எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, January 16, 2013

மந்திரவாதி
தில்லியிலிருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு விரைவு வண்டி. எதிர் சீட்டில் கோட்-சூட் போட்ட மனிதர் அமர்ந்திருந்தார். பார்க்கும்போதே தமிழர் எனச் சொல்லமுடியும் முகவெட்டு. ஒல்லியான தேகம். அணிந்திருந்த கோட் தோள்களின் மீது தொங்கிக் கொண்டிருந்தது ஹேங்கரில் தொங்குவது போல இருந்தது. கோட்டின் எல்லாப் பாக்கெட்டுகளிலும் ஏதோ வைத்திருப்பது தெரிந்தது. என்ன என்பது தெரிந்து கொள்ள எனக்கு எக்ஸ்-ரே கண்ணில்லை – ஆனால் மனது துருதுருத்தது – அப்படி என்ன தான் வைத்திருப்பார் என தெரிந்து கொள்ள. அடங்கு அடங்கு என்றேன் மனதிடம். எப்படியும் தெரிந்து கொள்ள வேண்டும் எனச் சொன்னது மனம்.

இரவு பத்து மணிக்கு தான் கிளம்பும் என்பதால் பயணச் சீட்டு பரிசோதித்தபின் குளிருக்குப் பயந்து மனதில் கேள்வியுடனேயே உறங்கினேன். நிச்சயம் காலை தெரிந்து கொள்வேன் என்றது மனம். :)

சீக்கிரம் எழுந்து ஒன்றும் வெட்டி முறிக்கப் போவதில்லை என்பதால் எட்டு மணிக்குப் பிறகு தான் எழுந்தேன். காலைக் கடன்கள் முடித்து இருக்கையில் அமர்ந்தபோது எதிர்சீட்டு கோட்டு மனிதர் உறக்கம் எப்படி? எனக் கேட்டுச் சிரித்தார் –.  கோட்டில் என்ன?என அவரிடம் கேள் என்றது மனம்.  ‘தானாகத் தெரியும், சும்மா இரு மனமே!என்றேன்.  
  
சிறிது நேரத்தில் கோட்டு மனிதர் ஒரு பாக்கெட்டில் கைவிட்டார். வெளியே வரப்போவது என்ன, என்னுள் பதட்டம். ஆனால் தெரியவில்லை. எடுத்த கை, நேராக வாய்க்குச் சென்றது. வாய் அசை போட ஆரம்பித்தது. கை பாக்கெட்டுக்கும் வாய்க்கும் சென்றது தெரிகிறதே தவிர, என்ன என்பது தெரியவில்லை! சிறிது நேரத்தில் கையோடு வெளியே வந்தது Good Day’ காலி பாக்கெட்.

நாள் முழுவதும் ஏதாவது ஒரு பாக்கெட்டில் கைவிட்டு எதையாவது உண்ட படியே இருந்தார். ஒரு பெரிய பட்டியலே எழுதலாம் - Good Day’, வேர்க்கடலை, க்ளுக்கோஸ் பிஸ்கெட், கொஞ்சம் ட்ரை ஃப்ரூட்ஸ் என நீண்ட பட்டியல். மதிய உணவு உண்டு, கை கழுவிய உடனே கோட் பாக்கெட்டிற்குக் கை போகவே, ‘இப்பதானே சாப்பிட்டார் மனுஷன், அடுத்து என்ன என யோசித்தால், கையுடன் வந்தது வெற்றிலை! அடுத்து கை விட்டு வேறு பாக்கெட்டில் எதையோ தேட மனது சொன்னது பாக்காயிருக்குமென. சரிதான். பாக்கு வெளியே வர, இரண்டையும் சேர்த்து அசை போட ஆரம்பித்தார். சுண்ணாம்பு கொண்டு வர மறந்து விட்டார் போல!

என்ன வெங்கட், வெறும் சாப்பாடு ஐட்டங்கள் மட்டும்தான் இருந்ததா அவர் கோட்டில் எனக் கேட்டால், மற்ற பொருட்களுக்கும் அதில் இடமிருந்தது எனச் சொல்ல வேண்டும். – இரண்டு அலைபேசிகள், நிறைய காகிதங்கள், பயணச் சீட்டு, பணம் என எடுக்க எடுக்க வந்து கொண்டே இருந்தது – அட்சயப் பாத்திரம் தோற்றது போங்க! எங்கே மந்திரவாதியைப் போல உள்ளேயிருந்து ஒரு புறாவை எடுத்து பறக்கவிடுவாரோ என நினைக்க வைத்தார் மனிதர்.

கோட் மட்டுமல்ல, மனிதரும் சற்றே ஜாலியானவர் தான்! திடீர் திடீரென பழைய பாட்டுகளை கீச்சுக் குரலில் அள்ளி விட்டார் – ஒரு வட இந்திய பெண் எதிரே வர “நேற்று நீ சின்ன பப்பா..... இன்று நீ அப்பப்பா...என்று பாடினார். வண்டியில் ஒரு வயதான பெண்மணி இலந்தைப் பழம் விற்று வர, ‘இலந்த பயம், இலந்த பயம், இது செக்கச் செவந்த பயம்என அவருக்காக இவர் பாடினார்!  சாப்பிட்ட நேரம் போக மற்ற நேரங்களில் இது போல நேரத்திற்குத் தகுந்த பாடல்கள்.  அவ்வப்போது குரல் மாற்றியும் பாடுகிறார் – வித்தியாசம் காண்பிக்க வேண்டுமல்லவா!

