எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 9, 2012

சுருட்டு பிடித்த முருகப் பெருமான்!


அப்படியே பறந்து ஒரு ரவுண்ட் போய்வரலாமோ என கேட்கிறார்களோ வள்ளியும் தெய்வானையும்?

[பட உதவி: கூகிள்]

முருகப் பெருமான் வள்ளி மற்றும் தெய்வாணையை கரம் பிடித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தனது இரண்டு தேவியரின் கரம் பற்றிய அதே கரத்தால் சுருட்டும் பிடித்தார் என்றால் அதிர்ச்சி ஏற்படாதா நமக்கு? ஆமாம் அவர் சுருட்டும் பிடித்தார். எதற்காக என்று பார்க்கலாமா?


அழகின் மறுபெயர் முருகனோ?
[பட உதவி: கூகிள்]


சமீபத்திய தமிழக பயணத்தின் போது சென்ற சில கோவில்களில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டத்திலிருக்கும் விராலிமலை. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விராலிமலைக்கு நிறைய பேருந்துகள் இயங்குகின்றன. காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். 

திருச்சியிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் சண்முகநாதன் குடிகொண்டிருக்கும் விராலிமலை கோவில் 1000 – 2000 வருடங்கள் பழமையான கோவில். இதற்கு பல சிறப்புகள் உண்டு. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் 16 பாடல்களில் இங்கு குடிகொண்டிருக்கும் முருகப் பெருமானைப் பற்றி பாடியிருக்கிறார்.


இப்டிக்கா மேலே போனா என்னப்பன் முருகனைப் பார்க்கலாம்...

திருச்சியின் அருகிலிருக்கும் வயலூரில் அருணகிரிநாதருக்கு காட்சியளித்தபோது அவரை விராலிமலைக்கு வரச் சொல்லவே, அவரும் விராலிமலை நோக்கிச் செல்ல, பாதி வழியிலேயே,  எப்படிச் செல்வது எனத் தெரியாது தவித்திருக்கிறார். அச்சமயத்தில் விராலிமலைவாழ் சண்முகநாதன் வேடனாக வேடம் தரித்து அருணகிரிநாதரை அழைத்து வந்தாராம். 


”வேல் வேல் வெற்றிவேல்” சொல்லியபடியே படி ஏறிடுவோம் வாருங்கள்


விராலிமலை நிறுத்தத்தில் இறங்கி கோவிலுக்கு எந்த வழியில் செல்வது எனத் தெரியாது விழித்தபோது, அருணகிரிநாதருக்கு வேடன் வேடத்தில் வந்து வழிகாட்டியது போலவே எங்களுக்கும் பேருந்தில் வந்த ஒரு அன்பர் மூலம் வழிகாட்டினான் சண்முகநாதன். அவர் பின்னோடு நாங்களும் சென்று, மலை அடிவாரத்தில் அர்ச்சனை தட்டுகள் வாங்கிக்கொண்டோம்.  சிறிய பூமாலை, தேங்காய், பூஜைப் பொருட்கள் தட்டு 40 ரூபாய். காலணிகளையும் அங்கேயே கழட்டி விட்டு காலை வெய்யிலில் படி ஏற ஆரம்பித்தேன் மனைவி மற்றும் மகளுடன். 


கோவில் கோபுரம் பார்த்தா கோடி புண்யமாம்...
படிக்கும் உங்களுக்கும் புண்யம் சேர்க்க படம் எடுத்து வந்தேன்....

வழியிலே கந்தனுக்கு மூத்தவனையும், இடும்பனையும் வழிபட்டோம். அருணகிரிநாதருக்கு வழி சொல்லியதை இங்கே ஒரு அழகிய படமாக வரைந்திருக்கிறார்கள். இந்த தலத்தின் சில சிறப்புகளைப் பார்க்கலாம்.

முனிவர்கள் இம்மலையில் குராமரங்கள் வடிவில் விராவியிருந்து [பரவியிருந்து] அருள்மிகு சுப்ரமணியசுவாமியை வழிபடுவதால் இம்மலை விராலிமலை என்று அழைக்கப்படுகிறது.
 
