எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 26, 2012

அம்மாவின் கைபேசி
ஒரு சனிக்கிழமை அன்று காலை திருவரங்கத்திலிருந்து பல்லவன் பல்லில் மாட்டிக்கொண்டு சென்னை வந்தேன். மாலை தமிழகத்தின் தலைநகரிலிருந்து இந்தியத் தலைநகருக்குச் செல்ல தமிழ்நாடு விரைவுவண்டியை பிடிக்க வேண்டும்.  சென்னை அருகே வரும்போது தில்லி நண்பர் பத்மநாபன் [எனது பதிவுகளில் ஈஸ்வரன் என்ற பெயரில் கருத்துப் பகிரும் நண்பர்] அவர்களின் கைபேசியில் அழைக்க தானும் சென்னையில் இருப்பதாகவும், அவரும் அன்றைய இரவு தமிழ்நாடில் தில்லி செல்வதாகவும் சொன்னார். நல்லவேளை மதியத்திலிருந்து இரவு வரை பொழுது போக்க ஒரு வழி கிடைத்தது!

சென்னை சென்ட்ரலில் உடைமைகளை பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு வெளியே வந்தோம். மதிய உணவை முடித்து விட்டு, வெளியேறினோம்.  இரவு வரை பொழுது போக வேண்டுமே, அதனால் ஏதாவது சினிமாவிற்குப் போகலாம் என பேருந்து பிடித்து சாந்தி திரையரங்கிற்குச் சென்றோம்.  அங்கே பார்த்தால் மூன்றரை மணிக்கு அம்மாவின் கைபேசி, நான்கு மணிக்கு ‘போடா போடிஎனப் போட்டிருந்தார்கள்.  சரி பக்கத்து திரையரங்கில் என்ன என்று பார்த்தால் அங்கே துப்பாக்கி, சுந்தரபாண்டியன், போன்ற படங்கள்.  துப்பாக்கி படம் ஹவுஸ் ஃபுல்.  சுந்தரபாண்டியன் ஆறு மணிக்குத் தான்.  அதனால் வேறு வழியின்றி அம்மாவின் கைபேசி பார்க்க முடிவு செய்தோம். விதி வலியது என்று புரியவில்லை அப்போது.

சரி படத்தின் கதைக்கு வருவோம். ஒன்பது பிள்ளைகளைப் பெற்ற அம்மாவின் [ரேவதி] கடைசி பிள்ளை அண்ணாமலை [சாந்தனு]. செல்லப்பிள்ளையான அண்ணாமலை வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். மாமன் மகள் செல்வி [இனியா] மீது கொண்ட காதலால் நல்ல பிள்ளையாக மாறி, மாமாவிடமே வேலைக்குச் சேர்கிறார்.  இனியாவுடன் ஒரு டூயட்டும் பாடுகிறார். வீட்டில் நடந்த ஒரு விழாவின் போது தங்கநகை காணாமல் போக அண்ணாமலை மீது சந்தேகம் கொண்டு அவரை அவரது அம்மாவே துடப்பத்தால் அடித்துத் துரத்தி விடுகிறார்கள். சில முதலாளிகளிடம் வேலைப் பார்த்து பிறகு ஒரு கல் குவாரி முதலாளியிடம் வேலைக்குச் சேர்ந்து நல்ல நிலையை அடைகிறார்.  அதற்குள் ஏழு வருடங்கள் ஓடி விடுகிறது.  ஏழு வருடங்களாக்க் காத்திருந்த செல்வியும், அண்ணாமலையின் இன்னோரு சகோதரரை மணம் புரிகிறார்.  மணம் முடித்த நான்காம் நாள் அண்ணாமலையிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது.  கூடவே தலைப்பில் வரும் கைபேசியும்!  அவ்வப்போது அம்மாவிடமும், செல்வியுடனும் பேசுகிறார். சீக்கிரமே வருவதாகச் சொல்கிறார். பணி செய்யுமிடத்தில் உண்மையாக நடந்து கொண்டதால் எதிரிகளைச் சம்பாதிக்கிறார். எதிரிகளின் கைப்பாவையாக பிரசாத் [தங்கர் பச்சான்].  அவர்கள் சொல்வதையெல்லாம் செய்து கடைசியில் எதிரிகள் சொல்பேச்சு கேட்டு சாந்தனுவை தீர்த்துக் கட்டுகிறாரா இல்லையா என்பது உங்களுக்கே புரிந்திருக்கும் – பாதி படத்திலேயே.  நடுவே தங்கர் பச்சானும் மனைவியுடன் ஒரு குத்தாட்டம் ஆடுகிறார். அவர் மனைவியாக நடித்திருப்பது மீனாள்.

