எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, February 9, 2013

பீட்சா

பீட்சா, பிஸா, பிட்சா, பிஜ்ஜா [பொதுவாக வட இந்தியர்களால்] இப்படி அழைக்கப் படுகிற இந்த பீட்சா பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா? இன்று இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பும் பீட்சா பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்கள் காலத்திலேயே இருந்திருக்கிறதாம். ஆனால் பீட்சா இத்தாலியிலிருந்து தான் வந்தது எனச் சொல்லும்படி ஆனதற்குக் காரணம் இத்தாலி ராணியான Margherita of Savoy (Margherita Maria Teresa Giovanna என்கிற மெர்கரிட்டா தான் காரணம்.

 [பீட்சா போலவே இருக்காங்க!]

ஒரு நாள் தன் கணவரோட நகர்வலம் வரும்போது ஏழைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டையான சப்பாத்தி போன்ற ஒன்றைப் பார்த்த ராணிக்கு அந்த ஏழையின் ரொட்டி மேல் ஒரு அல்ப ஆசையாம்! வாங்கிச் சாப்பிட்டு மிகவும் பிடித்து விட, அரண்மணை சமையல்காரருக்கு ஆணை பிறப்பித்து விட்டார் – ‘எனக்கு தினமும் இது வேணும்!’.  அவரும் சரியான ஜால்ரா பேர்வழி போல ரொட்டியை தயார் செய்து, அதன் மேலே தக்காளி, துளசி, பாலாடைக் கட்டி ஆகியவை கொண்டு இத்தாலி நாட்டு கொடி போல செய்து, அதற்கு ”MARGHERITA PIZZA” எனப் பெயரும் வைத்து விட்டாராம்.

ராணியே விரும்பி சாப்பிடற உணவுன்னு இந்த பீட்சா புகழ் எல்லோருக்கும் பரவ ஆரம்பித்தது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் அமெரிக்கா, போன்ற நாடுகளுக்கும், கொஞ்சம் கொஞ்சமாக உலகமெங்கும் பீட்சா புகழ் பரவ ஆரம்பித்து, இன்று பட்டி தொட்டிகளில் கூட பீட்சா கிடைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. இட்லியும் கெட்டிச் சட்னியும் வெச்சு அடிச்சவர்கள் கூட இன்று பீட்சாவும் பர்கரும் கேட்கிறார்கள். இட்லி போரும்மாஎன்று சொல்லும் குழந்தைகளைத் திருப்திப்படுத்த, “பீட்சா இட்லி செய்வது எப்படி?” ந்னு சமையல் குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த பீட்சா சாப்பிடறவங்க தவிர எல்லார் வாயிலும் அடிபடுது. அதுவும் இந்த பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு பீட்சான்னா திருநெல்வேலி அல்வா மாதிரி. பீட்சா பத்தி நிறைய பேசறாங்க! தொலைக்காட்சியில் லியோனி தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண் சொன்னது – ‘இப்ப குளிர் காலம். துணியெல்லாம் காயாது. நீங்க நிறைய கொடி கட்ட வேண்டியிருக்கும். அதுக்கு கம்பியெல்லாம் வாங்க வேண்டியதில்லை. ஒரு பீட்சா வாங்குங்க போதும். இங்கே இழுக்க ஆரம்பிச்சு அடுத்த கம்பம் வரை இழுத்து கட்டிட்டா, துணி உலர்த்தலாம்!

அதை விட இன்னுமொரு உதாரணம் - சமீபத்தில் தில்லியில் பொங்கல் விழா பட்டி மன்றத்தில் ஒரு பேச்சாளர் பீட்சா பற்றி சொன்னது முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா பீட்சா பிரியர்களிடம் சொல்லிடறேன் இதை படிக்காதீங்க என்று – “இந்த பீட்சா-வப் பார்த்தா முப்பத்தி ஐந்து பேர் சேர்ந்து மூக்கு சிந்தினா மாதிரி இருக்குஎன்கிறார்.

