எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, August 31, 2012

ஃப்ரூட் சாலட் – 10 – டபுள் டெக்கர் – இளவரசி டயானாஇந்த வார செய்தி:  தில்லியின் சராய் ரோஹில்லா ரயில் நிலையத்திலிருந்து ஜெய்பூருக்கு புதிதாக இரண்டடுக்கு ரயில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.  சாதாரணமாக ஷதாப்தி வண்டிகளில், ஒரு பெட்டியில் 78 இருக்கைகள் இருக்கும்.  இந்த புதிய வண்டியில் 120 இருக்கைகள்.  12 குளிரூட்டப்பட்ட பெட்டிகள் உள்ள இந்த இரண்டடுக்கு ரயில் தில்லியிலிருந்து பிரதி தினமும் மாலை 05.35 மணிக்குக் கிளம்பி இரவு 10.05 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும்.  அதே போல தினமும் காலை 06.00 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து கிளம்பி 10.30 மணிக்கு தில்லி வந்தடையும். 


[வெளிப்புறத் தோற்றம்]


[உட்புறத் தோற்றம்]
[படங்கள் உதவி:  கூகிள் இருக்க பயமேன்!]


தில்லிக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையே இருக்கும் 300 கிலோ மீட்டர் தூரத்தினை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் இந்த வண்டியில் செல்ல நீங்கள் தரவேண்டியது வெறும் 327/- மட்டுமே.

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இவ்வண்டி தயாரிக்கப்பட்டது பஞ்சாப் மாநிலத்திலுள்ள கபூர்தலாவில்.  இந்த வண்டியின் ஒரு பெட்டி தயாரிக்க ஆகும் செலவும் ரொம்பவே கொஞ்சம் தானாம்  – அதாவது மூன்று கோடி! சாதாரண குளிரூட்டப்பட்ட பெட்டி தயாரிக்க இதில் பாதி தான் ஆகுமாம்!

இந்தியாவில் ஏற்கனவே ஹௌராவிலிருந்து [D]தன்பாத்[dh] வரைக்கும் இந்த இரண்டடுக்கு ரயில் இருந்தாலும் எங்கள் ஊருக்கும்  வந்திருப்பதில் மகிழ்ச்சியே.  சீக்கிரமே இந்த வண்டியில் பயணம் செய்து ஜெய்பூர் போனாலும் போவேன். போய் வந்தால் நிச்சயம் அதைப் பற்றிய ஒரு பகிர்வு உண்டு!இன்னிக்கு தேதி 31 ஆகஸ்ட்…  1997-ஆம் வருடம் இதே நாளில் தான் ஒரு சோகமான விஷயம் நடந்தது.  டயானாவைத் தெரியாத ஆள் ஏது?  அதாங்க நம்ம இங்கிலாந்து இளவரசி டயானா.  இந்நாளில் தான் அவரது துணைவர் டோடி ஃபாயேத் என்பவருடன் காரில் பயணம் செய்யும்போது பாப்பராசி புகைப்படக்காரர்கள் துரத்தியதால் வேகமாகச் சென்று விபத்துக்குள்ளாகி இறந்து போனார். அவரது மரணம் இப்போது நினைத்தாலும் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.

நாக்கில் எலும்புகள் இல்லை.  ஆனால் ஒரு இதயத்தினை சுக்கு நூறாக உடைக்கும் அளவிற்கு பலமானது நாக்கு.  ஆகையால் கவனமாக பேசுங்கள்.
இறந்த பிறகு, எல்லோரையும் தத்தமது தவறுகளை ஒரு காகிதத்தில் எழுதச் சொன்னார் கடவுள். சில நொடிகளுக்குப் பிறகு ஒருவர் சத்தமாகக் கேட்டது -   “மச்சி, பேப்பரைத் தூக்கி காமி”.  நண்பேண்டா!...
எக்மோர் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது பக்கத்தில் ஒரு கணவன், மனைவி அவரது கைக்குழந்தை.  கூடவே ஒரு பெரியவர். 

