எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 9, 2012

ஃப்ரூட் சாலட் – 20: – பொது இடத்தில் அசுத்தம் செய்தால்....


இந்த வார செய்தி: 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன்ஜுனூ என்று ஒரு இடம் இருக்கிறது.  அங்கே உள்ள மாவட்ட மன்றம் பொது இடத்தில் சிறுநீர்/மலம் கழிப்பதைத் தடுக்க புதிய ஏற்பாடுகள் செய்திருக்கின்றார்கள். ஆத்திர அவசரத்திற்கு யாரேனும் பொது இடங்களில் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொண்டால், அவர்களுக்குப் பின் திடீரென சிலர் தோன்றி விசில் ஊதுவது மட்டுமல்லாது மேளம் கொட்டுவார்களாம்!  அது மட்டுமல்லாது கிராமத்தில் ஒலிபெருக்கிகள் மூலம் அவர்களது பெயரைச் சொல்லி இன்னார் இந்த இடத்தில் இப்படி அசிங்கம் செய்தார் என்று விளம்பரப் படுத்தப் போகிறார்களாம்.மாவட்டத்தின் 34 பஞ்சாயத்துகளில் தற்போது இத்திட்டம் அமுலுக்கு வந்திருக்கிறது.  இந்த முயற்சி வெற்றி அடைந்தால் மாவட்டம் முழுவதும் இப்படி விசில் அடிக்கப் போகிறார்களாம். கிராமங்களில் பொது கழிப்பிடம் கட்டவும், அதைப் பயன்படுத்த மக்களுக்கு அறிவுறுத்தவும் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.  மாவட்டம் முழுவதும் 10000 வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டவும் திட்டம் செய்துள்ளார்கள்.  ஒரு கழிப்பறை கட்ட 9000/- செலவு ஆகும் எனக் கணக்கிட்டுள்ளார்கள். 

பல இடங்களில் கழிப்பறை வசதி இல்லை. இருந்தாலும் சுத்தமாக இருப்பதில்லை.  கழிப்பறை வசதி பொறுத்தவரை இந்தியா முழுவதுமே இந்நிலை தான்.  நிச்சயம் மாற்றம் தேவை தான்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் – மணலும் மணல் சார்ந்த இடமும்


*
*
*
*
*
தமிழகம் – இருளும் இருள் சார்ந்த இடமும்...  

இந்த வார குறுஞ்செய்தி

Do you know the relation between your two eyes? They blink together, move together, cry together, see things together and sleep together though they never see each other, Friendship should be just like that.  Life is hell without friends.


ரசித்த புகைப்படம்:  என்ன ஒரு சுகமான தூக்கம் :)ரசித்த பாடல்எனது மற்றொரு வலைப்பூவான ரசித்த பாடலில் அவ்வப்போது நாங்கள் ரசித்த பாடலை பகிர்ந்து கொள்வது வழக்கம்.  சில மாதங்களாக, என்னால் அதில் பாடல்களை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.  அதனால், ரசித்த பாடலில் சிலவற்றை வாரம் ஒன்றாக இங்கே தர நினைத்திருக்கிறேன்.  இன்று முதல் பாடலாய், பாடும் நிலா பாலுவின் பயணங்கள் முடிவதில்லை பட்த்திலிருந்து “இளைய நிலா பொழிகிறதே....பாடல் இதோ நீங்களும் கேட்டு ரசிக்க.ராஜா காது கழுதைக் காது

நேற்று வீட்டின் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தேன் – அட பேருந்துக்காகத் தான் காத்திருந்தேன். அங்கே பள்ளி செல்லும் ஒரு மாணவனும் மாணவியும் அமர்ந்திருந்தனர்.  அந்த மாணவன் மாணவியிடம் சொல்வதைக் கேட்டபோது “திக்கென்றிருந்தது – ‘கொஞ்ச நாள் ஒரு பெண்ணை டாவடிச்சுட்டு இருந்தேன், எனக்கு செட்டாகிடும்னு நினைச்சேன், பார்த்தா வேறொருத்தனுக்கு செட்டாகிடுச்சு!, சரி போனா போகுது என்று வேறொரு பெண்ணை டாவடிக்க ஆரம்பிச்சுட்டேன்!”   என்னத்த சொல்ல! 

