எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, September 2, 2012

பூக்களைத்தான் பறிக்காதீங்க!

பூக்களைத்தான் பறிக்காதீங்க, காதலைத்தான் முறிக்காதீங்கன்னு ஒரு பாட்டு கேட்டு இருப்பீங்க.  இங்கே செடியிலிருந்து பறிக்காத - கேமராவில் மட்டுமே பறித்து வந்த பூக்கள் - உங்கள் ரசனைக்காய்.  

கூடவே ரா. ரவி என்றவர் எழுதிய ஹைகூ கவிதையும்....

பறிக்க மனமில்லை
அழகாய் மலர்ந்தும்
விதைத்தது அவள்!ஏன் வெட்கம் பூவே...  
உன் முன் நிற்கும் 
எனைப் பார்த்து வெட்கமா?


என்ன அழகு எத்தனை அழகு...  
மலரே.... மௌனமாய்....  ஆண்டவன் படைப்பில் தான் எத்தனை அழகு....
மெல்லினமே... மெல்லினமே....
செடியிலேயே விட்டு மகிழ்ந்த உங்களுக்கெல்லாம் நன்றி!


மீண்டும் வேறு சில படங்களுடன் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 comments:

 1. மலர்களை பார்த்தாலே மகிழ்ழ்ச்ச்சி உண்டாகிறது.
  கேமராவில் சிறை பட்டாலும் சிரிக்கும் மலர்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 2. அழகான பூப்போன்ற படங்களும்
  அதற்கான கவிதை வரிகளும்,
  அழகோ அழகு.

  பாராட்டுக்கள் வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. பூக்களை ரசித்து கருத்துரைத்தமைக்கு நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு...! இயற்கையின் அற்புத படைப்பை ரசிக்கும் கண்கள் பாக்கியம் பெற்றவை !!

  வாழ்த்துக்கள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. //இயற்கையின் அற்புத படைப்பை ரசிக்கும் கண்கள் பாக்கியம் பெற்றவை !!//

   உண்மை சகோ...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ கௌசல்யா.

   Delete
  2. பூக்களின் அணிவகுப்பு அருமை

   Delete
  3. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   Delete
 4. மலரின் அழகை ரசித்து பார்த்தேன். அழகான வரிகளுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் படங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி சகோ ராசன்.

   Delete
 5. வெங்கட்ஜீ! எனக்கொரு சந்தேகம்! உங்க கேமிராவுலே மட்டும்தான் இவ்வளோ அழகா படமெடுக்க முடியுமா இல்லே எல்லா கேமிராவாலேயும் எடுக்க முடியுமா? என் கிட்டே இருக்கிறது எப்பவோ 350 ரூவாய்க்கு வாங்கின கோடக் கேமிரா. :-)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை.

   கிண்டலடிக்காதீங்க சேட்டை ஜி! என்னை விட மிக அருமையாக படம் பிடிப்பவர்கள் உண்டு நம் பதிவுலகில். :) எடுத்துக்காட்டு, அடுத்த கருத்து போட்ட ராமலக்ஷ்மி ஜி!

   Delete
  2. தில்லானா மோகனாம்பாள் ஜில்ஜில் ரமாமணின்னு நினைப்பா சேட்டைக்காரன் ஸார் :)

   Delete
  3. ஜில்லு! :) இந்த ஜில்லு கேரக்டர் மறக்கமுடியாத கேரக்டர் இல்லையா ரிஷபன் ஜி!

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜி!

   Delete
 6. Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 7. மனதிற்கு மகிழ்ச்சி தரும் மலர்கள்... அதற்கேற்ற ஹைகூ... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. பறிக்க மனமில்லை
  அழகாய் மலர்ந்தும்
  விதைத்தது அவள்!

  விதைத்தது அன்புக்குரியவர் என்றால் பார்த்து நொடிக்கு நொடி ரசிக்கவே தோன்றும்.. ஒரு போதும் பறித்துவிட மனம் மறுக்கும்..

  ரசனையான இனிய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. //விதைத்தது அன்புக்குரியவர் என்றால் பார்த்து நொடிக்கு நொடி ரசிக்கவே தோன்றும்.. ஒரு போதும் பறித்துவிட மனம் மறுக்கும்..//

   அதானே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

   Delete
 9. படங்களும் பொருத்தமான வரிகளும் மனதை கொள்ளை கொள்கிரது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா. மும்பை திரும்பியாச்சா?

