பசி நேரத்திலயா இந்தப் பதிவை பார்க்கணும்.

  ஓவியம்னு சொல்கிறீர்கள். அதனால் நம்புகிறோம். ஆனால் இதுலயும் Oil சேர்த்துட்டாங்களே!//

  ஆயில் தானே எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம்! :))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.

  ReplyDelete
 26. ஓவியங்கள் என நம்பவே முடியவில்லை...ஆச்சரியமாக உள்ளது வெங்கட்...

  ReplyDelete
 27. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....

  ReplyDelete
 28. எங்க சாப்பிடறது..எனக்கு கண் வலி!

  ReplyDelete
 29. வனக்கம் வெங்கட் அண்ணா.இவைகள் ஓவியமா.இதே போல 5 ஸ்டார் ஹோட்டல்களில் அழகாகச் செய்திருப்பார்களே.குளிர் போகல இன்னும்.இதைப் பார்க்க இன்னும் குளிருது.கலோரி நிறைந்த உணவிது !

  ReplyDelete
 30. @ ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி: அடடா கண் வலியா? வாய் வலி இல்லையே :) அதனால படத்தில பார்க்காம, கடையில் வாங்கி சாப்பிடுங்க ஐஸ் க்ரீம் :)))))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 31. @ ஹேமா: தங்களது முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.....

  தொடர்ந்து சந்திப்போம்.

  ReplyDelete
 32. ம்... அழகழகான படங்களைப் பாத்து ரசிச்சுட்டு வந்தா ஓவியம்னு சொல்லி அசர வெச்சுட்டிங்க. சாக்லெட், ஐஸ்க்ரீம் விஷயத்துல எத்தனை கலோரி ஏறினா என்ன, விடு கழுதயன்னு நினைக்கிறவன் நான். ஸோ... நன்றி நண்பா!

  ReplyDelete
 33. @ கணேஷ்: //சாக்லெட், ஐஸ்க்ரீம் விஷயத்துல எத்தனை கலோரி ஏறினா என்ன, விடு கழுதயன்னு நினைக்கிறவன் நான். //

  அட நம்ம கட்சி.... நமக்கு இந்த கலோரி பார்த்து சாப்பிடறதெல்லாம் ஒத்து வராது. ”கலோரி கிலோ என்ன விலை?” கட்சி தான் நானும்.....

  தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 34. ஓவியங்களா ஆஆஆஆஆஆ.
  மயக்கமா வருது. சுகர் ஏறிடுத்துப்பா,.
  அற்புதம்.
  வரைந்த கைகளுக்கு வணக்கம். கொடுத்த பதிவருக்கு நன்றி.

  ReplyDelete
 35. @ வல்லிசிம்ஹன்: அச்சச்சோ... சுகர் ஏறிடுத்தா....

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 36. இப்படிக் கூட தத்ரூபமா வரைய முடியுமா? நினைச்சே பார்க்க முடியல. அற்புதமான கலைத்திறமை கொண்ட ஓவியருக்குப் பாராட்டுகள். அழகழகான ஓவியங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி வெங்கட்.

  ReplyDelete
 37. /இந்த ஓவியங்களை வரைந்தவர் மேரி எல்லன் ஜான்சன் எனும் 44 வயது யுவதி. /

  தத்ரூபமாக வரைந்திருக்கிறார். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 38. @ கீதமஞ்சரி: //இப்படிக் கூட தத்ரூபமா வரைய முடியுமா? நினைச்சே பார்க்க முடியல. //

  நானும் இந்தப் படங்களை முதலில் பார்த்தபோது இப்படித்தான் நினைத்தேன்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 39. @ ராமலக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 40. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலைன்னு ஒரு பழமொழி இருக்கு. அதுபோல கண்ணுக்கு எட்டியது வாய்ஜ்ஜ்ய் எட்டாது போல. படங்கள் வெகு அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 41. @ ராஜி: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை.... கண்ணுக்கு எட்டியதும் :)))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 42. @ ராஜி: தமிழ்மணம் வாக்கிற்கு மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 43. ருக்மணி சேஷசாயிApril 1, 2012 at 9:54 PM

  ஆஹா, அருமையான தத்ரூபமான ஓவியங்கள்.நிஜமான கேக்குகளை வைத்துத்தான் படம் எடுத்து அனுப்பியுள்ளீர்கள் என நினைத்தேன்.மனித விரல்களில்தான் இறைவன் எத்தனை திறமையை வைத்துள்ளான்!நல்ல பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

  அன்புடன் ருக்மணி சேஷசாயி

  ReplyDelete
 44. @ ருக்மணி சேஷசாயி: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 45. சார்!

  இன்றுதான் உங்கள் வலைப்பதிவை
  படித்தேன்!!

  முதல் அனுபவமே ஏமாற்றம்!

  படங்கள் தத்ரூபம்-
  வரைந்த ஓவியருக்கும்-
  என் பார்வைக்கு தந்த -
  உங்களுக்கும்-
  எனது கோபங்கள்!

  சாப்பிட முடியலன்னு!
  பார்க்க வைத்ததுக்காவது!
  நன்றி!

  ReplyDelete
 46. அய்யோ! நம்பவே முடியலை.அருமையான ஓவியங்கள்.

  ReplyDelete
 47. @ சீனி: அடடா.... முதல் முதல் ஆக என் பக்கத்திற்கு வந்து ஏமாற்றம் கிடைத்து விட்டதா! :) எனினும் கண்ணிற்கு விருந்து கிடைத்தது என நன்றி சொல்லியதற்கு நன்றி....


  தொடர்ந்து படிக்கவும்!

  தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி!

  ReplyDelete
 48. @ ஆசியா உமர்: ஆமாங்க சகோ... என்னாலயும் நம்பவே முடியலை! அதான் எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டேன்....

  தங்களது இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....