பல இடங்களில் படம் பார்ப்பவர்களை “இது உனக்குத் தேவையா?என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வைக்கிறது. பல காட்சிகள் வருவதற்கு முன்னே இப்படித்தான் இருக்கும் என ஊகிக்க முடிகிறது. பாடல்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.  தியேட்டரின் உள்ளே சுத்தமாக இருந்தாலும், கழிப்பறைகள் முகம் சுளிக்கவும், மூக்கை அடைக்கவும் வைக்கின்றன. பகல் காட்சியிலேயே பல டாஸ்மாக் மன்னர்களையும் பார்க்க முடிந்த்து.

படம் பார்த்து விட்டு எங்களையே நொந்து வெளியே வந்தபோது சாந்தி தியேட்டரின் வாசலில் பெரிய பேனர்களில் விதம் விதமாய் நடிகர் திலகத்தின் படங்கள் – மற்றும் சாந்தி தியேட்டர் பற்றி இதழ்களில் வந்திருந்த பேட்டிகள் ஆகியவை இருந்தது. அதில் இருந்த ஒரு சிவாஜி படம் – நெற்றியில் கைவைத்து சிரிப்பது போன்ற படம் – எங்களிருவரையும் பார்த்து, இந்தப் படத்தையா பார்த்துட்டு வர என்று சிரிப்பது போல இருந்தது!

ஒரு வழியாக சென்னை சென்ட்ரல் திரும்பி தமிழகத்திற்கு வணக்கம் சொல்லி தமிழ்நாடு விரைவு வண்டியில் தில்லி கிளம்பினோம்! இனி சினிமா பார்ப்பதற்கு, அதாவது தில்லியில் திரையரங்கம் சென்று சினிமா பார்ப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.  அடுத்த முறையாவது நல்ல சினிமாவாக பார்க்க வேண்டும்.

வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

48 comments:

 1. சார் நீங்கள் வலைப்பதிவுகளில் திரைப்பட விமர்சனங்கள் படிப்பதில்லையா... இந்த மாதிரியான படங்களைப் பார்ப்பதற்கு பார்த்த நல்ல படத்தையே மீண்டும் பார்க்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. நேரத்தைப் போக்குவதற்காக ஏதோ ஒரு படம் போனோம்.... ஆனால் இப்படி இருக்குமென நினைக்கவில்லை...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 2. சாந்தி தியேட்டருக்கா ? சென்றீர்களா !!
  இந்த ஜன்மம் எடுத்த தற்கான இருவினைப் பயன்களையும் அனுபவித்தீர்களா !!

  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. பிறவிப் பயன்... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா...

   Delete
 3. ஓ தமிழ் படங்கள் இந்த அளவுக்கா நொந்து போக வைக்கின்றன?

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் பார்க்காததனால் தெரியவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 4. அதிசயமாய் ஒரு சினிமா விமர்சனம் உங்களிடமிருந்து

  எப்போதோ ஒரு முறை சினிமா போகும் உங்களை மாதிரி ஆட்கள் நல்ல படமாய் பார்த்து போகணும். இல்லாட்டி எப்போதாவது ஒரு முறை படத்துக்கு போவதையும் நிறுத்திடுவீங்க

  ReplyDelete
  Replies
  1. அதிசயம் தான்!... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன் குமார்.

   Delete
 5. ஒரு சிவாஜி படம் – நெற்றியில் கைவைத்து சிரிப்பது போன்ற படம் – எங்களிருவரையும் பார்த்து, இந்தப் படத்தையா பார்த்துட்டு வர//

  ஹா ஹா ஹா ஹா சிவாஜிக்கே பொறுக்கலை போல ப்பூப்பூப்பூப்ப்....

  ReplyDelete
  Replies
  1. சிவாஜிக்கே பொறுக்கலை! :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 6. LakshmiNovember 26, 2012 8:50 AM
  ஓ தமிழ் படங்கள் இந்த அளவுக்கா நொந்து போக வைக்கின்றன?//

  நீங்க இன்னும் விஜய் படம் பார்க்கலை போல அவ்வ்வ்வ்....

  ReplyDelete
  Replies
  1. விஜய் படம்... ஒரு விஜய் பட டிவிடி மும்பைக்கு பார்சல்!.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 7. இந்தப் படத்தின் இயக்குனர் அவர்களின்
  வாய் நீளும் அளவுக்கு ....
  படத்தில் சரக்கு இல்லை என்பது உண்மையே....

  நல்ல விமர்சனம் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்..

   Delete
 8. முதலிலேயே நல்ல படமாக ஆன்-லைன் புக் செய்திருந்தால் இந்த கொடுமையில் இருந்து தப்பித்து இருக்கலாம்.விதி தான்.