நாரதரின் தந்தையான பிரம்மாவின் சிரசை சிவபெருமான் கொய்ய, அவரை நிந்தனை செய்தாராம் நாரதர். அதனால் மயங்கிய நாரதருக்கு, விராலிமலை முருகன் அருள் புரிந்தாராம். நாரதமுனிவருக்கு இங்கே உற்சவ மூர்த்தியுண்டு. விழாக்காலங்களில் நாரத முனிவரின் உற்சவ மூர்த்தியும் திருவீதியுலா வருவார்.
 
”என்னை வழி வழி தொண்டு செய்யும் அன்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என வேண்டிய அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தியும் அளித்த இடம் இவ்விராலிமலை.
 
தெற்கு குடகு சுவாமி, எச்சில் பொருக்கி ஆறுமுக சுவாமிகள், சடைச்சாமி போன்ற சித்தர்கள், முனிவர்கள் மற்றும் தேவர்கள் வாழ்ந்த திருத்தலம்.

அதெல்லாம், சரி அது என்ன சுருட்டு பிடித்தார் முருகப்பெருமான் அப்படின்னு சொல்லிட்டு அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே என கேட்பவர்களுக்கு, இதோ அந்த கதை. 

ஒரு முறை முருகப்பெருமானை சந்திக்க கருப்ப முத்துப் பிள்ளை என்ற பக்தர் வந்த போது பெரும் காற்றுடன் கடும் மழை பொழிய, வெள்ளப் பெருக்கெடுத்தோடும் ஆற்றைத் தாண்டி முருகனை தரிசிக்க எப்படிப் போவது என திகைத்தார். குளிர் தாங்காது ஒரு சுருட்டினை எடுத்துப் பற்ற வைக்கும்போது பார்த்தால், பக்கத்தில் குளிரில் நடுங்கியபடி ஒருவர். ”சுருட்டு வேணுமா?” எனக்கேட்டு அவருக்கும் அளிக்க, இருவருமாகச் சேர்ந்து ஆற்றைக் கடந்து பார்த்தால் அந்த நபரைக் காணவில்லையாம். சரியென, கருப்பமுத்து முருகப் பெருமானின் சன்னிதிக்குச் சென்று வழிபட ஆங்கே சன்னிதியில் முருகப் பெருமான் முன்னே ஒரு சுருட்டு. ஆச்சரியப்பட்டு அங்கே இருந்தவர்களிடம் சொல்ல, அன்றிலிருந்து இன்றுவரை முருகப்பெருமானுக்கு, மாலை வேளைகளில் நைவேத்தியமாக சுருட்டு படைக்கப்படுகிறது.


விராலிமலை கோவில் மற்றோர் தோற்றம்

[பட உதவி: கூகிள்]

”அட இது கெட்ட பழக்கமாச்சே, ”புகை பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு!” என்று எல்லாம் வல்லவனுக்குத் தெரியாதா?” என நினைத்து புதுக்கோட்டை மகாராஜா அதற்குத் தடை விதிக்க, அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான் ”துன்பப்படும் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல மனதோடு தந்ததனால், அது தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன். அது தொடரட்டும். துன்பப்படுவோருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போதாவது மக்களுக்குத் தோன்றும்”, எனச் சொல்லிவிட, இன்றளவும் இந்த சுருட்டு நைவேத்தியம் தொடர்கிறது. 

இறைவனுக்கு என்ன படைக்கிறோம் என்பது முக்கியமல்ல, பக்தியும், அன்புடனும் எதைப் படைத்தாலும் இறைவன் ஏற்றுக்கொள்வார். தில்லி வாழ் வட இந்தியர்கள் சனிபகவானுக்கு Parle-G பிஸ்கெட்டை நைவேத்தியம் செய்வதை, ஒரு மார்க்கமாக பார்த்திருந்த எனக்கு இந்த தத்துவம் இப்போதுதான் புரிகிறது.