மூடுபனி காரணமாக பயண நேரம் அதிகரித்தது கூட எனக்குக் குறையாக தெரியவில்லை. அதான் கூடவே நடமாடும் தொலைக்காட்சிப் பெட்டி ரயில் பெட்டியில் இருந்ததே! நேரம் போவது தெரியாது அவரையே கவனித்து வந்தேன். மாலையில் மெதுவாகப் பேச்சு கொடுத்த போது அவர் தில்லியிலேயே முப்பது வருடங்களுக்கும் மேலாக இருப்பவரென்றும், எனது நண்பர்களில் ஒருவர் அவருக்கு நண்பர் என்றும் சொல்லி அவரது குடும்பத்தினர் தற்போது பெங்களூருவில் இருப்பதாகவும் இவர் தில்லியில் தனி ஆவர்த்தனம் செய்வதாகவும் சொன்னார்.

நண்பர் வீட்டுக்கு வரும்போது சொல்லுங்கள், நிச்சயம் மீண்டும் சந்திப்போமெனச் சொன்னார்! அதனால அவரைப் பத்தி தான் எழுதி இருக்கேன்னு யாரும் அவர் கிட்ட சொல்லிடாதீங்க சரியா! இருந்தாலும், இந்த பதிவு எழுதி கொஞ்ச நாளாவது அவர் வீட்டுப் பக்கம் போகக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்! 

ஒவ்வொரு பயணத்திலும் விதம் விதமாய் ம்னிதர்களைச் சந்திக்க முடிகிறது அல்லவா.  இன்று இந்த மந்திரவாதி! நாளை யாரோ!

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.
   

52 comments:

 1. நல்ல சுவாரஸ்யமானவர்தான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 2. பதிவு எழுதும் அளவுக்கு வித்தியாசமான மனிதர்கள் இருக்கிறார்கள்.... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்....

   Delete
 3. மனிதர்கள் பலவிதம். சுவாரஸ்யமான பகிர்வு:)!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி......

   Delete
 4. நடமாடும் சூப்பர் மார்க்கெட் ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!....

   Delete
 5. உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  http://blogintamil.blogspot.com/

  அன்புடன்
  மனோ சாமிநாதன்

  ReplyDelete
  Replies
  1. இன்றைய வலைச்சரத்தில் அடியேனையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 6. பயண நேரம் இதுபோல சுவாரசியமான பயணிகள் பக்கத்தில் கிடைத்தால் போரடிக்காமல் இருக்கும்.அதை நீங்க சுவாரசியமாக சொன்ன விதம் நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.....

   Delete
 7. வலைச்சர அறிமுகம்: மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்....

   Delete
 8. நல்ல பயண அனுபவம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 9. உங்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!

  ReplyDelete
  Replies
  1. அலுக்காது பயணங்கள் தொடர்கின்றன! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!....

   Delete
 10. சுவாரஸ்யமான மனிதராய்த்தான் தெரிகிறார். பயணங்களில் இப்படிப்பட்ட மனிதர்கள் வாய்த்தால் நமக்கும் சுவாரஸ்யமாகப் பொழுது போகும் :-))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்....

   Delete
 11. சுவாரஸ்யம்தான். பதிவைப் படிக்க ஆரம்பித்தபோது சுஜாதாவின் 'ராகினி என் வசமாக' கதை நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   சுஜாதா... அவர் ஜீனியஸ்....

   Delete
 12. நல்லாத்தான் கவனிக்கிறீங்க. முதல் நான்கு பத்திகளில் அவர் உங்களை தவிக்க விட்டது மாதிரி எங்களையும் நீங்கள் தவிக்க விட்டு விட்டீர்கள். ரயில் பயணங்களில் அவ்வப்போது இவர் மாதிரி மனிதர்கள் கிடைப்பார்கள். ஆனால் ஒன்று. இவர்கள் குடைமாதிரி, மழைக்கு மட்டுமே. ரயில் பயணத்திற்கு மட்டுமே இவர்கள் விரும்பத்தக்கவர்கள். நமது பக்கத்து வீட்டுக்கு குடி வந்து விட்டால், நாம் வேறு வீடு பார்க்க வேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. பக்கத்து வீட்டுக்கு வேற குடிவரணுமா.... அப்புறம் வலையுலகம் தாங்காது... நான் அடிக்கடி அவர் பத்தி போஸ்ட் போடுவேனே !

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 13. பொறுத்தார் பதிவெழுதுவார்’
  :)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி....

