எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, July 13, 2012

ஃப்ரூட் சாலட் – 5 – உயிருடன் இருக்கும் இறந்து போனவர்
இந்த வார செய்தி: சந்தோஷ் சிங் என்ற “இறந்து” போனவரின் கதை இது.  இறந்து விட்டாலும், தில்லியின் ஜந்தர் மந்தரில் ஒரு மூங்கில் கட்டிலில் படுத்துக் கொண்டு தனது உரிமைக்காகப் போராடுபவர்.  அட என்னடா இது இறந்து விட்டார் ஆனாலும் உரிமைக்காகப் போராடுகிறார்னு குழப்புகிறானேன்னு நினைக்கிறீங்களா? மேலே படியுங்க, புரியும். 

உத்திரப் பிரதேசத்தின் புண்ணிய பூமியாம் வாரணாசியைச் சேர்ந்தவர் சந்தோஷ் சிங்.  தனது தாய் தந்தையர் விட்டுச் சென்ற 18 பீஹா [ஒரு பீஹா – 2500 Sq. Mtr.] நிலத்திற்குச் சொந்தக் காரர்.  சொந்த ஊரிலே வசித்து வந்தவர் வாழ்வில் திருப்பம் வந்தது வருடம் 2000-த்தில்!  வாரணாசிக்கு படம் எடுக்க வந்த நானா படேகர் சந்தோஷ் சிங்கை தனது சமையலறை பொறுப்பினைப் பார்த்துக் கொள்ளச் சொல்ல, வாரணாசியிலிருந்து வெளியேறி மும்பை சென்றுவிட்டார்.  அங்கே ஒரு மராட்டி தலித் பெண்ணை மணம் முடித்து, 2002-ல் வாரணாசி திரும்பினால், அவர்களை ஊர் ஏற்றுக்கொள்ளவில்லை.  அடித்துத் துரத்தப்பட்ட இவர்கள் மும்பைக்கே மீண்டும் சென்றுவிட்டார்கள்.

மீண்டும் தனியாக வந்து பார்த்தபோதுதான் தான் “இறந்து” போனது இவருக்குத் தெரிய வருகிறது.  தனது ஊரில் இருக்கும் சில உறவினர்கள், இவர் இறந்து போனதாக “இறப்புச் சான்றிதழ்” வாங்கி, இவருடைய மொத்த நிலத்தினையும் அபகரித்திருந்தார்கள்.  எங்கெங்கு கொடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் கையூட்டாகக் கொடுத்து நிலத்தினை அபகரித்துக் கொள்வது அவர்களுக்குச் சுலபமாக இருந்திருக்கிறது.  லஞ்சம் தான் நமது நாட்டில் தலைவிரித்தாடுகிறதே.  எதற்கும் லஞ்சம் என்ற நிலையில் இது சுலபமாய் சாத்தியமாகியிருக்கிறது. 

நிலம் அபகரிப்பு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது இவரையே நான்கு நாட்கள் “உள்ளே” வைத்து நன்றாக “கவனித்து” உன் நிலத்தை மறந்து விடு எனச் சொல்லி வெளியே விட்டிருக்கிறார்கள்.  நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அந்த வழக்கு நடந்தபோது உள்ளே செல்லமுடியாது பலமுறை நீதிமன்றத்தின் வெளியே தாக்கப்பட்டிருக்கிறார்.  2011-ஆம் ஆண்டு இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப் பட்டுவிட வேறு வழியின்றி தில்லியின் ஜந்தர் மந்தரில் இறந்தவர்கள் மட்டுமே படுத்துக் கொள்ளும் மூங்கில் கட்டிலில் அமர்ந்தும், படுத்தும் தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்கப் போராடி வருகிறார். 

தான் உயிரோடு இருப்பதை நிரூபிப்பதற்காக, தற்போது நடக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.  ஆனால் அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.  சில நாட்களுக்கு முன் உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்-ஐ பார்த்து மனு கொடுத்திருக்கிறார். 

