வெள்ளி, 11 ஜனவரி, 2013

ஃப்ரூட் சாலட் – 28 – தில்லியில் கடும் குளிர் – ’நிர்பயா’ – அமிதாப் கவிதை




இந்த வார செய்தி:

40 வருடங்களாக இல்லாத அளவுக்கு தில்லியில் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. சாதாரண குளிருக்கே குரங்கு குல்லாய் போடுபவர்கள் இங்கே வந்தால் அவ்வளவு தான்! தொடர்ந்து பல நாட்களாக அதிகபட்சம் 16 டிகிரிக்குக் குறைவாகவும் குறைந்த பட்சம் 6 டிகிரிக்குக் குறைவாகவும் இருப்பதால் எல்லோருக்கும் கஷ்டம். நடுத்தர மக்களாவது பரவாயில்லை – இருக்கும் குளிர் உடைகளையும் குரங்கு குல்லாய்களையும், காலுறை, கையுறை என எல்லாவற்றையும் போட்டுக்கொண்டு – ஒரு ஜோக்கர் மாதிரி தோன்றினாலும் – குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர்.  பிரச்சனையே தங்க ஒரு கூரை இல்லாது, தெருவோரங்களிலும், பெரிய பாலங்களுக்குக் கீழும் வாழும் மக்களுக்குத் தான். குளிர் கால உறைவிடங்கள் இல்லாது அவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. எல்லா வருடங்கள் போல, இவ்வருடமும் கடும் குளிரினால் இறந்தவர்கள் உண்மையான எண்ணிக்கை வெளியே வராமலேயே போய்விடும்.

குளிர் மட்டுமே இருந்தால் கூட தாங்கி விடலாம் – கூடவே அடிக்கும் குளிர்ந்த காற்று அப்படியே எலும்பு நரம்புகளை ஊடுருவிச் சென்று ஆளை அடித்துப் போட்டு விடுகிறது. இதில் இரவு முழுக்க வெளியே இருக்க வேண்டிய மக்களின் நிலை தான் பரிதாபம். என்ன செய்யப் போகிறது தில்லி?

சீக்கிரமே வெயில் வர வேண்டும் எனச் சொல்கிறார் எங்கள் பகுதியிலுள்ள ஒரு ரிக்‌ஷா ஓட்டுனர். அது நமது கையில் இல்லையே என்று சொல்லிவிட்டு வந்தேன். இங்கே குளிர் இத்தனை இருந்தாலும், முகப்புத்தகத்தில் வந்த ஒரு படம் பார்த்து சிரிப்பு தான் வந்தது. என்ன படம் என்பது தானே உங்கள் கேள்வி? இதோ அந்த படம்!



இந்த வார முகப்புத்தக இற்றை:

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே, ஆனால் உனக்காக தன்னையே மாற்றிக் கொள்பவர் கிடைத்தால், அவரைத் தொலைத்து விடாதே!

இந்த வார குறுஞ்செய்தி

COMMON SENSE IS NOT A GIFT; IT IS A PUNISHMENT; BECAUSE YOU HAVE TO DEAL WITH EVERYONE WHO DOESN’T HAVE IT.    

ரசித்த புகைப்படம்: 



இப்படத்தினை ரசித்தேன் எனச் சொல்வதை விட, மனதினை மிகவும் பாதித்த படம் என்று சொல்வேன். இந்தப் பெண்ணின் மனதில் இருக்கும் ஆசையை சொல்லாது சொல்லும் இப்படம் உங்களுக்கும் பல உணர்வுகளைத் தரக் கூடும்.
  
ரசித்த பாடல்

ரெட்டை வால் குருவி படத்தில் வரும் ராஜராஜ சோழன் நான், எனை ஆளும்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். பள்ளியிலிருந்து கல்லூரி வரை என்னுடன் படித்த நண்பர் ராஜேந்திரனுக்கும் மிகவும் பிடித்த பாடல் இது. இளையராஜாவின் இன்னிசையில் யேசுதாஸ் பாடிய இந்த பாடல் இதோ உங்கள் ரசிப்பிற்கு!



ரசித்த காணொளி:

MAN from Steve Cutts on Vimeo.

