எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 21, 2013

கடல் – ஏ. ஆர். ரகுமான் பாடல்கள் – ஒரு பார்வைஅலுவலகத்தில் மலையாள நண்பர் ஒருவர் என்னிடம் வந்து கடல் பாட்டு கேட்டீங்களா? ரொம்ப நல்லா இருக்கு – அதுவும் நெஞ்சுக்குள்ளே...ன்னு ஒரு பாட்டு அப்படியே மனதைக் கட்டிப் போட்டு விட்டது என்று சொல்லவே, எனக்கு முதலில் தோன்றியது – கடல் என்று ஒரு படமா, இல்லை காதல் என்பதைத் தான் இவர் இப்படி சொல்கிறாரோ என்று யோசித்தேன். பிறகு ஒரு நேயர் விருப்பமும் சொன்னார்.

நெஞ்சுக்குள்ளே பாடல் வரிகள் எனக்கு வேணும் – தமிழில் இல்லை – ஆங்கிலத்தில் அதன் அர்த்தத்தை எனக்கு எழுதித் தாருங்கள் எனக் கேட்கவே படத்தின் பாடல்களைக் கேட்டேன் – இரண்டு மூன்று முறை. நெஞ்சுக்குள்ளே பாடல் ஷக்திஸ்ரீ கோபாலன் என்ற பெண் பாடியது – பாடல் வரிகள் வைரமுத்து என்று யூ டியூபில் போட்டு இருந்தது.  நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலியே போகலியேஎன்று பாடுவது காதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருக்கிறது. நல்ல பாடல். நிச்சயம் இப் பாடல் ஹிட் ஆகும் எனத் தோன்றுகிறது.

ஏழு பாடல்கள் – அனைத்துமே ரகுமானின் முத்திரைப் பாடல்கள் என்று முதல் முதலில் கேட்ட போதே தெரிந்தது. வித்தியாசமான பாடகர்களை பாட வைப்பது தொடர்கிறது.  அடியே அடியே என்னை எங்க நீ கூட்டிப் போற என்று சித் ஸ்ரீராம் கேட்கிறார் – எங்கே கூட்டிக்கொண்டு போகிறார் என்பது படம் வந்த பின்தான் தெரியும்.

சித்திரை நிலா....  குழந்தையின் அழுகையோடு தொடங்கும் இப்பாடலை பாடியது விஜய் ஜேசுதாஸ். எல்லாமே ஒத்தையில நிக்குதுடே.... எட்டு வை மக்கா... என நெல்லை மொழியில் கேட்க நன்றாக இருக்கிறது.

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்  என்ற பாடலைப் பாடியது அபய் ஜோத்பூர்கர் மற்றும் ஹரிணி. இது போதும் எனக்கு இதுபோதுமே, வேறென்ன வேணும் நீ போதுமே...  என்று ஹரணி குரல் அப்படியே அசத்திப் போடுகிறது.

ஏலே கீச்சான் வந்தாச்சு பாடல் கேட்கும் போது ஏனோ இந்திரா படத்தில் வரும் ஓடக்கார மாரிமுத்துபாடல் மனதில் வந்து போனது. இப்பாடலை பாடியது ரகுமான் மற்றும் குழுவினர். பாடலின் பல வரிகள் புரியவே இல்லை – பல முறை கேட்க வேண்டும் போலிருக்கிறது.

நீ இல்லையேல் நான் என் செய்வேன்.....என்று அன்பின் வாசலே பாடலில் கேட்கிறார் ஹரிசரண்.  காதலி கூட இல்லாதது கஷ்டம் தான் :) ஆனால் பாடலில் ஹரிசரண் குரலை விட கோரஸ் பாடகர்கள் குரல் தான் அதிகம் கேட்கிறது. இன்னும் சில முறை கேட்க வேண்டும் போலிருக்கிறது. மகுடி, மகுடிபாடலும் அப்படியே.....

நெஞ்சுக்குள்ளே பாடல் யூ-ட்யூபில் இருக்கிறது – MTV Unplugged நிகழ்ச்சியில் வந்தது எனப் போட்டிருக்கிறார்கள்.  ஆடியோ கேட்க http://gaana.com/#!/albums/kadal-english தளத்திற்குச் செல்லலாம்.

படத்தில் இரண்டு அறிமுகங்கள் என செய்திகள் – கௌதம் கார்த்திக் மற்றும் துளசி. துளசியை கேரளாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார். ரோஜா நாயகன் அரவிந்த்சாமியும் இப்படத்தின் மூலம் திரையுலகுக்குத் திரும்புகிறார். அர்ஜூன், பசுபதி, தம்பி ராமையா போன்றவர்களும் நடித்திருக்கும் இப்படம் வெளிவரும்போது பார்க்க நினைத்திருக்கிறேன். மணிரத்னம் இயக்கி வெளியான ராவணன் போல இது இருக்காது என நம்புவோம்!  

மொத்தத்தில் ஏழு பாடல்களில் ஐந்து பாடல்கள் நன்றாக இருக்கிறது – அதாவது எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கலாம் – கேட்டுச் சொல்லுங்களேன் நண்பர்களே..... 

