எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, August 5, 2012

ஸ்ரீரங்கத்து தேவதைகள்.....

ஸ்ரீரங்கத்தினைச் சுற்றி நிறைய தோப்புகள் இருந்த காலம் எல்லாம் போச்சு...  சுற்றிச் சுற்றி கான்க்ரீட் காடுகள் வந்துவிட்டன.   தோப்புகளில் கூவித் திரிந்த மயில்களும், மற்ற பறவைகளும், விலங்கினங்களும் நிம்மதியாய் இருக்க இடம் இல்லாது போனது.  

சில மாதங்களாக ஸ்ரீரங்கம் வீட்டு மொட்டை மாடியில் சில மயில்கள் உலா வருகின்றனவாம்.  சென்ற பயணத்தின் போது, ஸ்ரீரங்கத்தில் எடுத்த சில மயில் படங்கள் மற்றும் காணொளி உங்களுக்காக!


[இரை தேடி வந்த மயில்]

[அதோ....  அந்தப் பக்கம் தான் நாங்கள் இருந்த தோப்பும் இருந்தது!]
[போதும் ஃபோட்டோ எடுத்தது... நான் பறக்கப் போறேன்!]

[மயிலக்கா நீங்க தலைய ஆட்டிட்டே நடக்கறது அழகு!]வேறு சில புகைப்படங்களோடு அடுத்த ஞாயிறு சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


50 comments:

 1. அருமை அருமை
  இப்படி இயற்கையாக பறவை இனங்களைக் கூட
  இதுபோல் காணொளிகளில்தான் பார்க்க முடிகிறது
  மனம் தொட்ட பதிவு
  அடுத்த வாரமும் பார்க்க ஆவலாக உள்ளோம்
  நிச்சய்ம் இன்னொரு மயிலையும்
  அழைத்துவரும் என நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மொத்தமாக நான்கு மயில்கள் இருக்கின்றன இப்போது. அனைத்துமே பெண் மயில்கள் தான். ஆண் மயில்களை ஏனோ காணமுடிவதில்லை.

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. Replies
  1. தமிழ்மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. சுஜாதா புக்குன்னு நினைச்சு உள்ளே வந்தேன். ரைட்டு ! உங்கள் பெண் ரோஷினி இவற்றை பார்த்து என்ஜாய் செய்கிறாளா?

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... தலைப்புப் பார்த்து உள்ள வந்தீங்களா? :))

   ஜாலி தான் ரோஷ்ணிக்கு!

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 4. அருமை .. ஸ்ரீரங்கம் எனக்கும் பிடித்தமானே ஊர். திருச்சிப் பக்கங்களில் மயில்களை காண முடிகின்றது. சென்னையில் காகங்கள் கூட காணமல் போய்விட்டன !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி இக்பால் செல்வன்.

   பறவையினங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வருகிறோம் என்பது ரொம்ப சோகம்....

   Delete
 5. படங்கள் அழகு.
  இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் மயில்களை எல்லாம் போடோடோலதன் பாகானும் போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் முரளி... படங்களில் தான் பார்க்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 6. வணக்கம் நண்பரே,
  குருவிகளுக்கு கூட இடம் இல்லாத வகையில்
  இன்றைக்கு மரங்கள் அழிக்கப்படுகின்றன.
  மரம் வளர்த்தால் நம் உயிரும் வளரும்
  சில உயிரினங்களும் வளரும் என்ற விழிப்புணர்வு
  இன்னும் அதிகமாக ஏற்படவேண்டும்.

  மயில்களின் படங்கள் மனத்தைக் கவர்ந்தது.

  ReplyDelete
  Replies
  1. //மரம் வளர்த்தால் நம் உயிரும் வளரும்
   சில உயிரினங்களும் வளரும் என்ற விழிப்புணர்வு
   இன்னும் அதிகமாக ஏற்படவேண்டும்.//

   சரியாகச் சொன்னீர்கள் மகேந்திரன்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 7. அலைபேசியின் வருகையால் பல ஊர்களில் பறவை இனங்களே முற்றிலும் அழிந்துவிட்டன.இக்பால் செல்வன் அவர்கள் கூறியதுபோல் சென்னையில் காகங்கள் கூட இன்றில்லை,மனிதக் காகங்கள் தான் வாழ்கின்றன.வாழ்க மனித இனம்.

