எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, April 10, 2012

வித்தியாசமான ஒரு ஆட்டோ


சென்னையோ, தில்லியோ எந்த ஊராக இருந்தாலும் சரி, நிறைய ஆட்டோக்களை நாம் இப்போது பார்க்கிறோம். சிறிய தூரங்களைக் கடக்க அதனை பயன்படுத்தவும் செய்கிறோம். பெரும்பாலும் இந்த ஆட்டோ பயணங்களில் நமக்குக் கிடைப்பது கசப்பான அனுபவங்களே. ஆனால் மும்பையில் தனக்குக் கிடைத்த சுகமான அனுபவத்தினைப் பற்றி முகப்புத்தகத்தில் ஒருவர் பகிர்ந்திருக்கிறார். அதன் தமிழாக்கம் கீழே.


ஒரு ஞாயிறு அன்று நானும், எனது மனைவி மற்றும் மகனுடன் அந்தேரியிலிருந்து பாந்த்ரா செல்ல ஒரு ஆட்டோவினை நிறுத்தினோம், இது ஒரு வித்தியாசமான பயணமாக இருக்கப் போகிறது என்பதை அறியாமலே.
நிறுத்திய ஆட்டோவில் உள்ளே நுழைந்து அமர்ந்ததும் எதிரே ஒரு சிறிய தொலைக்காட்சிப் பெட்டி. அதில் தூர்தர்ஷன் ஓடிக்கொண்டிருந்தது. நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டோம். பக்கத்தில் ஒரு முதலுதவிப் பெட்டி. பஞ்சு, டெட்டால் மற்றும் சில மாத்திரைகளும். நிச்சயம் இது வித்தியாசாமான ஒரு ஆட்டோ எனப் புரிந்தது.


சுற்று முற்றிலும் பார்த்தேன். மேலும் இருந்தவை: ரேடியோ, தீயணைப்பு சாதனங்கள், நேரம் காட்டி, நாள்காட்டி, எல்லா மதக்கடவுள்களின் படங்கள். இவை மட்டுமா, பம்பாய் ஹீரோக்கள், காம்தே, சாலாஸ்கர், கர்கரே மற்றும் உன்னிகிருஷ்ணன் அவர்களுடைய புகைப்படங்களும் இருந்தன.

ஆட்டோ மட்டுமல்ல, ஆட்டோ ஓட்டுனரும் வித்தியாசமானவராகத் தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அவருடன் பேச்சுக் கொடுத்தேன். அவர் பணி புரிந்து கொண்டிருந்த அலுவலகம் மூடியபின் கடந்த 8-9 வருடங்களாக ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருப்பதாகச் சொன்னார்.

பள்ளி செல்லும் இரு குழந்தைகளுக்குத் தகப்பன் இவர். காலை 8 முதல் இரவு 10 மணி வரை ஆட்டோவையும் தனது வாழ்க்கையையும் திறம்பட ஓட்டும் இவர் சொன்னது, “சார், வீட்டுல உட்கார்ந்து டி.வி. பார்ப்பதால் என்னைப் போன்றவர்களுக்கு பெரிதாக என்ன பயன் வந்துடப் போவுது? நாலு காசு சம்பாதித்தா எதிர்காலத்துக்குப் பயன்படுமே!" உண்மைதானே!

இது மட்டுமில்லாமல், தன்னிடம் எப்போதெல்லாம் சற்று அதிகமாக பணம் சேர்கிறதோ, அப்போதெல்லாம், அந்தேரியில் இருக்கும், வயதான பெண்களுக்கான ஒரு இல்லத்தில் இருக்கும் பெண்களுக்கு, பல் துலக்கி, பற்பசை, சோப், எண்ணெய் என தேவைப்படும் பொருட்களை வாங்கித் தருகிறாராம். ஆட்டோவில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீதம் தள்ளுபடியும், பார்வை இல்லாத நபர்களுக்கு 50 ரூபாய் வரையான தொலைவெனில் இலவசமாகவும் அழைத்துச் செல்வாராம்.

இப்படி ஒவ்வொன்றும் தெரிந்துகொண்ட நானும், எனது மனைவியும் 45 நிமிட பயணம் முடிந்தபோது ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த மகிழ்ச்சியுடன் விடை பெற்றோம்.


நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய நபர்தான் சந்தீப் பச்சே என்ற இந்த ஆட்டோ ஓட்டுனர். மும்பையில் அவர் ஓட்டும் ஆட்டோ எண். MH-02-Z-8508. 

ஒரு நல்ல மனிதரைப் பற்றித் தெரிய வந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

70 comments:

 1. வித்தியாசமான ஆட்டோ ஓட்டுனர்..

  ReplyDelete
 2. ஒரு நல்ல மனிதரைப் பற்றி நல்ல பகிர்வு.

  ReplyDelete
 3. @ கோவை நேரம்: தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 4. @ ராமலக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 5. @ மோகன்குமார்: உண்மை. வித்தியாசமாகத் தெரிந்தது. அதனால் பகிர்ந்து கொண்டேன்.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

  ReplyDelete
 6. நிச்சயம் இது வித்தியாசாமான ஒரு ஆட்டோ

  ReplyDelete
 7. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 8. மகிழ்ச்சியளிக்கும் தகவல்.
  நன்றி, தொடரட்டும்...!

  ReplyDelete
 9. @ அமைதி அப்பா: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 10. ஒரு நல்ல மனிதரைப் பற்றி நல்ல பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 11. @ நாடோடிப் பையன்: தங்களது முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 12. நல்ல இதயம் உள்ள நல்ல ஆட்டோ ஓட்டுனரை தெரிந்து கொண்டோம்.
  நன்றி வெங்கட்.

  ReplyDelete
 13. ஆட்டோக்காரர்கள் என்றாலே குறைந்த தூரப் பயணத்துக்கும் அதிகத் தொகை பிடுங்குபவர்கள் என்ற இமேஜ் இருக்கும் இந்நாளில் வித்தியாசமான இவரைப் பற்றிய பகிர்வு அருமை. நல்லதொரு முன்னுதாரணம் இவர்.

  ReplyDelete
 14. எனது மும்பை அனுபவத்தைப் பொறுத்தவரையில் அங்குள்ள பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் அநியாய பண வசூல் நடத்துவதில்லை ....

  ReplyDelete
 15. இதுபோன்ற நேர்நோக்கு மனிதர்களைப் பற்றிய தகவல்கள்தான் இப்போது நமக்குத் தேவை. தகவல் பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 16. சரியான கட்டணத்துடன் ஓட்டினால் குறைந்த லாபம் மட்டுமே தரும் ஒரு தொழில் ஆட்டோ ஓட்டுதல்,மேலும் நிலையற்ற வருமானம் ,போட்டி அதிகம் என்ற நிலையில் இப்படி வித்தியாசமாக சேவை செய்வது சிறப்பானது.

  வசதியானவர்கள் தங்களது வருமானத்தில் கொஞ்சம் சேவைக்கு செலவிடுவது ஆச்சரியம் இல்லை, விளிம்பு நிலை வாழ்க்கையில் ஒருவர் சேவை மனப்பான்மையுடன் செயல்பட பரந்த மனம் வேண்டும். உண்மையில் வித்தியாசமான ஆட்டோ ஓட்டுனரே.பாராட்டுக்கள்.

  பகிர்ந்துக்கொண்ட உங்களுக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 17. வித்தியாசமான நல்ல மனிதர்தான். நல்லதொரு பகிர்வு. நன்றி

  ReplyDelete
 18. இவரை பற்றி ஏற்கனவே எங்கோ படித்திருக்கிறேன். ஆனால், எங்குன்னு நினைவில்லை. ப்னல்ல மனிதரை அடையாளப்படுத்தியமைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 19. படிக்கும்போதே அந்த ஆட்டோ ஓட்டுனர் மிகவும் நல்லவர் என்பது ஆட்டோமேடிக் ஆக என் மனதில் பதிவானது. அவரும் அவர் தொண்டும் என்றும் வாழ்க!

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 20. வித்தியாசமான மனிதர் ஓட்டுநர்

  ReplyDelete
 21. அருமையான மனிதர்! அறிமுகத்துக்கு நன்றி.

  நல்ல மனசுள்ளவர், நல்லா இருக்கட்டும்!