படித்ததில் பிடித்தது:

வரைபடம்


வாசலில் வந்துநின்று கெஞ்சிய
விற்பனைப் பெண்ணிடம்
வாங்கியது அந்த உலக வரைபடம்.
படுக்கையறைத் தலை மாட்டில்
தொங்கவிடப்பட்ட அதைப் பார்த்து
‘நம் ஊர் எங்கேஎன்றாள்.
‘நம் வீடு இருக்கும் இடம் எது
என்பதற்கும் வரைபடத்தில் புள்ளியில்லை.
அவள் பள்ளிக் கூடம்,
அவள் சினேகிதி சுலேகா வீடு பற்றி
மேற்கொண்டு என்னிடம் கேட்பதில்
பயனில்லை என்ற முகக் குறிப்புடன்
குதித்துக் கொண்டே விளையாடப் போனாள்.
இந்தக் கண்டம் அந்தக் கண்டம்
எதிலாவது
வாசலில் வந்து விற்ற பெண்ணின்
ஆதரவற்ற முகமோ, விடுதியோ
தெரிகிறதா என்று உற்றுப் பார்க்கத்
துவங்கினேன் அப்புறம்.

-கல்யாண் ஜி


மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.58 comments:

 1. எனக்கு விஸில் அடிக்க வராது என்பதால் இந்தியாவுக்கு வரும்போது நிறைய பிகில் வாங்கிக்கிட்டு வரணும்.

  நோ ஒர்ரீஸ். அப்படியாவது சனம் திருந்துனாச் சரி.


  பிய்ய்ய்ய்ய்ய்ய்ங்........

  ReplyDelete
  Replies
  1. //இந்தியாவுக்கு வரும்போது நிறைய பிகில் வாங்கிக்கிட்டு வரணும்.//

   :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 2. தமிழகம் – இருளும் இருள் சார்ந்த இடமும்...

  இப்படியா இருக்கவேண்டும் !!!?????

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. உண்மையிலேயே சுகமான தூக்கம் தான்... புகைப்படம் சூப்பர்...

  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. இப்படி ஒரு தூக்கம் வாய்த்தால் நன்றாக இருக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாலஹனுமான் ஜி!

   Delete
 4. இளைய நிலா எனது ஆல் டைம் பேவரைட் சாங்

  நானே நீங்கள் இன்னொரு ப்ளாகில் எழுதுறதே இல்லை என நினைத்து கொண்டிருந்தேன் ஒரு ப்ளாக் மட்டும் வைத்து கொள்வதே வசதி

  ReplyDelete
  Replies
  1. எல்லோருடைய ஃபேவரைட் பாடல்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 5. கல்யாண்ஜியின் கவிதையை விட்டு நகர மறுக்கிறது மனம். அந்த வரைபடத்தில் தொலைந்த என்னைத் தேடுகிறேன்.

  நீண்ட நாட்களுக்குப் பின் வர வாய்க்கிறது வெங்கட். மிக ருசியான ஃப்ரூட் சாலட்.

  ReplyDelete
  Replies
  1. முடியும் போது வந்து கருத்திடுங்கள் சுந்தர் ஜி! அது எனக்கு உற்சாகம் தரவல்லது....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 6. பிடித்த பாடல் பிடித்த கல்யாண்ஜி வரிகள் மிக மிக ருசித்து ரசிக்க வைத்த சாலட் நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 7. பொதுவிடத்தில் அசுத்தம் செய்பவர்களைப் பார்த்து விசிலடிப்பது எல்லாம் சரிதான்! ஆனால், பொதுக்கழிப்பிடங்களைப் போதுமான அளவுக்கு அமைத்து, அவற்றைச் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் என்பதும் எம்புட்டு முக்கியம்! மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரணும் தான்; ஆனா, அரசாங்கங்கள் முதல்லே விழிக்கணுமில்லெ, எம்புட்டு நாளைக்குத்தான் இப்படித் தூங்கிட்டிருக்குமோ தெரியலியே வெங்கட்ஜீ?

