எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, October 14, 2012

ஆக்ரா கோட்டை


இன்று உங்களை புகைப்படங்கள் வாயிலாக ஆக்ரா கோட்டைக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். வாருங்கள் போகலாமா!


நுழைவாயிலிலேயே எத்தனை கூட்டம். 
வாருங்கள் கூட்ட்த்தோடு கூட்டமாய் நாமும் உள் புகுவோம்!


கோட்டையின் ஒரு பகுதி. 
புகைப்படம் எடுக்கும்போது குறுக்கே வருபவர் யாரென்று தெரியாது. ஆனால் ஒரு கையை மட்டும் காட்டும் நண்பர் யாரென்று தெரியும்!


கோட்டையினுள் இருக்கும் தர்பார் ஹால். 
இங்கிருந்து தான் அரசர்கள் உரையாற்றுவார்களாம்! 
நாமும் சென்று அவர் என்னதான் பேசியிருப்பார் என்று கேட்போமா!


அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட உட்பகுதி. 
இவற்றில் பல விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு இருந்தனவாம்.


கோட்டை ஒரு தூரத்துப் பார்வை.


கோட்டையின் உட்பகுதி.


கோட்டையின் மேல்தளத்தில் எடுத்த படம்.


கோட்டை உட்புறத் தூணில் நகாசு வேலைகள்!


கோட்டையின் உட்புறம். 
இங்கே ஓடிப்பிடித்து விளையாடலாம் போல இருக்கிறது!


நுட்பமான வேலைப்பாடுகள்!


ராணிகள் குளிப்பதற்குப் பயன்படுத்திய தொட்டி”    - எனச் சொன்னார் வழிகாட்டி. உண்மையா-பொய்யா என்பது ராணிகளுக்கே வெளிச்சம்!கோட்டையிலிருந்து காணக் கிடைக்கும் உலக அதிசயம்!

என்ன நண்பர்களே, ஆக்ரா கோட்டையின் சில பகுதிகளைப் பார்க்க முடிந்ததா? அடுத்த ஞாயிறன்று வேறுசில படங்களுடன் உங்களைச் சந்திக்கும் வரை,

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 comments:

 1. அருமையான படப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
  2. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. படங்களும் பதிவும் அருமை, வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. உலக அதிசய தாஜ்மகாலை
  அருமையாக படமெடுத்து பதிவாக்கி
  ரசிக்கத் தந்தமைக்கு
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 4. ஆக்ரா கோட்டையைச் சுற்றி பார்த்தோம் நாங்களும்! படங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும், ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete

 5. ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ் மகால்
  இதுவரை நான் பார்க்காத காட்சி
  புகைப்படம் அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. ஹிஹிஹி! நானும் இந்த இடத்தையெல்லாம் பார்த்துப்புட்டேன் வெங்கட்ஜீ! ஆனா, பார்த்த அனுபவம்தான் கொஞ்சம் வித்தியாசமானது. அப்பாலிக்கா எழுதணுமுன்னு ஆசை இருக்குது. பார்க்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் உங்கள் பாணியில் எழுதுங்கள் சேட்டை ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 7. புகைப்படங்களுடன் அருமையான ஒரு சுற்றுலா!

  இந்தியாவிலேயே எத்தனை இடங்கள் இருக்கின்றன பார்ப்பதற்கு!

  புகைப்படங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கின்றன.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பார்ப்பதற்கு இடங்கள் எத்தனை எத்தனையோ.... ஆனால் நமக்கிருக்கும் நேரம் தான் குறைவு.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 8. சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள்.

  ஸ்ரீ....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீ.

   Delete
 9. Nice I have also written recently about this place

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பகிர்வுகளையும் படித்தேன் மோகன்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 10. அருமையான படங்கள். ராணிகள் உள்ளே இறங்கிக் குளிக்கப் படிக்கட்டுகளா நூலேணியா?!
  அவ்வளவு பெரிய மண்டபத்தில் மைக் இல்லாமல் எப்படிப் பேசியிருப்பார்கள்! :)))

  ReplyDelete
  Replies
  1. நூலேணி எதற்கு! உள்ளே செல்ல பக்கவாட்டில் படிகள் இரண்டு இருக்கிறது.....

   அந்தக் காலத்தில் ஏதாவது வசதி இருந்திருக்கும்.... மின்சாரமே இல்லாது fountains அமைத்த காலம் அல்லவா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. அருமை. நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது. இன்னும் பல ஊர்களை, சின்னங்களை பதிவு செய்யுங்கள். ரசிக்கிறோம். காத்திருக்கிறோம். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துரை டேனியல்.

   Delete
 12. ஆக்ராவிற்கு மனம் பிடித்து அழைத்துச் சென்றமைக்கு நன்றிகள்!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எல்லென்.

   Delete
 13. புகைப்படங்கள் கோட்டையை நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 14. கோட்டை க‌ட்டி வாழ்கிறோமோ இல்லையோ இக்கோட்டைக‌ளை வாய்பிள‌ந்து ர‌சிக்க‌வேனும் கொடுத்து வைத்திருக்கிறோம். இவ்வ‌ள‌வு நுட்ப‌ வேலைப்பாடுக‌ளையும் செய்வித்த‌ ர‌ச‌னையை பாராட்ட‌ வார்த்தைக‌ளில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 15. முகமதியர்களின் கட்டட வேலைப்பாடுகளின் அழகோ அழகுய்யா, எங்களுக்கும் காண்பித்தமைக்கு நன்றிகள்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 16. அழகான அருமையான படங்கள்...

  நன்றி...

  tm10

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 17. கோட்டை,தர்பார், கோட்டையின் உட்புற நீண்ட வராண்டாக்கள்,என அனைத்தும் சுற்றி வந்தோம்.
  படங்கள் அருமையாக இருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 18. ஆக்ரா கோட்டையை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். உங்கள் படங்களை பார்த்தவுடன் மறுபடி நேரில் பார்ப்பது போல இருக்கிறது. நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....