  நண்பரே கண்களுக்கு விருந்தான மயில்களின் காணொளி அருமை.தொடருங்கள்.வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. //சென்னையில் காகங்கள் கூட இன்றில்லை,மனிதக் காகங்கள் தான் வாழ்கின்றன.//

   :(

   தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அறிவு கடல்.

   Delete
 8. //தோப்புகளில் கூவித் திரிந்த மயில்களும், மற்ற பறவைகளும், விலங்கினங்களும் நிம்மதியாய் இருக்க இடம் இல்லாது போனது. //

  உண்மைதான் வெங்கட்ஜி. பத்தாயிரக்கணக்கில் இருந்த தென்னை மரங்கள் அடர்ந்த தோப்பினை ஓர் 15 ஆண்டுகளுக்கு முன்பு அழித்து விட்டு
  C K V I என அழைக்கப்படும் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

  மேலூர் ரோடு பக்கம் தினமும் ஓர் புதிய அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

  மாம்பழச்சாலை பகுதிகளிலும் அப்படியே.

  மயில்கள் போன்ற பறவைகள் பாடு மிகவும் கஷ்டமே.

  படங்களில் மயில்கள் அழகாக காட்டப்பட்டு உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. மூலைத்தோப்பினைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. மேலூர் ரோடில் சில வருடங்கள் முன்பு கூட ஒரு தென்னந்தோப்பு இருந்தது. இப்போது எல்லா மரங்களையும் வெட்டி விட்டு காலியாக இருக்கிறது. சீக்கிரமே கான்க்ரீட் காடுகள் அங்கேயும் வந்துவிடும்!


   தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 9. ஸ்ரீரங்கத்து தேவதைகள்-மயில்கள் அழகாக உள்ளது ...
  வாழ்த்துக்கள்...(t.m.5)

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. மயில்கள் மற்ற பறவைகளை இனி புகைப்படத்தில் தான் காணமுடியும் போல இருக்கு. செல்போன் டவர் கதிர் வீச்சினால் குருவி மற்ற பறவை இனங்களும் அழிந்து வருவதாக ஒரு புக்கில் படித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 11. ம்ம்ம் அழகாகத்தான் இருக்கின்றன ஸ்ரீரங்கத்து மயில்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

   Delete
 12. ஓ....மயில்களைப் பற்றியா.... தலைப்பைப் பார்த்து என்னமோன்னு வந்தேன்!..மயில் படங்கள் அழகுதான்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா தலைப்பைப் பார்த்து நீங்களும் ஏமாந்துட்டீங்களா? :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. மயில்கள் எங்கிருதாலும் அழகே;ஸ்ரீரங்கத்தில்,வெங்கட்டின் கேமராவில் இன்னும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. //ஸ்ரீரங்கத்தில்,வெங்கட்டின் கேமராவில் இன்னும் அழகு!//

   ரொம்ப புகழாதீங்க சார் வெட்கமா இருக்கு! :))

   தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஜி!

   Delete
 14. அழகான படங்கள், அழகான காணொளி, ஆனால் எல்லாமும் பெண் மயில்களாகவே இருக்கின்றன. ஆண் மயிலைக் காணோமே? :((( அது தோகையை விரித்து ஆடும்போது காணக் கண்கொள்ளாக் காட்சி. மழைக்கு அது, இதுனு சொல்றதெல்லாம் உண்மையில்லை. பெண் மயிலைக் கவரவே ஆண் மயில் அப்படி ஆடும். ஆனால் அந்த லயம் இருக்கே! அருமை. ராஜஸ்தானில் கண்டு அனுபவித்திருக்கோம். இங்கே மயில்கள் வரலை. குயில்கள், கிளிகள், மைனாக்கள், கழுகுகள், பருந்துகள், கருடத் தம்பதிகள், நாரைகள், கொக்குகள்னு இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. மொத்தமாக நான்கு மயில்கள் இருக்கின்றன இப்போது. அனைத்துமே பெண் மயில்கள் தான். ஆண் மயில்களை ஏனோ காணமுடிவதில்லை.