மனிதன் எங்கே போய்க்கொண்டிருக்கிறான்? மூன்று நிமிடங்கள் தான் இந்தக் காணொளி. பாருங்கள் – உங்களுக்கு விடை கிடைக்கலாம்!




படித்ததில் பிடித்தது:

தில்லியின் சம்பவம் பலரை பாதித்தது என்றால் மிகையல்ல. இறந்து போன ‘நிர்பயாசொல்வதாக அமிதாப் பச்சன் அவர்கள் எழுதிய கவிதை. ஹிந்தியில் தருவதற்கு மன்னிக்கவும். புரியாதவர்கள், ஹிந்தி தெரிந்த நண்பர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.....

माँ, बहुत दर्द सहकर, बहुत दर्द दे कर, तुझ से कुछ कह कर मैं जा रही हूँ...
आज मेरी विदाई मे जब सखियाँ मिलने आएंगी
सफ़ेद जोड़े मे लिपटी देख सिसक सिसक कर मर जाएंगी
लड़की होने का खुद पे फिर वो अफसोस जताएंगी
माँ तू उनसे इतना कह देना.... दरिंदों की दुनिया मे संभल कर रहना...

माँ, राखी पर भैया की कलाई जब सूनी रह जाएगी,
याद मुझे कर जब उनकी आँख भर आएगी,
तिलक माथे पर करने को माँ, रूह मेरी भी मचल जाएगी
माँ तू भैया को रोने मत देना
मैं साथ हूँ हर पल, उनसे कह देना
 
माँ, पापा भी छुप छुप बहुत रोएँगे
मैं कुछ न कर पाया, ये कह के खुद को कोसेंगे
माँ, दर्द उन्हे ये होने न देना
इल्ज़ाम कोई लेने न देना
वो अभिमान है मेरा, तू उनसे इतना कह देना
 
माँ, तेरे लिए अब क्या कहूँ
दर्द को तेरे शब्दों मे कैसे बांधू
फिर से जीने का मौका कैसे मांगू
माँ, लोग तुझे सताएंगे
मुझे आज़ादी देने का तुझपे इल्ज़ाम लगाएंगे
माँ, सब सह लेना पर ये न कहना
अगले जनम मोहे बिटिया न देना। 



மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ுறிப்பு: ிந்தி கவிையின் ிழாக்கம் ஒரிவாக இப்பு வெளியிட்டஇருக்கிறேன். 

40 கருத்துகள்:

  1. யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே, ஆனால் உனக்காக தன்னையே மாற்றிக் கொள்பவர் கிடைத்தால், அவரைத் தொலைத்து விடாதே!//

    ரசித்த காணொளி: மனித குலத்தின்
    அசுர அரசாட்சியையும் முடிவுரையையும்
    வரைந்து நிதர்சனப்படுத்தியது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  2. அமித்ஜியின் கவிதை மனதைத்தொட்டது..

    //माँ, पापा भी छुप छुप बहुत रोएँगे
    मैं कुछ न कर पाया, ये कह के खुद को कोसेंगे
    माँ, दर्द उन्हे ये होने न देना//

    அந்தத்தகப்பனின் மனநிலையைப் படம் பிடித்துக்காட்டிய அருமையான வரிகள்.

    மும்பைக்குளிரும் தந்தியடிக்க வைக்குது :-))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மும்பையிலும் குளிரா.... சரி தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.....

      நீக்கு
  3. குளிர் இயற்கையின் சீற்றம்.அதை மீறி நாம் என்ன செய்ய முடியும்?

    முகப்புத்தக இற்றை மற்றும் குறுஞ்செய்தி இரண்டுமே மனதை கவர்ந்தது.

    ரிக்‌ஷா ஓட்டும் பெண்னை பார்க்க கவலையாக உள்ளது.

    மனிதன் எங்கே போகிறான் காணொளி சிந்தனையை தூண்டியது.

    நான் ஹிந்தி படித்து பொதுவாக புரிந்து கொள்வேன்,ஆனால் வரிக்கு வரி அர்த்தம் தெரிந்தால்தான் கவிதையை புரிந்து கொள்ள முடியும்.என் மகள்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்.

