எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, October 26, 2012

ஃப்ரூட் சாலட் – 18: – 81 மாடி கட்டிடம் – பூக்களின் நடனம் – சினிமாவில் காப்பிஇந்த வார செய்தி:  தில்லியை அடுத்த NOIDA [New Okhla Industrial Development Authority]-வில் புதியதாக 81 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டப் போகிறார்கள் என இந்த வாரம் முழுவதும் விளம்பரங்கள் நாளிதழ்களில் வந்த வண்ணமிருக்கிறது. சுமார் 300 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் 81 மாடிகளில் மூன்று, நான்கு, ஐந்து அல்லது ஆறு BHK கொண்ட வீடுகள் கட்டப் போகிறார்கள். விலை ஒன்றும் அதிகமில்லை நண்பர்களே – குறைந்த பட்சம் மூன்று கோடி – விளம்பரங்களிலேயே சொல்லி விட்டார்கள் – அழைப்பில்லாமல் வரவேண்டாமென! பலவித வசதிகள் கொண்ட வீடுகளைக் கட்டித் தரப்போவதாக இவர்கள் விளம்பரங்கள் செய்கின்றார்கள்.  மாடியில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி கூட இருக்கப்போகிறது இந்த குடியிருப்பில்.  அதைத் தவிர பல வசதிகள் இருக்கும் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வசதிகள் என்ன என்று காண விரும்புவர்கள், அவர்களின் இந்த தளத்தில் சென்று பார்க்கலாம். நானும் தளத்தில் சென்று பார்த்து விட்டு நம்ம தகுதிக்கு இது ரொம்ப சின்ன வீடா இருக்கறதால வேண்டாம்னு விட்டுட்டேன்! 

இந்த வார முகப்புத்தக இற்றை:

உங்களிடம் எது கொடுக்கப்பட்டாலும், அதிலிருந்து அழகான ஒன்றை உருவாக்க முடிந்தால் அது தான் புத்திசாலித்தனம்.இந்த வார குறுஞ்செய்தி

LIFE IS NOT A REHEARSAL – EACH DAY IS A REAL SHOW; NO RETAKES, NO REWINDING – SO GIVE THE BEST PERFORMANCE IN ALL YOUR ROLES.

ரசித்த புகைப்படம்:  குழந்தையாக இருக்கும்போது எந்தக் கவலையுமில்லாது இருந்தோம்.  வளர வளரத்தானே பிரச்சனைகள்...  இந்தக் குட்டிக் குழந்தையின் படம் பார்த்து மகிழ்வோம்!இந்த வாரக் காணொளிஇந்தக் காணொளி எனது மின்னஞ்சலுக்கு வந்ததுஉங்கள் ரசனைக்காய் இங்கே. சென்ற வாரம் பறவைகளின் நடனம் – இந்த வாரம் பூக்களின் நடனம்.  பூக்களை இரண்டு நாட்கள் தொடர்ந்து படமெடுத்து அவற்றின் வளர்ச்சியை அழகிய நடனமாக்க் காணொளியில் காண்பித்திருக்கிறார்கள். நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.


சினிமாவில் காப்பி

நேற்று ஒரு பழைய ஹிந்தி படம் பார்த்தேன்அமீர் கான், அஜய் தேவ்கன், காஜோல், ஜூஹி சாவ்லா ஆகியோர் நடிப்பில் 1997-ஆம் வருடம் வெளிவந்த படமானஇஷ்க் [ISHQ] என்ற படம்தான் அது.   படம் பார்த்துட்டு இருக்கும் போது சில காட்சிகள் அப்படியே எதோ தமிழ்படத்தில பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்தன்னோட காதலியை எதிர்த்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பார்த்த அஜய் தேவ்கன், இரண்டு குடியிருப்புகளையும் இணைத்திருக்கும் இரண்டு குழாய்களில் நடந்து போகும் போது தடுமாறி கீழே தொங்குகிறார்அவரைக் காப்பாற்ற வரும் நண்பர் அமீர்கானும் அவரை வழிமொழிகிறார்இதே காட்சி நம்ம தமிழ் படமான எம். குமரன் சன் ஆஃப் மஹாலெட்சுமி படத்துலயும் மிகச்சில மாற்றங்களோட வருதுஇஷ்க் படத்துலயும் சிலை உடைந்து போற காட்சி இருக்கு.  2004- வந்த எம். குமரன் படத்துலயும் இந்த காட்சி வருதுஅப்படி ஒரு அப்பட்டமான காப்பி….  இஷ்க் பட டைரக்டர் எந்தப் படத்தைப் பார்த்து காப்பி அடிச்சாரோ தெரியல….