   ஆண் மயில்களை இங்கே தில்லியில் கூட, சில வருடங்களுக்கு முன்பு இந்தர்புரியில் பார்த்திருக்கிறேன். காலை நேரங்களில் மொட்டை மாடியில் அழகாய் தோகை விரித்து ஆடும்....

   நீங்கள் சொல்வது போல பெண் மயிலைக் கவரவே ஆண் மயில் ஆடும்.

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 15. மயில்கள் மிக அழகு! அவற்றையொட்டிய வ‌ர்ணனைகளும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   Delete
 16. காணொளி பார்க்க இயலவில்லை, நெட் ஸ்லோவாக இருக்கிறது நண்பா....அப்புறமாக பார்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ. பாருங்கள்...

   Delete
 17. ஸ்ரீரங்கம் போய்ப் பார்க்க வேண்டும்.
  இந்த முறை இந்தியப்பயணத்தில் சுவாமிமலை அருகே தெருவில் மயிலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மயில் தொகை அதிகமாகிவிட்டதா இல்லை உண்மையிலேயே தோப்பு துரவெல்லாம் தொலைந்து போகின்றனவா?

  ReplyDelete
  Replies
  1. நிறைய தோப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன அப்பாதுரை ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 18. மயில் பெண்கள் ,உங்கள் வீடுதேடி வாராங்களா? கொடுத்துவைத்தவர்,
  பொறாமையா இருக்கு நண்பரே! மயில் என் அபிமான பறவை. இளமையில் வீட்டில் வளர்க்க ஆசைப்பட்டுள்ளேன்.

  ReplyDelete
 19. நான் இருப்பது தில்லியில். மயில்கள் வருவது ஸ்ரீரங்கத்தில்... அவ்வப்போது செல்லும்போது பார்க்க முடிகிறது...

  தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்... தொடர்ந்து வாருங்கள்....

  ReplyDelete
  Replies
  1. மயிலக்கா ஒயிலாக !!!

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 20. ஸ்ரீரங்கத்து தேவதைகள் அழகு...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 21. மயில்களை தேவதைகள் ஆகிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 22. " மயில்கள் மற்ற பறவைகளை இனி புகைப்படத்தில் தான் காணமுடியும் போல இருக்கு " என்கிற திருமதி லக்ஷ்மி அம்மாவின் கருத்து உண்மைதான். இருப்பினும் படங்களுக்கு வாழ்த்துக்கள்.

  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 23. ஓ! இதுதான் மயிலா! அதுதான் ஒயிலா நடைபயில்கிறது.

  ReplyDelete
  Replies
  1. அட ஆமா... இதுதாங்க மயிலு...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete
 24. ஆகா தேவதை ரொம்ப அழகு.

  காக்கா, குருவிகளி்ன் கீச்சிடும் சத்தங்களுடன் மயில் அக்கா கொத்திக்கொத்தி உண்பது அழகு. வீடியோ எடுப்பது தெரிந்து தலையை நிமித்தி உசாராகப் பார்க்கின்றார் போல.

  ReplyDelete
  Replies
  1. பின்னணியில் காக்கை குருவிகளின் குரல் மிக ரம்மியமாக இருந்தது. நான் சற்று தள்ளி மொட்டை மாடியில் கீழே அமர்ந்து எடுத்தேன். ஒரு வேளை இரண்டு மூன்று பேர் இருந்திருந்தால் பறந்திருக்குமோ என்னமோ....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 25. ஸ்ரீரங்கத்தில் 'மங்கம்மாநகர்' பக்கம் என்று நினைக்கிறேன் ( ? ), 74 -ல் ஜெய்ப்பூரில் பார்த்தேன் ; ஸ்ரீரங்கத்திலும்
  பார்க்கக்கிடைக்கிறது என்று , இவ்வளவு நாட்களாக தெரியாது ; அடுத்த மாதம் போவதாக plan --விஜரிக்கிரேன் ;
  இந்த பகிர்வுக்காக நன்றி ...மாலி

  ReplyDelete
  Replies
  1. நான் பார்ப்பது வடக்கு அடயவளஞ்சான்... கொள்ளிடம் பக்கம்.

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வி. மாலி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....