எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, September 7, 2012

ஃப்ரூட் சாலட் – 11 – ஒலிம்பிக் வெள்ளி – கல்யாண கவிதைசென்ற மாதம் லண்டனில் நடந்த ஒலிம்பிக்ஸ்-ல் இந்தியா ஆறு பதக்கங்கள் வென்றது.  ஊடகங்களிலும் செய்தித் தாள்களிலும் இந்தப் போட்டிகள் பற்றி நிறைய செய்திகள் வந்த வண்ணமே இருந்தது.  பதக்கங்கள் வென்று திரும்பிய விளையாட்டு வீரர்களுக்கு, பல முதலமைச்சர்கள், அரசியல்வாதிகள், நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பணமும், பொருளும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் நான் இங்கே சொல்லப்போவது அதைப் பற்றி அல்ல.இந்த மாதம் ஒன்பதாம் தேதி முடிவடையும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்து 10 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.  இதில் கடந்த செவ்வாய் அன்று உயரம் தாண்டுதல் போட்டியில்  1.74 மீட்டர் அளவு தாண்டி இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தினை தந்திருக்கிறார், 24 வயதான கிரிஷா ஹோசனகரா நாகராஜேகவுடா என்னும் கர்நாடகத்தினைச் சேர்ந்த இளைஞர்.

இடது காலில் பிரச்சனையுள்ள திரு கவுடாவும் தங்கப் பதக்கம் வென்ற நபரும் ஒரே அளவு உயரத்தினைத் தாண்டியிருந்தாலும், குறைவான முயற்சிகளில் வென்றதற்காக தங்கம் மற்றவருக்குச் சென்று விட்டது.  இந்த இளைஞர் பதக்கம் வென்றது பற்றி பல நாளிதழ்களில் வெறும் பெட்டிச் செய்தியே வந்தது.  சென்ற மாதம் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு கோடியில் பண மழை பொழிந்து கொண்டிருக்க, இவருக்கு லட்சங்களில் பணம் கொடுக்கக் கூட யோசிக்கிறார்கள். 

மேலும் இந்த ஒலிம்பிக் போட்டிகளைக் காரணம் காட்டி அலுவலகர்கள் தன்னுடைய சொந்தங்களையே லண்டனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.  10 மாற்றுத்திறனாளிகளை கவனித்துக் கொள்ள இரண்டே இரண்டு உதவியாளர்கள்! 

என்னேரமும் கிரிக்கெட்டையே கட்டி அழும் நிறுவனங்களும் கவுடா போன்றவர்களுக்கு உதவி செய்யலாமே!  மேலும் மக்களும் இவர்கள் போன்றவர்களையும் பாராட்டலாம் இல்லையா.  ”என்று நடக்கும் இதெல்லாம்?” என்ற ஆதங்கம் தான் மிஞ்சுகிறது.


இன்று செப்டம்பர்  7. இதே நாள், 1986-ஆம் வருடம் தெற்கு ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தின் ஆர்ச் பிஷப் பதவியை திரு தேஷ்மாண்ட் டுடு பெற்றார். தனது இன மக்களை ஒதுக்கி வைத்ததற்கு எதிராய் அமைதியான முறையில் போராடியதற்கு, நோபல் பரிசு பெற்றவர் இந்த தேஷ்மாண்ட் டுடு.இவர் எனது நினைவில் இன்றுவரை நிற்பதற்கு வேறொரு காரணமும் உண்டு!!.  எங்கள் கல்லூரியில் முதலாமாண்டு சேரும்போது ஒரு பெண்ணும் சேர்ந்தார் – சில நாட்களிலிலேயே வேறொரு கல்லூரியில் இடம் கிடைத்ததால் கல்லூரியை விட்டு விலகிச் சென்றார் – அந்தப் பெண்ணுக்கு நாங்கள் வைத்த பெயர் – தேஷ்மாண்ட் டுடு…  :)Forget your own sadness by creating a little happiness for others.  Because when you are good to others, you are best to yourself.”திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்
அப்படியானால்
என் கண்ணே
நம் திருமணம் மட்டும்
ஏன்
செட்டிப்பாளையத்தில்
நிச்சயிக்கப்பட்டது?”