  இளைய நிலா - மறக்க முடியாத பாட்டு! ராஜா-வைரமுத்து-பாலு கூட்டணி, ஹூம், அது ஒரு காலம்! :-)

  ReplyDelete
  Replies
  1. அரசாங்கமும், சில நிறுவனங்களும் செய்ய வேண்டிய பணிகள் எண்ணிலடங்கா...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டைக்காரன்.

   Delete
 8. உண்மை தான்......தமிழகம் – இருளும் இருள் சார்ந்த இடம் தான்.......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மலர்.

   Delete
 9. அருமையான சாலட்...
  கல்யாண்ஜி கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 10. ராஜஸ்தான் ஜூன்ஜூனு செய்தி சிரிப்பாகவும் அதே சமயம் ஆச்சர்யப் படும்படியும் உள்ளது. நல்ல பலன் இருக்கும் என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டில் இப்படிச் செய்ய வேண்டுமானால் தினம்தோறும் வீதிகள்தோறும் மேளச்சத்தம் விசில் சத்தம் கேட்டவண்ணமிருக்கும்!

  இற்றை - சோகமான சிரிப்பு. உங்க ஊர்க் காரங்க வேணாம்னு திருப்பிக் கொடுத்ததைக் கூட தமிழ்நாட்டுக்குத் தர மாட்டேன்னுட்டாங்களாமே...

  குறுஞ்செய்தி எளிய உண்மை!

  அருமையான புகைப்படம்

  ப.மு. பாடல்கள் எல்லாமே நல்ல பாடல்கள். ஆத்தா தவிர!

  ரா.கா.க. கா. ...... கொடுமை

  மறுபடியும் ஒரு அழகான வண்ணதாசன் கவிதை.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு முறையும் ஃப்ரூட் சாலடின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து அதற்கு கருத்தும் எழுதி என்னை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு எனது நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. கழிப்பறை வசதி மிக முக்கியமான ஒன்று. அடிப்படை வசதிகளில் ஒன்று. விழிப்புணர்வு அவசியம் தேவை.


  சுகமான தூக்கத்தைப் பார்த்தவுடன் இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்கலாம் போல ஒரு ஆசை! எங்களூரில் நிலவும் வானிலை அப்படி!

  கல்யாண்ஜி அவர்களின் கவிதை வரிகள் மனதை வருடுகின்றன.


  இரண்டு தளங்களை நிர்வகிப்பது சிரமம் தான்!

  பாராட்டுக்கள் ருசியான பழக் கலவை விருந்துக்கு!

  ReplyDelete
  Replies
  1. உங்களூர் போலவே இங்கும் வானிலை அப்படித்தான். குளிர் ஆரம்பித்து விட்டது!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 12. எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாடல்...

  செய்திகள்... புகைப்படம் சூப்பர்...

  ஃப்ரூட் சாலட் அருமை...
  tm7

  ReplyDelete
  Replies
  1. பாடல் கேட்கக் கேட்க சுவை தான்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 13. சுவையான கலவை, அதில் கவிதை மிகவும் அருமை!

  பகிர்வுக்கு நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்].

   Delete
 14. ஃப்ரூட் சாலட் நல்ல ருசி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமு ஜி!