   Delete
 14. வலைச்சர அறிமுகத்திற்கு (எத்தனாவது தடவை?) வாழ்த்துகள்!
  பலமுறை அறிமுகமானால் எண்ணிக்கை மறந்துவிடும். அதனால் தான் ஐந்தாவது முறை அறிமுகம் ஆனவுடனே 'பந்தா' வாக ஒரு பதிவு போட்டுவிட்டேன். ஹா...ஹா....
  நீங்கள் ரயிலில் சந்தித்த மனிதர் சாப்பாட்டு ராமன்! அவரைப் போய் மந்திரவாதி என்று நினைத்து.... எப்படியோ எங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பதிவு படிக்கக் கிடைத்தது. சந்தோஷம்!

  ReplyDelete
  Replies
  1. எத்தனை முறை வலைச்சரத்தில் அறிமுகம் என கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. சொன்ன பிறகு பார்க்க வேண்டுமெனத் தோன்றிவிட்டது. :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 15. பயண அனுபவ சக மனிதன் விவரணம் மிக சுவையாக இருந்தது.
  மிக்க நன்றி. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே....

   Delete
 16. அதான் நல்லாப் பழகிட்டீங்கள்ல, அவர்கிட்டயே ”பையில் கை” பற்றிக் கேட்டுவிடவேண்டியதுதானே!! (அவர் சாப்பிடும்போதெல்லாம் நீங்க “கேக்காமலே” உங்களுக்கும் தந்திருப்பார், அதான் நீங்களும் “கேக்காமலே” வந்துட்டீங்களோ?) :-))))

  ReplyDelete
  Replies
  1. பொதுவா யார் எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிடும் பழக்கம் எனக்கில்லை! அதனால் கேக்காமல் வந்து விட்டேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா....

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்....

   Delete
 18. நல்ல சஸ்பென்ஸ் கொடுத்து பதிவு செய்திருக்கிறீர்கள்.இதைப் போல் மனிதர்கள் பயணத்தின் போது மாட்டுவார்கள். சில சமயம் அவர்கள் நடவடிக்கை கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். ஆனால் சுவாரஸ்யமாக இருக்கும்.
  நல்லதொரு பதிவு.

  ராஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!....

   Delete
 19. ரயில்ல நல்லாப் பொழுது போச்சு!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் குட்டன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ....

   Delete
 20. //ஒவ்வொரு பயணத்திலும் விதம் விதமாய் மனிதர்களைச் சந்திக்க முடிகிறது அல்லவா. இன்று இந்த மந்திரவாதி! நாளை யாரோ!//

  ஆம் வித்யாசமான பல மனிதர்களை சந்திக்க முடியும்.

  தலைப்பையும், நீங்க முதலில் அந்த மனிதரை விவரித்து இருப்பதையும் பார்த்து ஏதோ நிஜமான மந்திரவாதியோடு பயணம் செய்திருக்கீங்கன்னு நினைச்சேன்.

  சுவாரசியமான அனுபவம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி....

   Delete
 21. விந்தை மனிதர்! தங்கள் சிந்தை கவர்ந்தவர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா....

   Delete
 22. யோசிக்கத் துாண்டுகிறவர்கள்
  சில நேரம் நம்
  சிந்தையில் அமர்ந்து விடுகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

   Delete
 23. நிறையப் பயணங்கள் மேற்கொள்வது பலப்பல அனுபவங்களையும் மனிதர்களையும் சந்திக்க சிறப்பான வழி. பயணங்களில் சந்தித்த மனிதர்களை வைத்து ராஜேஷ்குமார் நிறைய சிறுகதைகள் எழுதித் தள்ளினார் ஆரம்ப காலங்களில். வெங்கட் தான் சந்திக்கும் சுவாரஸ்ய மனிதர்களை பதிவுகளாக்கித் தள்ளுகிறார். பின்னாளில் புத்தகம் போட்ரலாம் வெங்கட்! அருமையா எழுதிக் குவியுங்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.....

   ராஜேஷ்குமார் புக் போடலாம்ணே.... நான் போடக் கூடாது :)

   Delete
 24. ஆஹா.... அருமையான மனிதரை சந்தித்து இருக்கிறீர்கள்...

  பயண நேரம் போனதே தெரியாமல் செய்வதே ஒரு கலைதான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்......

   Delete
 25. தங்களின் பயணங்கள்- அதில் தங்கள் அனுபவங்கள்- அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் முறை- அனைத்தும் அருமை! மொத்தத்தில் பதிவுபெற்ற பயணம்! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 26. //“நேற்று நீ சின்ன பப்பா..... இன்று நீ அப்பப்பா...” என்று பாடினார். வண்டியில் ஒரு வயதான பெண்மணி இலந்தைப் பழம் விற்று வர, ‘இலந்த பயம், இலந்த பயம், இது செக்கச் செவந்த பயம்’ என அவருக்காக இவர் பாடினார்! சாப்பிட்ட நேரம் போக மற்ற நேரங்களில் இது போல நேரத்திற்குத் தகுந்த பாடல்கள். அவ்வப்போது குரல் மாற்றியும் பாடுகிறார்//

  ஆஹா, [சாப்பிட நேரம் போக ] வித்யாசமான ஜாலியான மனிதர் ! ;)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.... நன்றாக பொழுது போனது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....