படித்ததில் பிடித்தது:

டெலிஃபோன்

முடிந்தவரை அதிக தூரம் நடந்தேன்
இங்கிருந்து இன்று
எல்லாம் நிசப்தமாக இருந்த நேரம் அங்கே
ஒரு மலரின் இதழின் மேல் காதை வைத்து
அதில் நீ பேசுவதைக் கேட்டேன் –
இல்லை என்று சொல்லாதே – அதில் நான் உன்
குரலைக் கேட்டேன்
அதோ பார் அந்த ஜன்னலில் இருக்கிறதே
அந்த மலர் வழியாகத்தான் நீ பேசியிருக்க வேண்டும்
என்ன சொன்னாய் ஞாபகமிருக்கிறதா?

“நான் என்ன சொன்னதாக நீ நினைத்துக் கொண்டாய்?
அதைச் சொல் முதலில்

மலரைப் பார்த்தேனா?
அதிலிருந்து தேனீயை விரட்டி விட்டு
என் தலையைச் சாய்த்து
மலரின் காம்பைப் பிடித்துக் கொண்டு
கவனித்துக் கேட்டேன்
நிச்சயம் கேட்டேன்

“என்ன அது என் பெயரா?

“இல்லை ‘வாஎன்று நீயோ
வேறு யாரோ சொன்னமாதிரி இருந்தது

நான் அப்படி நினைத்திருக்கலாம் ஆனால்
இரைந்து சொல்லவில்லை

“எனவே நான் வந்துவிட்டேன்

-          ஆங்கிலத்தில் கவிதை எழுதியது Robert Frost.  கவிதையை தமிழில் மொழி பெயர்த்தது யாரென்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 comments:

 1. நானும் தளத்தில் சென்று பார்த்து விட்டு நம்ம தகுதிக்கு இது ரொம்ப சின்ன வீடா இருக்கறதால வேண்டாம்னு விட்டுட்டேன்!

  உங்க தகுதிக்கு ஏற்றபெரியவீடா கிடைச்சுதா இல்லியா? வெயிட் பண்ணுங்க கிடசிடும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 2. குழந்தை படம் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக மிக நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 3. nalla pakirvu!

  aanaal pookkal video!


  su........per.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 4. பூக்களின் நடனம் இனிமையே !


  கவிதையை தமிழில் மொழி பெயர்த்தது யாரென்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!//

  தாங்கள் தானே !!

  ReplyDelete
  Replies
  1. என் மீது வைத்திருக்கும் உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. ஆனால் மொழி பெயர்த்தது நானில்லை! அவரின் தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜ ராஜேஸ்வரி ஜி!

   Delete
  2. அருமையான ஃபூரூட் சாலெட்
   சுவைத்து மகிழ்ந்தேன்
   தொடர வாழ்த்துக்கள்

   Delete
  3. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
  4. தமிழ்மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 5. எனது சிறு வயது புகைப்படம் போட்டமைக்கு நன்றி :)

  ReplyDelete
  Replies
  1. அட நீங்க தானா அது! :)))

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 6. Tamilmanam Vote button not there now in ur site. Pl check

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் இரண்டு மூன்று நாட்களாகவே எதோ பிரச்சனை செய்கிறது. சில நேரங்களில் இருக்கிறது. சில நேரங்களில் இருப்பதில்லை!

   இப்போது இருக்கிறது மோகன்!

   Delete
 7. 3 கோடியா அதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல விடுங்க. அடுத்து அழகிய படத்துடன் கூடிய தன்னம்பிக்கை வரிகள் சிறப்பு. மழலை அழகு. பூவின் வரிகள் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 8. சென்னையை விட டில்லியில் வூடு சல்லிசா இருக்கும் போலயே.இங்கே OMR-ல் 7 கோடி என்று மோகன்குமார் பதிவில் படித்தோமே.