ஆனால் அதற்க்கும் பலன் இருக்கப் போவதாகத் தெரியவில்லை. முன்பின் யோசிக்காமல் ஒரு அறிவிப்பை செய்து விட்டு ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அதை வாபஸ் வாங்கும் இவரை போன்றவர்களால் பெரிதாக என்ன நடந்து விடப் போகிறது? 

”இறந்தும்” உயிருடன் இருக்கும் சந்தோஷ் சிங் தனியாக இல்லை.  உத்திரப் பிரதேசம் முழுவதும் இது போல இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.  அரசின் பதிவேடுகளில் இவர்கள் அனைவரும் இறந்து போனவர்களாக பதிவு செய்யப்பட்டு அவர்களது சொத்து முழுவதையும் உறவினர்கள் அபகரித்திருக்கிறார்கள். இப்படி “இறந்த” மனிதர்கள் ஒரு சங்கமும் ஆரம்பித்து தங்களுக்காக போராடி வருகிறார்கள். 

சொத்தை அபகரிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அவல நிலை நிலவுவது இங்கே கண்கூடு.  மனிதர்களுக்கு மண்ணாசை, பொன்னாசை, பொருளாசை என ஆசைகளுக்குக் குறைவேயில்லை எனதான் சொல்ல வேண்டும். 

இந்த வார முகப்புத்தக இற்றை: ”தான் என்னும் அகங்காரம்” நம் கண்ணில் விழுந்துவிட்ட தூசியைப் போன்றது.  தூசியை அகற்றாமல் நம்மால் தெளிவாகப் பார்க்க முடியாது. அகங்காரம் எனும் தூசியை அகற்றி உலகினைத் தெளிவாகப் பார்க்கலாமே!

இந்த வார குறுஞ்செய்தி: Only true loving friend can easily identify some little lies in your smile and some more truths in your tears.  Don’t miss such persons in your life.

இந்த வாரக் காணொளி:படித்ததில் பிடித்தது:

மேலே…. கீழே….

ஒரு பக்கம் சிவப்புச் சேலை
மறு பக்கம் பச்சைச் சேலை
உடலெங்கும் சரிகைப் புள்ளி
இரு பக்கம் திருப்பிக் கட்டும்
பட்டுச் சேலை புதுமை!

விளம்பரப் பலகை கீழே வாழும்
கண்ணம்மா கவலை –
மாராப்புக் கிழிசல் மறைக்க
எந்தப் பக்கம் திருப்பிக் கட்ட?

-    ஸுஜாதா விஜயராகவன்

இப்படிப் பட்ட கண்ணம்மாக்கள் நம் நாட்டில் அதிகம் தான் இல்லையா?

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

66 comments:

 1. ஃப்ரூட் சாலட் – 5 அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கோவை நேரம்.

   Delete
 3. // வாரணாசி மாநிலத்தினைச் //

  வாரணாசி நகரத்தை என்று வரவேண்டும். அவர் கதை கேட்க கஷ்டமாகத்தான் இருக்கு. தமிழகத்திலும் இது போன்று உள்ளது

  ReplyDelete
  Replies
  1. தவறினைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி கார்த்திக்.

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 4. சுவையான ஃப்ரூட் சாலட்.. அதுவும் அந்தக் காணொளி ஜூப்பரு :-))

  உயிரோட இருப்பவரை இறந்துட்டார்ன்னு சொல்ற அளவுக்கு நம்ம மக்களைப் பேராசை ஆட்டிப் படைக்கிறதை என்னன்னு சொல்றது. உறவுகளுக்குள்ளே பாசம் இந்தளவுக்கா அற்றுப்போகிறது :-(


  அன்புடன்
  அமைதிச்சாரல்

  ReplyDelete
  Replies
  1. மின்னஞ்சல் மூலம் தாங்கள் அனுப்பிய இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்....

   Delete
 5. வழக்கம்போல் மிக மிக அருமை
  காணொளி அதிக சுவாரஸ்யம் என்றால்
  முதல் செய்தி அதிர்சியளிக்கிறது
  மொத்தத்தில் புரூட் சாலட் புதுச் சுவை
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணிஜி.

   Delete
 6. Replies
  1. தமிழ்மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 7. அடப்பாவிகளா......... மண்ணாசை இப்படி ஆட்டுவிக்குதே!

