எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, December 14, 2012

ஃப்ரூட் சாலட் – 25 – உடல் உறுப்பு தானம் – விஷ்ணுபுரம் விருது


இந்த வார செய்தி:


சென்ற வெள்ளிக்கிழமை அன்று இரவு தில்லியில் ஒரு வாகன விபத்து.  இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அடிபட்டு சாலையில் கிடந்தவரைப் பார்த்த வழிப்போக்கர் தகவல் சொல்ல, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். விபத்துக்குள்ளான இளைஞனின் வயது 21. தனது பெற்றோர்களுக்கு ஒரே மகன்.  பல சிகிச்சைகளுக்குப் பிறகும் அவ்விளைஞன் உயிர் மட்டும்தான் இருக்கிறது. மற்றபடி வேறு எந்த அசைவுகளும் கிடையாது – ஆங்கிலத்தில் சொல்லும் Brain Dead நிலை.

அவர்களது பெற்றோர்கள் இளைஞரின் உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்திருக்கிறார்கள்.  அவரது உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகள், 34 பேருக்கு மறுவாழ்வு அளிக்க இருக்கிறது. செவ்வாய்க்கிழமை அன்று இதய வால்வுகள், கணையம், கண்கள் என ஒவ்வொரு உறுப்பும் மற்ற மனிதர்களுக்குப் பொருத்தி, அவர்கள் பயன்படப் போகிறார்கள். 

ஒரே மகன் இறந்த சோகத்தில் இருந்தாலும் இந்த உடலுறுப்பு தானம் செய்ய முடிவு செய்த பெற்றோர்கள் நிச்சயம் பாராட்டுக் குரியவர்கள். 

இளைஞரின் பெயர் மிகச் சரியாகவே வைத்திருக்கிறார்கள் – அன்மோல்.  ஹிந்தியில் அன்மோல் என்பதற்கு அர்த்தம் விலை மதிப்பற்றது.  34 சக மனிதர்களுக்கு மறுவாழ்வு அளித்த அன்மோல் நிச்சயம் விலைமதிப்பற்றவர் தான். அவரது ஆன்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகள்.  இந்த முடிவை எடுத்த பெற்றோர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.


இந்த வார முகப்புத்தக இற்றை:

சிறுவயதில் பென்சில் பயன்படுத்தி இருக்கிறோம்.  பெரியவர்கள் ஆனபிறகு கூட பென்சில் பயன்படுத்துகிறோம்.  அந்த பென்சிலிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா?  தமிழ்ப்படுத்தி உங்களைப் படுத்த விருப்பமில்லை! அதனால் ஆங்கிலத்திலேயே தந்து விடுகிறேன்.

·         Pain always sharpens you!
·         Everything you do leaves a mark!
·         What’s inside you is useful, not what’s outside!


இந்த வார குறுஞ்செய்தி


HALF OF SORROWS WE EARN BY EXPECTING GOOD THINGS FROM WRONG PEOPLE AND THE OTHER HALF WE EARN BY SEARCHING WRONG THINGS IN GOOD PEOPLE.

ரசித்த புகைப்படம்: 

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சிறப்பான படம். என்ன ஒரு அழகு...


  
ரசித்த பாடல்

கல்லூரியில் படித்தபோது, என்னுடன் படித்த நண்பர் ராஜ்மோகன். எப்போது பாடச் சொன்னாலும் பாடும் இந்தப் பாட்டு எனக்கும் பிடிக்கும்.  என்ன பாட்டு அது?  ஏ.எம். ராஜா குரலில் “பாட்டு பாடவா?, பார்த்துப் பேசவா?என்ற பாடல் தான்! பாடலுக்கு இசை அமைத்ததும் அவரே. பாடலை எழுதியது கவியரசு கண்ணதாசன்.  படம் தேன்நிலவு.  ஜெமினி கணேசன் குதிரையில் சென்றபடியே பாடும் அந்த பாடல், இதோ உங்களுக்காக.ரசித்த காணொளி:


தமிழகத்தின் பல மாவட்டங்களில் தீவிரமான மின்சாரத் தட்டுப்பாடு.  இதில் என்ன புதுசா இருக்கு என்று கேட்பவர்களுக்கு? கொஞ்சம் பொறுங்க. இதே நிலை நீடித்தால் என்ன ஆகும்? இந்தக் காணொளியைப் பாருங்கள் – இப்படி நடந்தாலும் நடக்கலாம்.  யாருப்பா அது அடிக்க கை ஓங்குறது? பேச்சு பேச்சாதான் இருக்கணும் சொல்லிட்டேன்!
படித்ததில் பிடித்தது:

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் விஷ்ணுபுரம் விருதினை இவ்வாண்டு பெறுபவர் திரு தேவதேவன் அவர்கள்.  அவர்களது கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒன்று இங்கே உங்களுக்காக.