மலையேறி முருகப் பெருமானை மனதார தரிசித்து கையில் வைத்திருந்த அர்ச்சனைத் தட்டு, பை ஆகியவற்றை கீழே வைத்து நமஸ்கரித்து எழுந்திருக்கும்போது என் மகளும் மனைவியும் “வீல்” என்று அலற, அனைவரும் ஸ்தம்பித்தனர்... 


ஏனிந்த சோகம்... மகிழ்ச்சியைப் பறித்த மந்தி யாரோ?


”விராலிமலையில் நிறைய மயில் இருக்கும்டா” என அம்மா சொல்லியிருந்தார். ஆனால் மயிலுக்கு பதில் கோவில் பிரகாரம் முழுக்க இருந்தது குரங்குகள். அக்குரங்குகளில் ஒன்று கீழே வைத்த பையில் இருந்த மகளின் ஸ்லைஸ் பாட்டிலை எடுத்துக்கொண்டு ஓடியதால் தான் அந்த அலறல். தனது ஸ்லைஸ் பாட்டிலை எடுத்துக் கொண்டதால் மகளுக்குச் சோகம்.  “இனிமே இந்தக் கோவிலுக்கு வரவேண்டாம்பா!” என்றாள் :)  பாவம் குழந்தைதானே… 

முருகப்பெருமானை நிம்மதியாய் தரிசித்து பேருந்து பிடித்து வீடு வந்து சேர்ந்தோம். பிறிதோர் பதிவில் வேறோர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

58 comments:

 1. சுவாரஸ்யமாக ஒரு பயணக்கட்டுரை எழுதுவது
  எப்படி என்பதற்கு இந்தப் பதிவை ஒரு
  உதாரணமாகக் கொள்ளலாம்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. Replies
  1. தமிழ்மணம் இரண்டாம் வாக்கிற்கு நன்றி ரமணிஜி.

   Delete
 3. வெனகட் ஜி அவர்களே! சர்ச்சிலுக்கு சுருட்டு அனுப்பிய ஊர் உறையூர்.அந்த கம்பேனி முதலாளி விஸ்வநாதன் கிளப்பிவிட்ட கதையாகவுமிருக்கலாம். பதிவின் ஆரம்பத்தில் smoking is injurious to health என்ற சட்டபூர்வமான எச்சரிக்கையை போட்டுவிடும். இல்லையென்றால் பாட்டாளிமக்கள் கட்சிகாரங்க வம்பு பண்ணப்போராங்க! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

  ReplyDelete
  Replies
  1. //வெனகட் ஜி அவர்களே! சர்ச்சிலுக்கு சுருட்டு அனுப்பிய ஊர் உறையூர்.அந்த கம்பேனி முதலாளி விஸ்வநாதன் கிளப்பிவிட்ட கதையாகவுமிருக்கலாம். //

   :)))

   தங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி காஷ்யபன் ஜி!

   Delete
 4. ரொம்ப நாளாகவே விராலிமலை செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டு.இந்த பதிவைப் படித்ததும் சென்று வந்தது போலவே ஒரு திருப்தி.பகிர்விற்கு நன்றி.

  பாவம் குழந்தைதானே.ஸ்லைஸ் பாட்டில் போனா பெரியவங்களே கடுப்பாவாங்க.அவ பாவம் குழந்தைதான?வேற ஒண்ணு வாங்கி தந்திருக்கப் படாதோ?

  ReplyDelete
  Replies
  1. //பாவம் குழந்தைதானே.ஸ்லைஸ் பாட்டில் போனா பெரியவங்களே கடுப்பாவாங்க.அவ பாவம் குழந்தைதான?வேற ஒண்ணு வாங்கி தந்திருக்கப் படாதோ?//

   மலையை விட்டு இறங்கிய உடனே சின்னக் குழந்தைக்கு ஸ்லைஸ்-உம், பெரிய குழந்தைக்கு ஸ்ப்ரைட்டும் வாங்கிக் கொடுத்துட்டேன் சகோ :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 5. //நாரதமுனிவருக்கு இங்கே உற்சவ மூர்த்தியுண்டு. //

  அட!!!!!!

