எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 15, 2012

இரவைப் பருகும் பறவை – லாவண்யா சுந்தரராஜன்

ஃப்ரூட் சாலட் பதிவொன்றில் படித்ததில் பிடித்தது” பகுதியில் சக தில்லி வலைப்பதிவர் திருமதி லாவண்யா சுந்தரராஜன் அவர்களுடைய வடு” என்ற தலைப்பிட்ட கவிதையை சமீபத்தில் பகிர்ந்திருந்தேன்.  இது லாவண்யா அவர்கள் வெளியிட்ட இரண்டாம் கவிதைத் தொகுப்பான இரவைப் பருகும் பறவையிலிருந்து எடுக்கப்பட்டது.  சென்ற வருட தில்லி புத்தகச் சந்தையில் வாங்கியிருந்தாலும் படிக்காது வைத்திருந்த புத்தகங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று. 

சமீபத்தில் காலை நேரத்தில் கூவும் புள்ளினங்களின் குரல் கேட்டு  சீக்கிரமே விழிப்பு வந்து விட, துயிலெழுந்து காலைக் கடன்கள் முடித்து பலகணியில் நிற்கையில் சில்லென்ற காற்று பலகணி ஜன்னல் மூலம் முகத்தில் பட,  அலமாரியிலிருந்த புத்தகங்களைப் பார்வையிட்டேன்.  “என்னைப்படியேன் என்று இரவைப் பருகும் பறவை” அழைக்க, கவிதை படிக்க சரியான நேரம் இது தான் எனப் படிக்கத் தொடங்கி புத்தகத்தில் வெளியிட்டுள்ள அறுபதுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் படித்து முடித்த பின்தான் கீழே வைத்தேன்.  அன்று அலுவலகத்துக்கு  சற்றே தாமதமாகத்தான் சென்றேன். அரை நாள் விடுமுறை கொடுக்க வேண்டியதாயிற்று! இருந்தாலும், நல்ல கவிதைத் தொகுப்பினைப் படித்த திருப்தி கிடைத்ததே! 

புத்தகத்தில் வெளியிட்டுள்ள எல்லாக் கவிதைகளும் பிடித்திருந்தாலும், “வடுஉதிர்ப் பிரியம்”, மழை சென்றபின்னே”, “துயரத்தின் மரம்”, “ஏமாற்றம்” “உருகும் பனிக்கட்டி”, “புதுப் பெண்” போன்ற கவிதைகள் மிகவும் பிடித்திருந்தது.  நான் ரசித்த கவிதைகளில் ஒன்றிரண்டை இங்கே தருகிறேன்.

புதுப் பெண்

வீடு புதிது
உறவுகள் புதிது
கிண்டல் புதிது
திண்டல் புதிதென
புதுமணப்பெண்
மங்கல ஓசைகளில் இருந்து விடுபடாமல்
திளைத்திருக்கிறாள்

யாரும் எழுமுன்
சாணம் கரைத்து போட்டு
வாசல் பெருக்கணும்

நாத்தனாரின் கட்டளை கேட்டு
திடுக்கிட்டு அடங்கி
பழம்பெண்ணாகிறாள்

ஏமாற்றம்

அம்மாயி வீட்டு வாசல்
சாணம் மணக்கும்
மாக்கோலம் போடுவாங்க

பின்ன அவங்க வாசல்
சிமெண்ட் ஆச்சு
மாமாலு கோலமாவுலதான்
கோலம் போடுவாங்க

இப்போ மாமாலு மருமக
பெயிண்ட் அடிச்சு
வாசலில் நிரந்தரமா
கோலம் போட்டு இருக்கா

பெயிண்ட் கோலம் முகர்ந்த
எறும்பு கொஞ்சம் தடுமாறி
வாசல் தாண்டி
சமையலறை சக்கரை டப்பா
தேடி வந்துச்சி

என்ன நண்பர்களே ஃப்ரூட் சாலட்-ல் கொடுத்த வடு கவிதையையும் இங்கே கொடுத்த இரண்டு கவிதைகளையும் ரசிச்சீங்களா? மீதிக் கவிதைகளையும் நீங்க படிக்கலாம். லாவண்யா சுந்தரராஜன் அவர்களின் இரண்டாம் கவிதைத் தொகுப்பினை "காலச்சுவடு" பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  புத்தகத்தின் விலை ரூபாய் 80. 