நம்ம தான் அப்படின்னா, உலகளவுல பீட்சா பல ஜோக்குகளுக்கு காரணகர்த்தா. கம்பெனி முதலாளி கம்பெனிக்குள்ள வந்துட்டு இருந்தாராம். வாசல்ல ஒரு பையன் சும்மா நின்னுட்டு இருந்தானாம். அவனைப் பார்த்து உனக்கு எவ்வளவு சம்பளம்னு கேட்டாராம் முதலாளி. அவன் சொன்னானாம் – ”வாரத்துக்கு பத்து டாலர்னு. இந்தா முப்பது டாலர்” – வெளியே போ. சும்மா நிக்கறதுக்கா உன்னை வேலைக்கு வெச்சேன்அப்படின்னு கேட்டு அனுப்பினாராம்.  அதை மத்த தொழிலாளிகள் பார்க்க, “சும்மா இருந்தா உங்களுக்கும் இதே தான்!அப்படின்னு எச்சரித்தாராம். அப்புறம், தொழிலாளி கிட்ட கேட்டாராம், ‘வெளியே அனுப்பின தொழிலாளி பேர் என்னஎன்று. அதற்கு அந்த தொழிலாளி சொன்ன பதில் – ‘அவர் பேர் எல்லாம் தெரியாது. ஆனா அவர் பீட்சா டெலிவரி பண்ண வந்தவர்அப்படின்னு!அதெல்லாம் சரி, ”இன்னிக்கு என்ன ஸ்பெஷல், பீட்சா பத்தியெல்லாம் சொல்றீங்க?” எனக் கேட்பவர்களுக்கு இன்று [ஃபிப்ரவரி 9] உலக பீட்சா தினம்”. அதனால இன்னிக்கே மைக்ரோ வேவ் அவன்ல வைச்ச சூடான பீட்சா உங்களுக்கு   எடுத்துக்கோங்க!

மீண்டும் வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்


வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. பீட்சாவின் வரலாறு சுவையாக இருக்கிறது வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 2. appadiyaa .....!?
  anne!

  puthumaiyaana thakaval....


  nantri anne..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 3. எதெதுக்கெல்லாம் ‘டே’ கொண்டாடுறாங்க. அடடே! பீட்சாவுக்கும் ஒரு தினமா? ஆனால் அதிலும் ஒரு நன்மை... பீட்சா எப்படி உருவாகி பரவலானது என்கிற விஷயஞானம் உங்கள் மூலம் எனக்கு உபயமானதுதான்! தகவல் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 4. Replies
  1. ரசிப்பிற்கு மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 5. [ஃபிப்ரவரி 9] ”உலக பீட்சா தினம்”. கொண்டாடிய பதிவுக்குப் பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. இன்று தான் அந்த மோசமான தினமா...?

  ReplyDelete
  Replies
  1. மோசமான தினமே தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன.

   Delete
 7. பீட்ஸா புராணம் சூப்பர். காசு கொஞ்சம் கூட! சுவை ஓகே. பீட்சா ஜோக்ஸ், குறிப்பாக வேலையை விட்டு நீக்கும் ஜோக் படிச்சு ரசிச்சிருக்கேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. பீட்சா தினம் புதிய தகவல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 9. ஓ! அதுதான் மெர்கரிட்டானு சொல்றாங்களா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை அழகு.

   Delete
 10. பீட்ஸா ரசிகர்களுக்கு பீட்ஸா தின வாழ்த்துகள்!

  நான் முதன்முதலாக பீட்ஸா சாப்பிட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது.
  எங்கள் சக ஆசிரியருக்கு (ரொம்பவும் சின்ன வயது) வேறு வேலை கிடைக்க அவர் எங்களுக்கு பீட்ஸா ட்ரீட் கொடுத்தார். எல்லோர் முன்னிலையிலும் பீட்ஸாவை கடித்து இழுத்து சாப்பிட ஒரு மாதிரி இருந்ததால் கஷ்டப்பட்டு விண்டு விண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த ஆசிரியர் சொன்னார்: "என்ன மேடம், பீட்ஸாவை தோசை மாதிரி பிய்த்துப் பிய்த்து சாப்பிடுகிறீர்கள்? இத்தாலிக்காரன் பார்த்தால் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுவான்..." என்று சொல்ல எல்லோருடனும் நானும் சேர்ந்து (அசடு வழிய) சிரித்தேன்!

  திண்டுக்கல் அண்ணாச்சியின் காமென்ட் அருமை!

  ReplyDelete
  Replies
  1. நானும் ஒரே ஒரு முறை தான் இந்த பீட்சாவை சுவைத்திருக்கிறேன்.

   உங்கள் அனுபவத்தினையும் சுவைபட பகிர்ந்ததற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 11. உண்மையா எனக்கும் அந்த பீட்ஸாவைப் பார்த்தா ஒரு அருவெறுப்பு... அதோட கதையைச் சொன்னதற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 12. ஹாஹா, இத்தாலி பிட்சாவை வீட்டிலேயே செய்து பார்த்த அனுபவம் உண்டு. அதெல்லாம் ஒரு காலம். பிட்சா பேஸ் வாங்கியும் செய்திருக்கோம். முழுக்க முழுக்க மாவைப் பிசைந்தும் செய்திருக்கோம். அப்படி ஒண்ணும் ரசிக்கலை! :))))))

  ReplyDelete
  Replies
  1. செய்து பார்த்ததில்லை - ஒரு முறை உண்ட பிறகு பிடிக்காது போனதால்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 13. ஃப்ளைட்டில் கூட ஒரு வேளை உணவுக்கு பிட்சா கொடுக்கிறாங்க. போரடிக்கும்! :))))

  ReplyDelete
  Replies
  1. எங்கும் பீட்சா ராஜ்ஜியம் தான்!