பெரியவர்: “குழந்தையும் இவளையும் எதுக்கு கூட்டிட்டு வந்தே…. சின்னப் புள்ளைய தூக்கிட்டு வராதேன்னு சொல்லி இருந்தேனே?” 

அதுக்கு கணவன் சோகமா சொன்ன பதில் – “நான் வேண்டாம்னு தான் சொன்னேன்.  இவ தான் நான் வரலைன்னா நல்லா இருக்காது, நானும் வரேன்”னு வந்தா.  உங்க ரெண்டு பேர் கிட்ட நான் மாட்டிட்டு உதை படறேன் - ஃபுட்பால் மாதிரி!”

கேட்டுட்டு சிரிக்கறதா அழறதா தெரியல – மனுஷன் மிகவும் நொந்து போயிருக்கார் போல!

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் ‘காசளவு நேசம்’ என்ற தொடர் தொலைக்காட்சியில் வந்தது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம்.  அதில் ஒரு சிறிய பகுதி – குழந்தைகளுக்கான ”ட்விங்கிள், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” கர்நாட்டிக், கன்னடம், மலையாளம், பஞ்சாபி என்று விதவிதமாய் பாடி இருப்பார் ரேவதி சங்கரன்.  அதன் காணொளி உங்களுக்காக – ரசிப்பீர்கள் என்ற நினைப்புடன்!  வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 comments:

 1. வளமை போல் அருமை

  //“மச்சி, பேப்பரைத் தூக்கி காமி”.//

  :))

  ReplyDelete
  Replies
  1. தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்குமார்.

   Delete
 2. 300 கிலோ மீட்டர் தூரத்தினை நான்கரை மணி நேரத்தில் கடக்கும்...

  மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம் ...

  ஒரு பெட்டி தயாரிக்க மூன்று கோடி...!

  இதை விட வியப்பான தகவல் : நாம் தர வேண்டியது Rs.327/- மட்டுமே.

  மற்ற தகவல்கள் அனைத்தும் அருமை...

  (படங்கள் எல்லாம் எங்கே சார் பிடிக்கிறீங்க...?) நன்றி... (TM 3)

  ReplyDelete
  Replies
  1. பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி தனபாலன்...

   //படங்கள் எல்லாம் எங்கே சார் பிடிக்கிறீங்க...?//

   கூகிள் இருக்க பயமேன்.. :))

   தமிழ்மணம் மூன்றாம் வாக்கிற்கும் நன்றி!

   Delete
 3. ஃப்ரூட் சாலட் நல்லாவேயிருக்கு வெங்கட்ஜீ! அதுவும் ‘ நண்பேன்டா’ ஜோக் தூள்...!

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் பக்கத்தில் உங்கள் கருத்துரை! மிக்க நன்றி சேட்டை ஜி!

   நண்பேண்டா! - ரசித்தமைக்கு நன்றி.

   Delete
 4. அந்த ட்விங்கிள் பாட்டு சூப்பரா இருக்கும்..டபுள் டக்கர் ரயில் இங்கயும் வர போகுது

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   சென்னையிலும் வரப்போகுதா? மகிழ்ச்சி.

   Delete
 5. jaipur வண்டி படம் கிடைச்சா போடுங்க.

  ReplyDelete
  Replies
  1. படங்கள் சேர்த்தாச்சு அப்பாதுரை ஜி!

   வருகைக்கு மனமார்ந்த நன்றி.

   Delete
 6. நாக்கில் எலும்புகள் இல்லை. ஆனால் ஒரு இதயத்தினை சுக்கு நூறாக உடைக்கும் அளவிற்கு பலமானது நாக்கு. ஆகையால் கவனமாக பேசுங்கள்.

  டேஸ்ட்டி ஃப்ரூட் சாலட் !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

   Delete
 7. டபுள் டெக்கர் நல்லா இருக்குமே! போய் வந்து உள்ளே வெளியே படம் காமிங்க.

  ரேவதி பாட்டு டக்கர். ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. போய்ட்டு வரதுக்கு முன்னாடியே இரண்டு படங்களைச் சேர்த்தாச்சு இப்ப!

