எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, November 4, 2012

நாங்கல்லாம் யாரு!நம்ம ஊர்ல சில வியாபாரிகள் தனது பொருட்களை சைக்கிளிலும் வண்டிகளிலும் கட்டி எடுத்துச் செல்வதைப் பார்த்து இருப்பீர்கள்.  ஹாண்டில் பார், வண்டியின் இருபுறங்கள் என எங்கெங்கு பார்த்தாலும் எதையாவது கட்டித் தொங்க விட்டிருப்பார்.  சிலர் மிளகாய் மூட்டைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக வைத்து சைக்கிளில் எடுத்துச் செல்வார்

நான் கூட எங்கள் வீட்டில் ஒரு விசேஷத்தின் போது பல விருந்தாளிகள் வந்ததால், தலையணைகளை வாடகைக்கு எடுத்த போது, “கொண்டு வந்து தர ஆளில்ல தம்பி, உங்க சைக்கிள் கேரியர்ல வைச்சு கட்டி கொடுத்துடறேன் என 20 தலையணைகளை வைத்துக் கட்டி விட்டார் [Literally என் தலையில் கட்டியது போல இருந்தது!] அப்ப நானே இலவம் பஞ்சு மாதிரி பறக்கற நிலையில் தான் இருப்பேன்! :)

சரி என்ன ஞாயிறுகளில் புகைப்படம் தானே, இன்னிக்கு என்ன கதையெல்லாம்?  கொஞ்சம் பொறுங்கப்பா, இன்னிக்கு இந்த மாதிரி ஒரு சின்ன வண்டியில் பல வெயிட்டான விஷயங்களை எடுத்துட்டுப் போற படங்கள் தான்! இந்தப் படங்கள் நம்ம பக்கத்து நாட்டுல எடுத்தது! [அட நான் இல்லைப்பா, நமக்கு இந்தியாவிலேயே இன்னும் பாக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு!].  மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் விஜயராகவன் அவர்களுக்கு நன்றி. 


வெள்ளைப் பன்றி:  ஏய் மனிதா, உனக்கே இது நியாயமா, இப்படி நெருக்கி அடைச்சு கொண்டுட்டு போறியே.... இந்த வண்டில எத்தனை முட்டை இருக்குன்னு கணக்கு பண்ணி சரியாச் சொன்னா ஒரு அட்டை முட்டை இலவசமா கொடுப்பாராம் இந்த வண்டியோட்டி!


அட முட்டை போட்டதுங்க எல்லாம் இந்த வண்டியில போகுதுங்களா....  சில வாத்து கூட இருக்குதே....கொஞ்சம் நல்லாப் புடுச்சுக்கோ, நான் தலைமுடி சரி பண்ணிக்கிறேன் அப்படின்னு பின்னாடி வருவார் சொன்னாலும் சொல்லலாம்!


அடடா ஏய்யா இப்படி லொள்ளு பண்ணறீங்க! வண்டி ஓட்டியும் இரண்டு கையால பிடிச்சுக்கலாம்! எதிரே வரவங்க பார்த்து போயிப்பாங்க!அட முன்னாடி சின்னப் புள்ள மாதிரி ஒக்காந்து போறவுங்க முகத்துல என்ன ஒரு வெக்கம்!


என்னங்க, பச்சை இலை பத்துமா பத்தாதான்னு பார்க்க வாயில் சிகரெட் வச்சு இருக்கீங்களா?வண்டி ஓட்டிட்டே ஹூலா ஹூப் நடனம் ஆடுவாரா?ஹலோ...  ப்ளீஸ்... வேணாம்..  நான் அளுதுருவேன்சொல்லாமல் சொல்கிறதோ இவ்வண்டி!

என்ன நண்பர்களே, படங்களை ரசிச்சு இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.  மீண்டும் அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


56 comments:

 1. அத்தனையுமே ரசிக்கத் தகுந்த படங்கள் அய்யா.நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி!

   Delete
 2. பாட்னாவில் ஆட்டோவில் போகிற ஆட்களையும் சாமான்களையும் போட்டோ இருந்தா போடுங்க. இதவிட சூப்பராயிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. பீஹார், உத்திரப் பிரதேசம் இரண்டு மாநிலங்களிலும் இப்படித்தான்.... புகைப்படம் எடுத்து போட்டுடுவோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 3. படங்கள் அனைத்தும் அருமை...

  நன்றி...
  tm1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. படங்களும் அருமை!போட்ட விளக்கங்களும் அருமை! நான் சமீபத்தில் தாய்லந்து சென்றிருந்த போது இது போன்ற சில காட்சிகளைக்கண்டேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 5. அத்தனையும் அழகுக் காட்சிகள்..

  ReplyDelete
  Replies
  1. அழகு .... :))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 6. நல்ல கனமான படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்....

   Delete
 7. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி சக்தி தாசன்.

   Delete
 8. இவங்கல்லாம் உட்கார்ந்து யோசிப்பாய்ங்க போலிருக்குது! :-)

  ReplyDelete
  Replies
  1. எல்லா நேரமும் யோசிப்பாய்ங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை.