  சென்னையில் வீட்டையே கைமாத்தி வித்துடறாங்களாம் உண்மையான வீட்டு ஓனருக்குத் தெரியாமலேயே!

  ReplyDelete
  Replies
  1. //அடப்பாவிகளா......... மண்ணாசை இப்படி ஆட்டுவிக்குதே!//

   ஆமாம். புத்தர் “ஆசையே துன்பத்திற்குக் காரணம்னு சொன்னார்! ஆனா இங்க உல்டாவால்ல இருக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 8. மனிதநேயம் மறந்து போனதோ மனிதர்களுக்கு என்று எண்ணத் தோன்றுகிறது. கவிதை அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா....

   Delete
 9. அருமையான பகிர்வு பாராட்டுக்கள், வெக்கட்ஜி.

  ரிகார்டுகள் படி இறந்தவர் உயிரோடு இருந்து போராடுவது என்ன கொடுமை பாருங்கள்.

  பாவம் அவர். இந்த நம் நாட்டில் இதுபோல எது வேண்டுமானாலும் நடக்கும் தான் போலிருக்கு. மிகவும் அநியாயமாக உள்ளது இது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 10. மனிதர்களுக்கு மண்ணாசை, பொன்னாசை, பொருளாசை என ஆசைகளுக்குக் குறைவேயில்லை எனதான் சொல்ல வேண்டும்.//


  கை அளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்த இறைவனை தான் கேட்க வேண்டும்.
  இறைவா! ஏன் சில மனிதர்களை இப்படி படைத்தாய்?
  எல்லோரையும் அன்பானவர்களாய் ஆக்கிவிடேன்.

  ReplyDelete
  Replies
  1. //கை அளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்த இறைவனை தான் கேட்க வேண்டும்.//

   கேட்டால் அவனுக்கு பதில் சொல்ல ஆசையில்லையாம்! :(

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா!

   Delete
 11. மண்ணாசை கொண்டு நிலத்தை அபகரிக்கும் மனிதர் தாங்கள் போகும் போது எத்தனை நிலத்தை எடுத்துச் செல்லப் போகிறோம என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்த்தால்... ‘இறந்த மனிதர்கள்’ தொகை குறையும். கடைசியில் தந்திருக்கும படித்ததில் பிடித்தது அருமை. படித்ததை அடிக்கடி நிறையப் பகிரவும். இற்றையும் மனதைக் கவர்ந்தது. மொத்தத்தில்... ப்ரூட் சாலட் வழக்கம் போல் சுவை குன்றாமல்!

  ReplyDelete
  Replies
  1. //படித்ததை அடிக்கடி நிறையப் பகிரவும். //

   கல்லூரி காலத்தில்/வேலைக்குச் சேர்ந்த புதிதில் படித்த கவிதைகள் நிறைய எழுதி வைத்திருக்கிறேன். பார்க்கலாம் எப்படிப் போகிறதென்று. :)

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 12. உத்திரப் பிரதேசம் முழுவதும் இது போல இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

  அதிர்ச்சி தகவல் கையூட்டு தேசத்தில் நாமும் அவலம் தான் .

  ஃப்ரூட் சாலட்.அருமை.

  ReplyDelete
  Replies
  1. //கையூட்டு தேசத்தில் நாமும் அவலம் தான் .//

   உண்மை சகோ. கையூட்டு மூலம் எதையும் சாதிக்க முடியும் என்று தோன்றுகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 13. இது போன்ற சம்பவங்கள் வெறும் உ.பி.யில் மட்டும் நடப்பதில்லை. அனைத்து இடங்களிலும் நடப்பது தான். என்ன உ.பி. யில் அதிகம். சமீபத்தில் கேரள மாநில லாட்டரியில் ஒரு கோடி பெற்ற குஜராத் ஏழை அது தரப்படாமல் இருந்த செய்தியைப் படித்தோம். காரணம், அவர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அரசு கூறுகிறது. விற்பனையாளர்கள் செய்த தில்லுமுல்லு-வினால் வெளி மாநிலத்தில் விற்பனைச் செய்வது தடைச் செய்யப் பட்டுள்ளதாம். இவரோ தான் கேரளாவில் வாங்கியதற்கான சான்றுகளைக் காட்டிய போது தரப்படவில்லை. இதுவாவது பரவாயில்லை. உழைப்பால் வந்த பணம் இல்லை. ஆனால் பதிவில் சொல்லப்பட்டச் சம்பவமோ மிகவும் வருத்தம் தரக் கூடியதே.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றிடா சீனு! [வெங்கட ஸ்ரீனிவாசன்].