   ரேவதி சங்கரன் பாடிய - ஃபுல் வெர்சன் இங்கே - http://www.youtube.com/watch?v=DssSpNqbc64

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 8. neengal rasanai ullavarnga!

  sutrulaa idukai podunga!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 9. அருமை வெங்கட்ஜி. இரண்டாவது படத்தை நான் என்னிடம் சேமித்து வைத்து அடிக்கடி பார்த்து மகிழ்ந்து வருகிறேன். கமலாரஞ்சு தோலியையே மனிதனின் பின்புறமாகக் காட்டியுள்ளதுடன், அந்தத்தோலி மனிதனே அந்த மிகப்பெரிய முழுப்பழத்தையும் கஷ்டப்பட்டுத் தூக்கிச் செல்வது போல அமைந்த மிகவும் அருமையான படம் அது. ;)))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் படங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   மின்னஞ்சல் மூலம் அனுப்பிய தகவலுக்கும் நன்றி!

   Delete
 10. ரயில் பற்றிய செய்தி வியப்பு, நண்பேன்டா ஜோக் தந்தது மகிழ்வு. பழங்களின் புன்னகைப் படங்கள் கண்டு சிலிர்ப்பு. மொத்தமாய் ப்ரூட் சாலட் ரொம்பவே தித்திப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   பதிவினையும், படங்களையும் ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி கணேஷ்.

   Delete
 11. சீக்கிரம் டபுள் டக்கர் ட்ரையினி போய் படங்களுடன் எங்களுக்கு பதிவு போடுங்க சகோ.

  குறுஞ்செய்தி சூப்பர். :))

  ReplyDelete
  Replies
  1. போகறதுக்கு முன்னாடியே சில படங்கள் சேர்த்தாச்சு. குறுஞ்செய்தியை ரசித்தமைக்கு நன்றி.

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத்தென்றல்.

   Delete
 12. பாட்டு சுப்பருங்க அதுவும் எனக்கு மிகவும் பிடித்த ரேவதி சங்கரன் குரலில் படங்கள் அருமை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா நீங்களும் ரேவதி சங்கரன் ரசிகையா. இப்ப இந்த பாட்டு இன்னொரு வெர்சன் கூட வந்திருக்கு. யூ ட்யூப்ல இருக்கு. லிங்க் இதோ... http://www.youtube.com/watch?v=DssSpNqbc64

   இதை கேட்டு பாருங்க - இன்னும் பல மொழிகளில் அசத்தி இருக்காங்க...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 13. நடந்தது என்ன, இற்றை, குறுஞ்செய்தி எல்லாவற்றிற்கும் இணைத்திருக்கும் பழங்களின் படங்கள் மிகச் சுவாரஸ்யம். குறுஞ்செய்தி...:)))) மொத்தத்தில் சுவையான சாலட்!

  ReplyDelete
  Replies
  1. பதிவினை ரசித்து கருத்துப் பகிர்ந்ததற்கு நன்றி ஸ்ரீராம்.

   Delete
 14. டபுள் டெக்கர் ரயில்............என்ஜாய் !!!

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை அப்பாஜி! மிகவும் மகிழ்ச்சி.

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 15. காணொளி மிகவும் அற்புதம்! அருமையான சாலட்!பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 16. தகவல்கள் அருமை.. இம்மாதிரி டபுள்டெக்கர் சூப்பர் பாஸ்ட் வண்டிகள், நம்மூரில் எப்போது வரும் என ஆதங்கமாக இருக்கிறது.. சென்னை டூ திருச்சி - 3 மணி நேரத்தில் என ஒரு நான்ஸ்டாப் வண்டி இருந்தால் நன்றாக இருக்கும்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழூர் கார்த்தி!

   சென்னையிலிருந்து திருச்சிக்கு இருக்கோ இல்லையோ, பெங்களூருக்கு சில வருடங்களுக்குள் பெங்களூர்க்கு இந்த வண்டி விடப்போறாங்களாம்.

   நீங்களும் திருச்சி தானா!

   மீண்டும் நன்றி பழூர் கார்த்தி.