  ReplyDelete
  Replies
  1. முன்னேற்பாடு இல்லாமல் சென்ற படம்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 10. அம்மாவின் கைபேசி என்றதும் படம் அம்மாவைப் பற்றி இருக்கும் என்று நினைத்தேன். மக்களிடையே தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ஆவல் குறைந்து போனது தங்கள் அனுபவம் போன்றும் இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 11. //படத்தில் சரக்கு இல்லை என்பது உண்மையே....//
  மகேந்திரன் ஸார் !!
  வெங்கட நாகராஜ் வேறுவிதமாக அல்லவோ எழுதியிருக்கிறார்.

  /பல டாஸ்மாக் மன்னர்களையும் பார்க்க முடிந்த்து.//

  சரக்கு இல்லாமயா இருந்திருக்கும் !

  சுப்பு தாத்தா.


  ReplyDelete
  Replies
  1. :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 12. // தியேட்டரின் உள்ளே சுத்தமாக இருந்தாலும், கழிப்பறைகள் முகம் சுளிக்கவும், மூக்கை அடைக்கவும் வைக்கின்றன. பகல் காட்சியிலேயே பல டாஸ்மாக் மன்னர்களையும் பார்க்க முடிந்தது. //

  இனி சினிமா தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும் ஆசையே வராது. நான் தியேட்டரில் படம் பார்த்து வருடக் கணக்கில் இருக்கும்.
  ReplyDelete
  Replies
  1. நானும் தியேட்டரில் சென்று படம் பார்த்து சில வருடங்கள் ஆகிவிட்டன.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 13. தங்கர் பச்சானின் படம் வித்தியாசமாக இருக்கும் பார்க்கலாம் என்றெண்ணிய எனக்கு அந்த வாய்ப்பு இரு வாரங்களாக அமையவில்லை. நல்லதுக்குத்தான் போலும் .படம் குறித்த தகவலுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 14. அட! படத்தில் இவ்வளவு கதை நடந்ததா?

  (தங்கர்பச்சான் மட்டும் அன்னைக்கு கையில் கிடைத்திருந்தால் எல்லோரும் சேர்ந்து டிங்கரிங் பண்ணி ”டிங்கர் பச்சான்” ஆக்கி இருந்திருப்பார்கள்)

  எப்படியோ எங்களுக்கு ஒரு திரை விமர்சகர் கிடைத்தார்.

  ReplyDelete
  Replies
  1. நாம் அனுபவித்ததை அடுத்தவர்களுக்கும் சொல்லலாமே என்று தான் எழுதினேன்... மற்றபடி விமர்சனம்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்]

   Delete
 15. விமர்சன பதிவுகளை படித்திருந்தால் தப்பித்து இருப்பீர்கள்...

  விமர்சனத்திற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 16. பாவம் வெங்கட் நீங்க!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்... மீ த பாவம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 17. கைபேசி நன்றாகவே பேசி அறுத்துவிட்டதுபோல :))

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 18. // எங்களிருவரையும் பார்த்து, இந்தப் படத்தையா பார்த்துட்டு வர என்று சிரிப்பது போல இருந்தது! //

  அத்தான... இதுக்கு பதிலா MASல, வர்ற போற பாசஞ்சர பாத்துக்கிட்டே பொழுத ஒட்டி இருக்கலாமே

  ReplyDelete
  Replies
  1. அதேதான்... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்.

   Delete
 19. அழகி, சொல்ல மறந்த கதை, 9 ரூபாய் நோட்டு மட்டுமே இவர் படங்களில் குறிப்பிடத் தகுந்த படங்கள் போலும். :))


  ReplyDelete
  Replies
  1. அழகி, சொல்ல மறந்த கதை இரண்டுமே பார்த்து ரசித்திருக்கிறேன்.... அந்த நினைவில் சென்று விட்டேன் போல்... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 20. தமிழ் திரைப் படங்கள் பார்க்காமல் தப்பிக்க நான் இது போல விமரிசனங்களைப் படித்து விடுகிறேன்.
  நல்லவேளை தப்பித்தோம் என்று எண்ணிக் கொள்ளுவேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 21. உமக்கு தெரியாத நைனா!!!!
  கொள்ளி கட்டையை எடுத்து தலையை சொரிஞ்சு கிட்ட கதை.
  இதுதான் அது. புரிஞ்சிகினியா !!!!
  விஜய்

  ReplyDelete
  Replies
  1. புரிஞ்சுதுபா!...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 22. ஆனா படம் பற்றி நிறைய நல்லவிதமாய் பேச்சு இருந்தது வெளிவருமுன்பு அதனால் பார்க்க ஆவலாக இருந்தேன் நல்ல வேளை உங்க விமர்சனம் வாசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷைலஜா.

   Delete
 23. நல்ல சினிமாவாக பார்க்க வேண்டும் என்கிற தங்களின் கனவு நனவாகட்டும !!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 24. nalla padam entru nampumpadiyaanavarkal sonnaalthaan ...


  naan paarppathu...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....