   Delete
  2. தலைநகரில் , தன்னிகரற்ற "ப்ளாக் " அரசராக கோலோச்சிக்கொண்டிருக்கும் வெங்கட் அவர்களுக்கு வணக்கங்கள் பல . போட்டோ தொகுப்பு அருமை எண்ணை கம்பனிகளுக்கு துணை போகும் அரசாங்கம் பாமர மக்களை கண்டு கொள்வதாக இல்லை. விலைவாசியின் பளுவினை தாங்க சக்தியற்ற ஏழை, எளியவர்கள், இதைவிட அதிகமாக யோசித்தாலும் ஆச்ச்சரியப்படுவதர்க்கில்லை. நன்றி அய்யா வாழ்க . வளர்க

   அன்புள்ள ,
   நடராஜன், வேளச்சேரி.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சித்தப்பா....

   Delete
 9. புகைபடங்களைவிட, நீங்கள் கொடுத்திருக்கும் வரிகள் அதிகம் சுவையாக இருக்கின்றன, வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 10. Seems dangerous! Interesting to see the limits humans can touch for a thing called- survival...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதங்கி.

   Delete
 11. அருமையான படங்கள்.. ஆனாலும் உயிருள்ளவைகளை தொங்க விட்டுட்டுப் போறது என்னவோ பாவமத்தான் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 12. 'பாவமாத்தான்'ன்னு திருத்தி வாசிக்கவும் :-)

  ReplyDelete
  Replies
  1. வாசிக்கும்போதே திருத்தி தான் வாசித்தேன்! :) நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 13. தலைநகரில் , தன்னிகரற்ற "ப்ளாக் " அரசராக கோலோச்சிக்கொண்டிருக்கும் வெங்கட் அவர்களுக்கு வணக்கங்கள் பல . போட்டோ தொகுப்பு அருமை எண்ணை கம்பனிகளுக்கு துணை போகும் அரசாங்கம் பாமர மக்களை கண்டு கொள்வதாக இல்லை. விலைவாசியின் பளுவினை தாங்க சக்தியற்ற ஏழை, எளியவர்கள், இதைவிட அதிகமாக யோசித்தாலும் ஆச்ச்சரியப்படுவதர்க்கில்லை. நன்றி அய்யா வாழ்க . வளர்க

  அன்புள்ள ,
  நடராஜன், வேளச்சேரி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தப்பா.

   Delete
 14. நாட்டுக்கு எவ்வளவு எரிபொருள் மிச்சம் பண்றாங்க பாருங்க வெங்கட்.

  ஒரு சடன் ப்ரேக் போட்டா என்ன ஆகும்!!

  யோசிக்க வைத்த படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. எரிபொருள் மிச்சம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 15. அந்த முகம் பார்க்கும் கண்ணாடியும் கமெண்டும் ரொம்பவே கவர்ந்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. இவங்க என்னத்த பெரிசா செஞ்சுட்டாங்க..

  நாங்க தூக்கிட்டு போகாததையா இவுக தூக்கராக ?
  இங்கன வந்து பாருங்க.
  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. தோ உங்க பக்கத்துக்கும் வந்துடறேன் சுப்பு தாத்தா.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 17. எனக்குக் கூட சிறுவயதில் மளிகை சாமான்கள்,காய்கறிகள் சைக்கிளில் கட்டி எடுத்து வந்தது (உக்குக்கும்..- கனைப்பு - நான்தான் செய்வேனாக்கும்!) நினைவுக்கு வருகிறது.
  கண்ணாடியைப் பிடித்திருப்பவர் படத்தில் கண்ணாடியில் படம் எடுக்கும் படம் காணோமே!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   கண்ணாடியில் படம் எடுக்கும் படம் - ஒரு வேளை zoom பண்ணி எடுத்து இருப்பாரோ! :)

   Delete
 18. வித்யாசமான படங்கள்.
  நகைச்சுவையான விளக்கங்கள்.
  பாராட்டுக்கள். வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 19. டூ வீலர் பயணிகளின் புகைப்படங்கள் அற்புதம். குறிப்பாக கண்ணாடி எடுத்துச் செல்லும் படம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 20. நீங்கள் யாரென்று படத்திற்கு விளக்கம் அளித்தவிதமே சொல்லுதே! அத்தனையும் நெஞ்சை அள்ளுதே! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 21. ந‌ல்ல‌ தெகிரிய‌சாலிங்க‌தான்!

  உங்க‌ க‌மெண்ட் ப‌ட‌ங்க‌ளின் சுவார‌ஸ்ய‌த்தை மெருகூட்டுது எப்ப‌வும் போல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 22. புகைப்படங்கள் அருமை ! வாடகை செலவை குறைக்க கையாளும் வழி அவ்வளவே !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   Delete
 23. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.

   Delete
 24. படங்களைப் பார்த்தாலே அய்யோ... என்று இருக்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 25. அட! இதெல்லாம் நம்ப ஊரு இல்லையா? படங்கள் ரசிக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 26. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 27. நிஜமாகவே நல்லா ரசிச்சு சிரிச்சேன் நன்றி

  ReplyDelete
 28. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....