   Delete
 17. ஒரு இதயத்தினை சுக்கு நூறாக உடைக்கும் அளவிற்கு பலமானது நாக்கு. ஆகையால் கவனமாக பேசுங்கள்.

  சார‌ம் மிள‌குக் கார‌ம்.

  சால‌டின் சேர்மான‌ங்க‌ள் சுவையோசுவை.
  க‌ண்ணுக்கும் சேர்த்து விருந்து!

  ReplyDelete
  Replies
  1. கண்களுக்கும் விருந்து! இனிய பாராட்டிற்கு மகிழ்ச்சி நிலாமகள்.

   Delete
 18. பழக்கலவை மிகச் சுவையாக உள்ளது.
  பாடலும் முன்பு கேட்டது.
  பழங்களின் படங்கள் மிக ரசனையானது.
  நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தொடர் வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 19. //

  நாக்கில் எலும்புகள் இல்லை. ஆனால் ஒரு இதயத்தினை சுக்கு நூறாக உடைக்கும் அளவிற்கு பலமானது நாக்கு. ஆகையால் கவனமாக பேசுங்கள்.

  //

  செம,

  “மச்சி, பேப்பரைத் தூக்கி காமி" சிரிச்சு முடியல! :) :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

   Delete
 20. ஃப்ரூட் சாலட் நல்லாவேயிருக்கு !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 21. அருமையான தொகுப்பு சார். இனிமை.

  ReplyDelete
  Replies
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை. மிக்க மகிழ்ச்சி துரை டேனியல்.

   Delete
 22. அருமை சார்... அந்த ரயிலில் நான் எப்போது பயணிக்கப் போகிறேனோ ... ஆசையைக் கிளப்பி விட்டீர்கலே

  ReplyDelete
  Replies
  1. தில்லிக்கு வாங்க! நான் அழைத்துப் போகிறேன்! :)

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 23. படங்கள் நல்லா இருக்கு. சிட்னியில் இதுபோல் பார்த்துருக்கேன். எப்பவும் மாடிக்குப்போய் உக்கார்ந்தால்தான் எனக்குத் திருப்தி:-)))

  ReplyDelete
  Replies
  1. இத்தனை இடத்திற்குப் போகும் நீங்க நிச்சயம் எங்கேயாவது பார்த்திருப்பீங்கன்னு நினைச்சேன். :))

   மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 24. ஃப்ரூட் சாலட் மிகவும் அருமை வெங்கட்.
  அதிலும் ரேவதி சங்கரனின் காணொளி மிக மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றிம்மா.

   உங்கள் தனி மடலுக்கும் நன்றி.

   Delete
 25. அருமையான ஃப்ருட்சால்ட் தித்திக்குதே. ரேவதி சங்கரன் அவர்களின் காணொலி அருமையிலும் அருமை. நாக்கை பற்றி கூறியது அருமை. படங்கள் அனைத்தும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. பதிவினை ரசித்து கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ Rasan.

   Delete
 26. ரேவதி சங்கரனின் விசிறி நான் - அவர் மங்கையர் மலர் ஆசிரியையாகவும் இருந்தவர். இந்த பாடலைப் பற்றி சமீபத்தில் வேறு ஒரு இடத்தில் படித்த ஞாபகம். இப்பொழுது தான் கானொளியில் பார்க்கிறேன். Hats off.

  டபுள் டெக்கர் வண்டிகள் இங்கே அமெரிக்காவில் நிறைய இடங்களில் உண்டு. என்ன ஒன்று 6 அடி மேல் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம்.

  ReplyDelete
  Replies
  1. மங்கையர் மலரில் ஆசிரியராக இருந்தபோது நிறைய புதிய பகுதிகளை அறிமுகம் செய்தார்....

   //என்ன ஒன்று 6 அடி மேல் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம்.//

   எனக்கும் அனுபவம்! நான் 6’ 1” சாதாரண கோச்சிலேயே சைட் பர்த் கொடுத்தால் திண்டாட்டம் தான்... :(

   தங்களது வருகைக்கும் ஸ்ரீனிவாஸ் கோபாலன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....