எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 30, 2012

ஃப்ரூட் சாலட் – 23 – தில்லியில் திருவிழா – குங்குமப் பூவே
குழந்தைகள் தினமாம் நவம்பர் 14 ஆம் தேதியில் தொடங்கி, நேற்றைய முன் தினம் அதாவது 27-ஆம் தேதி அன்று தில்லியின் வருடாந்திர திருவிழா முடிந்தது.  என்னது தில்லியில் திருவிழாவா? சொல்லவே இல்லை!என்பவர்களுக்கு, இது வருடாந்திர திருவிழாங்க. கிட்டத்தட்ட 32 வருஷமா நடந்துட்டு இருக்கு. பொழுது போக்கு அம்சங்கள் அதிகமாக இல்லாத தில்லியில், பல மக்களுக்கு இந்த பதினான்கு நாட்களும் திருவிழா தான்.

ஒவ்வொரு வருடமும் இந்த நாட்களில் பிரகதி மைதானம் வரும் மக்களின் அலைவெள்ளத்தில் பிதுங்கி வழியும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நிரந்தரமான கட்டிடம், அதைத் தவிர வெளிநாட்டு அரங்குகள், அரசு துறைக்கான அரங்குகள், உணவுப் பொருட்களுக்கான இடங்கள் என்று எங்கும் மக்கள் கூட்டம் அலை மோதும். இந்த முறை கடைசி ஞாயிறான 25 ஆம் தேதி அன்று சுமார் ஒன்றரை லட்சம் பேர் கண்காட்சியைப் பார்க்க வந்திருந்தார்களாம். இதில் இடிமன்னர்களும், உரசல் மன்னர்களும், மொபைல்-பிக்பாக்கெட் அடிப்பவர்களும் அடக்கம்!கண்காட்சி முடிந்த பிறகு சிறப்பான பங்காளர்களுக்கு பரிசுகள் வழங்குவார்கள். இந்த வருடத்தின் மாநிலங்களுக்கான முதல் பரிசு பெற்ற மாநிலம் – அசாம், இரண்டாம் பரிசு – கேரளா, மூன்றாம் பரிசு பஞ்சாபிற்கும் ராஜஸ்தானிற்கும்.  என்னது இதுவரை தமிழகம் பரிசு பெற்றிருக்கிறதா? என்றா கேட்டீங்க! எனக்கு நினைவு தெரிந்து இது வரை இல்லை. காரணம் என்று ஒருமுறை வந்து பார்த்தால் தெரிந்துவிடும்!இந்த வருடம் வேலைகள் அதிகமாக இருந்ததால் நான் செல்லவில்லை. அதனால், போன வருடம் அசாம் அரங்கில் எடுத்த படங்களை இணைத்திருக்கிறேன். கேரள படமும் தான்!

எல்லா வருடங்களிலும் இதே நாட்களில் தான் இந்த திருவிழா நடக்கும். இச்சமயத்தில் வந்தால் நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காக்கா கல் போட்டு தண்ணீர் குடிச்சுதுன்னு சொல்லப் போறீங்க. இந்தக் காலத்து காக்கா MODERN காக்கா...  குழாய் போட்டு உறிஞ்சுடும்!இந்த வார குறுஞ்செய்தி

Heart is not a basket for keeping tension and sadness.  It’s a golden box for keeping roses of happiness…  Let your heart be happy always.

ரசித்த புகைப்படம்: 

எதாவது ஒரு இடத்தில் வரிசையாக வரவேண்டும் என எழுதி இருந்தால் ‘அவன் யார் சொல்றது?என்ற எண்ணத்தோடு குறுக்கே செல்பவர்கள் தாங்க நிறைய பேர்.  அவங்க எல்லாரும் இந்தப் பறவைகள் கிட்ட வகுப்புப் போகணும்.