  ReplyDelete
  Replies
  1. சல்லிசா! இன்று சில வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன - புது தில்லி பகுதியில் - 300 கோடி ரூபாய் ஆரம்ப விலை! :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 9. அந்த மழலையின் படம் அருமை. மற்ற அம்சங்கள் அனைத்தும் இனிமை. தமிழ்ல சுட்ட காட்சிகளை லிஸ்ட் எடுக்கணும்னா பல பதிவுகள் போட்டாகணும். விடுங்க பாஸ். 1997ல் வெளியான படத்தை இப்ப பாத்திங்களா? இதானா உங்க டக்கு? இம்முறையும் இனிமை நிரம்பிய ருசி மிக்க ப்ரூட் சாலட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ். சில சமயங்களில் இப்படித்தான் திடீர்னு ஏதாவது பழைய படத்தினைப் பார்ப்பேன்! :)

   அது என்ன ‘உங்க டக்கு’? புரில பா!

   Delete
 10. நோய்டாவில் இப்பொழுது 25-மாடிக்குக் குறைவாக எந்தக் குடியிருப்பும் கட்டப்படுவதில்லை.

  சங்கத் தமிழ் பாடலில் யானையைத் தானமாகப் பெற்ற புலவர், அதைக் கொடுத்த மன்னனிடம் யானையைப் பராமரிப்பதில் இருக்கும் சிரமத்தைப் பற்றி நகைச்சுவையாகச் சொல்வதாகப் பாடல் உண்டு.

  அதே போல், இந்த வீடுகளின் விலையை விட இவற்றின் மாதப் பராமரிப்புத் தொகை மிகவும் அதிகம். ஏனென்றால் 4-அடுக்குகளுக்கு மேல் இருந்தால் லிஃப்ட் இருக்க வேண்டியது அவசியம். லிஃப்ட் இருந்தால் ஜெனரேட்டர் பேக்-அப் வேண்டும். அதுவும் உ.பி.யில் எப்பொழுதுமே மின்வெட்டு, தற்போதைய தமிழ்நாட்டு மின்வெட்டை விட் மோசம். எனவே இவற்றின் பராமரிப்பு யானைக்குப் போடும் தீனியைவிட அதிகம். அதனால், சும்மாவே இந்த வீடு தானமாகக் கிடைத்தாலும் நம்மால் இதைப் பராமரிக்க முடியாது.

  சமீபத்திய புள்ளி விவரங்களின் படி இந்தியாவில் 65% வீடுகள் வாழ்வதற்காக இல்லாமல் ஒரு முதலீடாகத்தான் செய்யப்படுகின்றன. இதுவும் பெரும்புள்ளிகள் தங்கள் பணத்தை முதலீடு செய்யவே கட்டப்படுகிறது.

  சினிமா-வில் காப்பி என்பது மிகவும் பழைய விஷயம். ஹிந்தி பட உலகில் சிறந்த கதாசிரியராகக் கூறப்பட்டு பின்னர் காமெடியனாக நடித்த காதர்கான் கவுண்டமணியின் பல காமெடிகளைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார். இது ஒரு சுழற்சி. சில சமயம் இங்கிருந்து அங்கே; சில சம்யம் அங்கிருந்து இங்கே. இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது டிவிடி (இப்பொழுது தான் நெட்டிலிருந்துச் சுட்டுவிடுவது சுலபமாகிவிட்டதே.

  //Tamilmanam Vote button not there now in ur site. Pl check//
  மோகன், நேற்று முழுவதும் என்னால் மற்றவர்களின் வலைப் பக்கங்களை முழுவதுமாக திறக்க முடியவில்லை. அவர்கள் எழுதியது வரை தெரிகிறது. கருத்துகள் தெரியவில்லை. ஏதோ ஒரு gadget தடுத்துக் கொண்டே இருந்தது. ஆனால் த.ம. பட்டைத் தெரிந்தது.

  ReplyDelete
  Replies
  1. விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சீனு! [வேங்கட ஸ்ரீனிவாசன்]

   Delete
 11. பூக்களின் நடனமும், குழந்தையின் சிரிப்பும் இந்த வார ப்ரூட் சாலடுக்கு புது மெருகூட்டின. 18 வது ப்ரூட் சாலடில் 81 அடுக்கு மாடி கட்டிடம் இடம்பெற்றது மிகவும் சரியே!
  18 படிகள் எறுவதே கஷ்டம் இந்த வயதில் - 81 அடுக்கு மாடி வேண்டாம்ப்பா!

