எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, October 23, 2012

அறிவுக்கொலு – சரஸ்வதி பூஜை
கணவன் தன் வாழ்க்கைத் துணைவியுடன் கங்கா ஸ்நானத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறான். வழியில் ஒரு பெண் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கிறாள். வாழ்க்கைத் துணைவி அந்த ஆடல் பாடலில் லயித்துத் தன் நாயகனையும் பிரயாண நோக்கத்தையும் மறந்து நிற்கிறாள். எனவே தாமதித்துப் போகிறாள். கணவனையும் கோபித்துக் கொள்கிறாள், நான் வருமுன் கங்கா ஸ்நானம் செய்து விட்டீர்களே’ என்று. கணவனோ இளநகையரும்பி, தேவியே! உன் விளையாட்டே உனக்குப் பெரிதா யிருக்கிறது. பாட்டிலும் கூத்திலும் நீ உன்னை மறந்து, கொலு வைத்த மாதிரி அங்கே நின்று விட்டாய். என்மீதும் கோபம் கொள்கிறாய். நான் உனக்கு ஒரு சாபம் கொடுக்கப் போகிறேன்’ என்றான். சாபம் என்றதும் மின்னல் போல் துடித்த மேனி சாபத்தை அறிந்து கொண்டதும் ஆனந்தத்தில் பூரிக்கிறது. ‘நீ பூலோகத்தில் போய்க் கவிஞர் நாவில், உழவர் கைகளில், மகான்கள் நெஞ்சில் கொலு வீற்றிருக்க வேண்டும்என்பது தான் சாபம்! சாபமா, அனுக்கிரகமா? இது புராணம்.ஆற்றங்கரை மண்டபம் ஒன்றில் மாலை இளந்தென்றலை அனுபவித்த வண்ணம் தாமும் தனிமையுமாக இருக்கும் போது கலைமகளே தோன்றிக் கன்னிக்கவிதை கொணர்ந்து தமக்குத் தந்ததாகப் பாரதியார் பாடியிருக்கிறாரல்லவா? மணமாலையும் கையுமாகத் தோன்றிய கலைமகள் தம்மை நோக்கி, ‘இளம் புன்னகை பூத்து மறைந்து விட்டாளம்மா!என்று அதிசயப்படுகிறார். அந்த இளம் புன்னகை’ மட்டுமா பாரதியாரின் அதிசயக் கவிதை? துர்க்கா தேவியின் வித்தியாச ரூபமும், சிம்ம கர்ஜனையும் சிரிப்பும் சேர்ந்த்து தானே பாரதியாரின் ஆவேச கீதம்?

இத்தேவியின் பளிங்கு போலக் களங்கமற்ற வெண்ணிறமும், வெள்ளைக் கலையும், வெண்ணிற நகைகளும், வெண்முத்துக் குடையும், வெண்தாமரையும், ‘தூய்மையும் அறிவும் கள்ளங்கவடற்ற குழந்தை உள்ளமும் வீற்றிருக்குமிடத்தில் நாம் கொலு வீற்றிருப்போம்’ என்ற கலைமகளின் குறிப்பிற்கு அறிகுறியாகும். கோயிலும் பீடமும் மட்டுமா தாமரை? கண்ணும் முகமும் கையும் காலும் தாமரையாம் கவிதைத் தெய்வத்திற்கு. நம்மவரின் தாமரை மோகமும் அறிவு மோகமும் அப்படி!

ஒரு கையில் ஏடும் எழுத்தாணியும், மற்றொன்றில் ஜபமாலையும், அறிவுக்கும் பக்திக்கும் உள்ள தொடர்பு. வேறு இரண்டு கைகளில் வீணை, இசைக் கருவிகளுக்கெல்லம், சங்கீதம் முதலான கலகளுக்கெல்லாம் அறிகுறியாக. அறிவைப் போல் பக்தி; இரண்டும் சேர்ந்த அளவிற்குக் கலைக் காதல். இந்த கல்விப் பயிற்சிக்குக் கல்வித் தெய்வமும் கரைகாணவில்லையாம் – நேற்றும் இன்றும் நாளையுந்தான். பாடிக்கொண்டே ஆடிக்கொண்டிருப்பதாகவும் ஒரு ஐதீகம்.இத்தகைய சரஸ்வதியை நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் கொலு வைத்து பூசிப்பது போதுமா? அறிவுக் கொலு உள்ளத்திலே ஆண்டாண்டு தோறும் நிகழவேண்டிய ஒரு வைபவம்.

'புத்தகத்(து) உள்ளுறை மாதே!' என்று, புஸ்தகங்களை வருஷத்திற்கொரு நாள் வரிசையாக அழகாக அடுக்கி வைத்துக் கலைமகளின் படத்தையும் தூக்கி வைத்து மலர்தூவி மந்திரம் ஜபித்தால் போதுமா? புஸ்தகங்களுக்குள்ளேதான் அறிவு அடங்கிக் கிடக்கிறதென்று எப்போதும் படித்துக் கொண்டிருந்தால் போதுமா?

பூவில் அமர்ந்துறை வாழ்வே என்று போற்றப் பெறும் தேவி இதயப் பூவிலும் வாழவேண்டுமென்றால் நமது அறிவுத்திறனும் கலைத்திறனும் ஒருங்கே மலர்ச்சி பெற வேண்டும். அழகுணர்ச்சியுடனும், அருளுணர்ச்சியுடனும் அறிவு பரிமளிக்க வேண்டும். ஞானக் கொழுந்தாகிய ஸரஸ்வதியை, ‘வித்தகப் பெண்ணாய்க் கற்பித்திருப்பதையும் நாம் மறந்துவிடலாகாது. ‘மாதர் தீங்குரல் பாட்டில்’ இருப்பவள் நம்மாதர் உள்ளத்திலும் கொலுவிருக்கும்போது நாம் ஸரஸ்வதி பூஜையை உள்ளபடியே கொண்டாடியவராவோம்!

