எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 15, 2013

ஃப்ரூட் சாலட் - 37 – தண்ணீர் பஞ்சம் – தங்கம் - ரங்கநாதன் ஃப்ரான்சிஸ்இந்த வார செய்தி:பட உதவி: கூகிள்


மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்னா மாவட்டம். இன்னும் முழுமையாக கோடை ஆரம்பிக்காத நிலையிலேயே கடுமையான தண்ணீர் பஞ்சம் வந்து விட்டது. நகராட்சி மூலம் கொடுக்கப்படும் தண்ணீர் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறதாம் அதுவும் அரை மணி நேரம் மட்டுமே!

இன்னும் கோடை ஆரம்பித்து விட்டால் அங்கே வாழும் மக்களின் நிலை பற்றி யோசித்தால் இங்கே தண்ணீர் அவசியமாகி விடும்! மயங்கி விழும் நம்மை எழுப்பி விடத்தான்....  வீடுகளில், அலுவலகங்களில், பள்ளிகளில், மருத்துவமனைகளில் என எல்லா இடத்திலும் தண்ணீர் பஞ்சம்! நிலை மோசமாகிக் கொண்டே போனால் இதற்கு முடிவு தான் என்ன!

இருக்கும் எல்லா மரங்களையும் வெட்டி அழித்து, அங்கே ஆற்று மணலை எடுத்து வந்து, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி குடியேறி விட்டு, தண்ணீர் இல்லை என அழுது கொண்டிருக்கிறோம். எங்கே முடியப் போகிறது இது என புரியவில்லை! ஜல்னா நகர் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதே நிலை தான் தொடர்கிறது! 

தண்ணீருக்காக போர் புரியும் அவசியம் வரப்போகும் நாள் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

குடி தண்ணீர் இல்லையென்றால் என்ன பெரிதாக நஷ்டம் நமக்கு – அதான் ‘குடிதண்ணீர் எல்லா இடத்திலும் தேவைக்கதிகமாகக் கிடைக்கிறதே என குடிமகன் ஒருவர் சொல்கிறார். என்னத்த சொல்ல!


இந்த வார முகப்புத்தக இற்றை:


எந்த விஷயத்தினையும் தொடங்குமுன் அதை எப்படி முடிப்பது என்பதையும் தெரிந்து கொள்வது நல்லது. இல்லையென்றால் இப்படித்தான் ஆகிவிடும்!


இந்த வார குறுஞ்செய்தி

THE THREE C’S OF LIFE. CHOICES, CHANCES AND CHANGES. YOU MUST TAKE A CHOICE TO TAKE A CHANCE OR YOUR LIFE WILL NEVER CHANGE.

ரசித்த புகைப்படம்: 


நண்பேன்டா!

இந்த நாள் இனிய நாள்:

இன்று மார்ச் 15. இதே நாளில் 1920 – ஆம் ஆண்டு பிறந்த ரங்கநாதன் ஃப்ரான்சிஸ் இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடிய ஹாக்கி வீரர். 1948, 1952 மற்றும் 1956 ஆகிய வருடங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றவர். பல ஒலிம்பிக் பந்தயங்களில் வென்று தங்கப் பதக்கம் வென்ற ஹாக்கியின் இன்றைய நிலை – பரிதாபம்.  ரங்கநாதன் ஃப்ரான்சிஸ் போன்று பலர் நமது நாட்டிற்குத் தேவை!
   
ரசித்த பாடல்:

இன்று ரசித்த பாடலில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் பாடல் ஒரு ஹிந்திப் படத்திலிருந்து! ஹலோ... ஹலோ... யாருங்க அது ‘ஹிந்தி ஒழிக!ன்னு குரல் கொடுக்கறது.  பாட்டு நல்லா இருந்தா எந்த மொழி பாட்டு வேணா ரசிக்கலாமே!

தேவானந்த் மற்றும் ஆஷா பரேக் நடிப்பில் 1961-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘Jab Pyaar Kisi Se Hota Hai!”.  பாடலைப் பாடியவர்கள் முகம்மது ரஃபி மற்றும் லதா மங்கேஷ்கர். பாடல் இதோ!
படித்ததில் பிடித்தது:

தங்கம்

ஒரு நாள் இரண்டு பேர் சாலமிஸ் நகரை நோக்கி நடந்து வந்தனர். நண்பகல் நேரத்தில், ஓர் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. அந்த ஆற்றுக்கோ பாலம் கிடையாது. நீந்திக் கடக்க வேண்டும். இல்லையென்றால், வேறு சாலை வழியாகப் போக வேண்டும். ‘இந்த ஆறு ஒன்றும் பெரிதல்ல... நீந்திக் கடப்போம் வாஎன்று கூறிக்கொண்டே ஆற்றில் குதித்தனர். அதிலே ஒருவன் ஆறு பற்றியும் அதன் வேகம் பற்றியும் நன்றாக அறிந்தவன். அதிவேகமாகப் பாய்ந்து வரும் ஆற்றில் அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆற்றிலே தத்தளித்துக் கொண்டிருந்தான்.