   Delete
 14. சரியான Ad... Superb..

  படித்ததில் பிடித்தது

  எனக்கும் பிடித்தது

  ReplyDelete
  Replies
  1. ஸ்வர்ணரேக்கா - நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களது வருகை. மிக்க மகிழ்ச்சி.

   Delete
 15. Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 16. சங்கம் வேறயா..ம்..
  பணத்துக்காக கொன்னுபோடறமாதிரி இது வாழ்ந்துக்கிட்டிருக்கும்போதே கொல்ற புது முறை போல..

  ReplyDelete
  Replies
  1. //வாழ்ந்துக்கிட்டிருக்கும்போதே கொல்ற புது முறை போல..//

   அப்படித்தான் தெரியுது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 17. அடப் பாவிகளா....என்று சொல்லத் தோன்றுகிறது. காசுக்காக என்ன செய்யவும் துணியும் மனிதர்கள்... இவர்களுக்கு உறவுகள் என்று பெயர்! இற்றையும் குறுந்தகவலும் டாப். ஸுஜாதா விஜயராகவன் - கேள்விப் பட்ட பெயராக இருக்கிறது. மொத்தத்தில் சாலட் சுவை.

  நடுவில் கணினித் தொந்தரவினால் இடைவெளி!

  ReplyDelete
  Replies
  1. //காசுக்காக என்ன செய்யவும் துணியும் மனிதர்கள்... இவர்களுக்கு உறவுகள் என்று பெயர்! //

   அதுதான் கொடுமையே... :(

   //நடுவில் கணினித் தொந்தரவினால் இடைவெளி!//

   கணினிக்கு உடம்பு சரியா போச்சா? நல்ல டாக்டரிடம் காண்பியுங்கள்... இல்லாதப்போ எவ்வளவு கஷ்டமாயிடுதுல்ல :(

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 18. // மண்ணாசை, பொன்னாசை, பொருளாசை// அரசனாய் இருந்தாலும் சரி ஆண்டியாய் இருதாலும் சரி ஆசை ஒருவரை விட்டு வைபதில்லை, பாவம் பெயரில் மட்டுமே சந்தோசத்தை வைத்திருக்கும் சந்தோஷ் சிங்

  சாலட் சுவை அதிகம்


  படித்துப் பாருங்கள்

  தல போல வருமா (டூ) பில்லா டூ

  http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html

  ReplyDelete
  Replies
  1. பெயரில் மட்டுமே சந்தோஷத்தை வைத்திருப்பவர்... ஆமால்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு. உங்க பக்கமும் வரேன்....

   Delete
 19. Thrilling .. interesting.. Mixture of many feelings..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 20. வாரனாசிக்குப் போனால் பாவம் தொலையும் என்று இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு காசிக்கு போகிறார்கள். இங்க இன்னடான்னா காசியில் இருந்து கொண்டே அடுத்தவன் சொத்தை அபகரிக்கிறான்யா! இவன் எங்க போனால் பாவம் தொலையும்? அதான் அடுத்த பிறவியில் எலியாய் பிறந்து பொறியில் சாகுறானோ?

  ReplyDelete
  Replies
  1. //வாரனாசிக்குப் போனால் பாவம் தொலையும் என்று இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு காசிக்கு போகிறார்கள். இங்க இன்னடான்னா காசியில் இருந்து கொண்டே அடுத்தவன் சொத்தை அபகரிக்கிறான்யா! //

   அதானே.. பொறியில் மாட்டிய எலி என்ன ஆயிற்று பார்த்தீர்களா? [வீடியோ ப்ளாக் பண்ணியிருக்குமே ஆஃபீஸ்ல..]