  
ரசித்த பாடல்

இந்த வாரம் ஒரு பழைய பாடல்.  சரி சரி ஓடாதீங்க. நிச்சயம் ரசிக்கும்படியான பாடல் தான். நம்ம சந்திரபாபு பாட்டு. பாட்டுலயும், சந்திரபாபுவிடமும் என்ன ஒரு துள்ளல். என்ன பாட்டுன்னு கேட்கறீங்களா?  “குங்குமப் பூவே, கொஞ்சும் புறாவேஎனும் பாடல் தான். 1959- ஆம் வருடம் வெளிவந்த மரகதம் என்ற படத்தில், திரு சுப்பையா நாயுடுவின் இசையில் சந்திரபாபுவும், ஜமுனா ராணியும் பாடிய பாடல்.  நீங்களும் ரசியுங்களேன்.

 ராஜா காது கழுதைக் காது:  

சமீபத்திய திருச்சி பயணத்தின் போது பேருந்து ஒன்றில் கேட்டது.  பாட்டி தனது நான்கு வயது சுமார் பேரனிடம்  – “கண்ணு, பார்த்து சாப்பிடணும், பப்பிள் கம் முழுங்கிடாத, வயத்துல போய் ஓட்டை போட்டுடும்!”. அதற்கு மகள் சொன்னது – ஏம்மா பஸ்ல இப்படி கத்தற, எல்லாம் அவனுக்குத் தெரியும்.

படித்ததில் பிடித்தது:
இப்படித்தான்....

அடைக்கப்படும் கதவின்
விருப்பமான சத்தத்திற்காக
உள் அறையில் காத்திருக்கிறேன்.
மிகுந்த கவனத்துடன்
சத்தமே கேட்காமல்
சாத்திவிட்டுப் போகிறார்கள்.
இப்படித்தான் ஒரு காரணமுமின்றி
இழந்துவிட நேர்கிறது
சின்னும் சிலவற்றை.

-          கல்யாண்ஜி

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

44 comments:

 1. இந்த வார குறுஞ்செய்தி: சந்தோஷமாக
  ரசிக்கச் செய்தது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. கல்யாண்ஜி கவிதை அசத்துகிறது.

  ஏன் தமிழ்நாட்டுக்குப் பரிசு கிடைப்பதில்லைனு சொல்லக்கூடாதா? (அதுக்காக ஒரு தடவை வரணுமா?)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி.

   எப்போதும் ஆட்சியாளர்களின் படங்கள் மட்டுமே தான் வைத்திருப்பார்கள். வேறு எதையுமே பிரதானப் படுத்துவதில்லை.

   Delete
 3. போனவருடம் நாங்களூம் இந்த திருவிழாவில் கலந்து கொண்டோம். தமிழ்நாடு வெற்றி பெறாதக்காரணம் வந்து பார்த்தால் தெரியும் என்று சொல்லி இருக்கிறீர்கள். கலைநயமே இல்லாமல் அம்மாவின் புகழ் பாடும் மேடையாக அமைந்து இருந்தது போனமுறை.இந்தமுறையும் அப்படித்தானே இருக்கும்.
  சந்திரபாபுவின் பாடல் கேட்டு மகிழ்ந்தேன், எனக்கு பிடித்தபாடல். மனிதன் பறவைகளிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது. இற்றை அருமை., ராஜா காது கேட்ட அம்மா, மகள் உரையாடல் வெகு யதார்த்தம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதி அரசு.

   Delete
 4. One of my favourite songs... 'Kunguma poove...'

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 5. முதற்படம் மிகவும் பிடித்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுமதி.

   Delete
 6. ஃப்ரூட்சலாட் குருஞ்செய்திகள் ரசித்தபாடல் படித்ததில் பிடித்தது எல்லாமே நல்லா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 7. வழமை போல கலக்கல்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹாரி.

   Delete
 8. எனக்கு ஒரு சின்ன சந்தேகம் சார் .. தில்ல்லி திருவிழா பேரு நீங்க கடைசி இல்ல... இல்ல நான்தான் ஒழுங்கா பதிவு படிகலையா அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 9. பறவைகள் அருமை. பாட்டி கவலை மகளுக்குத் தெரியாது:)
  இதயம் மகிழ்ச்சிக்காகப் படைக்கப் பட்டதா.சரி. உண்மைதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 10. இந்த முறை ஃப்ரூட் சாலட் - பிடித்த பாடலுடன் அருமை...tm6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. //”இதுவரை தமிழகம் பரிசு பெற்றிருக்கிறதா?” என்றா கேட்டீங்க! எனக்கு நினைவு தெரிந்து இது வரை இல்லை. காரணம் என்று ஒருமுறை வந்து பார்த்தால் தெரிந்துவிடும்!//

  எப்படிக் கிடைக்கும்! எப்படிக் கிடைக்கும்ணேன்!