மற்றவனோ, இதற்கு முன் நீந்தி அறியாதவன். ஆனால் ஆற்றைக் கடந்து அடுத்த கரைக்கு வந்துவிட்டான். இன்னமும் ஆற்றிலே தத்தளித்துக் கொண்டிருக்கும் நண்பனை காப்பாற்றுவதற்காக மீண்டும் ஆற்றில் குதித்து அவனையும் பத்திரமாகக் கரையேற்றினான்.

ஆற்றில் அடித்துச் செல்லப்படவிருந்தவன், நண்பனைப் பார்த்துக் கேட்டான், ‘உனக்கு நீந்தலே தெரியாது என்றாய். நீ எப்படி இவ்வளவு துணிச்சலோடு ஆற்றைக் கடந்தாய்?அதற்கு அவன், ‘நண்பனே இந்த பெல்ட் தான் என்னை உந்தித் தள்ளியது. இந்த பெல்ட் நிறைய தங்கக் காசுகள். இவை ஒரு வருடகாலமாக என் மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும் பாடுபட்டுச் சேர்த்தவை. இந்த பெல்டில் இருந்த தங்கத்தின் கனம், என் மனைவியையும், பிள்ளைகளையும் நோக்கி இழுத்தது. என் மனைவியும், பிள்ளைகளும் என் தோள்களில் இருந்துகொண்டு என்னை நீந்த வைத்தனர்என்றான்.

-          கலீல் ஜிப்ரான் [தமிழில் கவிஞர் நாவேந்தன்].

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.   

46 comments:

 1. எது அருமை என்று பிரித்துச் சொல்ல முடியவில்லை.
  தண்ணீர் பஞ்சத்தை நினைத்தால்...வயிறு பற்றி எரிகிறது. அதை அணைக்கக்கூடத் தண்ணீர் இருக்காது போல...

  நண்பேன்டா... சூப்பர் படம்.
  தவிர... அந்த தத்துவம், பாடல்.... ஆக எல்லாமே அருமையான பகிர்வு நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா.

   Delete
 2. எல்லாமே அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

   Delete
 3. குடிதண்ணீர் பிரச்னையை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது. சீக்கிரமே இந்நிலை நாட்டில் எல்லா பாகங்களிலும் ஏற்படலாம்.

  இற்றைக்கான விளக்கப் படம் சூப்பர்.

  எஸ் எம் எஸ் சங்கிலியும் ப.பியும் ரசிக்க வைத்தது.

  புகைப்படம் அழகோ அழகு.

  பாடல் மனம் என்னும் மேடை மேலே ஏறி அமர்ந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. நினைத்தாலே மிரள வைக்கிறது தண்ணீர் பஞ்சம்... தமிழகத்திலும் இந்த மாதிரியான நிலை வந்துவிடுமோ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 5. எல்லாச்செய்திககளும் அருமை. பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 6. தண்ணீர்...பயம்
  ஆற்று நீச்சல்...நிதர்சனம்,
  தேவ் ஆனந்த்...இனிமை

  ஃப்ரூட்சாலட் சுவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. ஒரு யானையே மற்றொரு யானைக்கு வைக்கும் ஆசிர்வாதம் அருமை.
  அனைத்தையும் கட்டாயம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 9. தண்ணீர்! நீர் அதன் அருமை பற்றி நன்றாகச் சொன்னீர்! வாழ்க.

  ஹாக்கியில் நாம் ஏன் சமீப காலமாக பதக்கம் வாங்கவில்லை, தெரியுமா? நாம் எதிலாவது பதக்கம் அதிகம் வாங்கினால் அந்த விளையாட்டு அடுத்த ஒலிம்பிக்கில் காணாமல் போய்விடும். எனவே ஹாக்கியின் நன்மைக்காகவே நாம் அடக்கி வாசிக்கிறோம்.