    மொத்தத்தில் ஃப்ருட் சாலட் உணர்ச்சிகளின் கலவை. நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்போது கவிதையின் தமிழ் சாராம்சத்தினை ஒரு பகிர்வாக வெளியிட்டு இருக்கிறேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  4. மனிதன் செய்யும் அட்டுழியத்தை காட்டும் வீடியோ அருமை!!
    ரசித்த படம் - பாதித்தது...

    ப்ரூட் சலட் செம டேஸ்ட்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சமீரா....

      நீக்கு
  5. இங்கயும் குளிர் இந்த வருஷம் ரொம்ப அதிகமாகத்தான் இருக்கிறது. ப்ளாட்பாரம் வாசிகளை நினைத்தால் ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கிறது. அமிதாப்ஜி நல்ல நடிகராகத்தான் பார்த்திருக்கிறோம். கவிதையிலும் கலக்குகிறார். அவங்க அப்பாகூட புகழ் வாய்ந்த கவிஞர் இல்லியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அமிதாப் அப்பா மிகச் சிறந்த, பிரபலமான கவிஞர்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.

      நீக்கு
  6. காணொளி சூப்பர்ப்.

    ரஜினி ஜோக் ஹா ஹா...

    (இந்த வாட்டி இங்கே குளிரே இல்லை) :((

    அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ ஹைதையில் குளிர் விட்டுப் போச்சா.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

      நீக்கு
  7. முகப்புத்தக ரஜினி படம் குபீர் சிரிப்பை வரவழைத்தது. தில்லிக் குளிரில் நடுங்கும் ஏழைகள் நிலையும் வண்டி ஓட்டும் அந்தப் பெண்ணின் பார்வையும் இதயம் கனக்க வைத்தது. அமிதாப் கவிதை... இந்தி படிக்காம போயிட்டமேன்னு வருத்தப்பட வெச்சிடுச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தம் வேண்டாம் கணேஷ்.... இப்போது தமிழ் சாராம்சத்தினை வெளியிட்டு இருக்கிறேன் - உங்களுக்காகவே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  8. சென்னையில் மழையில்லை ! டில்லியில் குளிர் தொல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா... மழையில்லாது உங்களுக்கு தொல்லை இங்கே பனி மழையால் தொல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  9. யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே, ஆனால் உனக்காக தன்னையே மாற்றிக் கொள்பவர் கிடைத்தால், அவரைத் தொலைத்து விடாதே!
    படம் என்னையும் வெகுவாக பாதித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் எல்லோரையும் பாதிக்கும் எனத் தோன்றியது வெளியிடும்போது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  10. இந்தி கவிதையை அர்த்தத்துடன் போட்டிருக்கலாம். திரு பால கணேஷ் போல வருத்தப்படத்தான் முடிந்தது.

    காணொளி மனிதனின் பேராசையையும், அதனால் பெருநஷ்டம் என்பதையும் அருமையாகச் சொல்லியது.

    போனவார ப்ரூட் சாலட் இல்லாத குறையை இந்த வார ப்ரூட் சாலட் தீர்த்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்தி கவிதையின் அர்த்தத்தினை இப்போது வெளியிட்டு விட்டேன் - தனிப் பதிவாக.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  11. டெல்லி குளிர் கஷ்டம் தான். இங்கு இந்த முறை மார்கழி போலவே இல்லை. வெயில் அப்படி அடிக்கிறது.


    யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே, ஆனால் உனக்காக தன்னையே மாற்றிக் கொள்பவர் கிடைத்தால், அவரைத் தொலைத்து விடாதே!//

    உண்மைதான்.

    மனிதன் எங்கு போகிறான் மூன்று நிமிட காணொளி அருமை.
    அந்த பெண் தானும் பாள்ளிக்கூடம் போகமுடியுமா என்று ஏக்க பார்வை பார்ப்பது போல் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      காணொளி பார்த்தவுடனேயே பிடித்து விட்டது. அனைவரும் பார்க்கவே பகிர்ந்தேன்....

      நீக்கு
  12. பெங்களூரில் இந்த மார்கழி அதிகக் குளிர் இன்றி இதமாகவே கடந்து விட்டது.

    பாதித்த படம் பாதித்தது. ஹிந்தி கவிதையை யாரேனும் தமிழில் தந்தால் வாசிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லையே... பெங்களூரில் பொதுவாகவே அவ்வளவு குளிர் இருக்காதே....