   Delete
 15. சுவாரசியமான தகவல்கள்.கல்யாண்ஜியின் கவிதை மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 16. இப்ப தான் லஞ்ச் சாப்பிட்டு வந்தா ஃப்ரூட் சாலட் சூப்பரா இருக்கு.விசில் ஐடியா சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 17. ஆகா... கல்யாண்ஜியின் அற்புதமாக கவிதையும். இருளும் இருள் சார்ந்த இடமும் என்ற முகப்புத்தக இற்றையின் சாடலும். சுகமான உறக்கத்தைக் கொண்டாடும் நாயின் படமும். ‘உச்சா’ போனால் பிகில் + மேளம் அடிக்கப்படும் என்கிற வித்தியாசத் தகவலுமாக... சுவை எக்குத்தப்பாக கூடியிருக்கிறது ப்ரூட் சாலடில். அசத்தறீங்க வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. //சுவை எக்குத்தப்பாக கூடியிருக்கிறது //

   :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 18. //தமிழகம் – இருளும் இருள் சார்ந்த இடமும்... //

  அதே அதே ....
  அதனால் தான் தினமும் பின்னூட்டமிடவும் முடிவதில்லை.

  நல்ல பதிவு. பாராட்டுக்கள், வெங்கட்ஜி

  ReplyDelete
  Replies

  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 19. பொது இடத்தில் அசிங்கம் செய்தால்..., எப்படியோ ஊர் ”நாறாம” இருந்தா சரிதான்.

  ராஜா காது கழுதை காது..., கலிகாலம்ன்னு சொல்லுறதை தவிர வேறென்ன செய்ய போறோ:

  வரைப்படம் கவிதை..., நெகிழ வைத்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 20. 'சுகமான தூக்கம்' இதமான படம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 21. பொது இடம் பற்றி சொன்ன விஷயம் வாசிக்க ஜாலியா இருந்தாலும், கழிவறை குறித்து கவனம் எடுக்க வேண்டியதும் அவர்கள் கடமை தானே.. கழிவறையில் தண்ணீரோ, பேப்பரோ இல்லாமல் போனாலே நமக்கெல்லாம் அவஸ்தை வரும்.. அவர்களுக்கு கழிவறையே இல்லை. கடினம் தான்

  ReplyDelete
  Replies
  1. சில முயற்சிகள் செய்தாலும் இன்னும் அதிகம் செய்ய வேண்டும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹாரி.

   Delete
 22. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 23. இந்தப் பாடலுக்கு முப்பது வயதா! காலம் போனதே தெரியவில்லை.
  விசில் மேளத்தால் பொது இடங்களில் கழிவது குறைகிறதா என்ன?

  ReplyDelete
  Replies
  1. குறைக்க இப்படியும் முயற்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

   Delete
 24. எத்தனை முறை கேட்டாலும் இனிக்கின்ற பாடலது! வரைபடம் அருமை! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 25. அன்பு நண்பரே இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவை நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.

  நன்றி

  http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9.html

  ReplyDelete
  Replies
  1. தங்கள் மூலம் எனது பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி முனைவரே.

   Delete
 26. கழிப்பறை//

  இந்தியா முழுவதுமே நிச்சயம் மாற்றம் தேவை தான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 27. தீபாவ‌ளி ப‌ர்ச்சேஸாக‌ இப்ப‌திவின் பிர‌ம்மாண்ட‌ம்! ப‌ட்டாசாக‌, இனிப்புக‌ளாக‌, புதிய‌ர‌க‌ ஆடைக‌ளாக‌,ந‌ட்பின் கொண்டாட்ட‌மாக‌,ச‌மூக‌ம் போகும் போக்கை எண்ணி பெருமூச்செறிவ‌தாக‌, (லேகிய‌ம் தேவைப்ப‌டும் இட‌ம்) ... எல்லாம் தாண்டி நீண்டு நிலைத்திருக்கும் க‌ல்யாண்ஜி க‌விதை! வாழ்த்துக்க‌ளுட‌ன்[தீபாவ‌ளிக்கும்:)] ந‌ன்றியும் ச‌கோ... மொத்த‌த்தில் பிற‌ந்த‌ வீட்டு ப‌ண்டிகைச் சீராக‌ ப‌திவு!

  ReplyDelete
  Replies
  1. பண்டிகைச் சீராகவே எடுத்துக்கொண்ட சகோவிற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 28. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 29. புரூட் சாலட்-டின் அனைத்து தகவலும் அருமை
  இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கழிப்பறை குறித்த இந்த விழிப்புணர்வு வந்தால் நலம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....