  நைவேத்தியம் பண்ணிட்டு அப்புறம் பிரஸாதமா சுருட்டு தர்றாங்களா?

  அன்றைக்கு அனுமனுக்கு தாகம். அதான் ஸ்லைஸ் பாட்டில் போச்சு!

  பாவம். குழந்தை பயந்துதான் போயிருக்கு:(

  ReplyDelete
  Replies
  1. //அன்றைக்கு அனுமனுக்கு தாகம். அதான் ஸ்லைஸ் பாட்டில் போச்சு! //

   அதானே, அனுமனுக்கு தண்ணீர் தாகம் தீர்த்து விட்டோம்....

   கீழே இறங்கி வரும் வரை ஒரு கலக்கத்துடன் தான் இருந்தாள்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 6. இது புதியத் தகவல்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   Delete
 7. பாவமா இருக்கா ரோஷ்ணி..
  ரெண்டு ஸ்லைஸ் பாட்டில் அப்பறமா வாங்கிக்கொடுத்தீங்க தானே..

  சுருட்டு..பார்லேஜி எல்லாம் புதுசா இருக்கு..
  நாங்க புதுக்கோட்டையிலிருந்து மதுரைபோகிற வழியில் (குடுமியான்மலை போய்ட்டு) விராலிமலையைத்தாண்டிப்போனோம்.. ஆனால் நேரமின்மையால் அடுத்தமுறைன்னு நினைச்சிக்கிட்டொம்..

  ReplyDelete
  Replies
  1. //பார்லேஜி எல்லாம் புதுசா இருக்கு..//

   தில்ஷாத் கார்டன் கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பார்த்திருக்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 8. துன்பப்படுவோருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போதாவது மக்களுக்குத் தோன்றும்”, எனச் சொல்லிவிட, இன்றளவும் இந்த சுருட்டு நைவேத்தியம் தொடர்கிறது./

  குகன் அன்புடன் தந்த மீனும் தேனும் ஏற்றுக்கொண்டவரும் ,
  சபரி அன்னை தந்த எச்சில் கனிகளை ஸ்வீகரித்துக்கொண்டவருமான இராமபிரானின் அன்பு மருகனாயிற்றே முருகன் !

  சிறப்பான பகிர்வுகளுக்கும் சிரத்தையான படங்களுக்கும் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 9. good would like to share one thing about this temple! that will be here tomorrow!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நம்பள்கி!

   Delete
 10. அழகான படங்களுடன் சுவையான பயணக்கட்டுரை, வெங்கட்ஜி. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 11. அழகான வர்ணனையுடன் கூடிய பதிவு. முருகன் எல்லாருக்கும் பிடித்த கடவுள், செல்லாமலேயே கோபுர தரிசனமும் கிடைத்தது அதனால் கோடியில் பத்தி புண்ணியத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். TM(5)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 12. அது சரி வெங்கட், நைவேத்தியம் செய்யப்பட்ட சுருட்டுகள் என்னவாகின்றன என்பதையும் கொஞ்சம் விசாரித்து எழுதியிருக்கலாமே... நான் சுருட்டுப் பிடிப்பதில்லை, சிகரெட்தான், இருந்தாலும் ஒரு ஆர்வம்.
  அப்புறம், பிரகதி மைதான் அருகே, புரானா கிலாவுக்குப் பின்புறம் பைரோன் மந்திரில் நைவேத்தியமாக என்ன தரப்படுகிறது என்பது தெரியுமா... நான் அங்கே போயிருக்கிறேன். ஆனால் பிரசாதம் வாங்கிக் குடிக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. பைரவ் மந்திர் நானும் சென்றிருக்கிறேன் ஒரு வட இந்திய நண்பருடன். பிரசாதம் என்னவென்று எனக்கும் தெரியும்! :) நான் வாங்கிக் கொள்ளவில்லை!