மீண்டும் வேறொரு புத்தக வாசிப்பனுபவத்துடன் உங்களைச் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


42 comments:

 1. நல்ல கவிதைத் தொகுப்பினைப் படித்த திருப்தியுடன் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. மிக அருமையான பதிவு
  வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
  உங்கள் வரவை விரும்புகிறது.
  http://www.dinapathivu.com/
  தினபதிவு திரட்டி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தினபதிவு.

   Delete
 3. பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதைகள் முதல் தொகுப்பு படிச்சிருக்கேன் இந்த தொகுப்பு படிக்கலை

  டில்லி போயாச்சா

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது படியுங்கள். தில்லி இன்னும் போகலை. சனிக்கிழமை அன்று தான் கிளம்புகிறேன். தொலைபேசியில் உங்களை அழைக்கிறேன்.

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 4. புது மணப் பெண்ணை நனவுலகுக்குக் கொண்டு வரும் கவிதை - எல்லாப் பெண்களுமே இதற்கு ஆளாகி இருப்பார்கள் - நிஜ அனுபவத்தை நினைவு படுத்தியது!

  நல்ல பகிர்வு!

  ReplyDelete
  Replies
  1. //நிஜ அனுபவத்தை நினைவு படுத்தியது!//

   முடிந்த போது பதிவாக வெளியிடுங்களேன்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 5. நல்லதொரு பகிர்வு. நன்றி. முதல் தொகுப்பான ‘நீர்க்கோல வாழ்வை நச்சி’ வாசித்திருக்கிறேன். வாசிக்கிறேன் இதையும் விரைவில்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 6. நல்ல பகிர்வு.

  நாத்தனாரின் கட்டளை கேட்டு
  திடுக்கிட்டு அடங்கி
  பழம்பெண்ணாகிறாள்

  யதார்த்தம்...

  ReplyDelete
  Replies
  1. பகிர்வினை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 7. அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
  அவசியம் வாங்கிப் படித்துவிடுவேன்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 8. Replies
  1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 9. நல்லதொரு பகிர்வு...

  கட்டளை = நாத்தனார் ?

  நன்றி...
  tm9

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும், தமிழ்மணத்தில் ஒன்பதாம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. நீங்கள் ரசித்தவை எங்களையும் ரசிக்க வைத்தன. அருமையான அறிமுகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 11. நாத்தனார் குரலில் திடுக்கிடும் யதார்த்தத்துக்குத் திரும்பும் இயல்பைச் சொல்லும் கவிதையில் நமக்கு அந்த நாத்தனாருக்கும் நாளை அதே கதைதானே என்று தோன்றுகிறது! நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. // அந்த நாத்தனாருக்கும் நாளை அதே கதைதானே //

   அதே தான்..

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. நல்ல அறிமுகம்...விரைவில் வாசிக்கிறேன் வெங்கட்ஜி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 13. ரொம்ப ரசனையான பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 14. 'புதுப் பெண்' கவிதை பிரமாதம். நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 15. உயிரோடை லாவண்யாவா?

  புத்தக அறிமுகத்துக்கு நன்றி. அவர் எழுத்தின் விசிறி நான்.

  ReplyDelete
  Replies
  1. அவரே தான்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை சார்.

   Delete
  2. அவர் சென்னை வாசி என்று நினைத்திருந்தேன்!!

   Delete
  3. இல்லை.... அவர் தில்லிவாசி!

   Delete
 16. அருமையான பகிர்வு நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 17. அருமையான அறிமுகம். நாத்தனார் பற்றி யதார்த்தமான விஷயங்கள்.
  பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 18. இரண்டு கவிதைகளும் உண்மையை அழகாக உரைத்து நிற்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 19. nalla pakirvu...!


  mikka mika mika nantri!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....