இக்கவிதையை எழுதியது சக்திகனல்.  படித்தது கணையாழியின் கடைசிப் பக்கங்கள் புத்தகத்தில்…

அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-உடன் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

66 comments:

 1. கவிதையும் quote-ம் அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 2. கவுடாவிற்கு இந்திய விளையாட்டு வாரியத்தில் கோச் பதவி தந்துள்ளார் மக்கென். மேலும் சாய்னா இரண்டு லட்சம் பரிசு தந்துள்ளார் (இன்றைய செய்தி)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தகவலுக்கும் நன்றி கார்த்திக்.

   Delete
 3. ஃப்ரூட் சாலட் -- அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. தித்திப்பான ஃப்ரூட் சலட். வித்தியாசமான படங்களோடு :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 5. Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 6. உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு... என்ன செய்ய...? கிரிக்கெட் ரசிகர்கள் ... ஸாரி ... வெறியர்கள் இருக்கும் வரை ஓன்றும் செய்ய முடியாது...

  மற்ற ஃப்ரூட் சாலட் – அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. சிறு திருத்தம்...இந்தியா ஆறு தங்கம் வெல்லவில்லை..ஆறு பதக்கங்கள் வென்றது...

  ReplyDelete
  Replies
  1. தவறினைச் சுட்டியமைக்கு நன்றிடா குமார்...

   Delete
 8. ஒளிமயமான ஒலிம்பிக்கிலே
  ஒளிக்கும் ஆறு மெடல்களே வாங்கினோம்.

  வெள்ளி இரண்டு பித்தளை நான்கு
  தங்கம் ஒன்றுமில்லை.

  விலை அதிகம் என
  வாங்காமல் வந்துவிட்டாரோ !!!

  படித்ததில் இடித்தது இது என்றால்,
  பிடித்தது எது என்ன சொல்வேன்.

  செட்டிப் பாளையம் எனினும்
  சுட்டி ! என் வெல்லக்கட்டி - நீ
  கிட்ட அமர்ந்து முதல்
  மெட்டி அணிந்தபோது
  செட்டிப்பாளையும்
  சுவர்க்கமானதே !!

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
  Replies
  1. //செட்டிப் பாளையம் எனினும்
   சுட்டி ! என் வெல்லக்கட்டி - நீ
   கிட்ட அமர்ந்து முதல்
   மெட்டி அணிந்தபோது
   செட்டிப்பாளையும்
   சுவர்க்கமானதே !!//

   பின்னூட்டத்தில் கலக்கறீங்க ஜி!

   தங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி. என் வலைப்பூவினைத் தொடர்பதற்கும்! :)

   Delete
 9. உண்மையான ஆதங்கம் தான் மாற்றுத்திறனாளிகளையும் உற்சாகப்படுத்தி ஊக்கு விக்கலாமே

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 10. சூப்பர் fruit சாலட்.. கணையாளி கவிதை கூட சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹாரி பாட்டர்.

   Delete
 11. //Forget your own sadness by creating a little happiness for others. Because when you are good to others, you are best to yourself.//

  FACTU FACTU FACTU

  ReplyDelete
  Replies
  1. இரண்டாம் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஹாரிபாட்டர்.

   Delete
 12. கவிதை நல்லாயிருக்கே.

  ReplyDelete
  Replies
  1. ரசிப்பிற்கு நன்றி அமுதா கிருஷ்ணா ஜி!

   Delete

 13. நான் எழுதிய பின்னூட்டத்தை என் இல்லக்கிழத்தியிடம், ஸாரி, இல்லக்கிழவியிடம் ( வயது அவளுக்கும் எழுபது)
  காண்பித்தேன். எப்படி இருக்கு என்றேன். சகிக்கல்லை என்றாள்.