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   Delete
 13. விராலிமலை ஒருமுறை சென்று தரிசித்ததுண்டு. ஆனால்... இவ்வளவு விரிவான தகவல்கள் தெரியாது. அருமையான பகிர்வுக்கு நன்றி. பாவம் குழந்தை... ஸ்லைஸ் பறிபோன ஏமாற்றம் புகைப்படத்தில் தெரிகிறது. நல்லா எடுத்திருக்கீங்க போட்டோ. உள்ளன்போடு எதைக் கொடுத்தாலும் இறைவனுக்கு உவப்பானது என்பதை அறிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கணேஷ்ஜி!

   Delete
 14. புதுசா இருக்கு சுருட்டுத் தகவல்.

  குழந்தைக்கு உடனே வேற ஸ்லைஸ் பாட்டில் வாங்கிக் கொடுத்திருப்பீங்கன்னு நம்பறேன்.

  ReplyDelete
  Replies
  1. //குழந்தைக்கு உடனே வேற ஸ்லைஸ் பாட்டில் வாங்கிக் கொடுத்திருப்பீங்கன்னு நம்பறேன்.//

   :) மலையிலிருந்து கீழே இறங்கியவுடன் வாங்கிக் கொடுத்து விட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 15. சுவாரஸ்யமான புதிய தகவல்!
  முருகன் ஒன்றுக்குப் பத்தாக ஸ்லைஸ் தருவார் உங்கள் பெண்ணுக்கு!

  ReplyDelete
  Replies
  1. //முருகன் ஒன்றுக்குப் பத்தாக ஸ்லைஸ் தருவார் உங்கள் பெண்ணுக்கு!//

   :)) முருகன் தந்தாரோ இல்லையோ, நான் வாங்கிக் கொடுத்துவிட்டேன் ஒரு ஸ்லைஸ்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஜி!

   Delete
 16. சுருட்டு நைவேத்தியம் பற்றி அறிந்து ஆச்சரியம் அடைந்தேன்

  ரோஷினியை சோகமாய் போட்டோ பிடிச்சிடீன்களே . இன்னொரு ஸ்லைஸ் வாங்கி தந்திருக்க வேண்டியது தானே (மறுபடி குரங்கு பிடுங்கும் என்ற பயமோ?)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன் குமார்.

   Delete
 17. எல்லாமே புது தகவல்கள் .பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 18. தங்களின் அழகிய சொல்லாடலில் ஆலய வழிபாடு சிறப்பாகவே இருந்தது. தொடருங்கள் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி “வரலாற்று சுவடுகள்”.

   Delete
 20. நாகராஜ் சார், விராலிமலை எங்க ஊர். அங்க இருக்கற அரசு பள்ளியில் நான் 5, 6, 7 வகுப்பு படித்தேன். நிறைய முறை போய் வந்த கோயில். ஆனால் போய் ரொம்ப வருசம் ஆன கோயில். ரொம்ப ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. பழைய நினைவுக்குச் சென்று திரும்பினேன். நன்றி ந்னறி

  ReplyDelete
  Replies
  1. ஓ, நீங்கள் இருந்த ஊரா விராலிமலை. மிக்க மகிழ்ச்சி ஆதிரா.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆதிரா.

   Delete
 21. சுவாரஸ்யமான பயணக்கட்டுரை வெங்கட்ஜி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 22. துன்பப்படும் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல மனதோடு தந்ததனால், அது தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன். அது தொடரட்டும். துன்பப்படுவோருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போதாவது மக்களுக்குத் தோன்றும்”

  நல்லது செய்ய வேண்டும் என்று உணர்த்திய சுருட்டு அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி...

   Delete
 23. நம்ம விக்கி உலகம்தான் சுருட்டு குடிப்பான்னு பார்த்தா ஹி ஹி இங்கேயுமா...?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ...

   Delete
 24. அருமையான ஆன்மீகப் பயணக் கட்டுரை. முருகனுக்கு சுருட்டு. ஆஞ்சனேயருக்கு ஸ்லைஸ். விராலி மலை முருகனுக்கு அரஹரோஹரா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி [ஈஸ்வரன்].

