எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, April 2, 2012

வலைச்சரத்தில் மகிழம்பூ….


மகிழம் பூ….. 


மரத்தில் உதிரும் மகிழம்பூ
மகிழ்ச்சியூட்டும் மகிழம்பூ!
நூலில் கோர்த்து அணியும்பூ
நெஞ்சம் போற்றி மகிழும் பூ!
வண்டிச் சக்கரம் போன்றதாம்
வடிவம் ரொம்பச் சின்னதாம்!
மணிச்சரம் போல் தொடுக்கலாம்
மாலையாக்கிச் சூடலாம்!
பூத்தவுடனே வாசம்
பொங்கிப்பொங்கி வீசும்!
வாடும்போதும் வாசம்
வள்ளல் போல வீசும்!
இரவில் வீழ்ந்த பூவை
எடுத்துச் சூடலாம் காலை!

-    கவிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்.

வலைச்சர ஆசிரியர் – பதிவுலகில் சில பதிவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு அந்தஸ்து! நான் பதிவுலகில் கால் பதித்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை நாட்கள், இல்லை இல்லை, மாதங்கள் கழித்து எனக்கு அந்த அந்தஸ்து இப்போது கிடைத்திருக்கிறது. ஆம். இன்று முதல் ஆரம்பிக்கும் வாரத்தில் வலைச்சரத்தில் நான் தொடுக்கப் போகிறேன் சரம்சரமாய் வலைப்பூக்கள்… வலைச்சரத்தில் முதல் பூவாய் மகிழம்பூ! என் சுயச்சரமாக!

வலைச்சர ஆசிரியர் பதவி இப்போது தான் வாய்த்தது என்றாலும் வலைச்சரம் எனக்கோ, நான் வலைச்சரத்திற்கோ புதியவன் இல்லை. எனது வலைப்பூ இது வரை இருபது முறை வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. எனது வலைப்பூவினை அறிமுகம் செய்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

இப்படி மகிழம்பூவாய் ஒரு சுயச்சரம் இன்றைய வலைச்சரத்தில். வந்து பாருங்களேன்…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.45 comments:

 1. ஹேய் வெங்கட்! ரெண்டு நாளா ஊர்ல இல்லாததால பதிவுகளைப் பாக்கலை. வந்தா இப்படி ஒரு ஸ்வீட் ஸர்ப்ரைஸ் ஹேப்பி நியூஸ் சொல்றீங்க! அங்கயும் கலக்குங்க... என் இதயம் நிறை நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. @ கணேஷ்: அழைப்பு இரண்டு வாரங்களுக்கு முன்னரே வந்துவிட்டது நண்பரே.

  தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாரம் முழுவதும் வந்து பதிவுகளைப் படித்து கருத்துகள் எழுதுங்கள்!

  ReplyDelete
 3. @ எல்.கே.: ரொம்ப நன்றி கார்த்திக்....

  ReplyDelete
 4. பூத்தவுடனே வாசம்
  பொங்கிப்பொங்கி வீசும்!
  வாடும்போதும் வாசம்
  வள்ளல் போல வீசும்!

  வலைச்சரத்திலும்
  வாசம் வீசும் பதிவுகளுக்கு
  வாழ்த்துகள்..

  ReplyDelete
 5. புதிய ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 6. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 7. @ கோவை நேரம்: வாழ்த்திய உங்கள் நல்லுள்ளத்திற்கு மிக்க நன்றி.....

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் வெங்கட்!

  வருக! தருக! நாங்கள் பருக!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 9. @ புலவர் சா. இராமாநுசம்: தங்களது வருகைக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவரே....

  ReplyDelete
 10. வணக்கம் நண்பரே...
  கலக்குங்க..

  ReplyDelete
 11. @ மகேந்திரன்: கலக்கிடுவோம்!.... தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 12. வலைச்சர ஆசிரியரே!

  நல்வரவு. இந்த வாரம் இனிய வாரம்!!!!!