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்]

   Delete
 21. ஒன்னுமே புரியல்லே உலகத்திலே.

  ReplyDelete
  Replies
  1. அதே நிலைதாம்மா இங்கேயும்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா!

   Delete
 22. என்ன தேசமோ! இது என்ன தேசமோ? எனும் பாடல் வரிகள் ஞாபகம் வந்தது! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. நல்ல பாடல் அது... நினைவூட்டியதற்கு நன்றி நண்பரே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 23. Read it in the morning..couldn't comment...even now...as usual you rock Venkatji...

  ReplyDelete
  Replies
  1. ஓ கருத்திடுவதில் உங்களுக்குப் பிரச்சனையா? அமைதிச்சாரல் அவர்களும் சொன்னார்கள். என்ன பிரச்சனை புரியவில்லை!

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 24. பணம் பத்தும் செய்யும் என்றுதான் தெரியும். இது பதினொன்றாவது போல.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா.

   Delete
 25. Replies
  1. ரசிப்பிற்கு நன்றி கே.பி.ஜே. சார்.

   Delete
 26. எங்கும் கலிகாலம்.

  தொகுப்பு அருமை.

  ReplyDelete
  Replies
  1. கலிகாலம்! :(

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 27. ஹச்சச்சொ.. இறப்பு சான்றிதழ் வாங்கிட்டதால தன்னையே நிரூபிக்க வேண்டிய நிலை ரொம்ப ரொம்பக் கொடுமையான விஷயம். இப்படி நிறையப் பேர் இருக்காங்கன்னு வேற சொல்லிருக்கீங்க. இந்தியாவின் முதுகெலும்பு என்று (வார்த்தைகள்ல மட்டும்) சொல்லப்படற விவசாயிகளின் நிலை மனதை உருக்கிடுச்சு. இறுதியில நீஙக சொல்லியிருக்கற கவிதையும், இற்றையும் சூப்பர் சார். ப்ரூட் சாலட் நல்ல டேஸ்ட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 28. இது என்ன கொடுமை! நம் நாடு என்ன சுதந்திர நாடா?

  வேதனை மட்டுமல்ல! வெட்கம்!வெட்கம்!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. கொடுமை தான் ஐயா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.

   Delete
 29. அச்சச்சோ! மேரா கமென்ட் கஹா ஹை ஜி?

  சரி!புதுசா போட்டுடறேன்.

  முதல் செய்தி அதிர்ச்சி!
  முகப்புத்தக இற்றையும் குறுஞ்ச்செய்தியும் அருமை
  காணொளி சுவாரஸ்யம்.
  கண்ணம்மா மனதை பாரமாக்கினாள்.
  மொத்தத்தில் ஃப்ரூட் சாலட் நாளுக்கு நாள் சுவை கூடிக்கொண்டே வருகிறது.பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. //அச்சச்சோ! மேரா கமென்ட் கஹா ஹை ஜி?//

   உங்க கமெண்ட் வரலையே [ரா]ஜி! பிளாக்கர் கிளி கொத்திட்டுப் போயிடுச்சா?

   தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 30. தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டே தூங்கவேண்டும் என்று சொல்வார்கள். இல்லயென்றால் இறந்துவிட்டான் என்று சொல்வார்களாம் அது போல் ஆகிவிட்டதே இவரது கதை.
  எடுத்துக்காட்டிய கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. //தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டே தூங்கவேண்டும் என்று சொல்வார்கள். //

   சரிதான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 31. இறந்ததாகச் சொல்லப்பட்டவரே நேரில் வந்து சொன்னாலும் ஏற்ருக் கொள்ள மறுக்கும் சட்டமும்,நீதியும்! என்ன அவல நிலை.?

  ReplyDelete
  Replies
  1. அவல நிலை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஜி!

   Delete
 32. மனிதநேயம் மறந்து போனதோ மனிதர்களுக்கு என்று எண்ணத் தோன்றுகிறது.
  பல்லிக்கு இருக்கும் பண்பு கூட மனித மனங்களுக்கு இல்லாமல் போனதை நினைக்கையில் மனம் மிகவும் வலிக்கிறது. கவிதை அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....