  ReplyDelete
 22. இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை
  காண்பது மிக அரிது..
  அருமையான பகிர்வு நண்பரே.

  ReplyDelete
 23. ஒரு நல்ல மனுஷரை பற்றி தெரிஞ்சுக்க முடிஞ்சதுக்கு ரொம்ப நன்றி!

  ReplyDelete
 24. மனித நேயம் மிக்க மனிதரைப் பற்றி தங்கள் மூலம் தெரிந்து கொண்டோம் நன்றி .

  ReplyDelete
 25. வித்தியாசமான நல்லமனிதர்.

  அவர்பணிக்கு வாழ்த்துவோம்.

  ReplyDelete
 26. வித்தியாசமான ஆட்டோ ஓட்டுனர் + நல்ல மனிதர்...

  பகிர்வுக்கு நன்றி வெங்கட் ...

  ReplyDelete
 27. இதுவரை இந்தவிஷயம் தெரிந்திருக்கலை. நல்ல மனிதரைப்பற்றி எல்லாருடனும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  ReplyDelete
 28. @ தினேஷ்குமார்: தங்களது முதல் வருகை? வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 29. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா!

  ReplyDelete
 30. @ கணேஷ்: ஆமாம் நண்பரே. இவர் நிச்சயம் வித்தியாசமானவர் தான்..

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 31. @ கூடல் பாலா: மும்பையில் மீட்டர் போட்டு வருகிறார்கள். ஆனால் நமது ஊரிலோ! :)

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 32. @ ஈஸ்வரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.

  ReplyDelete
 33. @ அபு சனா: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 34. @ வவ்வால்: //சரியான கட்டணத்துடன் ஓட்டினால் குறைந்த லாபம் மட்டுமே தரும் ஒரு தொழில் ஆட்டோ ஓட்டுதல்,மேலும் நிலையற்ற வருமானம் ,போட்டி அதிகம் என்ற நிலையில் இப்படி வித்தியாசமாக சேவை செய்வது சிறப்பானது.//

  உண்மை. தில்லியில் மொத்த ஆட்டோக்கள் எண்ணிக்கை 55000 தாண்டக்கூடாது என ஒரு அறிவிப்பு இருக்கிறது. அதனால் ஒவ்வொரு ஆட்டோவுக்கும் பர்மிட் வழங்குவதில் நிறைய கெடுபிடிகள்.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 35. @ ராஜி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

  ReplyDelete
 36. @ ராஜி: //இவரை பற்றி ஏற்கனவே எங்கோ படித்திருக்கிறேன். ஆனால், எங்குன்னு நினைவில்லை.//

  முகப்புத்தகத்தில் படித்திருக்கலாம்.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 37. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 38. @ வைரை சதீஷ்: ஆமாம்.... மிக்க நன்றி சதீஷ்.

  ReplyDelete
 39. @ துளசி டீச்சர்: //நல்ல மனசுள்ளவர், நல்லா இருக்கட்டும்!// ஆமாம் டீச்சர். நல்லா இருக்கணும்....

  தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 40. @ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 41. @ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 42. @ தக்குடு: நல்ல மனிதர் தான் தக்குடு. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு கண்ணா..

  ReplyDelete
 43. @ சசிகலா: //மனித நேயம் மிக்க மனிதரை....// உண்மை சகோ.

  தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 44. @ மாதேவி: வாழ்த்துவோம்.... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 45. @ ரெவெரி: //வித்தியாசமான ஆட்டோ ஓட்டுனர் + நல்ல மனிதர்...// உண்மை ரெவெரி.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 46. @ லக்ஷ்மி: ஆமாம்மா.... உங்க மும்பையில் தான் இருக்கிறார்!

  உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 47. அபூர்வமான ஒரு ஆட்டோக்காரர் பற்றிய அழகான பகிர்வு

  ReplyDelete
 48. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 49. நல்ல ஒரு இடுகை நன்றி வெங்கட்.வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 50. நல்ல ஒரு மனிதரைப் பற்றி எங்களோடும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.நிச்சயம் இந்தப்பதிவு தெரிந்தால் சந்தோஷப்பட்டிருப்பார் அவர் !