  நிரந்தரமாக தில்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு இல்லத்தில் உள்ள உணவகத்தில் நம்ம தமிழ்நாடு இல்லமாச்சேன்னு ஒரு நாள் சாப்பிடப்போயிட்டேன். சாப்பிட உட்கார்ந்தால் குடிக்க தண்ணி வைக்க நாதியில்லை. அதே சமயம் இரண்டு வட இந்திய இளைஞர்களைக் கண்டதும் ஓடோடி வந்த சர்வர் வளைச்சு வ்ளைச்சு கவனிச்சார்.

  (டிப்ஸ் தரமாட்டான், கஞ்சப்பயல்-ன்னு நம்ம மூஞ்சியில எழுதியிருக்கும் போல)

  எப்படிக் கிடைக்கும்! எப்படிக் கிடைக்கும்ணேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்]

   Delete
 12. அனைத்தும் அற்புதம்.. தொடருங்கள். புதிய அசாம் படங்களைப் போடுங்கள் ஆவலைத்தூண்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 13. பறவைகளின் அணிவகுப்பு கண்ணைக் கவர்ந்தது
  நண்பரே..
  எறும்புகள் சாரை சாரையாக செல்வதும்
  இதில் ஒன்று...
  அவைகளுக்குள் தான் எத்தனை ஒற்றுமை..
  நாம் தெரிந்து புரிந்துகொள்ளவேண்டிய விஷயம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 14. அவிங்க பரிசு கொடுக்கலைன்னாலும் நம்ம ஊரு நமக்கு அழகுதான்!

  விஞ்ஞானக் காக்கா!

  என் இதயம் எப்போதும் சந்தோஷத் தடாகம்!

  என்ன ஒரு அணிவகுப்பு! என்ன ஒரு புகைப் படம்! எப்படி இப்படி எடுக்க முடிந்ததோ?

  சந்திரபாபு பாட்டுக்குக் கேட்க வேண்டுமா? இது போலவே 'புத்தியுள்ள மனிதரெல்லாம்' பாட்டு கூட ரசிக்கக் கூடிய டான்ஸ்!

  கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி.

   Delete
 16. சிறப்பான தொகுப்பு.

  பறவைகளின் அணிவகுப்பு அசத்தலான படம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 17. முதல்படமும் பறவைகள் படமும் நன்கு பிடித்தது. நல்ல தகவல் தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 18. இன்னா நைனா ப்ரூட் சால்ட்ன்னு இங்கிலீஸ் பேர் வச்சுகினு தமிழ்லே கலக்கறியப்பா சூப்பர்.
  எல்லாமே சூப்பர்ப்பா.மவ ராசான இரு. வாழ்த்துக்கள்ப்பா.

  விஜய்/டெல்லி

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் நல்லாக்கீதா... டாங்ஸ்பா!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 19. பழக் கலவை இனித்தது.
  நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே.

   Delete
 20. ருசியான சாலட். அருமையான பழங்கள். தில்லியின் திருவிழா குறித்து இப்போத்தான் தெரியும். :)))) இன்று வரை கேட்டதில்லை. தில்லிக்காரங்க பலர் உறவுகளாக இருந்தும்.....:)))))

  பறவைகளின் அணிவகுப்பு அருமை. படம் எங்கே கிடைச்சது?

  சந்திரபாபு எனக்குப் பிடிச்ச காமெடி நடிகர். அதிலும் இந்தப் பாட்டு, கலக்கல் தான். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 21. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 22. //Heart is not a basket for keeping tension and sadness. It’s a golden box for keeping roses of happiness… Let your heart be happy always.//

  இது படிக்க மிகவும் நல்லாயிருக்கு!

  அனைத்துமே அருமை தான். நன்றிகள், வெங்கட்ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....