   Delete
 10. முதல் கவிதை சூப்பர், அனைத்து மலர்களும் கொள்ளை கொள்ளும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

   Delete
 11. தங்கள் காமிராவிற்கு முகம் காட்டிய மலர்களின் சிரிப்பும் ரா.ரவி அவர்களது ஹைகூ கவிதையும் அருமை. அடுத்த முறை மலர்களின் பெயர்களோடு படங்களைத் தாருங்கள்.
  தங்கள் வண்ணப் படங்களில் Venkat’s Photography என்ற எழுத்துக்களை எப்படி பதிக்கிறீர்கள் என்று ஒரு பதிவின் மூலம் தெரியப்படுத்தினால் என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
  ( கொஞ்ச நாட்களாகவே வலைப் பதிவில் பதிவுகளை படிக்க மட்டுமே நேரம் கிடைத்தது. எல்லோருக்கும் கருத்துரைகள் எழுத முடியாத சூழ்நிலை எனக்கு அமைந்து விட்டது. )

  ReplyDelete
 12. பதிவினையும் படங்களையும் ரசித்து கருத்துரைத்தமைக்கு நன்றி தமிழ் இளங்கோ ஜி! படங்களின் பெயர்கள் தெரியவில்லை. பூக்களை பிடித்ததால் படம் எடுத்து விடுகிறேன்.

  படங்களில் எழுத்துகளைச் சேர்க்கவும், படங்களை மேலும் மெருகூட்டவும் நிறைய மின்பொருட்கள் இருக்கின்றன. Photoshop, Photoscape போன்ற மின்பொருட்கள். நான் Photoscape உபயோகிக்கிறேன். பதிவு எழுத முயற்சிக்கிறேன். இல்லையெனில் உங்களுக்கு தனி மடலில் அனுப்புகிறேன்.

  ReplyDelete
 13. வெங்கட் , பூக்கள் படங்கள் எல்லாம் அழகு. ரா.ரவி அவர்களது ஹைகூ கவிதையும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி.

   Delete
 15. பாட்டு கேட்டதில்லை. படங்கள் அழகு. திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் படங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

   Delete
 16. தமிழ்மணம் சப்மிட் ஆகலையா?

  படங்கள் அழகு. கொய்யாப்பூக்கள்!
  "மலர்களிலே பல நிறம் கண்டேன்... திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்..." (நானும் ஒரு பாட்டு சொல்லிட்டேன்ல..!)

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணம் காலையிலிருந்தே வேலை செய்யவில்லை. இப்போது தான் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வந்திருக்கிறது. செய்து விட்டேன்.

   அட நீங்களும் ஒரு பாட்டு சொல்லிடீங்க! உங்களுக்கு அவ்வளவு பாட்டு தெரிஞ்சுருக்கு!

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 17. ஆயிரம் மலர்களே மலருங்கள்னு பாடத்தோணுது

  ReplyDelete
  Replies
  1. ஆஹா இன்னிக்கு எல்லாம் பாட்டைப் பத்தியே எழுதறீங்களே... :)) பூக்களைப் பார்த்தாலே பாட்டுதானே... :))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 18. பார்த்த நொடியிலேயே மனசைப் பூக்க வைப்பது மலர்கள்தான்.

  அழகான படங்களை ரசித்தேன்! நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 19. Replies
  1. தமிழ்மணம் வாக்கிற்கு நன்றி ஸ்ரீராம்!

   Delete
 20. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா - எனக்கும் பாட்டுச் சொல்லத் தெரியுமில்ல... ஹி... ஹி... மலர்களே கவிதைகள்தான். அவற்றுடன் நீங்கள் பகிர்ந்த கவிதையும் வெகு அழகு. அடிக்கடி இப்படி ரசனைக்கு விருந்து தாங்க வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிமையான பாடல் பகிர்வுக்கும் சுவையான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 21. தங்களின் வலைப்பூவில் பூமுகங்களின் அறிமுகம் அருமை! வரிகளும் அருமை! பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி ஜி!

   Delete
 22. ’பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தி அப்பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்’தாயுமானவர் சொன்னமாதிரி.. :)

  ReplyDelete
 23. அப்பாடியோ! இந்தப் பூக்கள் தாயுமானவர் சொன்ன இவ்வரிகளை உங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறதே...

  பள்ளியில் படித்தது... மீண்டும் எனக்கும் நினைவூட்டியதற்கு நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 24. பூத்துக் குலுங்கும் செடிக‌ளையும் புன்ன‌கைக்கும் குழ‌ந்தைக‌ளையும் காண‌க் க‌ண் கோடிய‌ல்ல‌வா வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகளும் பூக்கள் தானே...

   இரண்டையுமே பார்த்துக்கொண்டே இருக்கலாம்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 25. Replies
  1. தங்களது வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

   Delete
 26. மிகவும் அருமையான படங்கள். வாழ்த்துக்கள் மிக பல

  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் படங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 27. பூக்களைத்தான் பறித்துவிட்டோமே:))) கண்களால்.

  ReplyDelete
  Replies
  1. நான் காமிராவில் பறித்ததை நீங்கள் கண்ணாலே பறித்தீர்கள்... அதனால் ஓகே...

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....