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 comments:

 1. கடல் படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்... படம் வெளியானவுடன் இன்னும் ஹிட் ஆகும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 2. Replies
  1. ம்ம்ம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன் குமார்.

   Delete
 3. உங்களை கையெடுத்து kகும்பிடிடேன் சாமியோவ் ஹா haaஹா haaஹா haaஹா

  ReplyDelete
  Replies
  1. அடடா.... நான் கடவுள்னு உங்களுக்குத் தெரிஞ்சுடுச்சா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 4. நீங்கள் சொல்லியது போல வைரமுத்துவின் வரிகள் மின்னத்தான் செய்கின்றன.
  ஆற்று வெள்ளமாய் நாமும் அதில் அடித்துக்கொண்டு செல்லப்படுகிறோம்.
  நடு நடுவே ஒரு சுழல் போல , சில சில வார்த்தைகள் நம்மை உள்ளே இழுத்துச்செல்கின்றன.

  இசையில் சற்று பெர்கஷன்ஸையும் கோரஸையும் குறைத்திருக்கலாமோ !!
  ஒரு வேளை அது கடல் சூழலுக்கு பொருந்தியதாக இருக்கலாம்.
  படத்தோடு கேட்கும்பொழுது தான் சரிவர புரியவரும்.

  சுப்பு ரத்தினம்.
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. //இசையில் சற்று பெர்கஷன்ஸையும் கோரஸையும் குறைத்திருக்கலாமோ// எனக்கும் அதான் தோன்றியது. படத்தில் காட்சியோடு ஒன்றியிருக்குமோ என்னமோ....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....

   Delete
 5. அருமையான தகவல்கள்..பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. இசைக் கடலில் நீந்தி முத்தெடுத்து தந்துள்ளீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 7. அருமையாக இருந்தது பாட்டு. ரசித்தேன்.

  நட்புடன்,
  ராஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 8. பாடல்களை கேட்கத்தூண்டும் ஆவல் மேலிடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா....

   Delete
 9. நீங்கள் ஒரு பார்வை பார்த்து விட்டீர்கள்;நாங்கள் ஒரு முறை கேட்டு விடுகிறோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 10. நல்ல அலசல் பாட்டு கேக்கணும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி Prillass s!

   Delete
 11. நல்ல ரசனை உங்களுக்கு...
  நானெல்லாம் உங்களைப் போன்று இரசிப்பவர்கள்
  யாராவது நன்றாக இருக்கிறது
  என்று சொன்னால் தான் அந்தப் பாடலைக் தனியாக
  எடுத்துக் கேட்பேன்.
  இல்லையென்றால் பத்தோடு பதினொன்று தான்.

  உங்களின் பதிவு கடல் பாடல்களைக் கேட்கத் துாண்டுகிறது.
  பகிர்விற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

   Delete
 12. கடல் பாடல்கள் இதுவரை கேட்கவில்லை. கேட்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. கேளுங்கள். உங்களுக்கும் சில பாடல்கள் பிடிக்கலாம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. எம்டிவி அன்ப்ள்க்டு ல ஓரிரண்டு மாதம் முன்னாலயே நெஞ்சுக்குள்ளே வந்து உருக்கிவிட்டது. ரப்பர் வளவிக்கு சத்தம்போடத்தெரியலியே மீண்டும் மீண்டும் கட்டிப்போட்டது. ஏலே கீச்சான் நன்றாக இருக்கிறது. 'அடியே ' வேற ஊர்ப்பாட்டு மாதிரி சாயல் .புரியவில்லை.
  நல்ல அலசல் வெங்கட்துளசி நாயர் கேரளாவிலிருந்து வந்த ராதாவின் மகள் தானே.நன்றாகவே தமிழ் பேசுகிறார்.15 வயதுக்கு ஏகப்பட்ட முதிர்ச்சி தெரிகிறது. கார்த்திக்கின் பையனும் 10த் ஸ்டாண்டர்ட் பையன் போல துள்ளலோடு இருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 14. பாடலை கேட்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டீர்கள் .சில பாடல்கள் புரியாமல் இருக்கும்போது மீண்டும்மீண்டும் கேட்டு அது பிரபலம் ஆகும் .

  ReplyDelete
  Replies
  1. கேட்டுப் பாருங்கள் ஸ்ரீனிவாசன்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 15. உங்களுக்கு பிடித்த பாடல்களை பகிர்ந்ததற்கு நன்றி. வைரமுத்து ,ரகுமான் ஹரிணி என்றால் சுகமான இசையை கேட்க வேண்டுமே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 16. பாடல்களைப் பற்றியதோர் அருமையான பகிர்வு ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 17. அப்படியே தரவிறக்க இணைப்பினையும் வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஓகே இப்போதே தேடி எடுத்து கேட்டு விட்டால் போச்சு.

  ​நாகு
  www.tngovernmentjobs.in

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாகு.....

   தங்களது முதல் வருகையோ?

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....