இன்று ஸரஸ்வதி பூஜை. அனைவருக்கும் இனிய ஸரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள். இந்நாளில் உங்களுக்கு ஆனந்த விகடன் 1949 – ஆம் வருட தீபாவளி மலரில் வந்த ஒரு கட்டுரையை பொக்கிஷப் பகிர்வாக அளித்திருக்கிறேன்.[கூடுதல் தகவல்: ஓவியங்கள் சித்ரலேகா வரைந்தவை].

மீண்டும் வேறொரு பொக்கிஷப் பகிர்வுடன் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: நேற்று நான் வெளியிட்ட [என்னைத் தொடர்பவர்களின் டாஷ்போர்டில் அப்டேட் ஆகாத] திரிவேணி சங்கமம் – காசி பயணம் – பகுதி - 9 இங்கே கிளிக்கினால் படிக்கலாம்.
64 comments:

 1. Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்!

   Delete
 2. அறிவுக் கொலு உள்ளத்திலே ஆண்டாண்டு தோறும் நிகழவேண்டிய ஒரு வைபவம்.

  பொக்கிஷப்பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. ஆஹா.... அருமையான பொக்கிஷம்.

  இன்னிக்குப் படிக்க வேணாம் எல்லாப் புத்தகமும் பூஜையில் இருக்குன்னு தப்பித்த காலங்கள் நினைவுக்கு வருதே!!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 4. எத்தனை அருமையான படங்கள். கூடவே கதையும் புராணமும். அவள் அருள் இல்லை என்றால் நாம் எங்கே. அருமையான பதிவுக்கு வணக்கங்கள் வெங்கட். ஆசிகளும் கூட.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 5. அறிவுக் கொலு வீற்றிருக்கட்டும் எந்நாளும் நம் நெஞ்சில்..

  அருமையான ஆனந்த விகடன் கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 6. சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் எனது வாழ்த்துகள் மாதேவி.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   Delete
 7. Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 8. நல்ல நாளில் சிறப்பான பகிர்வு...

  விழாக்கால வாழ்த்துக்கள்...

  நன்றி...
  tm4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மற்றும் தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. விழாக் கால வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

  ReplyDelete
 11. தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ.நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 12. சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 13. நல்ல பகிர்வு. விழாக்கால வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. அழகான படங்களும், பொக்கிஷமான கட்டுரையும் மிகவும் பிரமாதம்.
  உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் ஆசிகள்.

  சரஸ்வதி பூஜை தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 15. பொக்கிஷத்தில் பொருத்தமாய்க் கிடைத்து அதையும் பொருத்தமான நாளில் உபயோகித்த உங்களுக்கு எங்கள் பாராட்டுகள்.

  தமிழ்மணம் பட்டைக் கண்ணுக்குத் தெரியவில்லையே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   தமிழ்மணம் காக்கா உஷ் ஆகி விட்டது இன்று! நாளை மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - நேற்று ரமணன் வானிலை அறிக்கை பார்த்ததன் விளைவு! :)

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 17. கொலுவுக்குப்பின்னே
  கிளுகிளு மூட்டும்
  கதை ஒன்றா !!

  பிரமாதம். இதுவரை நான் கேட்டதில்லை . அக்கதையை நீங்கள் எடுத்துச் சொன்ன விதமும்
  அற்புதம்.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா!

   Delete
 18. உங்களுக்கு என் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்...

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மலர்.

   Delete
 19. அறிவுக்கொலு என்கிறபோதே ஏதோ ஆற்றல் மனசில் கொலுவேற்ற வந்தமாதிரி உணர்வு. நல்ல கட்டுரை..வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.

   Delete
 20. சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்... சிறப்பான பகிர்வு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஆயிஷா.

   Delete
 21. சரஸ்வதி பூஜை தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 22. புராணம் ஐதீகத்தீனுடே படங்களும் அருமையான விளக்கமும் சிறப்புங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 23. நல்ல பதிவு
  சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முருகானந்தம் ஜி!

   Delete
 24. சரஸ்வதி பூஜை வாழ்த்துகள். நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மன்னை மைனரே.

   Delete
 25. பகிர்வுக்கு நன்றி வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 26. சரியான நேரத்தில் பொருத்தமான பகிர்வு நன்றி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 27. சரஸ்வதி பூஜைக்கு சிறப்பான பதிவு. பூஜை நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமாரவி.

   Delete
 28. கலைமகளின் அருள் பரிபூர்ணமாக அனைவருக்கும் கிடைக்க இந்நாளில் வேண்டுவோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 29. //அறிவுக் கொலு உள்ளத்திலே ஆண்டாண்டு தோறும் நிகழவேண்டிய ஒரு வைபவம்.//

  நவராத்திரி நல்வாழ்த்துகள் ... வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   Delete
 30. விழாக்கால வாழ்த்துக்கள் சகோ. பொருத்தமான நேரத்தில் ஆன்மீக பதிவு. ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 31. அருமையான கட்டுரை
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 32. Replies
  1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 33. அருமையான இடுகை வெங்கட்ஜீ! பொருத்தமாக, அழகழகாய்ப் படங்களுடன் சேர்த்து அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....