  ReplyDelete
 13. @ துளசி கோபால்: ஆஹா... இனிய வாரம் ஆக இருக்கட்டும் உங்கள் வாழ்த்துகளால்.... :)))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்....

  ReplyDelete
 14. மகிழம்பூ மனம் வீசட்டும் வலைச்சர ஆசிரியர் பதவியில் வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 15. இந்த வாரம் நிச்சயம் சுவாரஸ்யமான வாரமாக இருக்கும்
  தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. மிக்க மகிழ்ச்சி. தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி இனிதாய் அமைய வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. நீங்கள் சொன்னவற்றில் நிறையவே நான் படித்திருப்பேன். உங்கள் பதிவுகளில் எனக்கு பிடித்தவை பயண கட்டுரைகளும் நெய்வேலி குறித்த பதிவுகளும் தான்.

  நீங்க ஏற்கனவே வலைசர ஆசிரியராக வந்ததாக நினைதேன். அது உங்க வீட்டம்மா போல. ஒரு வீட்டில் மூணு பதிவர்கள் இருந்தா இப்படி தான் ஆகிடுது :))

  ReplyDelete
 18. அன்பு நண்பரே

  உங்களது அயர்ச்சி இல்லாத முயற்சி உயர்ச்சி பெற வாழ்த்துகள்

  விஜயராகவன்

  ReplyDelete
 19. வாரம் இனிய வாரம்!
  உங்கள் தோள்களில்
  வலைச்சரம் என்ற இனிய பாரம்!

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் வெங்கட் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. வலைச்சர அசிரியர் பதவியில் அமர்ந்ததற்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! ஒரு வாரம் முழுவதும் மகிழம்பூ வாசமாய் மணம் வீசும் என்று எதிர்பார்க்கிறேன்!!

  ReplyDelete
 22. @ தனிமரம்: தங்களது முதல் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.....

  ReplyDelete
 23. @ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார். உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகாது என நினைக்கிறேன்....

  தமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கும் நன்றி.

  ReplyDelete
 24. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகையும் வாழ்த்தும் என்னை மகிழ்வித்தது சார்.....

  ReplyDelete
 25. @ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: பாராட்டிய தங்களுக்கு எனது நன்றி!

  ReplyDelete
 26. @ மோகன்குமார்: அம்மணி தான் ஒரு வாரத்திற்கு, அதாவது, நான் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருந்த அதே வாரத்தில், வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்தார்!

  அது சரி மூணு பேரும் வலைப்பூ வைத்திருந்தால் கஷ்டம்தான்! :))))

  தங்களது வருகைக்கும் தொடர் வாசிப்புக்கும் மிக்க நன்றி மோகன்....

  ReplyDelete
 27. @ ராம்வி: வாழ்த்துகளுக்கு நன்றி ரமா ரவி.... எங்கே கொஞ்சம் நாட்களாக ஆளையே காணோம்! ரொம்ப பிசியா இருக்கீங்க போல!

  ReplyDelete
 28. @ விஜய்: தங்களது வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்.....

  ReplyDelete
 29. @ ஈஸ்வரன்:

  //வாரம் இனிய வாரம்
  உங்கள் தோள்களில்
  வலைச்சரம் என்ற இனிய பாரம்//

  அட என்ன கலக்கறீங்களே அண்ணாச்சி....

  தங்களது வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.

  ReplyDelete
 30. @ லக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 31. @ மனோ சாமிநாதன்: தங்களது வருகைக்கும் இனியதோர் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 32. @ கே.பி. ஜனா: வந்துட்டேன்.... வந்துட்டேன்... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் நண்பரே!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 34. @ சேஷாத்ரி. ஈ.எஸ்.: வாழ்த்திய உங்கள் நல்லுள்ளத்திற்கு மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 35. @ சீனி: தங்கள் வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 36. நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 37. @ கலாநேசன்: வாழ்த்திய உங்களுக்கு நன்றி சரவணன்....

  ReplyDelete
 38. உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி asa asath.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....