  அப்படியென்றால், நீயே சொல், நமது திருமணம் ஏன் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படாமல், மணப்பாறையில் ஆனது ?

  ஆகிருக்கலாம். நானும் அதற்காகத் தான் ஆசைப்பட்டேன். ஆனால்...

  என்ன ஆனால்... ?

  " நீங்க அங்க வர்றதுக்கு சான்ஸே இல்லையே ! " என்றவ‌ள்., தொடர்ந்து,

  இன்னாருக்கு இன்னார் என்று
  எழுதி வைத்தானே தேவன் அன்று.

  கண்ணதாசன் சொன்னது நினைவு வல்லியா ? "

  " ஆஹா !!

  மனைவி அமைவதெல்லாம்,
  இறைவன் கொடுத்த வரம் "

  ஆஹா இன்ப நிலாவினிலே என்று அந்தக்காலத்து சொர்கத்திலே சமைந்தேன்.

  உங்களுக்கு தொடர்பு கிடைக்கவில்லையெனின்
  இதை வெட்டி ஒட்டுங்கள்.
  http://www.youtube.com/watch?v=IM4juYQhVfY&feature=share&list=PL93C79898B7EEB4B0

  சுப்பு ரத்தினம்


  ReplyDelete
  Replies
  1. //இன்னாருக்கு இன்னார் என்று
   எழுதி வைத்தானே தேவன் அன்று.

   கண்ணதாசன் சொன்னது நினைவு வல்லியா ? "//

   அதானே.... சரியாத்தான் கேட்டு இருக்காங்க அம்மா...

   ஆஹா இன்ப நிலாவினிலே மிகவும் இனிமையான பாடல்.... மீண்டும் ஒரு முறை கேட்டு ரசித்தேன்...

   இரண்டாவது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சுப்பு ஜி!

   Delete
 14. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்றவர் பற்றிய செய்தி படித்தபோது எனக்கும் இதேதான் தோன்றியது.
  டுடு பற்றிக் கேள்விப் பட்டதில்லை...(நோ நோ அப்படிப் பார்க்காதீங்க பாஸ்...)
  இற்றையும் குறுஞ்செய்தியும் தெரிந்தெடுக்கப்பட்ட சிறந்த பிட்ஸ்.
  சக்திக்கனல் கவிதை நானும் படித்த ஞாபகம் இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்றவர் பற்றிய செய்தி படித்தபோது எனக்கும் இதேதான் தோன்றியது.

   உண்மை ஸ்ரீராம் ஜி.. பலருக்கு இதே எண்ணம் தோன்றியது...


   டுடு பற்றிக் கேள்விப் பட்டதில்லை...(நோ நோ அப்படிப் பார்க்காதீங்க பாஸ்...)

   சரி... :))

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஜி!

   Delete
 15. வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு வாழ்த்துக்கள் சார்... பல பெட்டிச் செய்தியாக போட்ட செய்தியை பதிபாக போட்ட உங்களுக்கு ஒரு சபாஷ் ... சாலட் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 16. Replies
  1. ரசிப்பிற்கு நன்றி சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].

   Delete


 17. உங்கள் ஆதங்கம் நியாமானது! மாற்றுத் திறனாளியின் முயற்சி
  போற்றத் தக்கது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 18. உங்களின் ஆதங்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன். இற்றையும் கவிதையும் அருமை. ப்ரூட்சாலட் சுவைத்த மனம் அடுத்த வெள்ளிக்காய்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 19. //மேலும் இந்த ஒலிம்பிக் போட்டிகளைக் காரணம் காட்டி அலுவலகர்கள் தன்னுடைய சொந்தங்களையே லண்டனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். 10 மாற்றுத்திறனாளிகளை கவனித்துக் கொள்ள இரண்டே இரண்டு உதவியாளர்கள்!//

  என்னவே! புதுசா நடக்கமாரி சொல்லுதீரு!