ஒரு சிறு குருவி


என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?

அங்கிருந்தும்
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி

சுரேலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்த பெருமிதத்துடன்
நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை

ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்


மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


  

48 comments:

 1. அருமை. SMS மற்றும் புகைப்படம் மிக ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 2. அன்மோல் 34 பேராக வாழப்போகிறான் என்பது மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 3. உண்மையில் அன்மோல் கடவுளாகி விட்டார்.
  வீடியோ சூப்பர்.சிரிப்பு வந்தாலும் சிந்திக்கவும் வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. அன்மோலின் பெற்றொருக்கு வந்த மனசு வேர யாருக்கும் வந்திருக்காது மிக உயர்ந்து விட்டார்கள்.பென்சில் தத்துவம் சுவாரசியம் படம் நேச்சுரல் தேவதத்தன் கவிதை நன்று

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 5. அன்மோல்'குழந்தைகளைக் கொஞ்ச இந்த வார்த்தையை என் தோழி உபயோகப்படுத்துவள் .ஐந்த அன்மோல் எல்லா இடத்திலும் விரவி விட்டான்.
  அவன் பெற்றோரும் அன்மோல்கள் தான்.
  பென்சிலில் பெயினும் ஒளிந்திருக்கிறதோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 6. மகனை இழந்த சோகத்திலும் மகத்தான செயல் செய்தவர்களை வணங்குகிறேன். இந்த வாரம் அனைத்துமே மிக மிக அருமை. நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 7. இப்போது பலரின் மனது விசாலமாகி வருவது வரவேற்கத்தக்க மாற்றம். அன்மோல் பெற்றோர் போன்றோரின் மனசு வெளியுலகிற்கு தெரிய வேண்டும் இன்னும் பலரிடம் மாற்றங்கள் நிகழ....முகப்புத்தக இற்றையும் , குறுஞ்செய்தியும் அருமை மொத்தத்தில் ஃப்ரூட் சேலட் டேஸ்டியாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 8. வணக்கம் வெங்கட். வழக்கம் போல மணமுள்ள கதம்பம். ஒரே ஒரு திருத்தம். விஷ்ணுபுரம் விருது பெறுபவர் தேவதேவன். தேவதத்தன் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. தவறைச் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி கணேஷ். மாற்றி விட்டேன்.

   Delete
 9. விலை மதிப்பற்றது”அன்மோலின் தானம் ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

   Delete
 10. எஸ் எம் எஸ் சூப்பர். பென்சிலைப்பற்றி சொன்னதையும் ரசித்தேன்.

  ஜெமினி கணேசன் எங்க ஊர்க்காரர் :)) எங்க ஊர் மன்னர் கல்லூரியில் இன்னமும் அவருடைய பெயர் போட்ட பலகை இருக்குன்னு சொல்வாங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 11. வீடியோ சூப்பர்.நிஜமா இது தான் நடக்க போகுது. அன்மோலின் பெற்றோருக்கு ஒரு சல்யூட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 12. முதல் பகிர்வு வருத்தமும் நெகிழ்வும்.

  பென்சில் தத்துவம் அருமை. வெள்ளைப் புறா அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 13. உறுப்பு தானம் செய்ய முன் வந்த அன்மோலின் பெற்றோர்கள் தாங்களும் 'அன்மோல்'கள் என்று நிரூபித்து விட்டனர்.
  பென்சில் வழியே வந்த தத்துவங்கள் அருமை.
  எனக்குப் பிடித்த பாடல்களில் ஊன்று 'பாட்டு பாடவா'. ராஜாவின் தேன் குரலில் அற்புதம்!
  சிறு குருவி எங்கள் மனைகளையும் கொள்ளை இட்டுச் சென்று விட்டது.
  திரு தேவதத்தன் அவர்களுக்கு விருது பெற்றமைக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 14. அன்மோல் - ரத்தினம்.