  ஆங்கிலப்படத்திலிருந்து ஹிந்தி படம். அதிலிருந்து காப்பி நம் தமிழ் படம்.

  வழக்கம் போல மிகவும் இனித்தது இந்த வார ப்ரூட் சாலட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 12. ஃப்ரூட் சாலட் நல்ல தித்திப்பு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா சார்.

   Delete
 13. முகப்புத்தக வாசகம் அருமை!

  அந்தக் குழந்தையின் சிரிப்பு எத்தனை நிர்மலமாக இருக்கிற‌து! மிக மிக அழகிய புகைப்படம்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மனோ மேடம்.

   Delete
 14. படங்கள் கலக்கல்...

  கவிதை அருமை...

  கண்ணொளி பார்க்கிறேன்...

  நன்றி...
  tm6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் தமிழ் மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 15. வெள்ளிதோறும் விருந்து நன்று!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 16. அந்த படம் உங்களதா...?
  So cute...

  ReplyDelete
  Replies
  1. அந்தப் படத்தில் இருப்பது நானில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 17. முகப்பு இற்றை, குழந்தைப்படம் என அள்ளிக்கொண்டே போகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 18. மும்பை ஆறு கோடி ரூபாய் அடுக்குமாடிக் குடியிருப்பு... அம்மாடியோவ்..!

  இற்றை பாடம் சொல்கிறது!

  குறுஞ்செய்தியும்!

  ர.பு. : "அந்நாளை நினைக்கையிலே என் வயது...."

  ம..ஹூம்... 97ல் வந்ததே பழைய படமாகி விட்டது! நாள்தான் எப்படி ஓடுகிறது!

  மொழி பெயர்த்தது... யாரென்று தெரியாமல் முழி பிதுங்குகிறது! :)))

  ReplyDelete
  Replies
  1. வீடு - நேற்றைய நாளிதழில் வந்த ஒரு செய்தி - புது தில்லி பகுதியில் சில வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளது - ஒரு வீட்டின் மதிப்பு - ரூபாய் 300 கோடி!

   மொழி பெயர்த்தது - வாத்யார் சுஜாதா! - ‘கணையாழியின் கடைசி பக்கங்கள்’ புத்தகத்தில் படித்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 19. 3 கோடிதானா? இப்போதைக்கு என்கிட்டே 3 இருக்கு. மிச்சமிருக்கிறது சைபர் தானே? எப்படியாவது தேத்தி ஒண்ணு வாங்கிட்டாப் போச்சு!

  ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை மொழிபெயர்ப்பு அட்டகாசம்!

  ReplyDelete
  Replies
  1. சைபர் தேத்துவதா? :) தேத்திடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை ஜி!

   Delete
 20. ஃப்ரூட் சாலட் சுவையாக இருந்தது. இந்த வார குறுஞ்செய்தி வாழ்க்கையின் உரைகல்.  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 21. பூக்களின் நடனம் கலக்கல் அன்பரே

  ReplyDelete
  Replies
  1. பூக்களின் நடனம் உங்களை எனது தளத்திற்கு முதல் முறையாக அழைத்து வந்து விட்டது போலும்!

   மின்ன நன்றி பிரேம்குமார்.

   Delete
 22. எங்கள் வசதிக்கும் அந்த வீடு ரொம்ப ரொம்ப சின்னது.
  பூக்களின் நடனம், பூப்போன்ற குழந்தையின் சிரிப்பு இரண்டிலும் இருந்து மனம் மீளவில்லை. பயனுள்ள பதிவு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆதிரா.

   Delete
 23. என்னாது!!.. ஹெலிகாப்டர் இறங்குற வசதியுள்ள பில்டிங்கா? ரொம்ப லோ பட்ஜெட்டா இருக்குதே. எனக்கு வேணாம்ப்பா :-)))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 24. //நானும் தளத்தில் சென்று பார்த்து விட்டு நம்ம தகுதிக்கு இது ரொம்ப சின்ன வீடா இருக்கறதால வேண்டாம்னு விட்டுட்டேன்! //

  அதானே ! ;)))))

  குட்டிக்குழந்தையும். கவிதை தமிழாக்கமும் அழகு.

  பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....