எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 20, 2013

கொஞ்சிக் கொஞ்சி பேசி.....என்ன ஞாயிறன்று புகைப்படங்கள் பகிர்வது தானே உங்கள் வழக்கம்? இன்று என்ன பாடலா – அதுவும் கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும்எனும் பழைய பாடலா? என்று கேட்டால்.....

இல்லை நண்பர்களே இன்று நிச்சயம் புகைப்படப் பகிர்வு தான்...  அதுவும் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே. சமீபத்திய பயணத்தின் போது எடுத்த ஒரு புகைப்படம் இன்றைய பகிர்வு.

இந்தப் பறவையின் ஆங்கிலப் பெயர் VULTURINE GUINEA FOWL.  அறிவியல் பெயர் ACRYLLIUM VULTURINUM என்பது. தமிழில் இந்தப் பறவையை என்ன பெயர் கொண்டு அழைப்பார்கள் என தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது!

கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு மேல் கொஞ்சிக் கொண்டன. நானும் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினேன்! என்ன ஒரே கஷ்டம் – அவை கூண்டுக்குள் – அதனால் முழுமையான தோற்றத்தினை எடுக்க முடியவில்லை!

“ஏண்டா நாங்க காதலிக்கறத இப்படி ஃபோட்டோ எடுக்கறயே, உனக்கு வெக்கமா இல்லை?என்று பறவைகள் கேட்டு விடுமோ என பயந்து அங்கிருந்து விலகினேன் – சிறிது தூரம் சென்று சற்றே கழுத்தினைத் திருப்பி மெல்லப் பார்த்தால் அவ்விரண்டு பறவைகளும் விலகவே இல்லை!  

நான் ரசித்த இந்தப் பறவைகளின் புகைப்படம் இதோ உங்கள் பார்வைக்காக!மீண்டும் அடுத்த வாரம் ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


44 comments:

 1. அடடா... என்ன அழகு! தொட்டுக்கொள்ளும் அலகும் கழுத்தும் காதல் சின்னமாய் இதய வடிவையல்லவா காட்டுகிறது! ஒட்டிவிரிந்த சிறகுகளின் வரிகள் அற்புத ஒவியம்! பரிமாறும் அன்பின் சுவை அலாதி!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்... காதலால் கொஞ்சுகிறோம் என மற்றவர்களுக்கும் தெரிவதற்காக, காதல் சின்னத்தினைக் காட்டுகின்றன போலும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.....

   Delete
 2. படம் அருமை.

  கூண்டுக் கம்பிகள் தெரியாதபடி எடுக்கிற விதம் குறித்து பிட்டில் சர்வேசன் பதிந்த ஒரு இடுகை உள்ளது. லிங்க் தேடித் தருகிறேன். அதுபோல் முயன்று சில படங்கள் நன்றாக வந்திருக்கின்றன எனக்கு.

  ReplyDelete
  Replies
  1. இங்கே பல படங்கள் இப்படித்தான் கூண்டுக் கம்பிகளோடு... லிங்க் கிடைத்தால் பகிருங்கள். அடுத்த முறை படமெடுக்க உதவும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி .....

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.....

   Delete
 4. புகைப்படமும் பகிர்வும் மிக மிக அருமை
  பகிர்வுக்குமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!.....

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.....

   Delete
 7. கொஞ்ச(சும்) நேரம் தம்மை மறந்தனவோ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.....

   Delete
 8. தலைப்புக்கு பொருத்தமாகத்தான் படம் போட்டிருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர் .....

   Delete
 9. கொத்திக் கொத்திப் பேசி....

  ReplyDelete
  Replies
  1. வாங்க சரவணன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.....

   Delete
 10. பாவம்... ப்ரைவசியே இல்லாமல் காதல் செய்கிறதுகள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்... இதில் கேமிராக் கண் கொண்டு அலைபவர்களின் தொல்லை! ம்ம்ம்ம்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. அழகோ அழகு சிறைபடுத்தாமல் சுதந்திரமாக பறக்க விட்டு ரசித்தால் இன்னும் அழகாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. சுதந்திரமாக விட்டிருந்தால் நன்றாகத் தான் இருக்கும்.... ஆனால் அப்படி விடாதிருக்கக் காரணம் இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 12. அப்படி என்ன தான் பேசிக்குமோ இரண்டும். படத்தில் ரொமான்ஸ் ரொம்ப அழகு. பறவைகள் போஸ் கொடுத்தமாதிரி நிற்கின்றனவே. ஹனிமூனுக்கு எங்க போகலாம்னு பேசிக்குமோ. வாழ்த்துகள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நேரமா அப்படியே நின்னுட்டு இருந்தது வல்லிம்மா.... எப்படியும் யாரும் இல்லாத இடத்துக்குப் போகணும்னு பேசிண்டுதோ என்னமோ!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 13. அழகான காதல்ப் பறவைகள்...
  கொஞ்சிக் கொஞ்சி மகிழ்கின்றன...
  நடக்கட்டும்... நடக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 14. இணைந்திருக்கும் விதமே காதல் சின்னம்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 15. பறவைகளின் காதல் படம் அருமை. உலகம் எங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி, என்று வாய் மூடி பேசுகிறதோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 16. அருமையான புகைப்படம் .
  பறவைகளின் tender moments அழகாக படம் எடுத்திருக்கிறீர்கள்.
  பகிர்விற்கு நன்றி.

  ராஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி.....

   Delete
 17. கொஞ்சும் பறவைகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 18. புகைப்படம் அருமை! கம்பிகள் அதன் முழு அழகை மறைத்து விட்டது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.....

   Delete
 19. கம்பிகளுக்குப் பின்னால் சப்ஜெக்ட்டில் ஃபோகஸ் பாயிண்ட் வர்ற மாதிரி ஃபோகஸ் செஞ்சுட்டு க்ளிக்குங்க. கம்பிகள் அவுட்டாஃப் ஃபோகஸுக்குப் போயிரும். கம்பிகளுக்குப் பின் இருக்கும் சப்ஜெக்ட் தெளிவாகி படம் இன்னும் அட்டகாசமா வரும்.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை முயற்சித்துப் பார்க்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.....

   Delete
 20. வயிற்று பகுதியில் உள்ள நீல நிறம் மட்டும் இல்லையெனில் கிண்ணி கோழியை போல இருக்கிறது .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

   Delete
 21. அழகான ஒரு ஜோடியை அற்புதமாக படமாக்கியுள்ளீர்கள். ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 22. //இந்தப் பறவையின் ஆங்கிலப் பெயர் VULTURINE GUINEA FOWL. அறிவியல் பெயர் ACRYLLIUM VULTURINUM என்பது. தமிழில் இந்தப் பறவையை என்ன பெயர் கொண்டு அழைப்பார்கள் என தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது!//

  கழுகின காட்டுக் கோழி - மைய ஆஃப்ரிக்காவை தாயகமாக கொண்டது. பகிர்வுக்கும் பதிவுக்கும் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. கழுகின காட்டுக் கோழி.... நல்ல பெயர் தான்...

   தங்களது வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் மிக்க நன்றி திரு ஜெயராஜன் அவர்களே..... தொடர்ந்து சந்திப்போம்!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....