  ReplyDelete
 51. @ கோவைக்கவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @ ஹேமா: அவரைப் பற்றி சில பேப்பர்களில் வந்திருக்கிறது. ஒரு காணொளி கூட பார்த்தேன். நிச்சயம் சந்தோஷம் அடைந்திருப்பார். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 52. ம்.. இப்படிப்பட்ட மனிதர்கள் பற்றி எல்லா இடங்களிலும் பதிந்து வைப்பது பகிர்ந்து வைப்பதுஅவசியமானது..
  நன்றி வெங்கட்..

  ReplyDelete
 53. @ முத்துலெட்சுமி: //ம்.. இப்படிப்பட்ட மனிதர்கள் பற்றி எல்லா இடங்களிலும் பதிந்து வைப்பது பகிர்ந்து வைப்பதுஅவசியமானது..//

  உண்மை முத்துலெட்சுமி. அவரைப் பார்த்து இன்னும் சிலர் இவ்வழி நடந்தால் நல்லது தானே....

  தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 54. நல்ல மனிதரைப் பற்றி ஒரு நல்ல பகிர்வு. தமிழ்நாட்டு நிலையை எண்ணிய போது வருத்தமாக இருக்கிறது!

  ஒரு பழைய பாடல் ஆரம்ப இரண்டு வரிகள் நினைவுக்கு வருகிறது.."இங்கேயும் மனிதர்கள்....இதயம்தான் உள்ளவர்கள்..."

  ReplyDelete
 55. driver nalla manusan!

  pakirntha ungalukku
  nalla manasu!

  ReplyDelete
 56. @ ஸ்ரீராம்: // தமிழ்நாட்டு நிலையை எண்ணிய போது வருத்தமாக இருக்கிறது!// தில்லியின் நிலையும் சற்று பரவாயில்லை. ஆனால் நாம் கூப்பிடும் இடத்திற்கு வர ரொம்பவே யோசிக்கிறார்கள்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 57. @ சீனி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

  ReplyDelete
 58. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை-
  //பள்ளி செல்லும் இரு குழந்தைகளுக்குத் தகப்பன் இவர். காலை 8 முதல் இரவு 10 மணி வரை ஆட்டோவையும் தனது வாழ்க்கையையும் திறம்பட ஓட்டும் இவர் //

  அருமை!
  ஒரு நல்ல மனிதரைப் பற்றிய நல்ல பதிவு! நன்றி நண்பரே!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 59. @ சேஷாத்ரி: //நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை- // ஆமாம்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 60. இந்தவார என் விகடன்(புதுச்சேரி) அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.தொடரட்டும் வெற்றிகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது தகவலுக்கு மிக்க நன்றி சென்னை பித்தன் சார். நான் இன்னும் பார்க்கவில்லை :) ஒரு நண்பரிடம் ஸ்கேன் செய்து அனுப்பச் சொல்லிக் கேட்டு இருக்கிறேன்.

   Delete
 61. கலி காலத்தில் இப்படியுமா
  என படிப்பவர் அனைவரையும்
  ஆச்சரியப்படச் செய்யும் அருமையான நபரை
  பதிவின் மூலம் அறிமுகம் செய்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  அவருக்கு ஆண்டவன் எல்லா நலங்களையும்
  வாரி வழங்க பிரார்த்திப்போமாக

  ReplyDelete
  Replies
  1. என்னையும் ஆச்சரியப்பட வைத்தார் இந்த நல்ல மனிதர்.

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 62. இப்ப‌டியான‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ளின் இருப்பிட‌ம‌ல்ல‌வா புனித‌ த‌ல‌ம்! தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைச‌க்தி இவ‌ரிட‌ம் ம‌ன‌ம் வாக்கு காய‌ம் அனைத்திலும் நிறைந்துள்ள‌தோ...! ந‌ன்றி ச‌கோ, ந‌ல்ல‌வ‌ரின் அறிமுக‌த்திற்கும் ந‌ம‌க்குள்ளிருக்கும் ந‌ல்ல‌தை தூண்டிய‌மைக்கும்!

  ReplyDelete
  Replies
  1. உண்மை நிலாமகள்.... புனிதத் தலம் அவர்கள் இருப்பிடமே.

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....