   இரண்டாவது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 14. பிட்ஸாவுக்கு பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறதா??
  சுவாரசியமான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 15. பீட்ஸா புராணம் எழுதுற அளவுக்கு பீட்ஸா ரசிகரோ நீங்க? :-))))
  பீட்ஸாவுக்கும் ஒரு தினமா... ஆச்சரியம். பீட்ஸாவைக் கண்டால் நம்மில் சிலருக்கு எரிச்சல் வரும். ஆனா, ஒரு நாட்டு மக்களுக்கு அது அவங்க தேசிய உணவுன்னு நினைக்கும்போது, நாம இட்லி-தோசையைப் போற்றுவதுபோலத்தானே அவங்களும் அதைப் போற்றுவாங்கன்னு தோணுது.

  பீட்ஸா மைதாவில் செய்வதால், கூடவே சீஸும் சேருவதால் அத்தனை ஆரோக்யமான உணவு கிடையாது. அதையே கோதுமை மாவில் செய்து, சீஸைக் குறைத்துச் சேர்த்தால் கொஞ்சம் சகித்துக் கொள்ளலாம். (3-4 மாதங்களுக்கொரு முறை பிள்ளைகளுக்காக வீட்டிலேயே செய்ய வேண்டியிருப்பதால், நானும் இதை இப்போத்தான் கண்டுபிடிச்சேன் :-)) )

  ReplyDelete
  Replies
  1. ரசிகன் அல்ல! ஒரு முறை சாப்பிட்டதே போதுமென்றாகிவிட்டது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

   Delete
 16. பீட்சா சாப்பிட்டதில்லை. அது இனிப்பா காரமா என்று தெரியவில்லை. உங்கள் பதிவைப் பார்த்ததும் சாப்பிட்டு பார்க்க ஆசை.

  ReplyDelete
  Replies
  1. சாப்பிட்டு பாருங்க...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 17. பீட்சா தினம் புதிய தகவல்.

  பெயரைக் கேட்டாலே இளம் கூட்டங்கள் சாப்பிட ஓடிவரப்போகின்றார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 18. பிட்சு பிட்சு வெச்சிட்டீங்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 19. பீட்சா என்னும் போதெல்லாம் இனிமேல் அந்த பட்டிமன்றக்காரர் நினைவு வ்ந்து தொலைப்பாரே! ஐயகோ! இனிமேல் நான் எப்படி பீட்சா தின்பேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete
 20. பீட்சா வின் வரலாறு பற்றின் தெளிவாக விளக்கியதற்கு நன்றி நண்பரே

  சிவாவின் கற்றதும் பெற்றதும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

   Delete

 21. நான் பீட்சா பட விமர்சனம் என்று நினைத்து இங்கு வரவில்லை...

  ஆனால் தமிழ்மணத்தில் இதுக்குப் போய் வாசகர் பரிந்துரையா என்று
  நினைத்து.... என்ன தான் இருக்கிறது என்று தான் பார்க்க வந்தேன்.
  (தலைப்பைப் பார்த்துத் தவறாகப் புரிந்து கொண்டேன் நாகராஜ் ஜி..)

  பதிவு அருமைங்க.

  ReplyDelete
  Replies
  1. தவறாகப் புரிந்து கொண்டாலும் சரியா வந்து பதிவை படித்ததற்கு நன்றி அருணா.... :)))

   Delete
 22. பீட்சா சாப்பிட்டதில்லை. அது இனிப்பா காரமா என்று தெரியவில்லை. சாப்பிடவும் ஆசை இல்லை. பீட்சாவுக்கென்றே ஓர் தினமா???? ஆஹா! மகிழ்ச்சி.

  ReplyDelete
 23. நான் ஒரே ஒரு முறை தான் சாப்பிட்டு இருக்கிறேன்.... என்னவோ ஒரு அசட்டு டேஸ்ட்! :)

  தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி.

  ReplyDelete
 24. ஒரு தடவை baskins and robbinsல் சாப்பிட்டதைப்போல் ருசியான பிஸ்ஸா இது வரைக்கும் எங்கியும் கிடைக்கலை. இதெல்லாம் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொரு தடவைதான் சாப்பிட லாயக்கு.

  ReplyDelete
  Replies
  1. கரெக்டா சொன்னீங்க... எப்பவாது சாப்பிடலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....