      தற்போது கவிதையின் சாராம்சத்தினை ஒரு பகிர்வாக வெளியிட்டு இருக்கிறேன். முடிந்த போது படியுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  13. முன்னமாதிரி குளிர் எங்க இப்பல்லாம்ன்னு பந்தாவா சொல்லிட்டிருந்ததுக்கு..இந்தமுறை நல்லா குளிரவச்சிடுச்சு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வருடங்களாக அவ்வளவு குளிர் இல்லாததால் நமக்கெல்லாம் குளிர் விட்டுப் போச்சோ! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

      நீக்கு
  14. //माँ, सब सह लेना पर ये न कहना
    अगले जनम मोहे बिटिया न देना। //
    சமீபத்தில் வெளியான ஒரு விளம்பரத்தில் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண் சிசுக்களின் கருக்கலைப்பு 1 கோடியைத் தாண்டிவிட்டதாகப் படித்தது நினைவுக்கு வருகிறது!

    கவிதைப் பகிர்வுக்கு நன்றிகள்!

    நல்ல கலவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்].

      நீக்கு
  15. அந்த குளிரை பற்றி படிக்கையிலேயே குளிர்கிறது.ரஜினிகாந்த் ஃப்ரிட்ஜ் டில்லிக்கு லொள்ளுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா....

      நீக்கு
  16. அவ்வளவு குளிரா டெல்லியில்?

    மு.பு. படம் புரியவில்லை. ரஜினியை ஏன் சொல்கிறார்கள்?

    இற்றையும், குறுஞ்செய்தியும் சூப்பர்.

    ரசித்த புகைப்படம் நானும் பார்த்தேன்.

    இளையராஜா பாடல் ருசிக்கக் கேட்கணுமா?

    அமிதாப் கவிதை புரிந்தால் அழகாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஜினி சூப்பர் ஸ்டார். அவர் ஃப்ரிட்ஜும் சூப்பர் ஸ்டார் - சென்னையில் திறந்து வைத்தால் தில்லியில் குளிரும்....

      கவிதையின் தமிழ் சாராம்சம் தற்போது ஒரு பதிவாய் வெளியிட்டு இருக்கிறேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  17. வெயில் காலம் வந்தால், குளிரே தேவலை என்று தோன்றும். குளிர் வந்தால், வெயில் வராதா என்று... குளிரில் நூற்றுக்கணக்கானவர் இறந்துவிட்டதாகச் செய்திகள். கொஞ்ச நாள் முன்பு ஒரு வழக்கில், பாதிக்கப்பட்டவர் குற்றம் செய்த பெண்ணை 40 பேருக்கு கம்பளிகள் வாங்கிக் கொடுக்கச் சொன்னது ஞாபகம் வருகீறது.

    வண்டியோட்டும் அந்தச் சிறுமியின் ஏக்கம்.. மனசைத் தொடுகிறது.

    நாங்கல்லாம் “ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா” திராவிடர்கள் என்று தெரிந்தும், இந்திக் கவிதையை அப்படியே பகிர்கிறீர்களே!! :-)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா...

      //ரகு தாத்தா....// :)

      உங்களுக்குமா ஹிந்தி பிரச்சனை? சரி பரவாயில்லை. தற்போது தமிழ் சாராம்சத்தினை ஒரு பதிவாக வெளியிட்டு இருக்கிறேன்....

      நீக்கு
  18. வண்டியோட்டும் சிறுமியின் படம் மனத்தில் நிற்கிறது.

    (இங்கே பிரான்சில் மைனஸ் ஐந்து டிகிரி. இன்னும் பிப்ரவரியில் குறையலாம்.)

    பகிர்வு அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  19. ஃப்ரூட் சாலட் முழுவதும் அருமை.

    //யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே, ஆனால் உனக்காக தன்னையே மாற்றிக் கொள்பவர் கிடைத்தால், அவரைத் தொலைத்து விடாதே!//

    சூப்பர். ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  20. மனிதன் எங்கே போய்க்கொண்டிருக்கிறான்? காணொளி மிகவும் ஜோர். ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....