  //அந்தப் பெண்ணுக்கு நாங்கள் வைத்த பெயர் – தேஷ்மாண்ட் டுடு… //

  காரணத்த சொல்லும்வே! (நம்ம கவலை நமக்கு)


  ReplyDelete
  Replies
  1. //என்னவே! புதுசா நடக்கமாரி சொல்லுதீரு!//

   புதுசு இல்ல அண்ணாச்சி.... ஆனாலும் தொடர்கிறதே அதுதான் ஆதங்கம்....

   //காரணத்த சொல்லும்வே! (நம்ம கவலை நமக்கு)//

   காரணம் எல்லாம் பெரிசால்ல அண்ணாச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்]

   Delete
 20. ஃப்ரூட் சாலட் சுவை.கிரிஷாவுக்கு,சைனா நேவால் ரூ.2 லட்சம் அளித்திருக்கிறார் என்பது இன்றைய செய்தி.நமது நாட்டு விளையாடுத்துறையின் சாபக்கேடே,கிரிக்கட்டுக்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம்தான்.
  த.ம.8

  ReplyDelete
  Replies
  1. சைனா நேவால் பரிசு கொடுத்தது பற்றி பத்திரிக்கைகளிலும் படித்தேன் குட்டன்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 21. சால‌டின் ப‌ழ‌த் துண்டுக‌ள் அத‌ன‌த‌ன் உன்ன‌த‌ சுவையோடு. ஒலிம்பிக் வெள்ளி மாத்திர‌ம் சால‌ட் வைத்த‌ பாத்திர‌த்தின் காத்திர‌மோடு சிந்தையில்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 22. இன்று என் வலைப்பூவில் “சாமி எங்கே வரும்?-மீண்டும் ஒரு கவிதை
  வந்து பார்த்துக் கருத்துச் சொல்லுங்களேன்!
  மறக்காம ஓட்டும்!
  http://kuttikkunjan.blogspot.in/2012/09/blog-post_7.html

  ReplyDelete
  Replies
  1. படித்து, கருத்தும் எழுதி, ஓட்டும் போட்டாச்சு குட்டன்!

   Delete
 23. ப்ரூட் இனித்தது. மேலும் இனிக்க வாழ்த்துக்கள்.
  நண்பர் சுப்பு ரத்தினத்தின் கமெண்ட்ஸ் மிக அருமை


  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி..

   Delete
 24. மிக்ஸட் ப்ரூட்ஸ்.. வெரி டேஸ்ட்டி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 25. Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி ஜி!

   Delete
 26. அறியாத தகவல்களுடன்
  அறிந்து கொள்ளவேண்டிய தகவல்களுடன்
  புரூட் சாலட் அருமை
  (செட்டிபாளையம் சொர்க்கமா நரகமா )
  மனம் கவர்ந்தபதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிமையான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 27. Replies
  1. தமிழ் மணம் 11 வாக்கிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

   Delete
 28. fruit சாலட் அருமை.
  நம் நாட்டில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறெதற்கும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களது வருகை சிவகுமாரன். மிக்க மகிழ்ச்சி நண்பரே...

   Delete
 29. good pathivu.
  ''..when you are good to others, you are best to yourself...''

  Nalvaalthu.
  Vetha.Elangathilakam.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 30. நல்ல பகிர்வு.தித்திப்பாகவுள்ளது.கவுடா போன்ற மாற்றுத்திறனாளிகளை ஊக்கவிக்க வேண்டும். ஆதங்கம் நியாயமானது. கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் எல்லா விளையாட்டிற்கு கொடுத்தால் விளையாட்டுத் துறை சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை. சக்திகனல் அவர்களின் கவிதை அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி Rasan...

   Delete
 31. அனைத்தும் அருமை. பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 32. நீங்கள் கொடுத்த ஃப்ரூட் சாலட்டை ஃபிரிட்ஜிலிருந்து இப்பொழுதான் எடுத்துச் சாப்பிட நேரம் கிடைத்தது. சக்திகனலின் கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 33. ஃப்ரூட் சாலட் நன்றாக இருக்கிறது. பழங்களின் படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....