  (ரங்கநாதன் ஃப்ரான்சிஸ் !!! திருவரங்கம் அரங்கநாதன் இன்னும் சேவியராகவோ, ஜான் ஆகவோ மாறாதவரை சந்தோஷம்தான்.)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete
 10. ஃப்ரூட் சாலட் அருமை..! பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 11. கோடை நெருங்கும் முன்பேவா... அதிக நாட்கள் இல்லை இங்கும் அந்த நிலை வர... யானை படம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 12. எங்கள் ஊரில் இன்னும் தண்ணீர் கஷ்டம் தெரியவில்லை மக்களுக்கு மோட்டர் போட்டால் தண்ணீர் தொட்டி நிறைந்து வழிய விடுகிறார்கள்.

  தெருவோர பைபில் தண்ணீர் கொட்டிக் கொண்டு இருக்கிறது மூட முடியாமல் இருக்கிறது. வீண் அடிக்கும் த்ண்ணீர் நாளைய சேமிப்பு என தெரியவில்லை. இந்த நிலை கவலை அளிப்பதாய் உள்ளது.

  இந்த பெல்ட் நிறைய தங்கக் காசுகள். இவை ஒரு வருடகாலமாக என் மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும் பாடுபட்டுச் சேர்த்தவை. இந்த பெல்டில் இருந்த தங்கத்தின் கனம், என் மனைவியையும், பிள்ளைகளையும் நோக்கி இழுத்தது. என் மனைவியும், பிள்ளைகளும் என் தோள்களில் இருந்துகொண்டு என்னை நீந்த வைத்தனர்’ என்றான்.

  //இந்த பெல்ட் நிறைய தங்கக் காசுகள். இவை ஒரு வருடகாலமாக என் மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும் பாடுபட்டுச் சேர்த்தவை. இந்த பெல்டில் இருந்த தங்கத்தின் கனம், என் மனைவியையும், பிள்ளைகளையும் நோக்கி இழுத்தது. என் மனைவியும், பிள்ளைகளும் என் தோள்களில் இருந்துகொண்டு என்னை நீந்த வைத்தனர்’ என்றான்.//

  அருமை, அன்பு வலிமை மிக்கது.

  இன்றைய ஃப்ரூட்சாலட் அருமை.  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 13. அனைத்துமே அருமை.

  எனக்கு மிகவும் பிடித்த பழம்பெரும் நடிகர் மற்றும் பாட்டு. மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமாரவி.

   Delete
 14. நிலத்தடி நீர் வற்றிப் போய்க்கொண்டிருக்கும்
  இக்காலகட்டத்தில் அதற்கான சீரிய முயற்சிகள்
  உடனடியாக அவசியமாகின்றது...
  நீங்கள் கூறியதுபோல நீலப்புராட்சி
  வந்துவிடும் காலம் மிக அருகில்தான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 15. /இந்தியா முழுவதும் இதே நிலை தான் தொடர்கிறது!
  /

  உண்மைதான்:(.

  சிறப்பான தொகுப்பு. ரசித்த படமும் இற்றையும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 16. அனைத்தும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 17. சமீபத்திய நாளிதழ் ஒன்றில் காசு கொடுத்து வாங்கி குடிக்கும் மினரல் வாட்டர் கூட சுத்தமானது இல்லைன்னு போட்டிருந்தாங்க... :( தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடத்தான் போகிறது...

  யானை படம் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 18. முகப்புத்தக இற்றை ஒரு நல்ல பாடம்!
  அருமை கலவை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 19. எங்கள் ஊரிலும் இந்த வருடம் மழை இல்லாததால் தண்ணீர் கஷ்டம் வரும் என்று சொல்லுகிறார்கள். திருமதி கோமதி சொல்வதுபோல வீணாகும் நீரை சேமித்தல் மிகவும் முக்கியம்.
  பழைய ஹிந்தி பாடல் போலவே திரு வேதா (அன்றைய தேவா!) காப்பி அடித்த பாடல் 'மனம் என்னும் மேடை மீது, முகம் ஒன்று ஆடுது......யார் வந்தது அங்கே யார் வந்தது?' பாடலை நினைவு படுத்துகிறது.

  வாழ்க்கையில் ஒரு உந்து சக்தி வேண்டும் என்ற கலீல் ஜிப்ரானின் கவிதை அருமை!

  எப்பவும் போல பழக்கலவை யம்மி யம்மி!

  ReplyDelete
  Replies
  1. யம்மி யம்மி! :)))

   தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

   Delete

 20. சென்னைக்கும் தண்ணீர் பஞ்சம் இந்த ஆண்டு வரும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 21. பழக்கலவை மிக ரசனையாக இருந்தது.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 22. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 23. nalla pakirvu anne...!

  kalil jipran manathai varudiyathu...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....