   Delete
 25. சுருட்டு நைவேத்யத்தின் பின்னணி சுவாரசியம். ஆனால் ஒரு நெருடல்...அந்த தலவரலாற்றின் உட்கருத்தை விட்டுவிட்டு குருட்டுத்தனமாக சுருட்டை மட்டும் 'பிடித்ததுக்' கொண்டிருக்கிறோமோ?? இது நல்ல மெசேஜ் உள்ள 3 Idiots படத்தில் குழந்தைகள் bathroom காட்சியை விழுந்து விழுந்து ரசிப்பதைப்போல தானே? இதை நாத்திகர்களோ, மற்ற மதத்தினரோ, அரசாங்கமோ சொன்னால் விபரீதமாகலாம். ஆனால் நாமே யோசித்துப் பார்த்தல் நல்லது.

  Parle G நைவேத்யம் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த இறைவனுக்கு இது இது சிறந்தது என்று முன்னோர்கள் வகைப் படுத்தி இருந்தாலும், நாம் சாப்பிடும் உணவை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு உண்பது நல்ல பழக்கம் என்று கருதுகிறேன் (ப்ரம்மார்ப்பணம் ...). அப்படிச் செய்யும்போது நம்முள் ஒரு கேள்வி தோன்றுமே, இது இறைவனுக்குப் படைக்க உகந்ததா என்று...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சூர்யா. சில விஷயங்கள் இப்படித்தான்.

   Delete
 26. ”விராலிமலையில் நிறைய மயில் இருக்கும்டா” என அம்மா சொல்லியிருந்தார். ஆனால் மயிலுக்கு பதில் கோவில் பிரகாரம் முழுக்க இருந்தது குரங்குகள். அக்குரங்குகளில் ஒன்று கீழே வைத்த பையில் இருந்த மகளின் ஸ்லைஸ் பாட்டிலை எடுத்துக்கொண்டு ஓடியதால் தான் அந்த அலறல். தனது ஸ்லைஸ் பாட்டிலை எடுத்துக் கொண்டதால் மகளுக்குச் சோகம். “இனிமே இந்தக் கோவிலுக்கு வரவேண்டாம்பா!” என்றாள் :) பாவம் குழந்தைதானே… //

  அம்மா சொன்னது சரிதான் விராலி மலையில் நிறைய மயில்கள் உண்டு. நான் விராலி மலை முருகனைப ப்ற்றி ப்திவு போட்டு இருக்கிறேன். அதில் மயில் படியேறி முருகனை வணங்க வருகிறது என்று மயில் ஏறும் படம் போட்டு இருக்கிறேன். மயில் முகத்தை காட்டாமல் ஆடியதை பகிர்ந்து இருக்கிறேன்.

  குரங்களும் இருந்தன. குழந்தையின் ஸ்லைஸ் பாட்டிலை எடுத்துக் கொண்ட குரங்குக்கு மிகவும் தாகம் போலும்.
  நல்ல பயந்து விட்டாளா குழந்தை? விராலி மலை முருகனின் கோரிக்கை படி நல்ல செயல் செய்து இருக்கிறீர்கள் குரங்கின் தாகம் தணித்து.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   அங்கே மயில்கள் இருப்பது பற்றி நானும் படித்திருக்கிறேன். பெண்ணுக்குக் காட்ட ஆசையாகத்தான் இருந்தது. குரங்கு செய்த கலாட்டாவில் அங்கே கொஞ்ச நேரம் இருக்க முடியாமல் போய்விட்டது!

   Delete
 27. பயணக்கட்டுரை இரசிக்கும்படி இருந்தது! பகிர்வுக்கு நன்றி நண்பரே!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 28. நானும் விராலிமலையில் மயில் பார்க்கத்தான் வந்தேன்.:))

  உடனே சோகம் தீர்ந்தது மகிழ்ச்சியாகி இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... நீங்களும் மயில் பார்க்கக் குடுத்து வைக்கலையே...

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 29. Perhaps a 'slice of luck' for the monkeys!!

  ReplyDelete
  Replies
  1. Yes... Luck for the Monkeys... But sorrow for my little angel. :)

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சூரி [Sunnyside]

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....