  இற்றை - முத்து.

  குறுஞ்செய்தி - தங்கம்.

  ரசித்த புகைப்படம் - அழகோ அழகு.

  ஏ எம் ராஜா குரல் ஒரு பொய்க்குரல் என்று தோன்றும். ஆனாலும் ரசிக்கக் கூடிய பாடல்.

  வீடியோ - சிரிக்க வைத்தது.

  கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. // சாம்பார் ஜெமினி கணேசன்//

  இதென்னங்க அடைமொழி புதுசா இருக்கு. இது வரை கேள்விப்பட்டதில்லையே?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி.கந்தசாமி ஐயா.

   Delete
 16. அன்மோலின் பெற்றோருக்கு எத்த்னை மனவேதனை இருந்திருக்கும்! அத்தனையையும் சகித்துக்கொன்டு மற்ற‌வர்களுக்கு மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய மிக உயர்ந்த மனசு வேன்டும்! அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்!

  பென்சில் வழியான வாசங்கள் அருமை! அந்த வெள்ளைப்புறா கொள்ளை அழகு!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 17. அன்மோலின் பெற்றோரை எப்படிப் பாராட்ட என்றே தெரியவில்லை!
  # ஏ.எம். ராஜா அற்புதமான மெலடிகளை அபாரமான அரேஞ்ச்மெண்டுகளுடன் அள்ளித் தந்தவர். 'ஆடிப்பெருக்கு' 'விடிவெள்ளி' 'கல்யாண பரிசு' பாடல்கள் இன்று கேட்டாலும் அவற்றின் மெட்டுக்களும் interludeகளும் மனதை மயக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே. பி. ஜனா சார்.

   Delete
 18. உடல் தானம் குறித்த பார்வை பரவ இது போன்ற பதிவுகள் உதவும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமரன்.

   Delete
 19. அன்மோல் ஆத்மா சாந்தியடையட்டும்...

  நல்ல பகிர்வுகள்...

  கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 20. விலை மதிப்பற்ற தியாகத்தை பதிவிட்டதன் மூலம் இத்தனை பேரின் இதயத்தில் அன்மோலை வாழவைத்து இருக்கிறீர்கள் பென்சிலிடமிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது .. படித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது ...you can change your mistakes when you rub

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதி குமார்.

   பென்சில் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதும் அருமை... நன்றி.

   Delete
 21. உறுப்பு தானத்தைக் குறித்து நினைக்கும்போது, நல்லதென்றாலும், அச்சமயத்தில் முடிவெடுப்பதை நினைத்தால் ஒரு திடுக்கிடல் வரத்தான் செய்கிறது.

  மின் தட்டுப்பாடுக்காக, பெட்ரோல் பயன்படுத்துவது எந்தளவு சாத்தியமோ? ஏற்கனவே எண்ணெய்க்க் கிணறுகள் இப்போ காலியாகிடும், அப்போ காலியாகிடும்னு பயங்காட்டுறாங்க... இதுவேற வந்துதுன்னா அவ்ளோதான்..

  ஆமா, “ராஜா காது..” இல்லியா இந்த சாலடில்? ஐஸ்கிரீம் இல்லாத சாலட்!! :-))))

  ReplyDelete
  Replies
  1. உறுப்பு தானம் - திடுக்கிடல் வரத்தாய் செய்கிறது. உண்மை. அன்மோலின் பெற்றோருக்கு அந்த எண்ணம் வந்திருப்பது போல் அனைவருக்கும் வருமென்று சொல்ல முடியாது.

   //எண்ணெய்க்க் கிணறுகள் இப்போ காலி// அதானே.... ஆனாலும் இப்படியும் நினைத்துப் பார்த்து ரசிக்கவே முடிந்தது.

   ராஜா காது... வரும் வார சாலடில் உண்டு... ஏற்கனவே கழுதைக்காது வந்த மாதிரி ஒரு ஃபீலிங்... :) அதான் நடுநடுவே மிஸ்ஸிங்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனைம்மா.

   Delete
 22. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 23. அன்மோல் பெற்றோர்கள் மகன் இறந்தும் வாழும்படி செய்து விட்டார்கள் .நல்ல கதம்பம் போல பதிவு !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   Delete
 24. புறா மிகவும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ;))))

  அன்மோலின் தானமும் விலை மதிப்பற்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....